அபுதாபியில் ஒரு அசத்தலான பள்ளிவாசல்

இது உலகின் மூன்றாவது மிகப்பெரிய பள்ளிவாசலாகும். இதற்கு ஷேக் ஸையித் பள்ளிவாசலில் என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக இருந்த ஷேக் ஸையித் பின் சுல்தான் அல் நஹயன் (Sheik Zayed bin Sultan Al Nahayan) அவர்கள் மறைவையடுத்து அவர் இப்பள்ளியின் அருகில் அடக்கம் செய்யப்பட்டார்.

அமீரக வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட அவரது சேவையினைப் போற்றும் வண்ணம் இப்பள்ளிக்கு அவரது பெயர் வைக்கப்பட்டது. இப்பள்ளிவாசல் ஒரே நேரத்தில் 40,000 பேர் தொழுவதற்கான வசதி கொண்டது.

இப்பள்ளிவாசல் முழுக்க முழுக்க இத்தாலிய மார்பில்களால் கட்டப்பட்டு, இஸ்லாமிய கட்டடக்கலைக்கு சான்றாகத் திகழ்கிறது. 22,000 சதுர அடி பரப்பில் இப்பள்ளி கட்டப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment