நன்றி சொல்ல நான் மறந்தேன்
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தன்னை கடலில் இருந்து காப்பாற்றிய மர்ம பயணியை வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறாராம்.
.
ஜோஸ் ஜபேடார் என்னும் அந்த முதியவர் அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு கடற்கரை விடுதியில் குளித்து கொண்டிருந்த போது, மூழ்க தொடங்கி விட்டாராம். அப்போது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் அவரை காப்பாற்றினாராம்.
தண்ணீரில் சிக்கி தத்தளித்ததால் பீதியின் உச்சியில் இருந்த அவர், தன்னை காப்பாற்றியவருக்கு நன்றி கூற மறந்து விட்டாராம்.
பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமான அவர், அந்த மர்ம பயணியை நன்றி சொல்வதற்காக வலைவீசி தேடி வருகிறாராம். இதற்காக பிரான்ஸ் தூதரகத்தை தொடர்பு கொண்டு உதவி கேட்டிருக்கிறாராம்.






0 விமர்சனங்கள்:
Post a Comment