ஐ.தே.க. ஆட்சியில் நடந்த பகற் கொள்ளை
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடு த்த ஆண்டி என்று ஒரு முதுமொழி உண்டு. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கதை யும் இப்படியாகவே இருக்கின்றது. முன் பின் யோசிக்காமல் எதையாவது கூறி மாட்டிக்கொள்ளும் வழக்கத்திலிருந்து இன்னும் அவர் விடுபடவில்லை.
ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசா ரத்துக்காகச் சென்ற போது தேர்தல் கூட்ட மொன்றில் தேர்தலுக்கான திகதியைப் பிழையாகக் கூறி மாட்டிக் கொண்டார். தேர்தல் திகதி கூடத் தெரியாத அளவுக்கு அக்கறை இல்லாதிருப்பவர் எப்படிக் கட் சித் தலைவராகச் செயலாற்ற முடியும் என்ற கேள்வியை ஊவா மக்கள் அப்போது எழுப்பினார்கள். ஊவாவில் ஐக்கிய தேசி யக் கட்சியின் படுதோல்விக்கு இதுவும் பங்களிப்புச் செய்திருக்கலாம்.
இப்போது புதிய பிரச்சினையில் மாட்டிக் கொண்டிருக்கின்றார். அரசாங்கம் அமைச் சரவையின் அனுமதி இல்லாமல் மத்திய வங்கியின் கையிருப்பிலிருந்த தங்கத்தின் ஒரு பகுதியை விற்றுவிட்டது என்ற குற் றச்சாட்டை முன்வைத்தார். இது இப்போது அவரையே திருப்பி அடிக்கின்றது.
முதலில் ரணிலின் குற்றச்சாட்டு பற்றிப் பார்ப்போம். ரணில் கூறியதை அரசாங்கம் அறவே மறுக்கின்றது. அரசாங்கத்திடம் போதுமான அந்நியச் செலாவணிக் கையி ருப்பு இருக்கும் போது தங்கத்தை விற்க வேண்டிய தேவை எதுவும் இல்லை என் றும் அரசியல் வாசிக்காக ஆதாரமற்ற குற்றச் சாட்டை ரணில் முன்வைக்கின்றார் என்றும் அரசாங்கம் வெளியிட்ட மறுப்பு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு எதிர்வினை எதுவும் ரணில் தரப்பிலிருந்து இதுவரை இல்லை.
ரணிலின் ஆட்சிக் காலத்திலேயே தங்கம் முறைகேடாக விற்கப்பட்டது என்ற தக வலை இந்த முறைப்பாடு வெளிக் கொணர் ந்திருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்ஹ பிர தமராகப் பதவி வகித்த இரண்டு வருட அரசாங்க காலத்தில் அவருக்கு வேண்டிய வர்களுக்கு மத்திய வங்கியிலிருந்து தங்கம் விற்கப்பட்டதாக அன்றைய அரசாங்கத் தின் பங்காளியாக இருந்தவரான அமைச் சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன ஊடகவி யலாளர் சந்திப்பின் போது கூறினார். ஒரு ட்ரொய் அவுன்ஸ் தங்கத்தின் உண்மையான விலை ஆயிரம் அமெரிக்க டொலராக இருந்த போது தனக்கு வேண்டியவர்களு க்கு முந்நூறு அமெரிக்க டொலர் வீதம் ரணில் தங்கம் விற்றதாக அமைச்சர் அபே வர்தன கூறியுள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிராகக் குற்றச்சாட்டுச் சுமத்திய ரணில் இப்போது தனக்கு எதி ரான குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்க வேண் டியவராக இருக்கின்றார். மத்திய வங்கி யின் கையிருப்பிலுள்ள தங்கம் தேசத்தின் சொத்து. அரசியல்வாதிகள் இதை மனம் போனபடி கையாள முடியாது. ரணிலின் ஆட்சிக் காலத்தில் அவருக்கு வேண்டியவ ர்களுக்குக் கொள்ளை மலிவில் தங்கம் விற்கப்பட்டுள்ளதென்றால் அது நாட்டுக் கும் மக்களுக்கும் செய்த துரோகம். அது பற்றி மக்களுக்குப் பதில் கூற வேண்டிய கடப்பாடு ரணிலுக்கு உண்டு.
இன்றைய அரசாங்கத்துக்கு உள்ள செல வினங்களைப் போல ரணிலின் அரசாங்க த்துக்கு இருக்கவில்லை. இன்றைய அரசா ங்கம் பயங்கரவாதத்துக்கு எதிரான இரா ணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுத்தது. சகல மாவட்டங்களிலும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற் கொள்கின்றது. அரசாங்க சேவைக்கு புதி தாக ஆட்களைச் சேர்க்கின்றது. எனவே இன்றைய அரசாங்கத்துக்குக் கூடுதலான செலவு.
ரணிலின் இரண்டு வருட அரசாங்கத் துக்கு இதுபோன்ற செலவுகள் இருக்க வில்லை. இராணுவ நடவடிக்கை மேற் கொள்ளப்படவில்லை. அபிவிருத்தி இடம் பெறவில்லை. அரசாங்க சேவைக்குப் புதி தாக எவரையும் சேர்க்கவில்லை. அப்படி யிருந்தும் தேசத்தின் சொத்தான தங்கம் மலிவு விலையில் தனிப்பட்டவர்களுக்கு விற் கப்பட்டதென்றால் அது பகற் கொள்ளை.






0 விமர்சனங்கள்:
Post a Comment