இந்திய ராணுவ அதிகாரியின் கழுத்தை அறுத்த பயங்கரவாதிக்கு பரிசு வழங்கிய முஷாரப்
இந்திய இராணுவ அதிகாரி ஒருவரது தொண்டையை அறுத்த தீவிரவாதிக்கு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் பரிசு வழங்கி பாராட்டியதாக செய்தி வெளியாகி உள்ளது.
ஹர்கத் - உல் - ஜிகாத் அல் - இஸ்லாமி என்ற இயக்கத்தைச் சேர்ந்த இலியாஸ் காஷ்மீரி என்ற தீவிரவாதி, கடந்த 1990 ஆம் ஆண்டுகளில் ஜம்மு - காஷ்மீரில் பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தான்.
அந்த இயக்கத்தின் கமாண்டராகவும் செயல்பட்ட இலியாஸ், 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதியன்று, காஷ்மீரில் உள்ள நாக்யால் செக்டாரில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி பாகிஸ்தானிலிருந்து ஊடுருவினான்.
தம்முடன் அழைத்து வந்த 25 தீவிரவாதிகளுடன் இந்திய இராணுவத்திற்கு எதிராக கெரில்லா தாக்குதல் நடத்தினான்.
இந்த தாக்குதலின்போது இந்திய வீரர்களின் பதுங்கு குழி ஒன்றை சூழ்ந்து கொண்டு கையெறி குண்டுகளை வீசி இலோயாஸ் தாக்குதல் நடத்தினான்.
இதில் இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.அவரை பிடித்த இலியாஸ், அந்த இந்திய இராணுவ அதிகாரியின் தொண்டையை அறுத்து அவரைக் கொலை செய்துள்ளான்.
பின்னர் அந்த அதிகாரியின் தலையை அறுத்து எடுத்துக்கொண்டு பாகிஸ்தான் சென்ற இலியாஸ்,அதனை அப்போதையை பாகிஸ்தான் இராணுவ தலைமை தளபதியான முஷாரப் முன்னர் கொண்டு போட்டுள்ளான்.
இதற்காக முஷாரப் இலியாஸை பாராட்டி, அவனுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசளித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் இலியாஸ், தீவிரவாதிகளின் வட்டாரத்தில் மிக முக்கியமான நபராக உருவெடுத்துள்ளான்.
இத்தகவலை இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் ' த நியூஸ் ' என்ற நாளேடு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில்,வடக்கு வாசிரிஸ்தான் பகுதியில் கடந்த வாரம் அமெரிக்க விமானம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இலியாஸ் கொல்லப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment