அழகியை அழித்த பருமன்

Tanya Angus 30, is one of the worlds' tallest woman with a height of 6ft 6 inch and weight 34 stone but it is a very huge problem for her because she is still growing.
Visit msnbc.com for Breaking News, World News, and News about the Economy
அழகியை அழித்த பருமன்
உலகில் வாழும் இன்றைய இராட்சதப் பெண் யார் தெரியுமா அவர் தான் ‘டான்யா எக்னஸ்’ ஆறடி ஆறங்குல உயரமுள்ள இவருடைய நிறை நாநூற்று எழுபத்தாறு இறாத்தலாகும். இவருடைய உயரமும் நிறையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம். உலகின் இராட்சதப் பெண் என சாதனை படைத்து அவர் சந்தோசமாயிருக்கிறாராயென்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
டான்யா தமது இருபதாவது வயதில் அழகியாக விளங்கினார். அவருடைய உடல் வாகு குளிர்ச்சியாயிருந்ததாம். அப்போது அவருடைய உயரம் ஐந்தடி ஐந்தங்குலமாகவும் நிறை நூற்றுப்பதினைந்து இறாத்தலாகவுமிருந்தது.
இவருடைய உடலினுள் இரகசியமாக ஏதொவொன்று நடைபெற்றுக் கொண்டிருந்ததாம். தினமும் உறங்கியெழுந்ததும் உடலில் ஏதோவொரு பகுதியில் வளர்ச்சி காணப்பட்டுள்ளதை உணர முடிகிறதாக கூறுகிறார். இன்றணியும் காலணி மறுநாளைக்கு அணியமுடியாமல் போகிறது. இரவிலணியும் உடை காலையில் உடலுடன் இறுகி சுவாசிப்பதற்கு சிரமமேற்படுகிறது.
தினச்சரிதையாக இவை அமைவதால் பெரும் பிரச்சினைகளுக்குள்ளாகியுள்ளார். இச்சமயம் இவர் மிச்சிகன் நகர சேவை நிறுவனமொன்றில் கடமையாற்றி வந்தார். உடையும் காலணியும் நாளுக்கு நாள் இறுகியதையடுத்து உடல் ஆண்களுடையது போலானது. பேச்சுவார்த்தைகள் ஆண் குரலானது. குரல் கடினமாகவுமிருந்தது.
சுவாசிப்பதிலும் மாறுதல் காணப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போது இவர் தெரிவித்தார். டான்யாவின் உடல் வளர்ச்சியை கண்டு துயருறும் இன்னுமொருவருமுள்ளார் அது அவருடைய காதலனாகும். காதலியின் உடல் பருமனையடுத்து அவருடைய எண்ணங்களும் திசை திரும்பின.
‘உமக்கென்ன நடந்துள்ளது, நாளுக்கு நாள் உடலில் மாறுதல் காணப்படுகிறது. என்னிடமிருந்து தூரமாகிaர். ஆண் போலிருக்கிaர். குரலும் ஆண்களைப் போல் பெண் சாயல் உம்மிடமில்லை. ஆணாக மாறும் தன்மை உமக்கேற்பட்டுள்ளதாவென காதலன் ஒருநாள் காதலியிடம் கேட்டான்.
காதலனின் கேள்வியினால் மனமுடைந்தார் டானியா. உடல் பருமனுக்கு பயப்படும் ஒரு ஆண் உண்மையான ஒரு காதலனல்ல. காதலியின் எவ்விதப் பிரச்சினைகளையும் சகித்து சமாளித்து ஏற்றுக் கொள்பவன் தான் உண்மையான காதலன் எனக்கூறும் டான்யா, காதலனை மட்டுமல்ல தன் தொழிலையும் துறந்து செல்ல தயாரானார். ‘நெவாடா’ பிரதேசத்திலுள்ள தன் தாயுடன் வசிக்க எண்ணினார்.
மிச்சிகனிலிருந்து நெவாடாவுக்கு விமான மூலம் வந்த டான்யா தன் தாய் சகோதரிகளை அண்மித்த போது சகோதரி ‘அம்மா எங்களுக்கு சீக்கிரம் வைத்தியரொருவர் தேவைப்படுவார்’ என சப்தமிட்டார். இதற்குக் காரணம், அந்தளவு டான்யாவின் உடல் பருமனாயிருந்ததாகும். டான்யாவை முதலாவதாக அவர்களது குடும்ப வைத்தியர் பரிசோதனை செய்தார்.
இரண்டாவதாக எம். ஆர். ஐ. ஸ்கெனர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார். இவருடைய மூளையில் பல கட்டிகளிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அவருடைய உயரம் ஆறடி ஒரு அங்குலமாயிருந்தது. மூளையிலுள்ள கட்டிகள் பெரிதாயிருந்ததால் அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்ற முடியாதென வைத்தியர்கள் தெரிவித்தனர். துயரமடைந்த டான்யாவின் தாய் ‘காரன்’ வைத்தியர்களின் முடிவுடன் நிற்கவில்லை. முயற்சி செய்தார். சர்வதேச வலைப் பின்னல் மூலமாக இச்செய்தியினை உலகுக்கு தெரிவித்தார். இதனையடுத்து கட்டிகளையற்ற அறுவை சிகிச்சை செய்ய முடியுமென வைத்திய நிபுணரொருவர் தெரிவித்ததையடுத்து அவரை சந்தித்தார். முதலாவது அறுவை சிகிச்சை 2003 ஆம் ஆண்டு நடைபெற்றது.
மூளையிலுள்ள பல கட்டிகள் அகற்றப்பட்டன. பிடியுடரி சம்பந்தமான ஒரு கட்டியை அகற்ற முடியவில்லை. அறுவை சிகிச்சை மூலம் திருப்தியேற்பட்டாலும் நோயை சுகப்படுத்தும் சிகிச்சையல்ல. மூளையிலுள்ள அகற்ற முடியாத கட்டியின் காரணமாக டான்யாவின் உடலில் சுரக்கும் ஹோமோனின் அளவு அதிகரித்துச் செல்வதால் உடல் பருமனும் அதிகரிக்கிறது. சாதாரண மனிதர்களின் ஹோமோன் உற்பத்தி இரு நூற்றைம்பது விட்டமாகும். டான்யாவின் ஹோமோன் உற்பத்தி மூவாயிரம் வரை அதிகரித்திருந்தது. இதன் நிமித்தம் வைத்தியர்கள் இந்நோயை ‘எக்ரோமெகலி’ எனும் ‘ஜிகன்டிஸ்ம்’ என நிர்ணயித்தனர்.
டான்யாவின் அசாதாரண வளர்ச்சியை கட்டுப்படுத்த பலவிதமான மருந்துகள் வழங்கப்பட்டிருந்தாலும் ஒரு மருந்தினாலாவது அவரது உயரத்தை அல்லது நிறையை கட்டுப்படுத்த முடியவில்லை. அகற்றப்பட முடியாத ஒரு கட்டியினால் இவ்வாரான விபரீதமேற்பட்டுள்ளதையுணர்ந்த வைத்தியர்கள் இவ்வசாதாரண உடல் வளர்ச்சியை கட்டுப்படுத்த உலகில் எவ்வித ஒளசதங்களுமில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.
ஹோமோன் நோய் என கூறப்படும் இந்த மருந்துகளினால் சுகப்படுத்த முடியாது மருந்துகளுமில்லை. பலவிதமான வில்லைகள், ஊசிகள் செலுத்தியும் டான்யாவின் ஹோமோன் வளர்ச்சி வேகத்தை 900க்குக் கீழ் கொண்டு வரமுடியவில்லை.
வைத்தியர்கள் இவ்வாறு கூறினாலும் டான்யாவும் அவரது தாய் காரனும் எதிர்ப்பார்ப்புகளுடனிருக்கின்றனர். எதிர்ப்பார்ப்புகளில்லாத வாழ்வு மனித வாழ்க்கையல்ல என டான்யா கூறுகிறார். தற்போது அமெரிக்கா நெவாடா பிரதேசத்தில் வசிக்கும் டான்யாவின் வயது முப்பத்து நான்காகும். இவருடைய உயரமும் உடல் வளர்ச்சியும் நாளுக்கு நாள் அதிகரிக்க பல நோய்களுக்கு இவர் உள்ளாகியுள்ளார். உயர் இரத்த அழுத்தமும் இதிலொன்றாகும்.
இவை என் குற்றமல்ல, சிலர் வேறு விதமாக கருத்துக் கொள்கின்றனர். நான் பாதையில் செல்லும் போது சிலர் என்னை சர், மிஸ்டர் என அழைக்கின்றனர். அவர்களின் கண்களுக்கு நான் ஆணாகத் தென்படுகிறேன். நான் பெண்ணென்பதை எடுத்துக் காட்ட உடை அணிகலன்களில் முடியுமானளவு முயற்சி செய்கிறேன். என் உடலுக்கேற்ற உடைகள் தேடுவதென்பது இலேசான காரியமல்லவென டான்யா கூறுகிறார்.
டான்யாவுக்கு இப்போது தனியாக நடக்க அல்லது வேறு சாதாரண வேலைகளை செய்ய முடியாதவராயுள்ளார் எழும்பவும் நடக்கவும் இயந்திர உபகரணமொன்றை உபயோகிக்கிறார்.
2005 ஆம் ஆண்டு மகள் டான்யாவின் உடல் நிலை மோசமடைந்தது. இவர் இன்னும் மூன்று மாதங்கள் வரை உயிருடனிருப்பரென ஒரு வைத்தியர் தெரிவித்தார். ஆனால் இதன் பிறகு நான்கு வருடங்கள் இன்று வரை மகளை உயிருடன் வைத்துக் கொள்வதற்கு எங்களால் முடிந்தது. எமது வாழ்நாளில் நாம் சம்பாதித்த பணம் முமுவதையும்இவருடைய சுகத்துக்காக செலவிட நாம் தாயார். இதுவரை இவரது நோய்க்கு செலவழித்த தொகை டொலர் இருநூறு ஆயிரமாகும் என டான்யாவின் தாய் காரன் தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு ஜுலை மாதமளவில் டான்யாவின் மூலையிலுள்ள கட்டிதோடம் பழமளவுக்கு பெருத்து விட்டதாக வைத்தியர்கள் கண்டுபிடித்துள்ளனர். அத்துடன் இவரது உயரமும் நிறையும் நாளுக்கு நாள் பெறுகிக் கொண்டு போகிறதாம். இதன் முடிவு என்னவாகுமென ஒருவராலும் கூறிட முடியவில்லையாம். இவர் இறையருலால் சுகம்பெற்று நீடித்து வாழ பிரார்த்திப்போம்.
எம். எப். ஜெய்னுலாப்தீன்






0 விமர்சனங்கள்:
Post a Comment