இலங்கையை நாசமாக்கிவிட்டு இப்ப இந்தியாவையும் நாசமாக்குவதற்காக 12 புலி உறுப்பினர்கள் மாவோ தீவிரவாதிகளுடன் இணைந்துள்ளனராம்
இந்தியாவின் மாவோ தீவிரவாதிகள் வெளிநாடு ஒன்றிலிருந்து ஆயுதங்களைப் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவின் அறிக்கையின்படி, புலிகளும் மாவோ தீவிரவாதிகளும் தென் மற்றும் மத்திய இந்தியக் காடுகளில் பயிற்சி மற்றும் கூட்டங்களை நடத்திவருவதுடன், முகாம்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய புலனாய்வுப்பிரிவு, புலிகள் இயக்கம் ஆந்திரா, தமிழ்நாடு, சண்டிகார் மற்றும் ஒரிசா ஆகிய இடங்களில் ஊடுருவியிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்மையில் 12புலி உறுப்பினர்கள் கொண்ட குழுவொன்று மாவோ தீவிரவாதிகளுடன் இணைந்துள்ளதாகவும் புலனாய்வுப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. மூன்று பிரிவுகளாக பிரிந்த இக்குழுக்கள் ஆந்திரா மற்றும் கேரளா ஊடாக இந்தியாவினுள் ஊடுருவியுள்ளனர். இந்நிலையில் இந்திய கரையோரப் பிரதேசங்களின் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை மாவோவாதிகள் புலிகளின் உதவியைப் பெற்றுக் கொள்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இத்திட்டத்தின்படி புலிகள் இந்தியப் படைகளுக்கு எதிராக மாவோ தீவிரவாதிகளை முனைப்புப்படுத்தல் மற்றும் இலங்கையில் சந்தித்த தோல்வியை சரிசெய்ய தென்னிந்தியாவில் புதிய தளங்களை அமைத்தல் ஆகிய இரு அனுகூலங்களைப் பெறுகின்றனர் என்றும் ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment