தமிழ் மக்கள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டால் எதிர்காலத்தில் மேலும் பல பிரபாகரன்கள் உருவாகக் கூடும் - சரத் பொன்சேகா
இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான இலங்கையர்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது. யுத்த வெற்றியின் உரிமை குறித்து இன்று பலர் பேசுகின்றனர். யுத்தத்தின் இறுதிக் காலத்தில் 5 ஆயிரம் இராணுவத்தினர் தமது உயிர்களைத் தியாகம் செய்தனர்.
அவர்களின் இந்தத் உயர்ந்தத் தியாகமின்றி விடுதலைப் புலிகளை யுத்த ரீதியில் தோற்கடித்திருக்க முடியாது. இதனால் யுத்தத்தில் பெறப்பட்ட வெற்றியின் முதலாவது கௌவரம் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும்.
பிரபாகரன் கொலை செய்யப்பட்டதால் யுத்தம் முடிவுக்கு வராது. பிரபாகரன்கள் மீண்டும் உருவாகமல் இருக்கக் கூடிய வகையில் சமுக முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவதே தற்போது தேவையாகவுள்ளது. இதனால் பிரபாகரனைக் கொன்றமை குறித்து வைபவங்கள் வைபவங்கள் வைப்பதனால் பயனில்லை. தற்போது யுத்தம் முடிவடைந்துவிட்டது.
தொடர்ந்தும் தமிழ் மக்களை பலவந்தமாக தடுத்துவைப்பது பொருத்தமற்றது. தமிழ் மக்கள் தொடர்ந்தும் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டால் எதிர்காலத்தில் மேலும் பிரபாகரன்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது. நாம் இதற்கு சந்தர்ப்பம் வழங்கக் கூடாது. எம்மால் பயங்கரவாதத்திலிருந்து மீட்கப்பட்ட நாட்டை அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்ல வேண்டும்.
பயங்கரவாதத்திடமிருந்து மீட்கப்பட்ட தாய் நாடு தொடர்ந்தும் தவறான வழியில் செல்லுமானால் அதனைத் திருத்துவதற்காக சீருடையைக் கழற்றிவிட்டு மக்கள் சேவைக்கு வரவும் தான் தயார் என ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment