"இரும்பு பெண்மணி" விடுதலையானார்
2003 ஆம் ஆண்டு யுத்தக் குற்றங்கள் நிமித்தம் 11 வருட சிறைத் தண்டனைக்கு ஆளாகிய அவர், நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார்.
இந்த இரும்புப் பெண்மணி பிரபலம் பெற்ற பில்ஜனா பிளேவ்ஸிக் (வயது 79), முன்னாள் யூகோஸ்லாவியாவிலிருந்த உயர்மட்ட அதிகாரிகளில் ஒருவராக விளங்கினார்.
சுவீடன் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட அவர், நாட்டை விட்டு வெளியேறும் முகமாக அர்லான்டா விமான நிலையத்திற்கு சென்றார். எனினும் அவர் எந்நாட்டிற்கு பயணம் செய்தார் என்பது தொடர்பான தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.
பில்ஜனா முன்னாள் பொஸ்னிய சேர்பிய தலைவர் ரடோவன் கராட்ஸிக்கின் நெருங்கிய நண்பராவார்.
ரடோவனும் யுத்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளார்.
பில்ஜனா சிறையிலிருந்த போது பொஸ்னிய போரை நடத்த வேண்டி ஏற்பட்ட சூழ்நிலைகளை விபரித்து புத்தகமொன்றை எழுதியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment