பிடெல் காஸ்ட்ரோவின் சகோதரி ஒரு CIA ஏஜண்ட்
பிடெல் காஸ்ட்ரோவும் தனது பிறிதொரு சகோதரரும் தற்போதைய ஜனாதிபதியுமான ராவுல் காஸ்ட்ரோவும் தமது எதிரிகளை வகை தொகையின்றி கொன்றமை தொடர்பில் அவர்கள் இருவருடனும் தான் விவாதத்தில் ஈடுபட்டதாக ஜுவானிதா (76 வயது) தெரிவித்தார்.
1964 ஆம் ஆண்டு கியூபாவை விட்டு வெளியேறும் வரை அந்நாட்டிலுள்ள அரசாங்க எதிர்ப்பாளர்களுக்கு எச்சரிக்கை செய்தும் அவர்களுக்கு மறைவிடம் அளித்தும் உதவியதாக அவர் கூறினார்.
எனினும் ஜுவானிதாவின் இந்த அறிவிப்புக் குறித்து அமெரிக்க அரசாங்கமோ அன்றி கியூப அரசாங்கமோ எதுவித கருத்தையும் வெளியிடவில்லை.
1959 ஆம் ஆண்டு கியூப புரட்சிக்கு பிற்பாடு பிடெல் காஸ்ட்ரோ அதிகாரத்திற்கு வந்த பின் இரு ஆண்டுகள் கழித்து ஹவானாவிலுள்ள அமெரிக்க மத்திய புலனாய்வு முகவர் நிலையத்தில் இணைந்து கொண்டதாக ஜுவானிதா கூறினார்.
1961 ஆம் ஆண்டு மெக்ஸிக்கோ நகரிலுள்ள ஹோட்டலொன்றில் வைத்தே மேற்படி புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரியொருவரை முதன் முதலாக சந்தித்ததாகவும் இதன்போது தனக்கு "டொன்னா' என்ற சந்கேதப் பெயர் வழங்கப்பட்டதாகவும் அப்பெயரைப் பயன்படுத்தியே தான் தகவல்களைப் பெற்று செயற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தான் கியூபாவிலிருந்த போது அந்நாட்டு இரகசிய பொலிஸாரின் பிடியிலிருந்து அரசாங்க எதிர்ப்பாளர்களைக் காப்பாற்றியதுடன் அவர்களில் பலரை தனது தாயாரான லினா ருஸ் கொன்ஸாலெஸின் வீட்டில் மறைந்திருக்க ஏற்பாடு செய்து உதவியதாகவும் ஜுவானிதா கூறினார்.
எனினும் இரகசிய பொலிஸார் அறியாத வகையில் அவ்வாறு அவர்களுக்கு புகலிடமளிப்பது நீண்ட காலத்திற்கு சாத்தியமில்லையென்று உணர்ந்த போது மியாமிக்கு குடிவந்ததாக அவர் கூறினார்.
மியாமியில் 2007 ஆம் ஆண்டு வரை ஜுவானிதா மருந்தகமொன்றை நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment