எந்த பிரபாகரன் என்று சொல்வீர்களா மிஸ்டர் வைகோ
பிரபாகரன் தல(லை)மையில் இலங்கையில் மீண்டும் போர் மூளுமாம்
இலங்கைத் தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் காப்பதற்காக இலங்கையில் மீண்டும் போர் மூளும் என்றும் அதை பிரபாகரன் தலைமையேற்று நடத்துவார் என்றும் மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் விழிப்புணர்வு பிரசாரப் பயணம் ராமேஸ்வரத்தில் இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வைகோ பேசியது:
1983-ல் இருந்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது. இலங்கையில் உரிமைக்காகப் போராடிய லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த அத்துமீறல்களை நடத்திய இலங்கையை நமது மத்திய அரசு எச்சரிக்கவில்லை.
இந்தச் சூழலில் நாதியற்று கிடக்கும் தமிழக மீனவர்களையும் ஈழத் தமிழர்களையும் பாதுகாக்க இலங்கையில் மீண்டும் போர் மூளும். அதைப் பிரபாகரன் தலைமையேற்று நடத்துவார்.
கடந்த ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தியபோது, பாகிஸ்தானுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்தது. அதே நேரத்தில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை விஷயத்தில் மௌனம் காக்கிறது.
இலங்கை கடற்படையில் சீனர்களும் இருக்கிறார்கள். நமது மீனவர்களை சிங்களர்களுடன் சேர்ந்து சீனர்களும் தாக்குகிறார்கள். ஏற்கெனவே, வடக்கிலும் கிழக்கிலும் இந்தியாவுக்கு எதிராக அத்துமீறித் தாக்குதல் நடத்திவரும் சீனா, தற்போது ராமேஸ்வரத்திலும் தாக்குதல் நடத்தி பெரும் நெருக்கடி தரத் தயாராகிவிட்டதையே இது காட்டுகிறது.
இவ்வாறு வைகோ பேசினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment