ஒரேசமயத்தில் 16 கரப்பான் பூச்சிகளை வாயில் உள்ளடக்கி உலக சாதனை
சீன் மூர்பி என்ற மேற்படி நபர், ஆரம்ப கட்டமாக 12 கரப்பான் பூச்சிகளை மட்டுமே வாயில் உள்ளடக்கியிருந்தார். பின் அவர் ஒவ்வொரு கரப்பான் பூச்சிகளாக வாயினுள் சேர்க்க ஆரம்பித்தார்.
இந்த சாதனையடைவு குறித்து சீன் மூர்பி விபரிக்கையில், ""அது மாபெரும் ஆச்சரியமாக அமைந்தது. என்னால் ஒரே சமயத்தில் இத்தனை கரப்பான் பூச்சிகளை வாயில் உள்ளடக்க முடியும் என்பதை நானே எதிர்பார்த்திருக்கவில்லை'' என்று தெரிவித்தார்.
மூர்பி வாயில் உள்ளடக்கிய மடகஸ்காரைச் சேர்ந்த கரப்பான் பூச்சியானது இரண் டரை அங்குலத்திற்கு மேற்பட்ட நீளமுடையதாகும்.
எதிர்வரும் வருடத்தில் அவர் 20 கரப்பான் பூச்சிகளை ஒரே சமயத்தில் வாயில் உள்ள டக்கி சாதனை படைக்கவுள்ளார்.
ஒரே சமயத்தில் 11 கரப்பான் பூச்சிகளை வாயில் உள்ளடக்கியமையே இதற்கு முன்னரான உலக சாதனையாக விளங்கு கின்றது.
0 விமர்சனங்கள்:
Post a Comment