வன்கூவர் சிறையிலுள்ள இலங்கை அகதிகள் தம்மை விடுவிக்கக் கோரிக்கை
வன்கூவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் 75 பேரும், நேற்றைய தினம் தம்மை விடுவிக்குமாறு, கனேடிய குடிவரவு திணைக்கள அதிகாரிகளிடம் கோரியதாக கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர்களில் பலரின் அடையாளங்களை உறுதி செய்ய முடியாத நிலை காணப்படுவதால், அவர்களை அடையாளப்படுத்த முடியாதிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே அவர்களின் அநேகமானவர்களை சந்தித்ததாக கூறிய கனேடிய வழக்கறிஞர் ஒருவர், அவர்கள் அனைவரிடமும் தகுந்த அடையாள ஆவணங்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் அந்த அகதிகளில் ஒருவர் குடிவரவு அதிகாரிகளிடம் தமது இலங்கை கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதி பத்திரம் என்பவற்றை வழங்கியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அவரிடம் இருந்து இந்திய கடவுச்சீட்டு ஒன்றும் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரின் உண்மையான விபரங்கள் எதனையும் உறுதிப்படுத்த முடியாதிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அகதிகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே அவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Virakesari
0 விமர்சனங்கள்:
Post a Comment