விடுதலை எனும் பெயரில் வீதியில் தூக்கி எறியப்பட்ட எம்மினத்து முத்துக்கள்
இவர்களுக்கு பாடசாலை அதிபர் என். மன்மதராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் அங்கு அவர்கள் தங்கியிருந்து தங்கள் கல்வியை தொடர்வதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அகில இலங்கை இந்து மாமன்றமும் இந்த மாணவர்களுக்கு தேவையான தம்மாலான உதவிகளை வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்து. மேலும், இவர்கள் தங்களது கல்வியை இடையூறின்றி தொடர சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வன்னியில் இடம்பெற்ற மோதல்களின் போது சரணடைந்த மற்றும் பெற்றோர்களை இழந்த 15க்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்களும் பெண்களுமே இவ்வாறு தமது கல்வியை தொடரும் வகையில் இரத்மலானை இந்துக் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இவர்களில் சிலர் பெற்றோரை இழந்தவர்களாகவும் காணப்படுகின்றனர். அத்துடன், இராணுவ மேஜர் ஹேர்மன் பெர்னாண் டோவின் நேரடிப் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள இவர்களில் பலர் அவரை மிகவும் அன்புடன் அப்பா என அழைப்பதையும் பரவலாக காணமுடிந்தது. அத்துடன், இவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் இராணுவத்தினரும் அவர்களுடன் சரளமாக தமிழில் உரையாடுவதையும் பழகுவதையும் கூடவே அவதானிக்க முடிந்தது.
0 விமர்சனங்கள்:
Post a Comment