உலகமெங்கிலும் உள்ள புலம்பெயர் தமிழர்கள் நாடு கடத்தப்படக் கூடிய அபாயம்
உலகமெங்கிலும் புலம்பெயர் தமிழர்கள் நாடு கடத்தப்படக் கூடிய அபாயம் நிலவி வருவதாக ரிவிர பத்திரிகை பிரதான செய்தி வெளியிட்டுள்ளது. உலகமெங்கிலும் சுமார் நான்கு லட்சத்திற்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் அரசியல் தஞ்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அரசியல் தஞ்சமடைந்துள்ள நபர்கள் தொடர்பில் குறித்த நாடுகள் விரைவில் தீர்மானம் எடுக்கும் என அரசாங்கத்தின் உயரதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஓர் நடவடிக்கை எடுக்கப்பட்டால் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக இது அமையக்கூடுமென அவர் தெரிவித்துள்ளார். குறித்த நாடுகளின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நிலவுவதாக விளக்கி அந்நாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்களை நாடு கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து உலக நாடுகள் திருப்தியடைந்துள்ளதனால் அநேகமாக புலம்பெயர் தமிழர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படக் கூடிய சாத்தியம் இருப்பதாக அந்தப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment