குடாநாட்டில் இருந்து வெளியிடங்களுக்கு சுதந்திரமாக செல்ல அனுமதியுங்கள் - யாழ்மக்கள் கோரிக்கை
நாட்டில் 30 வருடங்களாக நிலவிய யுத்தத்திற்கு முடிவு கட்டப்பட்டு நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் நிலை நாட்டியதுடன் யாழ். குடாநாட்டில் சிவில் நிர்வாகத்தையும் நடைமுறைப்படுத்தி வருகிறோம் என அரசாங்கம் பிரசாரம் செய்து வருகிறது. ஏ9 தரைப்பாதை போக்குவரத்திற்காக அரசினால் திறந்து விடப்பட்டு 90 நாட்களுக்கு மேலாகி விட்டது.
ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும் சுதந்திரமாகவும் குறைந்த செலவிலும் நேரடியாக செல்ல டியாத நிலை உள்ளது.
அரசின் இந்நிலைப்பாட்டினால் அவசர தேவைகளுக்காக கொழும்பிற்கு உடனடியாக செல்ல டியாத அனுமதிப்பத்திர நடைறை இன்றும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அத்துடன் அனுமதி பெற்றாலும் முன்னரைப் போல குறைந்த செலவில் நேரடியாக பயணம் செய்ய டியாதுள்ளது.
ஏ9 தரைப் பாதையால் செல்வோர் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கோ அன்றி மதவாச்சிக்கோ பஸ் வண்டியில் சென்று அங்கிருந்து கொழும்பிற்கு வேறு பஸ் வண்டிகளில் அல்லது புகையிரதத்தில் செல்ல வேண்டியுள்ளது. சோதனைக் கெடுபிடிகளும் காணப்படுகின்றன.
கொழும்பிற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதால் கட்டணங்களும் அதிகத்துக் காணப்படுகின்றன.
விரும்பிய வாகனத்தில் செல்வதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் மக்கள் மத்தியில் விரக்தியையும் வெறுப்பையும் தான் ஏற்படுத்தியுள்ளதேயொழிய தமிழ் மக்களின் மனங்களைக் கவரவில்லை.
எதுவித கட்டுப்பாடுமின்றி அனுமதியுமின்றி சுதந்திரமாக பயணம் செய்யக் கூடிய நிலையை அரசு ஏற்பயாழ். மக்கள் கோக்கை டுத்த வேண்டும். அத்துடன் குறைந்த செலவில் நேரடி பஸ் சேவையையும் நடத்த ஒழுங்குகள் செய்ய வேண்டும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment