முகம் பார்க்கும் முகாம்
சட்டியில் பொரியும்
மீன்களாக
எங்களின் வாழ்வு!
தினமும்
கண்கள் கட்டப்பட்டு
எல்லாம் இரவாகவும்
இருட்டாகவுமே தெகிறது!
உணர்வுகளும்
சிலுவையில்
அறையப்பட்டுக் கிடக்கிறது
காற்று
தெருக்களில் அள்ளி வரும்
வாசங்களையும்
இரங்கியவர்களின்
மிச்சங்களையும்
சுவைத்தும் புசித்தும் கொள்கிறோம்!
ஓட்டைக் கூரைக்குள்
வானம் பார்த்து
கண்ணீர் வடிக்கிறது
ஒன்றும் கேட்கவில்லை
கோழிக் குஞ்சுகளாக
கொடுகிச் சாகிறது
ஆத்மா!
ஊரும் எறும்புக்கும்
உலாவ இடமிருக்கு;
எங்களுக்காக
ஒன்றுமில்லை
வருகிறான்
போகிறான்
வெள்ளை வெள்ளையாக!
இன்னும் முகாக்குள்தான்
முகம் பார்க்கிறோம்
அபார்
0 விமர்சனங்கள்:
Post a Comment