யாழ்ப்பாணத்தின் யதார்த்தத்தை மூடி மறைக்கும் களியாட்டங்கள்
வெளியில் இருந்து வந்து இரண்டு, மூன்று மணிநேரத்தை செலவிட்டு விட்டுப் போகிறவர்களுக்கு யாழ்ப்பாணம் சொர்க்கபுரியாகவே தெரியும்
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகப் போகின்றன.இந்த நிலையில் இப்போது யாழ்ப் பாணத்தை சொர்க்கபுயாகச் சித்திக்கும் யற்சியில் அரசாங்கம் இறங்கியிருக்கிறது.
களியாட்ட விழாக்கள் நடத்தப்படுகின்றன.
விஜய் அன்ரனியின் இசைக்கச்சேரி நடத்தப் பட்டது. தமிழ் இலக்கிய விழா கோலாகலமாக நடத்தப்பட்டது.
எதற்கெடுத்தாலும் மாலை மரியாதையும் தாரை தப்பட்டையுமாக முழங்குகின்றன.
இவையெல்லாமே யாழ்ப்பாணம் வழமைக் குத் திரும்பி விட்டதாகக் காட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தான்.
யாழ்ப்பாணத்தில் நிலைமை வழமைக்குத் திரும்ப வேண்டும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமிருக்க முடியாது.
ஆனால் அது உண்மையானதாக, கௌரவ மான வாழ்வுடன் கூடியதாக, நீடித்து நிலைப் பதாக இருக்க வேண்டுமே தவிர அரைகுறை நிலையாக இருக்கக் கூடாது.
ஒரு பக்கத்தில் களியாட்ட விழாக்களும், கலை நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டிருக்க இன்னொரு பக்கத்தில் மறுக்கப்பட்ட நிலையில், இருக்கும் யாழ்ப்பாண மக்களின் உமைகள் பற்றி எவருமே பேசுவதாகத் தெயவில்லை.
ஆளும்கட்சியோடு சேர்ந்திருப்பவர்களும் சரி தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சரி இதுபற்றி வாய் திறப்பதேயில்லை.
வலிகாமத்தின் வளம் மிக்க விவசாய நிலங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களின் பெயரால் முள்வேலியிடப்பட்டுக் கிடக்கின்றன.
இவற்றை மீட்பதற்கோ அங்கிருந்து இடம் பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கோ எந்த ஒழுங்குகளும் செய்யப்பட்டதாகத் தெயவில்லை. உயர் பாதுகாப்பு வலயத்தில் மக்களை மீள் குடியேற்றுவதற்கு அரசாங்கம் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. ஆனால், உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கும் சீமெந்துத் தொழிற்சாலையை இயக்குவதற்கு முயற்சிக்கிறது. அதற்கான சுண்ணாம்புக் கற்களை அந்தப் பகுதிக்குள் அகழ்வதற்கும் தயாராக இருக்கிறது.
தமிழ் மக்களை மட்டும் அங்கு மீளக்குடியேற்ற அது தயாராக இல்லை.
புலிகள் அழிந்து விட்டனர், பயங்கரவாதத்தைத் தோற்கடித்து விட்டோம் என்று அரசாங்கம் கூறுவது உண்மையாக இருந்தால், எதற்காக உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் ஆயிரக்கணக்கான மக்களின் நிலங்களையும் குடியிருப்புகளையும் உள்ளடக்கி வைத்திருக்க வேண்டும்?
ஆயுதப் போராட்டத்தின் முடிவுக்குப் பின்னரும் அரசாங்கம், உயர் பாதுகாப்பு வலயங்களை மக்கள் நடமாட்டங்களுக்கு தடைசெய்து வைத்திருப்பது யாழ்ப்பாண மக்களின் வாழ்வையும் வளங்களையும் கபளீகரம் செய்யும் யற்சியாகவே தெகிறது.
வடக்கே பருத்தித்துறையில் இருந்து தெற்கே தேவேந்திரனை வரைக்கும் ஒன்றுபடுத்தி விட்டோம் என்று கூறுகிறது அரசாங்கம்.
ஆனால் நடைறையில் இது உண்மையான ஒன்றல்ல.
என்னதான் அரசாங்கம் போர் மூலம் நாடு முழுவதையும் கைப்பற்றியிருந்தாலும் வடக்கில் உள்ள மக்களை அரசாங்கம் நம்பத்தயாரில்லை.
அவர்களை சுதந்திரமாக நடமாட அனுமதிக்கவும் தயாரில்லை. யாழ்ப்பாண மக்கள் மீது அரசாங்கம் பிரயோகிக்கின்ற கெடுபிடிகள் பற்றி எவருமே வாய்திறப்பதில்லை.
அதுபோல யாழ்ப்பாண மக்களும் அதற்கெல்லாம் வளைந்து கொடுத்து வாழப்பழகிக் கொண்டு விட்டதால் இதைப் பற்றிப் பெரிதாக எடுப்பதும் இல்லை.
இலங்கையில் வேறெந்த இடத்தில் வசிக்கின்ற பிரஜையும் நினைத்த போது நினைத்த இடத்துக்குச் செல்லலாம்.
ஆனால் யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் மட்டும் அப்படிச் செய்ய டியாது.
அவர்கள் இராணுவத்தினன் அனுமதி கிடைத்தால் மட்டுமே தெற்கே பயணம் செய்யலாம்.
இந்த நடைறை 1996இல் இருந்து இருக்கிறது. புலிகளைக் காரணம் காட்டி யாழ்ப்பாண மக்களுக்குப் போடப்பட்ட விலங்கு இது.
புலிகளை முற்றாக அழித்து விட்டதாக அரசாங்கம் பிரகடனம் செய்துள்ள போதும் யாழ்ப்பாண மக்கள் மீது போடப்பட்ட இந்த விலங்கை அகற்றுவதற்கு மட்டும் அரசு தயாராக இல்லை.
இன்னம் யாழ்ப்பாண மக்களை அரசாங்கம் நம்பவில்லையா அல்லது புலிகள் இன்னமும் யாழ்ப்பாணத்தில் இருப்பதாக நம்புகிறதா?
இரண்டையுமே சொல்ல முடியாது அரசாங்கத்தால்.
விரும்பிய இடத்தில் நடமாடுவதற்கு குடியிருப்பதற்கு இலங்கையின் அரசியலமைப்பு ஒவ்வொரு பிரஜைக்கும் அடிப்படை உமைகளை உறுதி செய்திருக்கிறது.
நகுலன்
0 விமர்சனங்கள்:
Post a Comment