பசும்பொன் த்துராமலிங்கத்தேவர் இருந்திருந்தால் ஈழத்திற்குப் படை அனுப்பியிருப்பார் வைகோ
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் குருபூஜை வெள்ளியன்று சிறப்பாக நடந்தது.
அதில் கலந்து கொண்ட ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சி யினர் அஞ்சலி செலுத்தினர்.
மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர் வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், முத்துராமலிங்கத் தேவர் இந்நேரம் உயிருடன் இருந்திருந்தால், ஈழத்தில் தமிழர்கள் படும் அவதியைக் கண்டு கொதித்து, ஒரு தனிப்படையை அனுப்பி தமிழர்களைக் காத்திருப்பார் என்றார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவன் 102வது பிறந்த நாள் மற்றும் நினைவுநாளை யொட்டி அவரது சிலைக்கும், பசும்பொன் கிராமத்தில் உள்ள நினைவிடத்திலும் ஏராள மான தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை நந்தனம் தேவர் சிலை அரசு சார்பில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
கீழே அவரது உருவப் படம் வைக்கப்பட்டிருந்தது. அங்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பதி இளம்வழுதி, ராமச் சந்திரன், பூங்கோதை, கே.பி.பி.சாமி, மதி வாணன், மைதீன்கான், மேயர் மா.சுப்பிரமணியன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
அ.தி..க பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேவர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதற்காக படிகளில் ஏறி அவர் வந்தபோது தேவர் சிலையில் இருந்த ஒரு மாலை அவரது தோள் பட்டையில் விழுந்தது.
இதைக் கண்டு அவர் திடுக்கிட்டு நின்றார். பின்னர் அஞ்சலி செலுத்தி விட்டு வந்தார்.
ஜெயலலிதாவுடன் சசிகலா, அ.தி.மு.க நிர்வாகிகள் மதுசூதனன், பொன்னையன், ஜெயக்குமார், செங்கோட்டையன், தளவாய்சுந் தரம், முத்துசாமி, பா.வளர்மதி, செ.ம.வேலு சாமி, பி.எச்.பாண்டியன், மாவட்ட செயலாளர் கள் பி.கே.சேகர்பாபு, வி.பி.கலைராஜன் மற்றும் ஜி.செந்தமிழன் எம்.எல்.ஏ. சுலோசனா சம்பத் உள்ளிட்டோர் பெரும் திரளாக வந்திருந்தனர்.
இதேபோல காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, ன்னாள் தலைவர் கும அனந்தன், கராத்தே தியாகராஜன், வசந்தகுமார், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது கட்சியின் தலைமைக் கழகத்தில் தேவர் படத் துக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அவைத் தலைவர் பண்ருட்டி ராமசந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நடிகர் கார்த்திக் தனது கட்சியினரோடு வந்து தேவர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.
பா.ஜ.க, பா.ம.க ஆகியவற்றின் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
திராவிட விழிப்புணர்ச்சி கழகம் சார்பில் ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்து தேவர்சிலைக்கு அபிஷேகம் செய்தனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment