வாக்கெடுப்பு நடைபெறும் தினம் ஜனாதிபதிக்கு அனுகூலமான பலன்களைத் தராத தினமாக அமைந்துள்ளது
எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையாளர் தீர்மானித்துள்ளார். எனினும், இந்தத் தினம் ஜனாதிபதிக்கு கூடாத தினம் என சோதிடர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனவரி 26 தினமானது செவ்வாய்க் கிழமையில் வருவதால் இந்த தினத்தை சோதிடர்கள் குஜ தினம் என அழைக்கின்றனர். அண்மையில் நிகழ்ந்த ராகு - கேது இடம்பெயர்ச்சியின் காரணமாக ஜனாதிபதியின் சாதகத்தின்படி மேற்கூறிய தினம், அனுகூலமான பலன்களைத் தராது எனவும் அது அவருக்கு சாதகமாக இல்லையெனவும் சோதிடர்கள் கூறியுள்ளனர்.
செவ்வாய்க் கிரகமானது எதிரியை வெற்றிக்கொள்ளும் கிரகமாகும். கடந்த காலம் முழுவதும் யுத்த செயற்பாடுகளில் ஈடுபட்டு தற்போது ஜெனரல் என்ற பெயரில் அழைக்கப்படும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான பொன்சேக்காவிற்கு, செவ்வாய்க்கிரகம் அனுகூலமான பலன்களை வழங்கும் எனக் கூறப்படுகிறது.
இதனடிப்படையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் தினம், தற்போதைய ஜனாதிபதிக்கு அனுகூலமற்ற நாள் என்பதால் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்~ நிச்சயம் தோல்வியடைவார் எனவும் அதனை ஓரளவேனும் குறைப்பதற்காக தேர்தல் தினத்தை மாற்றுமாறும் சோதிடர்கள் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment