தடுத்து வைக்கப்பட்டுள்ள 11,000 முன்னாள் புலிகளில் மிக தீவிரமான குற்றங்கள் புரிந்த 200 பேரைத்தவிர அனைவருக்கும் விடுதலை
சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 11,000 முன்னாள் புலிகளில் மிகப் பாரதூரமான குற்றங்கள் புரிந்த 200 பேரைத்தவிர அனைவருக்கும் பொதுமன்னிப்பு அளித்து விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என மனித உரிமைகள் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திடம் தெரிவித்தார்.
’’அரச படையினருக்கு எதிராக அவர்கள் சண்டையிட்டிருந்தாலும் கூட அவர்களில் பெரும்பாலானவர்கள் அதனைச் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் மற்றும் கட்டாயமாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டவர்கள் என்றே நம்புகின்றோம். நான் நினைக்கிறேன் - அதோடு அங்குள்ள இளம் பெண் பிள்ளைகள் சில மாதங்களுக்கு முன்பாகத் தான் இந்த மிகப் பயங்கரமான சூழலுக்குள் தள்ளப்பட்டவர்கள். தீவிர புலி உறுப்பினர்கள் மிகச் சொற்பமானோரே இருக்கிறார்கள் என நினைக்கிறேன்” என்றார் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க.
தடுத்து வைக்கப்பட்டுள்ள 11,000 முன்னாள் புலிகளில் மிகப்பாரதூரமான குற்றங்கள் புரிந்த 200 பேரை மட்டும் நீதி விசாரணைக்கு உட்படுத்துவதோடு அவர்களுக்கும் எதிர்காலத்தில் புனர்வாழ்வு அளிக்கபடுமெனவும் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment