புலிகளின் தலைவன் பிரபாரனைக் கொன்றது யார்?...பிரபாகரனின் சகோரப்படுகொலைகள் தான் அவரின் சாவுக்கு முதல் காரணம்.!
பிரபா ஒரு பிரமா என்றும்,சூரியதேவன் என்றும்,முருகன் என்றும்,ஆதவபுத்திரன் என்றும் வாயாரப்புகழ்ப்பட்ட வாயுபுத்திரன் புலிகளின் தலைவன் பிரபாகரனை கொன்றது யார்?இலங்கை அரசாகங்கமா? இல்லவே இல்லை? வேறுயார்?
கர்ணனை அருச்சுனன் கொன்றது போல் பிரபாகரனைக் கொன்று அரசும் செத்தபாம்பே அடித்திருக்கிறது.பிரபாகரனை ஏற்கனவே தன்னாலும்,வேறு பலராலும் மெல்ல மெல்லக் கொல்லப்பட்டார் என்பதை அறிவீர்களா?புலியைத்தவிர வேறு இயக்கங்களோ மாற்றுக்கருத்தோ, கருத்தாளர்களோ இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் கியூபாவை உதாரணம் காட்டி மாற்ற மைப்புகளை அழிக்கத் தொடங்கியபோதே தம்பி பிரபா தனக்குத்தானே சவக்குழி வெட்ட ஆரம்பித்து விட்டார்.ஒரு இனத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் போராட்டத்தின் போது சிறுபிள்ளைத்தனமாக நீயா?நானா?என்று எண்ணுதல் எள்ளி நகையாடலுக்குரியதே. இது தனிப்பட்ட பகையோ தெருச்சண்டித்தனமே அல்ல.போராட்டத்தை மக்கள் யார்;கையிலும் ஒப்படைக்க வில்லை.தமிழர் விடுதலைக் கூட்டணியின்(த.வி.கூ)தேர்தலினூடு மக்கள் தம்விருப்பைத் தெரிவித்தார்கள் என்பதற்காக த.வி.கூட்டணியோ அன்றி புலிகளோ,மாற்று இயக்கங்களோ போராட்டத்தின் சுவீகார புத்திரர்களாக முடியாது. தேர்தலை மக்கள் தம்கருத்தைச் சொல்லும் ஒரு களமாக,ஊடகமாகத் தான் கருதினார்களே தவிர பாராழுமன்றத்திற்குப் போய் அங்கு வைத்திருக்கும் தமிழ் ஈழத்தைத் தூக்கிக் கொண்டு வந்து தருவார்கள் என்று மக்கள் என்றும் எண்;ணவில்லை.வோட்டு வங்கிகளை நிரப்புவதற்காக இனத்துவேசம் போட்டியாக சிங்கள,தமிழ் அரசியல்வாதிகளால் வளர்க்கப்பட்டது. இதுவே வளர்ந்து இன்று இலங்கையில் மனிதப்பேரழிவைத் தந்தது.
எதிரி பலமானவன் அவனைத் தனித்து எதிர்த்து நின்று போராட இயலாத போது நாம் எம்மிடையே ஒற்றுமையாய்,வேற்று மைகளைக் களைந்து,இணைந்து,எம்போராட்டத்தை ஆதரிக்கும் சக்திகளை இனங்கண்டுணர்ந்து அவர்களையும் இணைத்த போராடுவது அவசியமானது.எம்மிடையே நாமே வில்லங்கத்துக்கு எதிரியை சம்பாதித்துக் கொண்டு, கதாநாயகனாக வலம் வருவதால் மட்டும் ஒரினத்தின் அபிலாசைகளை வென்றெடுக்க இயலாது. இது சினிமா படமல்ல கதாநாயகன் வில்லன் எனும் பாத்திரங்களை ஏற்று நடிப்பதற்கும், மக்கள் பார்வையாளராக இருப்பதற்கும்.இது நாடகமல்ல ஒரினத்தின் வாழ்தல்,இருப்பு ஏன் சுவாசம் என்றே சொல்லலாம்.இவ்வளவுகாலமும் புலிகள் நடித்தது ஒரு நாடகமே. இப்படித்தானே புலியியக்கம் வளர்க்கப்பட்டது. வன்னிப்போர் முற்றியபோதும் மக்கள் சினிமாப்பார்வையாளர் போல்தானே இருந்து பார்த்துச் செத்தார்கள்.10,20 ஆயிரம் ஆமிக்கு முன்னால் 3 இலட்சம் மக்கள் வாழாது இருந்தார்கள். கல்லுப் பொல்லுடன் பாய்ந்திருந்தால் கூட எத்தனை ஆமியும், ஆயுதங்களும் நின்றிருக்க முடியும்.கவசவண்டிகளுக்குள்ளேயே மக்கள் புதுவாழ்க்கையைத் தொடங்கியிருக்கலாம்.சரி புலிகள்தான் தம் அழிவுக்குக் காரணம் எனும் பொழுது 5000 புலிகளை 3 இலட்சம் மக்கள் கொஞ்சியே கொன்றிருக்கலாமே.மக்கள் மந்தைகளாகவே வளர்த்தெடுக்கப்பட்டார்கள்.சூரியதேவனையும் மேய்பனையும் தேடும் சமூகமாகத்தானே கட்யெழுப்பப்பட்டிருக்கிறது.தமிழீழப் போராட்டத்தில் மக்கள் போராட்டம் என்பது என்றும் நடந்ததில்லை.எம்மக்கள் போராடத்துக்கான தயார் நிலையிலும்,கொதிநிலையிலும் என்றும் இருந்ததில்லை.மக்கள் போராடாது விடுதலை கிடைக்கப்போவதில்லை.அப்படியாயின் எம்மினம் அடிமையாகச் சேவகம் செய்து வாழமட்டும்தான் தகுதியுடையதா?
சகோரப்படுகொலைகள் தான் பிரபாகரனின் சாவுக்கு முதல் விதை.இங்கே புளொட்பிரிவை முதலாவதாகச் சொல்லலாம்.இது கூட ஒரு பெரிய கருத்து வேறுபாடுகளால் பிரிந்து போன ஒன்றல்ல. தமிழ்மக்களின் எதிர்காலம் கருதி மிகச்சுலமான முறையில் தீர்த்து மீண்டும் இணைந்து செயற்பட்கூடிய தன்மை இருந்தது.இதை இறைகுமாரனும் சகபாடிகளும் செய்ய முயன்றபோதுதான் சுந்தரம் சுடப்பட்டார்கள்.எல்லாவற்றுக்கும் பிரபாரகனின் அவசரமும் பிடிவாதமுமே காரணம் என்பதை அறியமுடிகிறது.ஒரு செயற்குழு என்று வரும்போது பலர் ஒன்றிணைந்து தீர்மானங்களை நிறைவேற்றுவதும் செயற்படுவதும் சகஜமான ஒன்றாகும். இதற்கு நேரம் காலம் எடுக்கும்.இந்த அளவுக்குப் பொறுமை இல்லாதவர்கள் ஆயுதம் தூக்கக் கூடாது. ஏனெனில் துப்பாக்கி எடுப்பது உயிர்.இதைத் பின் திருப்பிக் கொடுக்க இயலாது.சித்திரவதை கூடத்தின் தலைமைப் பொறுப்பாளராக இருந்த பஸ்தியாம்பிள்ளை கொலைசம்பந்தமாக பிரபாகரன் சொன்னபடி செய்யவில்லை என்றும் தன்தோ ன்றித்தனமாய் முடிவெடுத்தார் என்பதும் புளொட்டின் குற்றச்சாட்டு.
கொலை என்று வந்த பின் இணைவு என்பதும் நட்பு என்பதும் குழிதோண்டியே புதைக்கப்பட்டன. சுந்தரம் சுடப்பட்டதும் புளொட் உறுப்பினர்கள் கொதித்தார்கள்.இயக்கம் அழிந்தாலும் பறுவாயில்லை முழியனைப் (தம்பியை) பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று சீறினார்கள்.இங்கே வார்த்தைகளைப் பாருங்கள் ஒரு சகோதரப் படுகொலை ஈழம் என்ற எண்ணத்தில் இருந்து தமிழர்களை நழுவச்செய்திருக்கிறது.அது தான் சுந்தரத்தின் படுகொலையே ஈழவிடுதலைப் போராட்டத்தின் கடசிக்கல்லு. அதுவே புலிகளின் வரலாற்றில் பிரபாகரனின் கல்லறையின் முதற்கல்லு.சுதுமலை பற்குணத்தைப் போல் மறைத்திடால் என்று பிரபா நினைத்தாரோ என்னவோ? சுந்தரத்தின் கொலை நடக்காமல் இருந்திருந்தால் சிலவேளை சில மாற்றங்கள் விடுதலைப்பாதியில் உருவாகியிருக்கலாம். புலிகளும் புளொட்டும் மீண்டும் உடன்படிக்கைகளுடன் இணையும் சந்தர்ப்பம் இருந்தது. எல்லாவற்றையும் குலைத்து நாசமாக்கியது பிரபாவே. இவர்களை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இறைகுமாரன் சுடப்பட்டது புளொட் செய்த அடுத்த தவறு. சரி தம்பிதான் பிழைவிட்டு விட்டார் என்பதற்காக இவர்கள் இறையைப்போட்டது தம்பிக்குத் தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதைக்காட்டுவதாகும்.இறைகுமாரன் உமைபாலனது கொலை சந்தேகத்தின் பெயரில் நியாமற்ற முறையில் நடந்த கொலைகள்.துப்பாக்கி தூக்குவதற்கு முன் சிந்திக்க வேண்டும்.கொலையைச் செய்தபின் சிந்தித்துப் பிரயோசனம் இல்லை.சிந்திப்பவனின் கைகளில்தான் துப்பாக்கி இருந்திருக்க வேண்டும். யாரை நான் சுடப்போகிறேன்.ஒருதமிழனை ஏன்? இக்கொலையில்லாமல் எமதுகாரியங்களை நகர்த்தலாமா?இக்கொலையைத் தடுக்கலாமா?இதை யார் செய்தார்கள்?எமது பல இயக்கங்கள் சுட்டுப்பழகியதே துரோகி துரோகி என்று தமிழர்கள் மேல்தானே.
நாமே நம்மிடையே எதிரிகளை உருவாக்கி விட்டு நாம்தான் போராளிகள் என்றும் மற்றவர்கள் துரோகிகள் என்றும் பட்டங்கட்டி சகோதரப்படுகொலைகளைச் செய்யும் போதே எல்லோரும் உணர்ந்திருக்க வேண்டும் இது ஒரு இனத்தின் விடுதலை அல்ல என்பதை.அன்றிருந்த அரசியல்வாதிகள்,அறிவுஜீவிகள் அதைக் கண்டும் காணாது இருந்தார்கள்.தம்சுய அரசியல் இலாபங்களுக்காக பொடியளைப் பயன்படுத்தினார்கள்.அதுமட்டுமில்லை உருவேற்றியும் அனுப்பினார்கள்.
நவாலியைச் சேர்ந்த இன்பம் மச்சான் செல்வரத்தினம் பண்ணைப்பாலக் கொலையும் தவறுதலான சந்தேகத்தின் பேரில் துப்புக்கொடுத்துச் செய்யப்பட்டது என்றே அறியப்படுகிறது. செல்வரத்தினத்துக்கு அரசியலும் தெரியாது அதன் ஆழமும் தெரியாது. இவர்களை இராணுவம் தான் சித்திரவதைகளின் பின் கொலை செய்து பண்ணைப்பாலத்தில் போட்டது. ஏன்? இந்தச் செல்வரத்தினம் அரசியலில் என்ன செய்தார்? ஏதாவது தொழிலுக்குப் போட்டு வந்து பொடியளுடன் பின்னேரத்தில் தண்ணியடித்து பம்பலாக இருந்த ஒருவர்தான் இவர்;.தம்சொந்தக் காழ்புணர்வுகளை விடுதலையின் பெயரால் ஆராதித்தார்கள்,இரத்தத்தால் அபிசேகம் செய்தார்கள், சகோதரப்படுகொலைகளை துரோகிகள் எனும் மந்திரம் சொல்லி வேள்வி செய்து தெருத்தெருவாய் மடைவைத்தார்கள்.
சகஇயக்கங்களுடனும் இணைந்து போராடுவதாகக் கைகோத்துப் படம் எடுத்து விட்டு தனித்து ஓடமுயன்றதும்.திம்புவில் கிடைக்க இருந்த தீர்வை முழுமையாக ஆய்தறியாமல் அலச்சியம் செய்தது மட்டுமல்ல கைகோர்த்து நின்ற சக இயக்கங்களை கொன்றதுடன் புத்திஜீவிகளைத் தேடித்தேடி அழித்தது என்பன பிரபாகரனும் புலிகளும் தமக்குத்தாமே வெட்டிய பெரியசவக்குளியின் இரண்டாவது பெரியகல்லு எனலாம்.
புலிகள் மக்களிடம் பணம், பொருள் அபகரிப்பு பிள்ளைகளை அவர்களின் விருப்பின்;றி பிடித்துச் சென்றமை புலிகளின் கல்லறையில் மூன்றாவது கல் ஆகும். முதலில் சகதோழமை இயக்கங்களை அழித்து எதிரிகளைச் சம்பாதித்த புலிகள் பின் சாதரணம மக்களில் கைவைக்கத் தொடங்கினார்கள். இது மக்களிடையே கசப்புத்தன்மையை ஏற்படுத்தியதுடன் மக்களே எதிரியாக மாறும் நிலையை ஏற்படுத்தியது.துப்பாக்கிகளுக்குப் பயந்து மக்கள் மௌனமாக இருப்பதை உணராத புலிகள் அவர்கள் தமக்குச் சாதகமாகத்தான் இருக்கிறார்கள் என்று எண்ணினார்கள்.பொது எதிரி ஒருபுறம், தமிழர்களிடையே தோழமை இயக்க எதிரிகள் மறுபுறம்,உண்மையில் போராடும் விடுதலை வேண்டிநிற்கும் மக்களிடையேயும் எதிரிகள்.இந்த மக்களைதான் புலிகளின் பாதுகாப்பும் ஆகும். பிரபாகரனும் புலிகளும் சுற்றம் சூழல் எல்லாம் எதிரிகளைச் சேர்த்து வைத்துக் கொண்டு எப்படி தமிழ்ஈழத்துக்காகப் போராட முடியும்?
எதிரிகள் போதாது என்பதற்காக புலிகளுள்ளேயே இரண்டாம் நிலைத்தலைமையை அடையக் கூடியவர்களைச் சந்தேகம் சந்தேகம் என களத்தில் போடுதலில் இருந்து துரோகியாக்கிப் போட்டுதனால் புலிகளுள்ளேயே எதிரிகளை வளர்த்தார்கள். உ.ம் மாத்தயா குழு, கருணாகுழு. தம்மால் தாமே பலவீனமானார்கள். இதுவே புலிகள் தமக்குத் தாமே வைத்த 4 ஆவது கல்லு.
ஆயுதங்களின் மேல் ஆர்வம் கொண்ட மனோயாளிகளாக மாறி அரசியலைப் புறந்தள்ளி கதாநாயகனான மக்களுக்கு மாயை காட்டி ஒரு மாவியாவாக புலிகள் மாறியதே புலிகளின் ஐந்தாவது கல்லு. இந்தக் கற்கள் எல்லாம் மைல் கற்கள் அல்ல தொலைக்கற்களாயின.
அரசியல் இன்றி வெளிநாடுகளுடனான சரியான இராஜதந்தித் தொடர்புகள் இன்றி போராட்டத்தையும் பேச்சுவார்த்தையையும் நடத்தியது. அதிலும் பேச்சுவார்த்தை காலம் இழுபடும் போது கூட போராட்டம் பிழைபோகிறது என்பதை உணராது இருந்தமையே தமக்குத் தாமே நெஞ்சில் வைத்து பெருங்கல்லு. இதுவே கருணா அம்மானையும் பிரியச் செய்தது.
கருணா அம்மான் வெளியில் வந்ததன் பின்புதான் வெளியுலகிற்கும், எதிரி அரசுக்கும் புலிகளின் பொட்டுக் கேடுகளும்,படம்காட்டலுகளும் தெரியவந்தது.புலிகளின் மாயை உடைபட்டது.புலிகள் எதைச் செய்தார்களே அதையே அரசும் செய்தது.இந்த கதாநாயகத்துவம்(கீரோயிசம்)ஒரு தொற்றாக சிங்களப்பகுதிகளுக்குக் கைமாறியிருக்கிறது. இதனுடைய ஆபத்தான இயங்கு நிலையை சிங்கள மக்கள் உணராதிருப்பதோ உணர மறுப்பதோ மிகப் பெரிய ஒரு மனிதப்பேரவலத்துக்கு இது வித்திடும் என்பதை மறக்கக் கூடாது.இந்த கீரோயிசம்(கதாநாயகத்துவம்)ஒருவகை பாசிச முதலாளித்துவமே.இது பக்திவாதத்தின் அடிப்படையிலேயே ஆரம்பிக்கிறது.கிழத்தேயங்களில் பத்திவாதம் வேரூன்றி இருப்பதற்கு காரணம் தன்னம்பிக்கைக் குறைவும், மனிதநேயத்தின் சிதைவுமேயாகும்.
கடசியில் பிரபாகரனைக் கொன்றது யார்? இலங்கை அரசா? இந்தியாவா? சீனாவா? அமெரிக்காவா? இல்லவே இல்லை புலம் பெயர்ந்த மன்னிக்கவும் புலன் பெயர்ந்த தமிழர்களே. ஆரம்பத்தில் புலிகள் புலம்பெயர்ந்த தமிழர்களைப் பயன்படுத்தினார்கள்.காலப்போக்கில் புலம்பெயர்ந்த தமிழர்கள் புலிகளின் முதுகில் சவாரி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.வெளிநாடுகளில் இயங்கிவந்த புலிப்பினாமிகள் தாங்கள் இன்றிப் புலிகள் ஈழத்தில் இயங்க ஏலாது என்ற நிலைகண்டதும் சுயலாப எண்ணங்கள் தலைதூக்க ஆரம்பித்தது. சுயவங்கிகள் நிரப்பத்தொடங்கின.
பொய்களில்,மிகைப்படுத்தலில்,படம்காட்டலில் கட்டப்பட்ட புலிகளின் அமைப்பு புலத்திலும் படங்காட்டத் தொடங்கின. இப்படங்காட்டல்களும் துரோகிகள் என்று பட்டம் கட்டி தமது சொந்த எதிரிகளை தவித்தலும்,புத்திஜீவிகளைப் புறம்தள்ளிய தும்,பதவி நாற்காலிகளைக் கட்டிப்பிடித்திருக்க முயன்றதுமே புலத்தால் புலிகளுக்கு வைத்த கடசிக்கல்லு.இவர்கள் புதிதாக எதையும் செய்யவில்லை.புலிகாட்டிக் கொடுத்ததையே இலங்கை அரசும்,புலத்துப் புலிப்பினாமிகளும் செய்தார்கள்.
முதலில் தாயிலாந்தில் பிடிபட்ட கே.பி எப்படி வெளியேறினார்?இன்ரபோலால் தேடப்படும் ஒருவரை தாயிலாந்து எப்படி விட்டது?கே.பி பிடிபட்டு விடுவிடுபட்டதன் பின் புலிகளுக்குப் போன ஆயுதங்கள் வெடிமருந்துக் கப்பல்கள் ஒன்றொன்றாகத் கடலினுள் தாழவெளிக்கிட்டது ஏன்? இதற்குப்பின் பெரிய மாவியா வலைப்பின்னல் அல்லது பலம்வாய்ந்த அரசுகளின் பின்னணி இருப்பதை மக்களாலால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை? கே.பியை வைத்தே பிரபாரனின் சா ஒரு சாதராண சாவாக்கப்பட்டது.உண்மையில் பிரபாகரன் செத்தார் என்பதை அறிந்த புலம்பெயர் தமிழ்மக்கள் கொதிப்பார்கள் என்று தெரிந்த கே.பியின் பின்னால் இருந்த அந்த வலு, கேபியை வைத்து பிரபாகரன் இருக்கிறார் என்று கூறி கொதிப்பை அடக்கி பலகிழமைகள் சென்றபின் கேபி மூலமாக பிரபா இறந்த செய்தியைத்தந்தது. இதன் பின் பேச்சு மூச்சின்றி பிடிபடுவதுபோல் சரணடைந்த நிலையையே காணக்கூடியதாக இருக்கிறது.இனி கேபியை யாரும் கொல்ல இயலாது. காரணம் இவர் யாவரும் அறியத்தானே பிடிபட்டார்.அதற்கான சாட்சியங்கள் இருக்கின்றன. சரியா சிந்தியுங்கள் இவ்வளவு நடைவடிக்கைகளின் பின்னால் ஒரு பெரிய சதித்திட்டமும் சரி வலையும் இருக்கிறதா இல்லையா?
உலகம் முழுவதும் பிச்சையெத்தாற்போல் எம்மக்களைக் கருத்தில் கொள்ளாது புலித்தலைமையைக் காக்க தெருத் தெருவாய் கத்தினார்களே புலம்பெயர் தமிழர்கள்.முக்கியமாக எம்பிரச்சனைக்கு அடிகோலிவைத்த பிரிந்தானிவே ஏன் மௌனமாய் இருந்தது? ஆம் அவர்கள் தம்ஆயுதங்களை இலங்கை அரசுக்கு வித்த விபரம் வந்துள்ளது பாருங்கள். காலம் காலமாக எம்மக்களை வந்து அழித்தும், உதிரம் உறிஞ்சியும், பின் இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுத்து கொன்று குவித்தும் வரும் பிரித்தானியாவிற்கு இன்னும் சேவகம் செய்யப்போகிறீர்களா?புலிகளும் எம்மக்களை அழித்து வெள்ளையனுக்கு நல்லவனாய் நடித்தார்கள். வெள்ளையன் நடித்தான் பார்த்தீர்களா?ஒருவனுக்கு அடிவிழாதவரை நோத்தெரியாது. எம்நாட்டுக்கு வந்து கொன்றதில் இருந்து ஆயுதம் அனுப்பிக் கொன்றது வரை அவனிலோ அன்று அவன் தேசத்திலோ ஒரு கீறல் விழுந்ததா?குனியக் குனியக் குட்டுவது தான் உலகம். என்றைக்காவது அவன் உயரமாக இருந்தா லும் எட்டிக்குட்ட முயற்சித்தீர்களா?
புலம்பெயர் தமிழர்கள் சரியான வெளிநாட்டு இராஜதந்திரத் தொடர்புகளையும், முன்னணி அரசியல் தொடர்புகளையும் வைத்திருக்க வில்லை.அன்ரன் பாலசிங்கம் கூட சரியான இராஜதந்திரத்தொடர்புகளை வைத்திருக்கவில்லை என்பதே என் கருத்து. அப்படி இருந்திருந்தால் அவரின் மாவீரர் உரைகளை நீங்கள்கேட்டுப்பாருங்கள் அவர் சத்திரகாவுக்குப் புலுமயிர் சிலந்தி பிடிப்பதைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்க மாட்டார்.ஓரினம் அழிந்து கொண்டிருக்கும் போது புலுமயிர் சிலந்தி பிடிக்கத்திரந்தவர்தான் தேசத்தின் குரல்.புலுமயிர் சிலந்தி பிடிப்பதுதான் தேசத்தின் குரலின் செயலோ? இவருடைய மரணவீட்டு வீடியோக்களை எடுத்துப்பாருங்கள் புரியும் எத்தனை இராஜதந்திரிகள் அவந்திருந்தார்கள் என்பதை. தேசத்தின் குரல் என்று பட்டம் கொடுக்கும் அளவிற்கு இருந்த பாலசிங்கத்தின் மரணவீட்டுக்கு வந்த வெள்ளையரின்,இராஜதந்திரி களின் எண்ணிக்கைகளைப் பார்க்கும் போது பிரபாகரனுக்கும்,மக்களுக்கும் புரிந்திருக்க வேண்டும் எம்மக்கள் பிரச்னையை ஒரு பயங்கரவாதச் செயலாகத்தான் வெளிநாடு பார்க்கிறது என்று. சரி பயங்கரவாதம் என்றால் என்ன என்று வெளிநாட்ட வன் புரிந்திராவிட்டால் புலிகள் புரியப்பண்ணியிருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை? 500 ஆண்டுகாலத்துக்கு மேல் அடிமை யாய் இருந்த பழக்க தோசமா?தமிழர்கள் கைகட்டிச் சேவகம் செய்ய மட்டும்தான் சரியானவர்கள் என்பதையும், அரசியல், பொருளாதார, போராட்ட தந்திரங்கள் அற்றவர்கள் என்பதையும் புலிகளும், பிரபாகனும் நிரூபித்துச் சென்றுள்ளனர்.
சிங்கள மேலாதிக்க பௌத்த சிறீலங்காச் சட்டத்தில் தமிழர்களுக்கான எல்லா உரிமையும் எழுத்தளவில் உள்ளது. எமக்காகப் பரிந்து பேசவரும் நாடுகளுக்கு எழுத்துக்களை சட்டப்புத்தகத்தில் காட்டி தப்பி விடுகிறார்கள் பேரினவாத அரசுகள்.இதைப் பிழை என்றும் ஏன் ஈழம்கேட்டுப் போராடுகிறோம் என்றும் சரியா விளங்கப்படுத்தாதது புலிகளின் தோல்வியாகும். பிரபாகரனின் மார்பில்வைத்த முதல் கட்டை நோர்வேயூடான புரிந்துணர்வு ஒப்பந்தம். சுமார் 1959ல் இருந்து தமிழினம் போராடுகிறது சிங்கள் அரசு புரியவில்லை உணரவில்லை என்று புரிந்து உணர்வதற்குச் சந்தர்ப்பம் கொடுத்தார்கள். அரசு புரிந்தார்கள், உணர்ந்தார்கள் எப்படி? புலிகளின் படங்காட்டலையும், சுலபமாய் அடித்துத் தள்ளலாம் என்பதையும்.இரண்டாவது 40நாடுகளின் அனுசரணையுடன் வடக்குக் கிழக்கிணைந்த வெளிநாட்டவர்களின் பார்வையின் கீழ் அதிகாரப்பரவலாக்கத்தை ஏற்றுக் கொள்ளாததும், வெளிநாட்டுகளைக்கு நல்லபிள்ளையாய் நடித்ததும், நம்பியதும் ஆகும். பிரபாகனும் புலிகளும் செய்த செயலுக்கு தமிழ்மக்கள் விட்டகண்ணீர்தான் கொள்ளிவைத்தது. பெற்றார்களின் முன்னால் கத்தக்கத்த பிள்ளைபிடிகாரர்போல் பிள்ளைகளைப் பித்துப்போகும் பொது பெற்றோரைச் சுட்டுவிட்டு; பிடிச்துச் பழிதானையா வைத்தது நெஞ்சாங்கட்டை.
மாவீரர் தினமென்று உலகெங்கும் தீபம் ஏற்றிய தலைவா பிரபா!
உனக்கு சாவுக்கு ஒரு குத்துவிளக்குக் கொழுத்தக் கூட ஒருகுழந்தையில்லை.உன்னை எரித்த இடத்தையோ புதைத்த இடத்தையோ பார்க்க ஒரு தமிழ்மகன் கூட இல்லை.என்மகனே!என் அப்பனே! சூரிய புதல்வனே! என்று தேசமெங்கும்,வானொலியெங்கும் வாயாரப் புகழ்ந்தபோது பெருமைப்பட்டாயே அப்போ எத்தனை மனங்கள் தம்பிள்ளைகளைப் பறி கொடுத்து விட்டு தம்முணர்வுகளுக்கும் பாசத்துக்கும் கொள்ளிவைத்துவிட்டு உன்னைத் திட்டியிருக்கும்.நீ ஒரு சரியான,முறையான,மக்களைக் கருத்திலும் மையமாக வைத்தும் போராட்டத்தை நடத்தியிருந்தால் பிள்ளைகள் மட்டுமல்ல பெற்றோரும் உன்போராட்டத்துக்குச் சேர்ந்தே வந்திருப்பார்கள். உன்னைப் பாதுகாக்க ஒரு புலிப்படையை உருவாக்கினாயே தவிர மக்களைக் காப்பாற்ற என்ன செய்தாய்? மக்கள் உன்கண்முன்னால் துடிக்கத் துடிக்கச் செத்தபோதும் வாழாது இருந்தாயே அதற்குக் கிடைத்த தண்டனைதான் கூண்டோடு கைலாயமா? அல்லது நரகலோகமா? கடசியாகச் கோழையாகச் சரணடைந்து சித்திரவதைப் பட்டுச் செத்தாயே. அந்தச் சரணாகதியை மக்களுக்காகச் செய்திருந்தால் மக்களாவது ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டிருப்பார்கள். மற்றவர்கள் பிள்ளைகள் மட்டும் சயனைட்டுக் கடித்துச் சாகவேணும் நீ மட்டும் சரணடைந்தது எப்படி. உன் சயனைட்டுக் குப்பி உன்கழுத்தில் கடசிவரையும் கிடந்ததே. சிலவேளை நீ கூட உயிருடன் இருந்திருக்கலாம். நீயிருப்பதாக நம்பிக்கொண்டு பலர் வாழ்கிறார்கள்.நீ இனி இருந்தென்ன இல்லாது விட்டென்ன? அப்படி நீ உயிருடன் இருந்தால் அப்படியே இறந்தவனாகவே இருந்துவிடு. அரசு தரப்போகும் தீர்ப்பை,தண்டனையை விட மக்கள் தரப்போகும் தீர்ப்பையும்,சித்திர வதையையும் உன்னால் தாங்கமுடியாது.அதைப்பார்த்துச் சகிக்க எம்மாலும் இயலாது.நீ இறந்தவனாகவே இருந்திடு.
இன்று எம்மினத்துக்கு நீ செய்து விட்டுப்போன துரோகங்களைத் திரும்பிப்பார். எம்மக்களை அழித்தாய்,1983ல் இருந்ததை விட எம்மக்களை கீழ் நிலைக்குத் தள்ளினாய். எம்மக்களுக்குக் கிடைக்க இருந்த கொஞ்ச நெஞ்ச உரிமைகளையும் பறித்தாய். சிங்கவரசை எதிரி எதிரி என்று அவர்களிடமே பணம் வாங்கி எம்மக்களைப் பாடையில் தள்ளி அவர்களுடன் கொண்டாடினாய். திம்புவில் இருந்து,சந்திரியா ஜனாதிபதி என்ற பதவியை இல்லாது செய்வதூடாக அதிகாரப்பரவாலக் கலுக்கும், ஜனநாயகத்துக்கு வழிவிடாது நீலன் போன்ற அறிவாளிகளை முட்டாள் நீ கொன்றாய். நீமட்டும் சிங்கள அரசுடன் சேர்ந்து எதையும் செய்யலாம் மற்றவர்கள் முயன்றால் சூடு. கடசியாக நோர்வேயூடு கொணரவிருந்து அதிகாரப்பரவாலாக்கம் நிலம், அதிகாரம், மொழி, பொலிஸ் உட்பட வடக்குக் கிழக்குக்கு தரவிருந்து அதிகாரங்களை அலட்சியம் செய்து எம்மைக் பாதாளத்தில் தள்ளினாய். உன் புலிவாழ்க்கையே கூடவிருந்து குழிப்பறிப்பதில் தானே தொடங்கியது. உ.ம் சுதுமலை பற்குணம்.கடசியாய் உன்மக்களே உனக்குக் குழிபறித்தார்கள் பார்த்தாயா?நீ உன்மக்களுக்குத்தான் நேர்மையாக நடக்க வில்லை சரி ஆயுதமாகவும், பணமாகவும் வாங்கிக் குவித்த சிங்களவர்களுக்காவது நன்றியுள்ளவனாய் இருந்தாயா.அப்படி இருந்திருந்தால் சிலவேளை விதி உன்னை மன்னித்திருக்கும். கடசியாக நீ எம்மக்களுக்கு விட்டு விட்டுப் போன மீதி விடுதலை, போராட்டம் என்ற சொற்களை எம் ஏழேழு சந்ததி உச்சரிக்க இயலாத அளவிற்கு எம்மினத்தைப் பாதாளத்தில் தள்ளி எம்மை சிங்களவனுக்கு அடிமையாக்கி எம்மை வித்துவிட்டுச் சென்றிருக்கிறாய். இதுதான் உன்னை நேசித்து உன்னைக் காப்பாற்ற முயன்ற இனத்துக்கு நீ விட்டு விட்டுப் போன மிச்சம்.இன்று மீண்டும் எம்மக்கள் ஆரம்ப காலங்களில் த.வி.கூட்டணி கூறியதுபோல் உப்புச் சப்பு இல்லாத 13.ஆவது திருத்தச் சட்டத்தில் போய் நிற்கிறார்கள்.நீ எங்கிருந்தாலும் அதாவது மேலோ,கீழோ இக்கட்டுரையை வாசித்து விட்டுச் சிந்தி.இப்பவாவது சொல்வாயா ஈழத்தமிழ் மக்களின் உண்மைத் துரோகி யார் என்று?சிந்திப்பதா? சிரிக்கிறாய் போலும். நீ சிந்தித்திருந்தால் தமிழ்மக்களுக்கு இந்த நிலையா வந்திருக்கும்.
Engalthesam
0 விமர்சனங்கள்:
Post a Comment