இரத்தம் வடிந்து காய்ந்த நிலையில் பெண்ணின் சடலம் சுண்டுக்குளியில் மீட்பு!
அரியாலை வடக்கு, சுண்டுக்குளிப் பகுதியில் தனியாக வசித்து வந்து பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
இறந்தவரின் சடலம் நேற்றுப் பிற்பகல் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டது. அந்தப் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. திருநாவுக்கரசு சற்குணவதி வயது 57 என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, இறந்த பெண்ணின் வீட்டுச் சூழலில் துர்நாற்றம் வீசியதை அடுத்து அயலவர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அங்கே பூட்டிய அறையினுள் தலை, கழுத்துப் பகுதிகளில் இருந்து இரத்தம் வடிந்து காய்ந்த நிலையில் விரிப்பினால் போர்த்திய நிலையில் சடலம் காணப்பட்டது. சடலம் துர்நாற்றம் வீசியதிலிருந்து மூன்று, நான்கு நாள்களுக்கு முன்னரே அவர் இறந்திருக்கலாமேன சந்தேகிக்கப்படுகிறது. அந்தப் பெண் அணிந்திருந்த நகைகளையும் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் பொலிஸாரினால் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
0 விமர்சனங்கள்:
Post a Comment