ஆவியாகிய கணவன்
மனிதனின் வாழ்வு எந்நேரத்திலும் ஏதோவொன்றை எதிர்பார்த்திருக்கிறது. அவைகள் பிரார்த்தனைகள் மூலமாகவுமிருக்கலாம்.தியானத்திலீடுபடும் யோகிகள் இவைகளிலிருந்து விதிவிலக்கானவர்கள். பேராசையும் உலோபித்தனமும் எண்ணங்களிலிருந்து ஊடுறுவும் போது அதற்கு அடிமையாகிவிடுகிறான்.
மோகம் இதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. எதிர்பார்த்திராதவாறு ஒருவருக்கு விபத்தின் மூலம் மரண மேற்படுகிறது அந்நிலையில் அவரது எண்ணங்கள் வீடு, மனைவி, மக்கள் அல்லது கணவனின் மீதிருக்கும். இவ்வாறு இறந்த ஒரு கடற்படை அதிகாரியின் சம்பவமிது?
முப்பத்துரெண்டு வயதுடைய சனத் கடற்படையில் சேவையாற்றுபவர், திருமணமான இவருக்கு பத்து வயதுடைய மகனும் ஒரு வயதுடைய மகளுமிருந்தனர். தன்னுடைய சேவையில் அதிகளவு காலத்தை கடலில் கழித்த இவர் மாதமொருமுறை விடுமுறையில் வீடு வந்து மனைவி மக்களுடன் காலத்தை சந்தோசமாக கழித்து விட்டு மீண்டும் கடமைக்குச் செல்வது வழமை.
1996ம் ஆண்டு பயங்கரவாதிகள் ‘ரணவிரு’ கப்பலை தாக்கியழித்த போது சனத் கடுமையான காயங்களுக்குள்ளாகி கடலில் மிதந்தார். இவரை இராணுவ வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தபோது உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது அந்நிலையில் இவர் தன் மனைவி, மகனின் பெயரை கூறி தன்னை எப்படியாவது காப்பாற்றும்படி இராணுவ அதிகாரிகளிடம் வேண்டினார்.
காயம் கடுமையாயிருந்ததால் அதிக நேரம் அவர் உயிர் வாழவில்லை. இறந்தபின் அவரது பூதவுடல் சகல மரியாதைகளுடன் வீட்டிற்கு கொண்டுவந்து ஒப்படைக்கப்பட்டு சமய கிரியைகளையடுத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.
1997ம் ஆண்டு வருடாந்த நினைவு வைபவத்தில் சனத்தின் நினைவாக இரவு முழுவதும் சமய கிரியைகள் நடைபெற்றன.
ஆவியாகிய கணவன் மனைவியுடன்
புண்ணிய கருமங்களில் சமய போதனைகளும் இடம்பெற்றன. சனத்தின் மனைவி இவைகளை உயர்ந்தளவில் செய்தார். சமய வைபவம் நடைபெறும் தினம் பதினொரு வயதுடைய மகன் இறந்த தந்தை சனத்தை போல் பேசினான். அவனுடைய நடத்தைகள் மாறுதலாயிருந்தன சிறுவன் பேசினான்.
“நான் சனத் எதிரிகளின் தாக்குதாலால் நானிறந்தேன் எமது கப்பலும் விநாசமானது நான் நீந்தி கரையேறும் போது துப்பாக்கி சூட்டுக்கிலக்கானேன். புண்ணிய கருமங்களால் எனக்கு நன்மை கிடைத்தது. என் மகனுக்கு துயரம் கொடுக்காதீர்கள் அவ்வாறு செய்தால் மகனை எடுத்து சென்றுவிடுவேன்.
மகனுக்கு பதினெட்டு வயதாகும் போது நான் திரும்ப வருவேன் மகனுக்கு கொடுக்க வேண்டியதொன்றுள்ளது” என சிறுவன் தகப்பன் சனத் போல் பேசினான்.
மகனுக்கு பதினெட்டு வயது பூர்த்தியானதும் வயிற்று வலியும் காய்ச்சலுமேற்பட்டது. வைத்திய சிகிச்சை பெற்றும் சுகமடையவில்லை. ஒருநாள் வானொலியில் பிரித் உச்சாடனம் ஒலிபரப்பட்ட போது மகன் தடுமாற்றமடைந்து வெளியேயஓடினான். மாமாக்கள் அவனை பிடித்து அறைக்குள் அழைத்து வந்தனர். மகனின் அருகில் சென்ற தாய், மகனின் தலையை வருடியவாறு “இதிபிசோ” கீதத்தை கூற, மகன் தாயின் வாயை நெரித்து மூடினான். இவை பற்றி சனத்தின் மனைவி “மல்லிகா” கூறுவதாவது,
நான் இதிபிசோ கீதத்தை கூறும் போது வாயை நெரித்து மூடிய அக்கையில் புதிமையான சக்தியிருந்ததையுணர்ந்தேன் அவை மகனின் கையல்ல இதற்கு முன் ஒருநாள் மகன் என் தாயாரை (அம்மம்மா) கேலி செய்ததால் அவர் அவனை வைதார் இதையடுத்து தாயார் சுகயீனமானார். அன்று என் வாயை மூடியபோது மகனின் உடலில் சனத் புகுந்துள்ளதையுணர்ந்தேன்.
“ஏன் சனத் இங்கு வந்தீர்கள் எனக் கேட்டேன் எனக்கு என் மகன் தேவை அவனை எடுத்துச் செல்லவேண்டும். நீங்கள் என் மகனுக்கு துயரமளிக்கaர்கள் அன்று மாமி என் மகனை வைதார். அப்போது மகன் வேதனையடைந்தான் அதையடுத்து மாமி சுகயீனமானார். நான் தான் மாயை நோயாளியாக்கினேன் எனக்கு என் மகன் தேவை’ என ஆவி கூறியது.
“அவ்வாறு மகனை எடுத்துச் செல்ல இடமளியேன் எனக்கு எல்லாவற்றிற்கும் மகன் மட்டுமே உள்ளான் அவ்வாறெனில் என்னையும் எடுத்துச் செல்லென தாய் கூறினார். ‘மகன் வேண்டுமென்றால் அறையில் வைக்க வேண்டாமென துடித்தான். எனக்கு தேநீர் கொண்டுவா எனக்கூற நான் சமையலறைக்கு சென்று தேநீர் தயாரித்து எடுத்து வந்தேன் அதனை அவன் பருகவில்லை.
அப்போது மகன் சாதாரண நிலைக்கு வந்திருந்தான். மீண்டும் ஒருநாள் காலையில் நான் வானொலியில் பிரித் உச்சாடனத்தை ஒலிக்க ஏற்பாடு செய்தபோதுரு என் மகனின் உடலில் கணவர் ஆரூடமானார் அவனது தோற்றம் பயங்கரமாயிருந்தது. ‘உங்களுக்கு நான் சொல்லியிருக்கிறேன் பிரித் உச்சாடனத்தை ஒலிக்கச் செய்ய வேண்டாமென நான் உன் லொறியை புரட்டிவிடுவேன் (மல்லிகாவிடம் லொறியொன்றிருந்தது) லொறி வெளியிலுள்ளதல்லவா, வாகன செலுத்துனரை மட்டும் அனுப்பு என்னவாகின்றதெனப்பார்.
நீ எப்போதும் ‘இதிபிசோ’ கீதத்தை கூறுகிறாய் அதையும் நிறுத்து தவறினால் உன் தாயை கொன்றுவிடுவேன் என் மகனை உன் தாய் வைத நாளிலிருந்து அவள் நோயாளியல்லவா ஹா...ஹா... என ஆவி சிரித்தது. இந்நிலையில் மல்லிகாவின் சகோதரர்கள் மாந்திரிகரை அழைத்து வந்தனர். மாத்திரிகர் உள்ளே நுழைந்ததும் மகனின் நிலை உக்கிரமடைந்தது ஹே.... ஹே.... ஹோ... என சிரித்த ஆவி என்னை விரட்ட இவனால் முடியுமா எனக் கூறி மேல் சட்டையை அணிந்ததுடன் தலைவாரி இவ்வுலகில் வாழும் போது இருந்ததுபோல் ஆவி வெளியே சென்று உனக்கு என்னை விரட்ட முடியாது எனக் கூறி அவனை தாக்க முற்பட்டது மாந்திரிகரும் பயப்படவில்லை உன்னைப் போல் நான் பலரை சந்தித்திருப்பதாக கூறினார்.
பெளத்த தர்மத்தை விட ஆவி சக்திவாய்ந்ததா இல்லவேயில்லை. பெளத்த தர்மத்தை விட சக்திவாய்ந்ததொன்றில்லை அவை உண்மையானது எனக்கூறி மாந்திரிகர் பிரித் உச்சாடனம் செய்து நூலை கையில் கட்டியதும் ஆவி பிடித்திருந்தவன் அமைதியானான். இவை போன்று இன்னுமொரு புதுமையான சம்பவம் 1997ம் ஆண்டிலிருந்து நடைபெற்றுள்ளது. வீட்டின் விளக்கை அனைத்ததும் சனத் அறைக்குள் வருவார் என் கட்டிலில் என்னருகில் அமர்வார் அச்சமயம் என் கணவர் ஏற்கனவே இறந்துவிட்டாரென எனக்கு தோன்றாது முன்பு வாழ்ந்த போது இருந்த நிலையேற்படும்.
கடற்படையில் அவர் கடமையாற்றிய சமயம் மாதமொருமுறை விடுமுறையில் வரும் நாட்களிலேயே இப்போதும் வருவார். அவர் அறையிலிருந்து வெளியேறும் போதுதான் கணவர் இறந்துள்ளரென்பதை உணர முடிகிறது. மகனின் பிரச்சினையால் என் அம்மா நோயாளியானதின் பின் கோபமடைந்த அவர் இப்போது வருவதில்லை இந்நிலையில் என் சகோதரர்கள் நான் இளமையாயிருப்பதனால் பாதுகாப்பு தேவையெனக் கருதி மீண்டும் திருமண ஏற்பாடு செய்ய முற்பட்டனர்.
சகோதரர்களின் விருப்பபடி ஒருநாள் மணமகன் மணமகளை பார்க்க வந்தார். எனக்கு திருமணம் அவசியமாயிருக்கவில்லை மணமகனிலும் நான் விருப்பம் கொள்ளவில்லை எனக் கூறும் ‘மல்லிகா’ தொடர்ந்து கூறுவதாவது, அன்றிலிருந்து என் இறந்த கணவர் மகனை தொற்றியுள்ளார்.
முதலில் அம்மாவை நோயாளியாக்கினார். பிரித் உச்சாடனத்தை வானொலியில் ஒலிக்கச் செய்யவேண்டாமென்றும் இதிபிசோ கீதத்தை கூறாவேண்டாமென்றும், மாந்திரிகரை தாக்கச் சென்றபோது அவர் பிரித் நூலை கையில் கட்டியதும் அமைதியானதையும் அவருக்கு விருப்பமில்லாததை செய்யக் கூடாது என்பதையுணர்ந்ததாகவும் கூறியுள்ளார் எவ்வளவுதான் பெரிய வீரராயிருந்தாலும் பெளத்த மத கிரியைகளின் சக்தி அனைத்தையும் கட்டுப்படுத்தி விடுமென்று கூறினார். தொடர்ந்து அவர் கூறினார்.
“தற்போது என் மகனுக்கு பதினெட்டு வயதாகிறது என் மகனை நான் எடுத்துச் செல்வேன் என என் இறந்து கணவர் அடிக்கடி பயமுறுத்தி வருகிறார். நான் பீதியடைந்துள்ளேன். எமது சகோதரப் பத்திரிகை சிலுமினவில் பிரசுரமாகும் ஆவி பற்றிய சம்பவங்களை வாசித்து அதனை நிவர்த்திக்க வழிகூறும் வண. கஸ்நாவே ஞானாந்த மதகுருவை சந்தித்து என் பிரச்சினைகளை கூறினேன்.
மதகுரு ஆலோசனை வழங்கிய அனைத்து சமய வழிபாடுகளை ஒழுங்காக செய்தோம் இப்போது எமக்கு எப்பிரச்சினையுமில்லை. எம்மால் நிறைவேற்றப்படவேண்டிய கடமைகளை தவறக் கூடாது இவ்வுலகில் வாழும் போது எம்மை வாழவைத்தவர் என் கணவரென நினைத்து அவர் பெயரில் புண்ணிய கருமங்கள் செய்வது என் கடமையென்பது எனக்கு தெரியும்.
என் கணவர் நாட்டு மக்களுக்காக சேவை செய்து தன் உயிரை பரிகொடுத்தார். இதற்காக அரசாங்கம் பெரிய தொகையிலான பணத்தை வழங்கியது. அதேபோன்று நல்ல ஓய்வூதியத் தொகையையும் பெற்று வருகிறோம். எனக் கூறிய இறந்த கடற்படை வீரரின் மனைவி மல்லிகா மேலும் சொன்னார்.
இப்பணத்தினால் நாம் சந்தோசமாயிருப்பது பெரிதல்ல, இப்பணத்தை நாம் பெறுவதற்கு காரணமாகவுள்ள வரை நினைத்து அவர் பெயரில் புண்ணிய கருமங்கள் செய்து நன்மை தேடித் தரவேண்டும். அவர் இப்போதிருக்கும் நிலையை விட உயர்வடையவேண்டு மென்ற எண்ணத்துடன் தர்ம வழிபாடுகளிலீடுபடவேண்டும். இரு பிள்ளைகளையும் அவ்வழியில் இடுபடுத்தியுள்ளோம்.
வண. கஸ்நாவே ஞானானந்த மதகுரு சொல்வதின்படி என் இறந்த கணவர் தற்போது புண்ணிய ஸ்ரீ மஹா போதி பிரானருகில் அனுப்பப்பட்டுள்ளார். அங்கு அவர் ஸ்ரீ மஹா போதி பிரானுடன் பழகி களு தேவதா பண்டார தேவியரின் பூஜைகளில் கலந்து வருகிறார்.
இறந்த உறவினர் அல்லது எமது உடலில் புகுந்துள்ள ஆவியை மாந்திரிகர் மூலம் சிரமப்பட்டு வெளியேற்றுவதை விட தர்மத்தினடிப்படையில் செயல் பட்டு நன்மையான காரியங்களை செய்தால் எம் மனோ சக்தி அபிவிருத்திடைகிறதாம். இவ்வாறு எம் சக்தி வலுவடையும் போது ஆவிகளுக்கு எம்மை தொந்தரவு செய்ய முடியாதாம். ஆவிகளானாலும் கருணையுடன் புண்ணிய கருமங்கள் செய்து அதனை உயர்ந்த இடத்துக்கு அனுப்பி நிர்மலமாக்குவது பெரும் நன்மையான செயலென வண. ஞானானந்த மதகுரு கூறுகிறார்.
இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட கடற்படை அதிகாரியின் மகனுக்கு வயது பதினெட்டாகிறது இவரை பீடித்திருந்த வயிற்றுவலி, காய்ச்சல் நோயாகியன மதகுரு ஆலோசனை வழங்கிய அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டு வந்தபோது தானாகவே சுகமாகின.
எம். எப். ஜெய்னுலாப்தீன்
0 விமர்சனங்கள்:
Post a Comment