போர் முடிந்துவிட்டது - பயங்கரவாதம் ஒழிந்து விட்டது
நாட்டைப் பீடித்த பயங்கரவாதத்தை அடக்கி, சமாதானம் ஏற்பட, வடக்கே யுத்தத்தை இடையறாது செய்து கொண்டே நாட்டின் பிற பிரதேசங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து சென்ற- சமகால உலகிலே ஒரேயொரு தலைவர் யாரென்றால், அவர்தான் நம் இலங்கைத் தாய் பெருடையுறும் வண்ணம் ஆட்சி புரிந்து வரும் நம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தை மக்கள் மேலும் உறுதி செய்ய விரும்பியதன் விளைவாகவே, எதிர்வரும் 2010 ஜனவரி 26 இல் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில், அனைத்து மக்களினதும் சார்பில் நம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் போட்டியிட முன்வந்துள்ளார்.
வெறும் அரசியல் பலத்தை மட்டும் நம்பி தேர்தல் களத்தில் குதிக்காமல், கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்கள் மத்தியில் முன்வைத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய வெற்றி வேந்தனாக- சாதனை மன்னனாக மக்கள் பலத்தை நம்பியே, இம்முறையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு, தன் தலைமைத்துவத்தை மீண்டும் உறுதிசெய்து ஊருலகத்திற்குக் காட்டிட முன்வந்துள்ளார் என்றால், அது நூறு சதவீத உண்மையாகும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவின் சேவைகளுக்கு- சாதனைகளுக்கு பொதுமக்களே போதுமான சாட்சிகளாவர். அதனால் ஊரறிந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நாலாண்டு கால நல்லாட்சியின் சாதனைகளை சொல்லித் தெரிய வேண்டியிதில்லை. எனினும்- ஞாபகமூட்டிக் கொள்வது. மக்களின் பேராதரவை மென்மேலும் ஊர்ஜிதம் செய்வதாக அமையுமே.
நாட்டைப் பீடித்திருந்த பயங்கரவாதத் தீயை அணைத்து, சமாதானத் தென்றலை வீசச் செய்யும் முயற்சியில், கடந்த காலங்களில் பல தலைவர்கள் பல்வேறு உபாயங்களை கையாண்டு, பல திட்டங்களைத்தீட்டி யுத்தம் செய்து வந்தனர்.
எவருக்குமே பிரச்சினைக்கு முடிவுகாண வழி தெரியவில்லை. ஆனால்- கடந்த (2005) ஜனாதிபதி தேர்தலில் “நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், எந்த வழியிலாவது பய்கரவாதத்தை ஒழித்து சமாதானத்தைக் கொண்டு வருவேன்” என சூளுரைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது நாலாண்டு கால நல்லாட்சியில் சாணக்கியமான தலைமைத்துவத்தை வழங்கி சாதுர்யமாக ஆணைகளைப் பிறப்பித்து பயங்கரவாதத்தை ஒழித்து போரில் வெற்றி கண்டு, நாடு எதிர்நோக்கியிருந்த சமாதானத்தைக் கொண்டு வந்து இலங்கை வரலாற்றில் சாதனை மன்னனாகப் பெயர் பதித்து விட்டார்.
முதலில் மக்கள் பயமின்றி- தயக்கமின்றி எல்லா இடங்களிலும் நடமாடும் சுதந்திரம் கிடைத்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் யுத்த பீதியில் வெளியே வரமுடியாமல், முடங்கி அடங்கிக் கிடந்தவர்கள், போர் முடிவுக்கு வந்து, நாட்டில் அமைதி ஏற்பட்டதும், சுதந்திர நாட்டுப் பிரஜைகளாக நடமாடும் காட்சிகளை ஊரெங்கும் பார்க்கிறோம்.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் வட கிழக்கு இணைக்கப்பட்ட ஒரு பிரதேசமாக ஆக்கப்பட்டு, பயங்கரவாதம் உச்சக் கட்டத்தில் கொழுந்து விட்டெரிந்த கொடிய சூழலில், அன்று போர் நடவடிக்கைகளும் அதனால் இறந்தோர் தொகையும் பெருகிக் கொண்டே சென்றன.
அனால் இன்று நிலைமை என்ன? இணைக்கப்பட்ட வட கிழக்கு பிரிக்கப்பட்ட நிலையில், போரில் வெற்றி வாகை சூடி பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு, நாட்டுக்கு சமாதானத்தை நம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொண்டு வந்தமையால், நாட்டின் எல்லாப் பிரதேசங்களிலும் அமைதி நிலவி, சமாதானம் ஏற்பட்டு மக்கள் நிம்மதியாக வாழும் நிலை மலர்ந்துள்ளது.
நாட்டு மக்கள் அனைவரும் எல்லா பேதங்களையும் மறந்து, ஐக்கிய இலங்கையை கட்டி எழுப்பும் ஆர்வத்தில் புதிய இலங்கையை நிர்மாணிக்கும் பயணத்தில் வீறுநடை போட விருப்பம் கொண்டுள்ளனர்.
நாட்டின் தலைமைத்துவத்தை அலங்கரிக்கும் ஜனாதிபதி முஸ்லிம் சமுதாயத்தின் நலனிலும், உயர்ச்சியிலும் உண்மையான பற்றும்- பாசமும் கொண்டவராக இருத்தல் வேண்டும், நம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதற்கு முன்னரே உலகளாவிய முஸ்லிம் உம்மத்துக்களுடன் கைகோர்த்து நின்று “முஸ்லிம்களின் உண்மையான நண்பள்” என்பதற்கு கடந்த 30 வருடங்களுக்கு மேலாகவே பாலஸ்தீன முஸ்லிம்களின் விடுதலைக்காக குரல் கொடுத்து வருபவர்.
இந்த முஸ்லிம்களின் நண்பரான நம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சாதாரண சராசரி அரசியல்வாதி அல்ல. நாற்பது வருட அரசியல் அனுபவம் மிக்கவர்.
சுறுசுப்பான செயல்திறன் மிக்க தலைவர். எல்லா சமுகத்தவரும் நல்வாழ்வு வாழ வேண்டும் என விரும்புகின்றவர். நாட்டின் பின்தங்கிய பிரதேசங்கள் யாவும் அபிவிருத்தி அடைய வேண்டும் என உண்மையாகவே விரும்பி செயல்பட்டு வரும் தலைவராவார்.
போர் முடிந்துவிட்டது. பயங்கரவாதம் ஒழிந்து விட்டது. இனி என்ன? “வாருங்கள்.. இனி நாட்டை கட்டி எழுப்புவோம்” என நாட்டு மக்களை அழைக்கிறார் நம் ஜனாதிபதி நாட்டைக் கட்டியெழுப்ப மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைத் திட்டங்கள் மென்மேலும் தொடரவும், அதன்மூலம் அமைதியும்- சமாதானமும்- நிம்மதியும் இயல்பு வாழ்வை உறுதி செய்திட புதிய இலங்கையை நிர்மாணிக்க- நம் அனைவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கரங்களைப் பலப்படுத்துவோம்.
Thinakaran
0 விமர்சனங்கள்:
Post a Comment