சிறுபான்மையினம் என்ற ஒன்று இங்கில்லையென ஜனாதிபதி மன்னாரில் தெரிவிப்பு
மன்னார் கடற்பகுதியில் மீனவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தளர்த்தி சுதந்திரமான மீன்பிடியில் ஈடுபட சந்தர்ப்பம் அமைத்துக் கொடுப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார். மன்னார் நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். திருக்கேதீஸ்வர ஆலயத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்தவுடன் அப்பிரதேசத்தை புனிதப் பிரதேசமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் சிறுபான்மையினம் என்ற ஒன்று இல்லையென குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டுமக்களுக்கு தொடர்ந்தும் சேவையாற்ற விரும்புவதாகவும், இதனால் தனக்கே அனைவரும் வாக்களிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார். மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மில்ரோய் எஸ்.பெர்ணான்டோ, புத்திரசிகாமணி, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, ஜனாதிபதியின் ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பசில்ராஜபக்ஷ, உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment