இருவரினதும் சந்திப்பு பார்ப்போர் நெஞ்சங்களை நெகிழச் செய்தது
2007 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி இடம்பெற்ற மோட்டார் தாக்குதல் காரணமாக கண்கள் இரண்டையும் இழந்த நான்கு வயதுச் சிறுவனான தரிந்து லக்ஷானே ஜனாதிபதியைச் சந்தித்த விசேட அதிதியாவான்.
தரிந்துவின் தாயார் சிறுவனின் கண்களைக் குணப்படுத்த அயராது பாடுபட்டு வருகின்றார். ஜனாதிபதியிடம் உதவிகோரி வந்த அந்தச் சிறுவனை ஜனாதிபதி வாரி அணைத்து கட்டித்தழுவி முத்தமிட்ட காட்சி பார்ப்போர் கண்களைக் குளமாக்கியது.
அன்புச் செல்வமே உங்களுக்கு என்ன வேண்டும் என ஜனாதிபதி, சிறுவனிடம் கேட்க எனக்கு விளையாட ஒரு கார் வேண்டும் என சிறுவன் பதிலளிக்க தரிந்துவுக்கு உடன் கார் ஒன்று வழங்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் பிள்ளைப்பாசம் என்ன என்பதை நன்குணர்ந்த ஜனாதிபதி, சிறுவனின் கண்களைக் குணப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு ஆலோசனை வழங்கியதுடன் இடிபாடுகளுடனான குடிசை ஒன்றில் வாழ்ந்த அவர்களுக்கு வீடொன்றையும் வழங்க நடவடிக்கை எடுத்தார்.
சிறுவனுக்கு கல்வியில் உள்ள ஆர்வத்தையும் திறமையையும் உணர்ந்த ஜனாதிபதி பிரைல் முறைக்கு சிறுவனுக்கு கல்வி புகட்டவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment