சரத், ரணில், மற்றும் ரிரான் அலஸ் ஆகியோரை அரசாங்கம் சுற்றிவளைப்பு
தற்போது கிடைக்கப்பெறும் தகவலின்படி சுமார் 200 இலங்கை இராணுவத்தினர் ரிரான்ஸ் ஏசியா ஹோட்டலை முற்றுகையிட்டுள்ளதாகவும், அங்கிருந்து எவரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் அறியப்படுகிறது. சரத்பென்சேகாவின் பாதுகாப்புப் படைப் பிரினருக்கும் அவர்களை சுற்றிவளைத்துள்ள இலங்கை இராணுவ படைப்பிரிவிற்கும் இடையே முறுகல் நிலை தோன்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சரத்பொன்சேகாவை பாதுகாக்கும் பிரிவினர் தொடர்ந்தும் அவரை பாதுகாத்து வருவதால் சுற்றி வளைத்திருக்கும் இராணுவத்தினர் உட் புக முடியாத நிலை காணப்படுவதாகவும் நேரில் கண்ட சிலர் தெரிவிக்கின்றனர். ஜனாதிபதி, மற்றும் கோத்தபாயவின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் என்னை கொலை செய்துவிடும்படி இலங்கை ராணுவத்தினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதனால் இலங்கை ராணுவத்தினர் நான் தங்கி இருக்கும் ஹோட்டலை முற்றுகையிட்டுள்ளதுடன், அங்கிருக்கும் பொதுமக்களை வெளியேற்றும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்; அதிபர் தேர்தலில் போட்டியிடுவதால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று செய்தியாளர்களிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதேவேளைஜெனரல் சரத் பொன்சேக்காவின் ஆதரவாளர்கள் சிலர் தங்கியிருந்த கொழும்பு சினமன் லேக் விடுதி விசேட இராணுவப் படையணியினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இரண்டு ட்ரக் வண்டிகள் மூன்று மோட்டார் சைக்கிள்களில் சென்ற இராணுவ விசேடப் படையணியினர் இந்த விடுதி சுற்றிவளைப்பில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேஜர் ஒருவர் இந்தப் படையணிக்கு கட்டளையிடும் அதிகாரியாக செயற்பட்டுவருவதாகவும் தெரியவருகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment