இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010
Showing posts with label ஆனையிறவு (Elephant Pass). Show all posts
Showing posts with label ஆனையிறவு (Elephant Pass). Show all posts

Monday, January 12, 2009

என்னை ஆனையிறவிற்கு கொண்டு செல்லுங்கள், எனது மகன் அழித்தொழித்த புள்டோசர் வாகனத்தை பார்க ஆசைப்படுகின்றேன். இராணுவ வீரனின் தாயார்

கோப்ரல். காமினி குலரத்ன
அவரது தாய் வை.எல். யூலியட்

1991ம் ஆண்டு புலிகள் ஆனையிறவு முகாமைத் தாக்கிய போது அம்முகாமை நிர்மூலமாக்கும் நோக்குடன் 1991 யூலை 1ம் திகதி வெடிமருந்து நிரப்பிய புள்டோசர் வாகனத்துடன் முகாமினுள் நுழைந்தனர். அதன் நுழைவை தடுப்பதற்காக படையினர் போராடிய போது அது வெற்றியளிக்கவில்லை. அதன் அபாயத்தை உணர்ந்த சிங்கரெஜிமென்டைச் சேர்ந்த கோப்ரல். காமினி குலரத்ன எனும் வீரர் அவ்வாகனத்தினுள் ஏறி தன்னுடைய கிரனேட் ஒன்றை வெடிக்கவைத்து தானும் தற்கொலை செய்துகொண்டதுடன் வெடிகுண்டு நிரப்பிய புள்டோசரை இடைவெளியில் வெடிக்க வைத்த தனது படையினருக்கு நிகழவிருந்த பெரும் அழிவைத் தடுத்திருந்தார்.

பின்நாட்களில் அவரது அந்த தியாகத்திற்காக இராணுவத்தினரால் வழங்கப்படும் அதியுயர் விருதான பரம வீர விபூஷ்சனய எனும் விருது வழங்கப்பட்டிருந்ததுடன் கசலக்க வீரன் என பலராலும் போற்றப்பட்டு வந்தார்.

இன்று ஆனையிறவு முகாம் படையினரால் கைப்பற்றப்பட்டு தனது மகன் வெடித்துச் சிதறிய அந்த புள்டோசர் வாகனம் அங்கு இன்னும் இருப்பதை கேள்விப்பட்ட 61 வயதுடைய அவரது தாய் வை.எல். யூலியட் தன்னை அங்கு கூட்டிச் சென்று அவ்வாகனத்தை காட்டுமாறு தெரிவித்துள்ளார்.

The Bulldozer

Read more...

Sunday, January 11, 2009

ஆனையிறவு: 1970-2009

1970ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு இராணுவத்தினர் வசமிருந்த ஆனையிறவை கைப்பற்றுவதற்கு 1991ஆம் ஆண்டு முதலாவது மோதல் விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்டது.

1991ஆம் ஆண்டு ஜுலை 10ஆம் திகதி இரு தரப்புக்குமிடையில் கடுமையான மோதல்கள் நடைபெற்றதுடன், வெற்றிலைக்கேணியில் தரையிறக்கமொன்றை மேற்கொண்டு இராணுவத்தினர், விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை முறியடித்திருந்தனர்.

இதன் பின்னர் சில தடவைகள் ஆனையிறவை கைப்பற்ற விடுதலைப் புலிகள் முயற்சிகளை மேற்கொண்டபோதும் அவரை இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டன. 2002ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் மீண்டும் ஆனையிறவைக் கைப்பற்றும் தாக்குதலொன்றை விடுதலைப் புலிகள் ஆரம்பித்திருந்தனர்.

இரு தரப்புக்குமிடையில் நடந்த கடும் மோதல்களைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் ஆனையிறவைக் கைப்பற்றியிருந்தனர். இந்த வெற்றியானது விடுதலைப் புலிகளுக்குப் பாரியதொரு வெற்றியென அப்போது கூறப்பட்டது. 2403 இராணுவத்தினர் கொல்லப்பட்ட மோதல் பாதுகாப்புத் தரப்பினருக்குப் ஒரு பின்னடைவு எனக் கூறப்பட்டது.

ஆனையிறவை விடுதலைப் புலிகள் கைப்பற்றியதன் தொடர்ச்சியாகவே 2002ஆம் ஆண்டு போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

இந்த நிலையில், 2009ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி இராணுவத்தினர் மீண்டும் ஆனையிறவைக் கைப்பற்றியுள்ளனர்.

Read more...

Saturday, January 10, 2009

23 வருடங்களின் பின் வடக்கும் தெற்கும் இணைவு

A9 பாதை திறப்பு

(ஸாதிக் ஷிஹான்)

ஏ-9 பிரதான வீதி முழுவதும் 23 வருடங்களுக்கு பின்னர் பாதுகாப்பு படையினரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு கண்டி, யாழ்ப் பாணம் ஏ-9 பிரதான வீதி முழுவதும் விடுவிக்கப்பட்டுள்ளது. இதனை முப் படைகளின் பிரதம தளபதியான ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷ நேற்று நாட்டு மக்களுக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.

ஓமந்தை தொடக்கம் முகமாலை வரையான ஏ-9 பிர தான வீதி இடைக்கிடையே படையினரின் கட்டுப்பாட் டில் இருந்த போதும் 23 வருடங்களுக்கு பிறகு படை யினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரி கேடியர் உதய நாணயக்கார இது பாதுகாப்பு படையின ருக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும் என்றும் தெரி வித்தார்.

ஓமந்தை சோதனைச் சாவடியிலிருந்து முகமாலை வரை யிலான 96 கிலோ மீற்றர் பிரதேசமே தற்பொழுது முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.

முகமாலை மற்றும் கிளாலி பிரதேசங்க ளிலிருந்து படை நடவடிக்கைகளை ஆரம் பித்த இராணுவத்தின் 53 வது மற்றும் 55 வது படைப் பிரிவினர் பளை, சோரன் பற்று ஆகிய பிரதேசங்களை நேற்று முன்தினம் கைப்பற்றினர். அங்கிருந்து முன் னேறிய படையினர் நேற்று இயக்கச்சி யையும், ஆணையிறவு பிரதேசத்தையும் முழுமையாகக் கைப்பற்றி தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.

ஆணையிறவிலிருந்து முகமாலை வரையான 20 கிலோ மீற்றர் பிரதேசத்தை குறுகிய நாட்களுக்குள் படையினர் மீட்டெ டுத்துள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர் ஆணையிறவை விடுவித்தமை ஏ-9 பிரதான வீதியை இணைக்க முடிந்ததாக குறிப்பிட்டார்.

1991 ஆம் ஆண்டு ஆணையிறவில் பாதுகாப்பு படையினர் பாரிய முகாம் களை அமைத்தமை புலிகளுக்கு தமது பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடு க்க மிகவும் இடையூறாக அமைந்திருந்தது.

ஆணையிறவின் மீது தமது பூரண கவனத்தை செலுத்தியிருந்த புலிகள் 1991 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் திகதி ஆணையிறவு பிரதேசத்தை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.

ஆணையிறவிலுள்ள தமது நிலைகளை யும், முக்கிய தளங்களையும் பாதுகாத்துக் கொள்ள ஜூலை மாதம் 14 ஆம் திகதி வெற்றிலைக்கேணி பிரதேசத்திற்கு படை யினர் அனுப்பிவைக்கப்பட்டனர்.

ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவின் தலைமையில் படை நடவடிக்கைகள் முன் னெடுக்கப்பட்டு 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி படையி னரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

ஆணையிறவை கைப்பற்றும் படை நடவடிக்கைகளின் போது அப்போதைய பிரிகேட் கொமாண்டராக தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா கடமையா ற்றியதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி ஆணையிறவு புலிகள் வசமானதை அடுத்து நேற்று மீண்டும் மீட்டெடுக்கப்ப ட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏ-9 பிரதான வீதி ஓமந்தையிலுள்ள இராணுவச் சோதனைச் சாவடியை அடுத்து புலிகளின் சோதனைச் சாவடி அமைந்திருந்தது. இந்த பிரதேசத்தை ஊடுருவி யாழ். குடாநாட்டுக்குச் செல்ப வர்களுக்கு விசேட பாஸ் நடைமுறைகளை புலிகள் அமுல்படுத்தியிருந்தனர். வாகன ங்களில் செல்பவர்களிடம் வரி அற விட்டனர். சொந்த பாவனைக்காக பொரு ட்கள் எடுத்துச் செல்பவர்களிடம் கூட வரி அறவிடப்பட்டது.

வர்த்தகர்களிடம் வரி அறவிட்டதன் காரண மாக அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு யாழ். குடாநாட்டிலுள்ள வர்த்தகர்கள் தள்ளப்பட்டனர்.

ஏ-9 மீட்டெடுக்கப்பட்டதன் ஊடாக பொது மக்கள் எவ்வித கெடுபிடிகளும் இன்றி தரைவழி பாதையூடாக மக்கள் யாழ். குடாவுக்கு சுதந்திரமாக சென்றுவர நல்லதொரு சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

பெருந்தொகைப் பணத்தை செலவு செய்து விமானத்தின் மூலம் யாழ். - கொழும்பு சென்றவர்கள் இனி ஏ-9 பாதையூடாக செல்லும் வாய்ப்பை படை யினர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர் என் றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக் காட் டினார்.

பட்டாசு கொளுத்தி மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம்

ஆனையிறவு விடுவிக்கப்பட்டு, ஏ-9 வீதி திறக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷ நேற்று நாட்டுக்கு உத்தி யோகபூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் பட்டாசு கொளுத்தி மக்கள் ஆரவாரம் தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளி யாகும் என்ற செய்தி பரவியதும் அந்த நல்ல செய்தியை எதிர்பார்த்திருந்த மக்கள் அறிவிப்பு வெளியானதும் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத் தினர்.

தினகரன்

Read more...

Friday, January 9, 2009

ஆனையிறவை படையினர் கைப்பற்றிவிட்டனர்

ஆனையிறவை முற்றுமுழுதாக ராணுவத்தினர் இன்று வெள்ளிகிழமை தமது முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக இலங்கை அரச அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Sri Lanka troops seize strategic pass from Tigers: official

COLOMBO (AFP) – Sri Lankan troops fighting Tamil rebels took full control Friday of the highly strategic Elephant Pass, a causeway linking the Jaffna peninsula with the northern mainland, a government official said.

The capture of the Pass, which the rebel Tamil Tigers had held since April 2000, is another huge blow to the movement after the fall of their political capital Kilinochchi last week.

It means the military now controls a 142-kilometre (88-mile) stretch of the vital A-9 highway and can supply troops and nearly half a million civilians in Jaffna, the government spokesman said.

He said the causeway fell to government soldiers advancing northwards from Kilinochchi and another column that moved south from earlier army defences.

"They have established full control over Elephant Pass today after entering the south of the area four days ago," he said.

There was no comment from the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

The Tigers had dislodged the military from Elephant Pass in 2000 and held a 100-kilometre stretch of the A-9 route, forcing the military to use expensive air and sea transport instead to supply Jaffna.

Officials said President Mahinda Rajapakse was likely to issue a statement later Friday congratulating troops for retaking Elephant Pass and establishing control over the A-9, which would now serve as a main supply route.

The military launched its biggest-ever ground offensive against the LTTE in March 2007, since when the rebels have seen their territory shrink rapidly.

They are now almost totally confined to the jungle district of Mullaittivu in the northeast, where some 300,000 civilians are also living.

Separately Friday, four civilians and three security personnel were killed in the adjoining district of Trincomalee when a powerful roadside bomb struck their bus in an ambush by suspected Tiger rebels.

A military official said troops were escorting the bus when it was hit. At least six civilians were wounded in the powerful blast.

"It was a Claymore mine targeting the bus," the official added. "Security personnel from the air force were escorting the bus at the time."

Authorities in the tense region use troops to escort public transport after several LTTE ambushes in the past.

Police said they were probing the LTTE's involvement in the attack.

http://news.yahoo.com/s/afp/20090109/wl_sthasia_afp/srilankaunrestmilitary_newsmlmmd

Read more...

Thursday, January 8, 2009

சோரன்பற்று படையினரிடம் சோர்ந்து விழுந்தது

இராணுவத்தின் 55ம் படையணி இன்று (ஜன.8) மாலை சோரன்பற்றை முற்றாக விடுவித்துள்ளனர். இன்று காலை பளைப் பிரதேசத்தை மீட்ட படையினர் மாலைப்பொழுதுக்குள் பளையிலிருந்து தெற்காக கிட்டத்தட்ட 5.5 கி.மீ முன்னேறி சோரன்பற்று கிராமத்தை அடைந்துள்ளனர். தற்போது சோரன்பற்றில் நிலைகொண்டுள்ள படையணி தொடர்ந்து யக்கச்சியை நோக்கி முன்னேறிவருவதாக இராணுவ தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

Read more...

பளை இராணுவத்தினரிடம் பறிபோனது


இன்று காலை பளை நகரை விடுவித்துள்ளதாக ராணுவத்தினரின் தகவல் மையம் சற்று நேரத்திற்கு முன்னர் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. அங்கிருந்து இராணுவத்தினர் இப்ப சோரன்பற்று பிரதேசத்தை நோக்கி முன்னேறுவதாக மேலும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சுண்டிக் குளம் குடாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற் புலித் தளமொன்றை விமானப் படையினர் இன்று காலையில் நிர்மூலமாக்கியதுடன் படகொன்றின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Read more...

Tuesday, January 6, 2009

ஆனையிறவு நோக்கி முன்னேறும் படையினருடன் புலிகள் கடும் மோதல்

கிளிநொச்சி கிழக்கு பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் தற்போது ஆனையிறவு பிரதேசத்தை நோக்கி பெருமெடுப்பிலான முன்னகர்வு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது.

முன்னகர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தின் முதலாவது விஷேட படையணியினர் ஆனையிறவுக்கு 2 கிலோமீற்றர் தொலைவிலேயே நிலைகொண்டுள்ளனர். படையினரின் முன்னகர்வை முறியடிக்கும் வகையில் விடுதலைப் புலிகளால் பதில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

இது தொடர்பில் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் மேலும் கூறியதாவது பரந்தன், கிளிநொச்சி பிரதேசங்களைக் கைப்பற்றியுள்ள படையினர் தற்போது கிளிநொச்சி கிழக்கு பிரதேசத்தினூடான இராணுவ முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் போது புலிகளின் நிலைகள் மீது ஷெல் மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. படையினரின் தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் விடுதலைப் புலிகளினாலும் பதிலுக்கு மோட்டார் எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இம்மோதலில் பரஸ்பரம் இரு தரப்புக்க்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதேவேளை, முல்லைத்தீவு பிரதேசத்தில் இராணுவ முன்னெடுப்புக்களை மேற்கொண்டுவரும் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

முல்லைத்தீவு, தண்ணியூற்று, தோட்டம், குமுளமுனை, முதலியன்குளம், கட்டிலான்மடு ஆகிய பகுதிகளிலேயே இந்த மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன. இதில் புலிகள் தரப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் படைத்தரப்புக்கும் சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Read more...

ஆனையிறவு பிரதேசத்தின் தென்பகுதி இன்று இராணுவத்தினரிடம் - வீடியோ

Read more...

Monday, January 5, 2009

ஆனையிறவின் தென்பகுதி படையினரால் முற்றாக மீட்பு

புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த முக்கிய பிரதேசங்களில் ஒன்றான ஆனையிறவின் தென்பகுதி பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு ள்ளதாக இராணுவப் பேச்சாளர் கூறினார்.

இதற்கமைய, ஆனையிறவுக்கு தெற்கே உள்ள கரையோர பகுதிகள் முழுவதும் படையினரின் முழுமையான கட்டுப்பா ட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

கிளிநொச்சியை முழுமையாக விடுவித்த இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் யாழ். குடாவின் நுழைவாயிலான ஆனை யிறவை நோக்கி முன்னேறி வந்தனர்.

பரந்தன், கிளிநொச்சியை கைப்பற்றிய இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் தற்பொழுது ஆனையிறவுக்குள் பிரவேசித் துள்ளனர். இந்தப் படைப்பிரிவினர் கடந்த ஐந்து நாட்களுக்குள் பெற்ற மூன்றாவது பாரிய வெற்றி இதுவாகும்.

ஆனையிறவுக்கு தெற்கே தமிழ்மடம் கரை யோரப் பிரதேசம் இராணுவத்திடம் முழு மையாக வீழ்ந்ததையடுத்து யாழ்ப்பாணத் தின் களப்பு பிரதேசம் பாதுகாப்பு படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. அதே சமயம், பூநகரி – பரந்தன் வீதி, பரந்தன் ஆனையிறவு வீதி மற்றும் ஏ-9 வீதிக்கு தென் பகுதி முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனையிறவுக்குள் பிரவேசித்த படையின ருக்கும் புலிகளுக்கும் இடையில் கடு மையான மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதல்களின் போது புலிகளுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பிரிகேடியர், படையினரின் கடு மையான தாக்குதல்களில் பெருந்தொகை யான புலிகள் கொல்லப்பட்டும் காயமடை ந்தும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனையிறவை புலிகளிடமிருந்து ஏற் கனவே மீட்டெடுக்கும் படை நடவடி க்கைகளின் போது முக்கிய பங்களிப்பை வகித்து இராணுவத்திற்காக தன்னை அர்ப்பணித்த ஹஸலக காமினியின் உருவ ச்சிலை ஒன்றும் ஆனையிறவு பிரதேசத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தது.

தற்பொழுது படைவீரர்கள் அந்த உருவச் சிலையையும் தாண்டி, வடக்கே நோக்கி முன்னேறி வருவதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஆனையிறவு பிரதேச த்தில் நிலைகொண்டுள்ள பாதுகாப்பு படையினர் தற்பொழுது தமது நிலைகளை மேலும் பலப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பரந்தனுக்குக் கிழக்காக அமைந்துள்ள முரசுமோட்டை பகுதியிலும் இராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புலிகள் வன்னி நிலப்பரப்பில் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள பல முக்கிய பிரதேசங்களை நாளுக்கு நாள் இழ ந்து வருகின்றனர். புலிகள் பாவித்து வந்த பல விநியோக பாதைகளையும் பாதுகாப்பு படையினர் நாளுக்கு நாள் துண்டித்து வரு கின்றனர்.

முகமாலை, செம்பியன்பற்று மற்றும் முல்லைத்தீவு ஆகிய தரை வழிப் பாதை களின் ஒரு சில பகுதிகள் மாத்திரமே தற்பொழுது புலிகளிடம் எஞ்சியுள்ளதா கவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவி க்கின்றன.

இதேவேளை, முல்லைத்தீவிலுள்ள ஒட்டு சுட்டான் பிரதேசத்திற்குள் நேற்று முன் தினம் பிரவேசித்த இராணுவத்தின் நான் காவது செயலணியினர் தற்பொழுது ஒட்டுசுட்டான் முழுவதையும் நேற்றைய தினம் விடுவித்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.tஇதற்கமைய ஏ-32 பிரதான வீதியில் மாங்குளத்திலிருந்து ஒட்டுசுட்டான் வரையான பிரதேசம் படையினரின் முழுமை யான கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதா கவும் பிரிகேடியர் தெரிவித்தார்.

இதன் மூலம், முல்லைத்தீவு, புதுக் குடியிருப்பு, மாங்குளம் மற்றும் நெடுங் கேணி ஆகிய பிரதேசங்கள் ஊடாக புலி கள் முன்னெடுத்து வந்த பயங்கரவாத மற்றும் விநியோக நடவடிக்கைகளும் நிர் வாக செயற்பாடுகளும் முழுமையாக துண்டி க்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப் பிட்டார்.

Read more...

அனையிறவு தெற்கினை படையினர் கைப்பற்றியுள்ளனர்

இராணுவத்தின் 58 ஆவது படையணியினர் ஆனையிறவின் தெற்கு பகுதியை இன்று பிற்பகல் கைப்பற்றியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வீரகேசரி இணையம்

Read more...

Sunday, January 4, 2009

ஆனையிறவை புலிகள் தக்கவைப்பது சிரமம் - ஆய்வாளர்கள்

பரந்தன், கிளிநொச்சி ஆகிய பகுதிகளைக் கைப்பற்றி, பரந்தனுக்குத் தெற்காக ஆனையிறவை நோக்கி முன்னேறும் இலங்கை இராணுவத்தினரைப் புலிகளால் தடுத்து நிறுத்த முடியாது என்று, கள நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு இராணுவ ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

elephantpassmap

புத்தாண்டு தினத்தில் பரந்தன் சந்தியைக் கைப்பற்றியபோதே, கிளிநொச்சி, ஆனையிறவு, மற்றும் அதற்கு வடக்கேயுள்ள பளை, முகமாலை வரையிலான பிரதேசங்களை வெற்றிகொள்ளும் நிலைக்கு இராணுவத்தினர் வந்துவிட்டனர் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது புலிகளின் பிரதான தளங்களும், களஞ்சியங்களும் கிளிநொச்சிக்குக் கிழக்கே தர்மபுரம் முதல் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு வரையிலான பிரதேசங்களிலேயே அமைந்துள்ளன.

இந்தப் பகுதியிலிருந்து கிளிநொச்சி, ஆனையிறவு, முகமாலை உள்ளிட்ட பிரதேசங்களுக்கான விநியோகங்களை மேற்கொள்வதற்கான பிரதான போக்குவரத்து மார்க்கமாக பரந்தன் - முல்லைத்தீவு வீதி மட்டுமே உள்ளது.

இராணுவத்தினர் பரந்தன் சந்தியைக் கைப்பற்றி அங்கு நிலைகொண்டிருப்பதால், கிளிநொச்சிக்குக் கிழக்கேயுள்ள புலிகளின் பிரதான தளங்களிலிருந்து இந்தப் பகுதிகளுக்கான விநியோகம் முற்றாகத் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கண்டாவளை, சுண்டிக்குளம் உள்ளிட்ட பிரதேசங்களினூடாக ஆனையிறவு மற்றும் அதனையண்டிய பிரதேசங்களுக்குச் செல்வதற்கான பாதைகள் இருந்தாலும், அவை ஒரு போர்ச்சூழலில் அவசர தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்கு உகந்தவை அல்ல என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரதான விநியோக மார்க்கத்தை இழந்துள்ள நிலையில், பரந்தனலிருந்து ஆனையிறவை நோக்கி முன்னேறும் படையினரைத் தடுத்து நிறுத்திச் சண்டையிடுவது புலிகளுக்குச் சிரமமான காரியம் என்று, கள யதார்த்தத்தங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதனால், பரந்தனிலிருந்து ஆனையிறவை நோக்கி முன்னேறும் படையினர், ஆனையிறவை விரைவில் கைப்பற்றி, தொடர்ந்து, யாழ்ப்பாணத்துக்கும், வன்னிக்கும் இடையிலான பிரதான எல்லைப் பகுதியாக இருந்து வந்த முகமாலை வரையிலான பிரதேசங்களையும் கைப்பற்றும் சாத்தியங்கள் இருப்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

2000ம் ஆண்டு, இலகுவில் வீழ்த்த முடியாத தளம் என்று கருதப்பட்ட ஆனையிறவு படைத்தளத்தைக் கைப்பற்றியதன் மூலம் விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்துடன் ஒரு படைவலுச் சமநிலையை ஏற்படுத்தியிருந்தனர்.

இதுவே, பின்னர் 2002 பெப்ரவரியில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் ஒரு போர்நிறுத்த உடன்படிக்கை ஏற்படுவதற்கும்  அடிப்படையாக இருந்தது.

இந்த நிலையில். ஆனையிறவுத் தளம் மீண்டும் படையினர் வசம் வீழுமாக இருந்தால், அது புலிகளுக்கு கிளிநொச்சி இழப்பைவிட ஒரு மிகப்பெரும் பின்னடைவாக அமையும் என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

Read more...

பரந்தனில் இருந்து ஆனையிறவை நோக்கி படையினர் முன்னகர்வு

பரந்தனில் இருந்து ஏ 9 வீதி வழியாக புறப்பட்ட படையினர் தற்போது ஆனையிறவு தெற்கு புறத்தில் சுமார் இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டிருப்பதாகவும் கிளிநொச்சி கிழக்கு புறத்தில் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் நிகழ்ந்து வருவதாகவும் இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.
முன்னேறி செல்லும் படையினருக்கு உதவும் வகையில் விமானப் படையினர் ஆனையிறவு மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் உள்ள புலிகளின் நிலைகள் மீது நான்கு முறை விமான தாக்குதல்களை நடத்தியதாக விமானப் படையின் ஊடக பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

கிளிநொச்சியின் கிழக்கு புறத்தில் கடுமையான மோதல்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்த பிரிகேடியர் உதய நாணயக்கார ஆனையிறவை நோக்கிச் செல்லும் படையினருக்கு பாரிய எதிர்ப்புகள் இருக்கவில்லை எனத் தெரிவித்தார்.
இதற்கிடையில் முல்லைத்தீவை நோக்கி முன்னேறிச் செல்லும் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் தண்ணீரூற்று பகுதியில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருவதாக முல்லைத்தீவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முள்ளியவளையை கைப்பற்றும் நோக்கில் முன்னேற முயலும் படையினர் மீது புலிகள் கடுமையான எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிய வருகிறது.

எறிகணை, பீரங்கி குண்டுத் தாக்குதல்களால் முல்லைத்தீவு மற்றும் அதனை அண்டிய கிராமங்கள் அதிர்ந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடும் மோதல்கள் இடம்பெற்று வருவதால் கடந்த வியாழக்கிழமை முதல் முல்லைத்தீவுக்கான போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக துண்டிக்கப்பட்டிருப்பதாக வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன.

Virakesari

Read more...

Saturday, January 3, 2009

ஆணையிறவைநோக்கி முன்னேறும் இராணுவத்தினர்?

கிளிநொச்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஆணையிறவைக் கைப்பற்றும் நோக்கில் இராணுவத்தின் விசேட படையணி-1 முன்னேறி வருவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை மற்றும் இன்று சனிக்கிழமை எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்கதல்களுடன் ஆணையிறவு மற்றும் முல்லைத்தீவின் வடகிழக்குப் பகுதியை நோக்கி இராணுவத்தினர் நகர்வதாக சர்வதேச செய்திச்சேவையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதேநேரம், முல்லைத்தீவுப் பகுதியில் இன்று காலை 6.15 மணியளவிலும், முற்பகல் 10.30 மணியளவிலும் விமானப்படையினர் வான் தாக்குதல் நடத்தியிருப்பதாக தேசிய பாதுகாப்பு ஊடக நிலையம் அறிவித்துள்ளது.

இனம்காணப்பட்ட விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீதே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஆணையிறவுப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகள் வெளியேறி வருவதாக ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆணையிறவிலிருந்து பரந்தன் அண்மையில் இருப்பதால், இராணுவத்தின் 58வது படைப்பிரிவு ஆணையிறவைநோக்கி முன்நகர்வதாகவும், இராணுவத்தினர் ஆணையிறவின் தென் பகுதியிலிருந்து 2 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் ஆணையிறவிலிருந்து வெளியேறிவரும் நிலையில் தைப்பொங்கலுக்கு முன்னர் முகமாலை, கிளாலி, முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் மற்றும் வற்றாப்பளை ஆகிய பகுதிகளை இராணுவத்தினர் மீட்டுவிடுவார்கள் எனவும் அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

எனினும், வன்னிக் களமுனையில் நடைபெற்றுவரும் மோதல்கள் தொடர்பில் விடுதலைப் புலிகளின் கருத்துக்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

ஐஎன் லங்கா இணையம்

▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒

 

Tigers begin withdrawal from Elephant Pass: will also vacate Mullaitheevu, Oddusuddan and Vatraappalai

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) have begun withdrawing from entrenched positions in the strategic Elephant Pass region.

The narrow Isthmus that links the Jaffna peninsula to the Northern mainland known as Wanni by land is often described as the “gateway to Jaffna”.

Preparations are also afoot to vacate tiger positions in other key places in Eastern Wanni like Mullaitheevu, Oddusuddan and Vatraappalai.

The tigers seized the Elephant Pass area after protracted warfare codenamed “Oyatha Alaigal” (ceaseless waves) in April 2000.

The LTTE has now begun withdrawing personnel and other military assets including long – range artillery from the strategic areas following the fall of Paranthan and Kilinochchi situated to the south of Elephant Pass along the Jaffna – Kandy road known as “A – 9 highway”.

Though Paranthan is several miles to the south of Elephant Pass , soldiers of the 58 division are much closer to Elephant pass as they had earlier moved to the north of Paranthan in order to encircle it.

The taking of Thattuvankottu by the 58 division known also as Task Force – one was a turning point in the battle for Paranthan as it facilitated a thrust on the town from the rear.

Soldiers are now occupying not only Paranthan but also key positions near the A – 9 highway that are very close to Elephant Pass.

Apparently soldiers are now about 2 km to the south of Elephant Pass and are near Kurinchatheevu adjacent to Elephant Pass.

Realising that Elephant Pass is not defendable the LTTE have begun vacating the area.

It is unclear whether the tigers would offer some resistance or simply vacate as the area cannot be held militarily.

The Armed Forces can make a triumphant entry into the place lost eight years ago.

The LTTE is yet to withdraw from positions along the Kilaly – Muhamaalai _ Nagarkovil axis that demarcates the LTTE line of control in the peninsula.

The tigers however have begun reducing the number of cadres stationed there.

The tiger line of control would become untenable once Elephant Pass is taken as the army would be able to wedge the LTTE in from both sides.

It is expected therefore that the LTTE would begin to withdraw from the Peninsula in the near future.

There is however a possibility that the tigers may try and hold on to areas east of the A – 9 in the peninsula as these include important coastal points like Thalaiaddy, Vettrilaikerny and Aaliyawalai.

The tigers may also want to retain access to the mainland via Chunddikulam and also hold on to the sea tiger base there.

Still the chances of the LTTE holding on to this strip seems a virtual impossibility in the long run.

Meanwhile the LTTE is also expected to vacate other key areas in eastern Wanni like Mullaitheevu, Oddusuddan and Vatraappalai.

Mullaitheevu on a promontory is being defended as a built up area now. Soldiers of the 59 division are only 5 km to the south of M/theevu in the general area of Silawattai.

Though tigers are defending positions currently the LTTE has begun moving out from Mullaitheevu and adjacent areas in anticipation of its fall.

59 division soldiers and Task Force – four soldiers are also occupying areas like Mulliyawalai and Thaniootru on the Mankulam – Mullaitheevu road or A – 34 highway.

It is inly a matter of time before troops move further towards Mullaitheevu via the “nandikkadal” lagoon area.Those areas are undefendable.

With troops moving along the coast and by way of the A – 34 axis from two directions , Mullaitheevu like the Poonagary promontory has to be abandoned.

The LTTE has also commenced preparations to vacate Oddusuddan along the A – 34 highway. The Army is now on either side of Oddusuddan along the Mankulam – Mullaitheevu road.

The soldiers are stationed to the west of Oddusuddan in Karippattaimurippu and to the east on Mulliyawalai.

Though the LTTE remains in Oddusuddan for now the tigers cannot remain there for long as troops close in from both sides and also possibly from the north via the Ambakaman jungles.

Thus the LTTE has begun its withdwal on a graual basis.

Likewise the tigers have also begum preparations to move out from Vatraapalai which is home to the most famous temple in the Wanni – The Vatraapalai Amman Kovil.

With soldiers in Mulliyawalai now attempting to move towards Puthukkudiyirupp along the road running through Vatraapalai that area too is becoming untenable.

Moreover the LTTE does not want any damage to happen to to the temple.

With the process of withdrawal now going on the armed forces are likely to be in control of Elephant Pass, Muhamalai, Kilaly, Mullaitheevu, Oddusuddan and Vatraapalai before Thai Pongal Day

 

TransCurrents

Read more...

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top