இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010
Showing posts with label கிளிநொச்சி. Show all posts
Showing posts with label கிளிநொச்சி. Show all posts

Friday, January 23, 2009

கிளிநொச்சி லும்பினி விகாராதிபதி படையினரிடம் சரண்

வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு பொது மக்களுடன் வருகைதந்த பிக்கு ஒருவரும் கிளிநொச்சியில் வைத்து படையினரிடம் சரணடைந்துள்ளார். கிபிலுவரசுமணசார என்ற பௌத்த பிக்குவே தர்மபுரம் பகுதியில் வைத்து சரணடைந்துள்ளார். இவர் 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் திகதி தென்பகுதியில் பிறந்தவர்.
பின்னர் 1960 இல் ஆசிரிய சேவையில் இணைந்து 1970 இல் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் சென்றார். இதன்பின் கிளிநொச்சி லும்பினி விகாரையில் கடந்த 38 வருடங்களாக பணியாற்றியுள்ளார்.

கிளிநொச்சியில் எனக்கு எவரும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லையென சுமணசார தேரர் தெரிவித்ததுடன், அச்சம் காரணமாக மக்கள் வவுனியாவுக்கு வராதுள்ளனரென தெரிவித்துள்ளார்.

தற்போது அவர் வவுனியா விகாரையொன்றில் இராணுவத்தினரால் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

Read more...

Wednesday, January 14, 2009

கிளிநொச்சியின் அபிவிருத்திக்கு இந்தியா உதவி

இந்தியாவின் நிதியுதவியுடன் கிளிநொச்சியை அபிவிருத்தி செய்யும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.



ஜனாதிபதியின் ஆலோசகர் பேசில் ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத் ஆகியோருக்கிடையில் திங்கட்கிழமை இதுதொடர்பாக விஷேட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.

"கிழக்கை விடத் துரிதமாக வடக்கை அபிவிருத்தி செய்வதே எமது நோக்கம்" என்று தெரிவித்த அமைச்சர் யாப்பா, இதுதொடர்பான விஷேட பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெறவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த வாரமும் அமைச்சர் பேசில் ராஜபக்ஷ தலைமையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா அரசாங்க அதிபர்கள், தமிழ் அரசியல் கட்சிகள் சிலவற்றின் தலைவர்கள், அமைச்சுக்கள், திணைக்கள அதிகாரிகள் கிளிநொச்சி நகர அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் கூடி ஆராய்ந்திருந்தனர்.

இந்தக் கலந்துரையாடலில் பார்வையாளராகக் கலந்துகொண்டிருந்த இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத், திங்களன்று பேசில் ராஜபக்ஷவுடன் தனியே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

படையினரால் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடைந்ததும் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன கூறினார்.

Read more...

Sunday, January 11, 2009

முள்ளியாவெளியில் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டவை (படங்கள்)


கிளிநொச்சி, முள்ளியாவெளிப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் (09) மாலை தேடுதல் நடத்திய பாதுகாப்புப் படையினர்; தமிழீழ விடுதலைப் புலிகளினால் நிலத்துக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 அடி நீளமான கொள்கலன் (கெண்டெயினர்) ஒன்றையும் மேலும் 75 அடி நீளமும் 50 அடி அகலமும் கொண்ட விரிவுரை மண்டபம், 35 அடி அகலமும் 35 அடி நீளமும் கொண்ட சமையலறை, 20 அடி நீளமும் 30 அடி அகலமும் கொண்ட காரியாலயம் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.. அவை தொடர்பான படங்களே இவை.


லங்கா ஈ நியூஸ்

Read more...

Saturday, January 10, 2009

கிளிநொச்சி, முள்ளியாவெளியில் நிலத்துக்கு அடியிலிருந்து புலிகளின் கொள்கலன் மீட்பு

கிளிநொச்சி, முள்ளியாவெளிப் பிரதேசத்தில் நேற்று  மாலை தேடுதல் நடத்திய பாதுகாப்புப் படையினர்; தமிழீழ விடுதலைப் புலிகளினால் நிலத்துக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 அடி நீளமான கொள்கலன் (கெண்டெயினர்) ஒன்றைக் கைப்பற்றியதாக இராணுப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இன்று தெரிவித்தார்.

இந்தப் பகுதியில் மேலும் பதினொரு பங்கர்களையும் இராணுவத்தினர் கைப்பற்றினர்.

இது தவிர 75 அடி நீளமும் 50 அடி அகலமும் கொண்ட விரிவுரை மண்டபம், 35 அடி அகலமும் 35 அடி நீளமும் கொண்ட சமையலறை, 20 அடி நீளமும் 30 அடி அகலமும் கொண்ட காரியாலயமும் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Read more...

Thursday, January 8, 2009

இராணுவ வெற்றிக்கு கருணாவின் பிரிவு காரணமல்ல: இராணுவத் தளபதி

இராணுவத்தினர் அண்மையில் பெற்ற வெற்றிக்கு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மான் பிரிந்தமையே காரணமென ஒருவர் கூறுவாராயின் அது வெட்கப்பட வேண்டியது என இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

sarath

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கும், கருணா அம்மானுக்கும் இடையில் அப்பொழுது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவே இருவரும் பிரிந்தார்கள் எனவும், கிழக்கை மீட்கும் பணிகளை இராணுவம் ஆரம்பிக்கும்போது கருணா அம்மான் 200 போராளிகளுடன் மாத்திரமே இருந்ததாகவும் இராணுவத் தளபதி கூறியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளிடமிருந்து கிழக்கை மீட்பதற்கு சாதாரண மக்கள் இராணுவத்தினரக்கு உதவிசெய்ததாகச் சுட்டிக்காட்டிய இராணுவத் தளபதி, கிழக்கிலுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இராணுவத்தினருக்கு மறைமுகமான உதவிகளைச் செய்துவந்ததால் கிழக்கை மீட்க முன்னரே அப்பகுதி மக்களின் நம்பிக்கையை தாம் வென்றுவிட்டதாகக் கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் 20 கிலோமீற்றர் தூரத்தை மாத்திரமே இராணுவத்தினர் போராடி மீட்டதாகக் குறிப்பிட்ட இராணுவத் தளபதி, எஞ்சிய 89 கிலோமீற்றர் தூரத்தை இராணுவத்தினர் இலகுவில் மீட்டதாகத் தெரிவித்தார்.

கிளிநொச்சியைக் கைப்பற்ற முன்னர் அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பகல் கனவு எனக் கூறப்பட்டபோதும், விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் நோக்கில் இராணுவத்தினர் போராடி வருவதாகக் கூறினார்.

Read more...

Wednesday, January 7, 2009

கிளிநொச்சி, பரந்தனில் இராணுவத்தின் மும்முனை முன்நகர்வுகள் முறியடிப்பு! - 41 சிப்பாய்கள் பலி; 102 பேர் காயம் என்கின்றனர் புலிகள்

கிளிநொச்சி மற்றும் பரந்தன் பகுதிகளில்  படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட மும்முனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் நேற்று முறியடிக்கப்பட்டுள்ளன என்றும், இதில் 41 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 102 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் புலிகள் தரப்பு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மேலும் அத்தரப்பு வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு-
பரந்தனில் இருந்து கிழக்காக முரசுமோட்டை நோக்கியும், பன்னங்கண்டி நோக்கியும், கிளிநொச்சியில் கனகாம்பிகைக்குளம் பகுதியில் இருந்து இரணைமடு நோக்கியும் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் படையினரால் செறிவான ஷெல் தாக்குதல் மற்றும் கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் இம்மும்முனை முன்நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

முன்நகர்வுகளுக்கு எதிராக கனரகச்சூடுகள் மற்றும் ஷெல் தாக்குதல்களின் துணையுடன் விடுதலைப் புலிகள் செறிவான முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர்.
விடுதலைப் புலிகளின் தீவிர தாக்குதல்களால் நேற்றுப் பிற்பகல் 5 மணியளவில் படையினரின் நகர்வுகள் முறியடிக்கப்பட்டன. இம்முறியடிப்பின்போது படைத்தரப்பில் 41 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 102 பேர் காயமடைந்துள்ளனர்.

முறியடிப்பு தாக்குதல்களின் பின்னர் விடுதலைப் புலிகளால் போர் ஆயுத தளவாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. படையினரின் சடலங்களும் வேறு ஆயுதப் பொருட்களும் களமுனையில் சிதறிக் காணப்படுகின்றன என விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

Uthayan

Read more...

Tuesday, January 6, 2009

கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லம் படையினரால் இடித்தழிப்பு

கிளிநொச்சியை ஆக்கிரமித்துள்ள சிறிலங்காப் படையினர் அங்குள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவ கவசவாகனங்கள் மூலம் இடித்தழித்துள்ளனர்.

சர்வதேச போரியல் விதிமுறைகளுக்கு முரணாக சிறிலங்காப் படையினர் இவ்வாறான அநாகரீகமான நடவடிக்கைகளில் கடந்த காலங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் தற்போது மாவீரர் துயிலுமில்லத்தை கனரக வானங்கள் மூலம் இடித்து அழித்து தமது இனவெறியை அரங்கேற்றி வருவதாக தெரியவருகின்றது.

 

ma

ma1



Tamilwin

Read more...

வன்னி மக்களை விடுவிக்கக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடந்தது

யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பகல் வன்னியில் இடம்பெயர்ந்து புலிகளின் பகுதிக்குச் சென்றுள்ள மக்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது.பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் வன்னியில் புலிகளின் பகுதியில் வாழும் மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்வதற்கு அனுமதிக்கும்படி கோ~ங்கள் எழுப்பப்பட்டன.
கிளிநொச்சியைக் கைப்பற்றிய இராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்தும் கோ~ங்கள் எழுப்பப்பட்டன. யாழ்ப்பாணம் கொட்டடிச் சந்தியிலிருந்து ஆரம்பமான ஊர்வலம் பிரதான வீதி, காங்கேசன்துறை வீதி, ஸ்ரான்லி வீதி உட்பட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வேம்படி சந்தியை அடைந்ததும் முடிவுற்றது.
ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை வீதியின் இருமருங்கிலும் நின்று பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பார்த்துக் கொண்டிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது. ஊர்வலத்தின் ஆரம்பத்திலும் இறுதியிலும் இராணுவ வாகனங்கள் சென்றதையும் அவதானிக்க முடிந்தது. ஆட்டோக்கள் சிலவும் ஊர்வலத்துடன் சென்றன. பட்டாசுக் கொளுத்தி கோலாகலமாக ஊர்வலம் நடைபெற்றமைக் குறிப்பிடத்தக்கது.

வீரகேசரி இணையம்

Read more...

முல்லைத்தீவு வனப்பகுதியில் இராணுவம் புகுந்து சண்டை போடுவது இயலாத காரியம் -கருணா

ages

விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கையை விட்டு இந்தியாவுக்கோ அல்லது இந்தோனேசியாவுக்கோ தப்பிச் செல்லலாம் என்று கூறப்படுவது தவறானது அவர் எந்த சூழ்நிலையிலும் இலங்கையை விட்டு வெளியேற மாட்டார் என்று பாராளுமன்ற உறுப்பினர் கருணா தெரிவித்துள்ளார் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கிய தளபதியாக விளங்கியவர் கருணாஅம்மான் பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் (TMVP) அமைப்பை உருவாக்கினார் கருணாஅம்மானின் ரிஎம்விபி அமைப்பின் உதவியுடன் தான் கிழக்கு மாகாணத்தை இலங்கைப் படைகள் மீட்டன. இந்நிலையில் கிளிநொச்சி வீழ்ந்து விட்டதைத் தொடர்ந்து அடுத்து முல்லைத்தீவுக்கு இலங்கைப் படைகள் குறிவைத்து உள்ளமையினால் பிரபாகரன் இந்தியாவுக்கோ அல்லது இந்தோனேசியாவுக்கோ தப்பிச் செல்லக்கூடும் என்று பேச்சு கிளம்பியுள்ளது. ஆனால் கருணாஅம்மான் இதனை நிராகரித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் பிரபாகரன் இலங்கையை விட்டு இந்தியாவுக்கோ அல்லது இந்தோனேசியாவுக்கோ தப்பிச் செல்வார் என்று நான் நினைக்கவில்லை அப்படிகூறுவது தவறு முல்லைத்தீவு நகரைக் கைப்பற்றும் நோக்கில் இராணுவம் முன்னேறி வருகிறது ஆனால் முல்லைத்தீவு வனப்பகுதியில் இராணுவம் புகுந்து சண்டை போடுவது இயலாத காரியம் தற்போது தெற்குஇலங்கைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ஏ9 நெடுஞ்சாலையை தடைகளற்ற பகுதிகளான மாற்றுவதே முக்கிய குறிக்கோள் என்றும் கூறியுள்ளார்.

Read more...

தெய்வேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறை வரையிலான இலங்கை இப்பொழுது ஒன்றாகி விட்டது -அமைச்ச்ர் மைத்திரிபால சிறிசேன

கிளிநொச்சியைக் கைப்பற்றியதன் மூலம் பல உயிர்களை பலகொண்ட புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆட்சியை புல்டோசரைக் கொண்டு தகர்த்து தென்னிலங்கை தெய்வேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறை வரையிலான இலங்கை இப்பொழுது ஒன்றாகி விட்டதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலரும் விவசாய கமத்தொழில் சேவை அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் ஒரு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருந்த புலிகளின் பலத்தை படையினர் உடைத்தெறிந்து விட்டனர். இதன்மூலம் தெய்வேந்திரமுனையும் பருத்தித்துறையும் இப்பொழுது இணைக்கப்பட்டு விட்டது. ஜே.ஆர். ஜயவர்த்தனவின் யுகத்தில் பிரபாகரனின் ஆட்சிப்பலம் கிளிநொச்சியில் இருந்துவந்தது. பிரேமதாச, விஜேதுங்க ஆகியோரின் காலப்பகுதியிலும் பிரபாகரனின் ஆட்சி கிளிநொச்சியில் இருந்துவந்தது. சந்திரிகாவின் யுகத்திலும் பிரபாகரனின் ஆட்சி நிலைத்தது. ஆனாலும் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியின் காலத்தில் பிளவுபட்ட நாடு ஒன்றாகிவிட்டது. இந்நாட்டில் இரு அரசு இருக்க இயலாதென்பதை அன்று எடுத்துக்கூறிய ஜனாதிபதியின் வார்த்தை யதார்த்த நிலைக்கு உள்ளாகிவிட்டது. என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை இனிமேல் புலிகளின் அரசியல் தலைமையகத்தில் இருந்தே மேற்கொள்ளப்படும்!

கிளிநொச்சியை கைப்பற்றிய படையினர் யுத்த தாங்கிகள், ஹெலிகொப்டர்கள், பீரங்கிகளின் உதவியுடன் புலிகளின் பிடியிலுள்ள முல்லைத்தீவு பிரதேசத்தை நோக்கி நகர்வதாக படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து படையினரின் மனோ நிலை வலுவடைந்துள்ளதாகவும் கிளிநொச்சி கிழக்கில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் பாரிய சேதத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளதாகவும் அரசாங்க ஊடக அறிக்கையொன்று கூறுகின்றது.

கடந்த சனிக்கிழமையன்று கிளிநொச்சிப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் இனிமேல் புலிகளின் அரசியல் தலைமையகமாக விளங்கிய கிளிநொச்சியிலிருந்தே மேற்கொள்ளப்படுமென படைத் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஒட்டு சுட்டான் பகுதியையும் தம்வசப்படுத்தியுள்ள படையினர் புலிகளின் இறுதிப் பிடியிலுள்ள முல்லைத்தீவை நோக்கி நகர ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், ஆனையிறவையும் விரைவில் படையினர் கைப்பற்றிவிடுவார்கள் என படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read more...

"கிளிநொச்சியில் புலிகளின் தலைமையகத்தில் ஒரு சிறுதுண்டு கடதாசியைக் கூட காணவில்லை'

keli-L

கிளிநொச்சியைக் கைப்பற்றிய இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் தலைமையகத்திற்குள் நுழைந்த போது அங்கு சிறு காகிதத் துண்டைக் கூட விடுதலைப் புலிகள் விட்டுச் சென்றிருக்கவில்லையென இந்துஸ்தான் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.

இத் தகவலை விடுதலைப் புலிகளின் தலைமையகத்திற்குள் முதலாவதாக நுழைந்தவர்களில் ஒருவரான இராணுவ அதிகாரி மேஜர் அமுனுபுர தெரிவித்ததாக இச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சியை பார்வையிடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட செய்தியாளர்களில் இந்துஸ்தான் ரைம்ஸ் செய்தியாளரும் ஒருவராவார்.

நான்கு தளங்களைக் கொண்ட இக் கட்டிடத்திற்குள் நாம் நுழைந்தபோது சிறு காகிதத் துண்டைக் கூட விடுதலைப் புலிகள் விட்டுச் சென்றிருக்கவில்லை.

இலேசாக மூடியிருந்த பிரதான கதவில் திறப்பு தொங்கவிடப்பட்டிருந்தது. கணினிகள், தொடர்பாடல் உபகரணங்கள், காகிதங்கள் என அங்கிருந்த ஒவ்வொன்றையும் அவர்கள் எடுத்துச் சென்றிருந்தனரென அமுனுபுர கூறியதாக இச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்துஸ்தான் செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

விடுதலைப் புலிகளின் சமாதான செயலகமாகவும் போர் நிறுத்தகாலத்தில் பல முக்கிய சந்திப்புகள் நடைபெற்ற இடமாகவும் விளங்கிய இவ் தலைமையகம் புதிதாக குடியேறப் போகிறவர்கள் வசிக்கப் போகும் ஒரு வெறுமையான கட்டிடமாக காட்சியளித்தது.

தமிழர் புனர்வாழ்வு அமைப்பின் அலுவலகமும் இதேபோன்று காணப்படும் அதேவேளை, ஏறத்தாழ கிளிநொச்சி நகரம் முழுவதிலும் இவ்வாறானதொரு வெறுமையே பரவியுள்ளது.

இங்கு ஒரு பொதுமகனைக் கூட காண முடியவில்லை. குண்டுகளால் துளையிடப்பட்ட வீடுகள், கூரைகள், கதவுகள், யன்னல்களின்றி காணப்படுகின்றன. பெரிய நீர்த்தாங்கியொன்று சின்னாபின்னமாகியுள்ளது. விடுதலைப் புலிகளின் படையணிகள் இங்கிருந்து நகர்வதற்கு முன்னர் பொதுமக்களின் உதவியுடன் இங்கிருந்த ஒவ்வொன்றையும் தம்முடன் எடுத்துச் சென்றுள்ளனர்.

மின் குமிழ்கள், வீதி விளக்குகள், மின் இணைப்பிற்கான வயர்கள், விளம்பரப் பலகைகள், கூரைத் தகடுகள், ஜெனரேட்டர்கள், உடைகள், புத்தகங்கள், தளபாடம் மற்றும் வாகனங்களென ஒவ்வொன்றும் இங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன. தேவாலயங்கள், கோயில்கள் என்பன பக்தர்களின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன. கொண்டு செல்ல முடியாத கூரைகள் மட்டுமே இங்குள்ள கட்டிடங்களில் எஞ்சியுள்ளது.

கிளிநொச்சி தேசிய மருத்துவமனையில் காயங்களுக்குப் பயன்படுத்தப்படும் சிறு பண்டேச் துணி கூட காணப்படவில்லை. அனைத்துவகை உபகரணங்களும் மருந்துப் பொருட்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இங்குள்ள சில அரசாங்க கட்டிடங்களும் இதேபோன்று வெறுமையாகவே காணப்படுகின்றது.

கடும் போர் நடந்தமைக்கான அறிகுறிகள் நகரெங்கிலும் தென்படுகின்றன. வெடிக்காத கிரைனேட்டுகள், வெடி பொருட்களின் வெற்றுப் பெட்டிகள், குண்டு துளைத்த வீடுகள் என்பன நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு நகரம் யுத்தத்தால் எவ்வாறு அழிவடைந்துள்ளதென்பதை ஒவ்வொருவருக்கும் நினைவு படுத்துவதாக உள்ளது. படையினர் கண்ணிவெடி எதிர்ப்புச் சப்பாத்துகளை அணிந்துள்ளதுடன், ஒவ்வொரு அடியையும் மிகவும் ஜாக்கிரதையாக எடுத்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆட்லெறி ஷெல்களின் சத்தங்களும் ஹெலிகொப்டர்களிலிருந்து மேற்கொள்ளப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் கிழக்குப் பகுதியிலிருந்து எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இங்குள்ள இராணுவத்தினரைப் பார்க்கும் போது தற்போது அவர்கள் சற்று ஆறுதவடைந்திருப்பதைப் போல் தோன்றுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

தினக்குரல்

Read more...

கிளிநொச்சியைக் கைப்பற்றியபோது பொதுமக்களுக்கு இழப்பு எதுவுமில்லை

* ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியதாக "இந்து' ஆசிரியர் ராம் தெரிவிப்பு

கிளிநொச்சியைக் கைப்பற்றியதையடுத்து ஆனையிறவையும் ஏனைய முக்கிய இலக்குகளையும் கைப்பற்றுவதற்காக இலங்கையின் ஆயுதப்படைகள் துரிதமாக முன்னேறும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்பார்க்கிறார். அண்மித்த எதிர்காலத்தில் வட இலங்கையில் முல்லைத்தீவுக் காடுகளுக்கு வெளிப்புறமாக விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் எங்கும் செல்லமுடியாது என்ற நம்பிக்கையுடன் ஜனாதிபதி ராஜபக்ஷ இருக்கிறார் என்று சென்னையிலிருந்து வெளியாகும் "இந்து' பத்திரிகையின் ஆசிரியர் என்.ராம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் "இந்து' பத்திரிகையின் முதல் பக்கத்தில் நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகராகவிருந்த கிளிநொச்சியை விடுவிப்பதற்காக ஆயுதப்படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது "பொதுமக்களுக்கு இழப்புகள் எதுவும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கொள்கையை' படையினர் மேற்கொண்டமை குறித்து ஞாயிறு மாலை கொழும்பிலிருந்து தொலைபேசி மூலம் என்னுடன் உரையாடிய போது ஜனாதிபதி ராஜபக்ஷ திருப்தி தெரிவித்தார். தமது சகல நடவடிக்கைகளின் போதும் அவர்கள் இக்கொள்கையை தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாலஸ்தீனத்தில் என்ன நடக்கின்றது என்று பாருங்கள்!மோசம் அங்குள்ள உண்மையான நிலைவரத்தை அறிந்து கொள்வதற்காக பாலஸ்தீன ஜனாதிபதியுடன் (மஃமூட் அப்பாஸ்) நான் கதைத்தேன் என்று ஜனாதிபதி ராஜபக்ஷ கூறினார்.

கைதிகள் போன்று வைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் விடுவிக்கவில்லையென கவலை தெரிவித்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் சுதந்திரம், மனித உரிமைகளை புலிகள் தொடர்ந்தும் நிராகரித்தால் அந்த அமைப்பு தடையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ராஜபக்ஷ எச்சரித்தார். ஒருவார காலப்பகுதிக்குள் தடை அமுலுக்கு வரக்கூடும் என்பது விளங்கிக் கொள்ளக்கூடியது. இந்தியா உட்பட சுமார் 30 நாடுகளில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பொதுமக்களை பராமரிப்பது தொடர்பாக நாம் அதிகளவு முன்னுரிமை கொடுக்கவுள்ளோம் என்று தொலைபேசி மூலமான உரையாடலின் போது ராஜபக்ஷ என்னிடம் தெரிவித்தார். "அவர்களின் பாதுகாப்பை நாம் விரும்புகிறோம் அதனாலேயே அவர்களின் விடுதலையை நான் கடுமையாக வலியுறுத்துகிறேன். நாம் அவர்களுக்கு உணவு அனுப்பிக் கொண்டிருக்கிறோம். நாம் புலிகளுக்கும் உணவு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். பொதுமக்கள் வந்த பின்னரும் கூட நாம் அவர்களை பட்டினியுடன் இருக்க விடமாட்டோம்' என்று ராஜபக்ஷ கூறினார்.

விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலர் படையினரிடம் சரணடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். அகதிகளாக சில தற்கொலைக் குண்டுதாரிகள் வருவதற்கு முயற்சி செய்யும் சாத்தியம் குறித்தும் தனது அரசாங்கத்துக்கு தெரியும் என்றும் ராஜபக்ஷ கூறினார்.

கொழும்பு மற்றும் சுற்றுப்புறங்களில் சுமார் 15 தொடக்கம் 20 வரையிலான தற்கொலைக் குண்டுதாரிகள் ஊடுருவியிருக்கலாமென நம்பப்படுகின்றது. அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் முடிந்தளவுக்கு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றும் ராஜபக்ஷ கூறினார்.

தினக்குரல்

Read more...

யாழ் குடாநாட்டில் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெறவுள்ளது

வன்னியில் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை விடுவிக்கக்கோரி யாழ் குடாநாட்டில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெறவுள்ளது.

வீரகேசரி இணையம்

Read more...

போர்நிறுத்த உடன்படிக்கையே இராணுவ வெற்றிக்குக் காரணம்: ரணில் விக்ரமசிங்க

2002ஆம் ஆண்டு செய்யப்பட்ட போர்நிறுத்த உன்படிக்கையாலேயே தற்பொழுது அரசாங்கப் படைகள் இராணுவரீதியாக வெற்றிபெற்றிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

rani

அரசாங்கம் கூறுவதைப் போன்று போர்நிறுத்த உடன்படிக்கை காலத்தில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கொள்வனவு செய்திருந்தால் அரசாங்கப் படைகள் தற்பொழுது பாரிய எதிர்ப்பைச் சந்தித்திருக்க வேண்டி ஏற்பட்டிருக்கும் என நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறினார்.

“விசேடமாக கிழக்கு மோதல்கள் விடுதலைப் புலிகள் இராணுவத்தினரை நேருக்குநேர் சந்திக்கவில்லை. அரசாங்கப் படைகளால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் மோதல்களுக்கு விடுதலைப் புலிகள் புதியரக ஆயுதங்களைப் பயன்படுத்தியிருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. அவ்வாறான நிலையில் போர்நிறுத்த ஒப்பந்தம் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்க உதவியாக இருந்தது என எவ்வாறு கூறமுடியும்” என ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பினார்.

“போர்நிறுத்த உடன்படிக்கை மூலம் விடுதலைப் புலிகளின் ஆயுதப் பலம் குறைக்கப்பட்டதால் இராணுவத்தினர் வெற்றிகரமாக இராணுவ முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருந்தனர்” என அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், கிளிநொச்சி மோதல்களில் காயமடைந்த இராணுவத்தினர் அரசாங்கம் உரிய முறையில் நடத்துவதில்லையெனவும், காயமடைந்தவர்கள் இருக்கைகள் அற்ற பேரூந்துகளிலேயே அழைத்துவரப்படுவதாகவும் ரணில் விக்ரமசிங்க நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளர் மங்கள சமரவீர, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் இணைந்து நேற்று ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தியிருந்தனர்.

இராணுவ வெற்றிகளை குறைத்து மதிப்பிடக் கூடாது: அரசாங்கம்

அரசாங்கப் படைகள் பெற்றிருக்கும் வெற்றிகளைக் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறைத்து மதிப்பிடக்கூடாது என போக்குவரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சி வெற்றியைக் கொண்டாடவேண்டுமாயின் பெற்றோல் விலையை அரசாங்கம் குறைக்கவேண்டும் என ரணில் விக்ரமசிங்க கூறியிருப்பது, களநிலைமைகளை அவர் ஏற்றுக்கொள்ளவில்லையா என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

Read more...

கிளிநொச்சி வீழ்ந்ததன் பின்னால்

கிளிநொச்சி புலிகளின் வசமிருந்து அரசாங்கத்திடம் வீழ்ந்துவிட்டது. 10 வருடங்களின் பின் அரச கட்டுப்பாட்டுள் கொண்டுவரப்பட்ட வெற்றிக் களிப்பில் அரசாங்கம் மூழ்கியுள்ளது.
அந்த வெற்றியைக் கொண்டாடுமாறு அரசாங்க தரப்பு நாட்டு மக்களிடம் வேண்டுதலையும் விடுத்தது. ஆளும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தனது கிளைகள் ஊடாக பட்டாசுகளை விநியோகித்து தனது ஆதரவாளர்களை வீதியில் இறக்கி ஆர்ப்பரிப்புக்களை மேற்கொண்டது.
தெற்கில் ஆளும் கட்சிக்கு எதிரான கட்சிகளும் இந்த வெற்றிக் களிப்பில் தம்மை இணைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். தேசம் என்பதற்கு அப்பால் கிளிநொச்சி வெற்றி என்பது தமிழ்த் தேசியத்தை சிங்கள தேசியம் வெற்றி கொண்டதான ஒரு இறுமாப்பை மஹிந்த அரசாங்கம் ஏற்படுத்தி உள்ளது.
இந்த சிங்கள தேசியத்துள் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் அல்லது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு எதிரானவர்களும்; தம்மை இணைத்துக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
ஏன் கடந்த காலங்களில் வடக்கில் இருந்து முஸ்லீம்கள் விரட்டப்பட்ட பின்பும் கூட இனப்பிரச்சனையில் ஒரு யதார்த்த நிலையைப் பின்பற்றிய றவூவ் ஹக்கீமின் முஸ்லீம் காங்கிரஸ் கூட இந்த சிங்கள தேசியவாத போர் ஆர்பரிப்பிற்குள் தன்னை இணைத்துக் கொள்ளாமல் இருக்க முடியாத துர்ப்பாக்கியம். தென்னிலங்கைக் கட்சிகள் பலவும் விடுத்த அறிக்கைகள் போல் முஸ்லீம் காங்கிரசும் தனது பிரதி செயலாளர் நிஸாம் காரியப்பர் மூலம் ஓர் அறிக்கையை விடுத்தது.
'வீரமிக்க எமது படைவீரர்கள் கிளிநொச்சியை கைப்பற்றுவதனை எவராலும் தடுத்திருக்க முடியாது. இந்த வெற்றியை ஈட்டுவதற்கு அரச படையினரும், அப்பாவிப் பொதுமக்களும் ஈடு இணையற்ற தியாகங்களை மேற்கொண்டுள்ளனர.; யுத்த வெற்றிகளுக்காக சாதாரண மக்கள் பல்வேறு வகையில் கஸ்டங்களை எதிர்நோக்கியதாகவும், பொருளாதார ரீதியான அழுத்தங்களை தாங்கிக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.'
காரணம் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் ஐக்கியதேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்துள்ள அந்தக் கட்சி தனது கூட்டையும் வாக்காளர்களையும் திருப்திப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இது போன்று தெற்கின் ஆர்ப்பரிப்பில் புதிதாக இன்னும் பல கட்சிகளும் இணைந்து கொண்டுள்ளன.
அத்துடன் கடந்த சமாதான காலத்தில் இருந்து நாட்டின் சுபீட்சம், சிறுபான்மையினரின் உரிமைகள், அமைதி, சமாதானம் எனப் பேசி வந்த பல சிங்கள முற்போக்காளர்கள், இடதுசாரிகள், ஊடகவியலாளர்கள், சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரபலங்கள் என எல்லோரும் கிளிநொச்சியின் வீழ்ச்சியின் பின் உடம்பில் ஊறியிருந்த இனவாதத்தை மெல்ல மெல்ல வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
கிளிநொச்சியின் இந்த வீழ்ச்சியானது ஒரு தேசத்திடம் இருந்து இன்னொரு தேசம், இழந்த தனது பகுதியை மீட்டதான ஒரு பிரமாண்டத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இதேபோன்று முன்னர் ஆனையிறவு உள்ளிட்ட வன்னிப் பெருநிலப்பரப்பு விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட போதும் ஒரு தேசத்திடம் இருந்து ஒரு பிராந்தியம் விடுதலை பெற்றதான உணர்வு ஏற்படுத்தப்பட்டு அவை வெற்றிக் களிப்பாக வெளிப்படுத்தப் பட்டன. அடிப்படையில் அரை நூற்றாண்டு காலமாக நிலவிவரும் இனத்துவ முரண்பாடு கடந்த 3 தசாப்த காலமாக ஆயுத மோதலாக மாற்றம் பெற்றதுடன் இரு தேசங்கள் என்ற உணர்வு நிலை இரு இனங்களிடையேயும் ஊறிப் போய் இருப்பதனை எவரும் மறுத்து விட முடியாது.
இவ்வாறு இரண்டு பிரதான இனங்களிடையே காலா காலமாய் ஏற்படுத்தப்பட்டுள்ள அல்லது ஏற்பட்டுள்ள இனத்துவ அடிப்படையிலான முரண்பாடுகளை இலகுவாக ஒழிக்க முடியும் என்பதோ அல்லது இல்லாது போய்விடும் என நினைப்பதோ வரலாறு என்பது இல்லை என்பதற்குச் சமனானது.
இலங்கையில் அரை நூற்றாண்டாக தொடரும் இந்த இன முரண்பாடும் அதனை ஒட்டிய ஆயுதப் போராட்டமும் அந்தப் போராட்டம் சார்ந்து ஏற்பட்டுள்ள அக புற சூழ்நிலைகளையும் வெறுமனே நிலம் சார்ந்து பொருள் சார்ந்து அல்லது போராட்ட அமைப்புக்களின் உறுப்பினர்களின் உயிர் சார்ந்து மட்டும் குறுக்கி விட முடியாது. அது ஒரு இனத்தின் மொழி, கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களோடு கூடிய வாழ்வுரிமைக்கான உணர்வு நிலைப்பட்ட வாழ்வியலாக மாறிவிட்டது.
அந்த வகையில் ஒரு இனத்தின் அடையாளத்தை அதன் வாழ்வுரிமைக்கான வாழ்வியலை அதற்கான கோரிக்கைகளை நிறைவேற்றாதவிடத்து நிலங்களைக் கைப்பற்றுவதும் சொத்துக்களை அழிப்பதும் ஒரு அமைப்பின் உறுப்பினர்களைக் கொல்வதும், அல்லது இது போன்ற அழிப்புக்களை மேற்கொள்வதும் ஒரு தற்காலிக வெற்றியாகவே அமையும்.
ஏற்கனவே அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. யாழ் மாவட்டம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகின்றது. இது போன்று வவுனியா, மன்னார் நகரங்களும் அதை அண்மித்த பகுதிகளும் அரச கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. ஆனால் இந்தப் பிரதேசங்களில் மக்களால் தெரிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் அரசாங்கம் அந்த மக்களின் ஜனநாயக உரிமைகளை மதிக்கின்றதா? யாழ்ப்பாணம் இன்று திறந்தவெளிச் சிறைச்சாலை என்று கூறப்படுகின்றது. தனது உயிருக்கு அச்சுறுத்தல் என்று மனித உரிமை ஆணைக்குழுவில் சரணடைந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை மீண்டும் தம்மிடம் ஒப்படைக்குமாறு படையினர் அந்தக் குடு;ம்பத்தை வற்புறுத்துவதாக குடும்பத்தினர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் இன்று (ஜன4) முறையிட்டுள்ளனர். கிளிநொச்சியைப் படையினர் கைப்பற்றியதனை பட்டாசு கொழுத்திக் கொண்டாட வேண்டும் என படையினர் யாழ் வர்த்தகர்களையும் மக்களையும் வற்புறுத்தி உள்ளனர்.
அரசுக் கெதிரான படையினருக்கெதிரான அல்லது ஆளுங்கட்சியில் இருப்பவர்களுக்கெதிரான செய்திகளை பிரசுரிக்க வேண்டாம் என யாழ் ஊடகங்கள் படையினரால் மறைமுகமாக மிரட்டப்படுகின்றனர். உயிருக்கஞ்சி சரணடைபவர்களால் யாழ்ப்பாணச் சிறைச்சாலை நிரம்பி வழிகின்றது. அது மட்டுமா நாளும் பொழுதும் சந்தேகம் என்ற போர்வையில் கடத்தப்பட்டும் காணாமல் போயும் கொல்லப்பட்டுமுள்ள யாழ் இளைஞர்கள் யுவதிகளின் எண்ணிக்கை 2 வருடத்தில் 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
2009 ஆம் ஆண்டின் முதலாவது உயிர் இன்று (ஜன4) வவுனியாவில் பறிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில��
� இருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வந்தவர்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகின்றனர். தனிப்பட்ட முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு அவர்களது நடமாட்டங்கள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன. வவுனியாவில் கடந்த சில நாட்களாக மீண்டு;ம் சடலங்கள் வெளித் தெரிய ஆரம்பித்துள்ளன.
மறுபுறம் கிழக்கு விடுவிக்கப்பட்டு அங்கு மாகாண சபை உருவாக்கப்பட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடம் மாகாண சபை ஒப்படைப்பட்டதாக அரசாங்கம் கூறுகின்றது. தன்னுடைய கட்சியின் சின்னத்துக்குள்ளேயே போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட சிறுபான்மையின முதலமைச்சரிடமும், பிரதிநதிகளிடமும் அதிகாரத்தை வழங்குவதற்கு அரசாங்கம் இன்றும் தயங்குகின்றது.
கிழக்கின் முதலமைச்சரில் இருந்து அமைச்சர் ஹிஸ்புல்லா வரை தமது மாகாணத்தில் உள்ள ஒரு கல்லைப் புரட்டுவதற்குக் கூட தமக்கு அதிகாரம் இல்லை என்கிறார்கள். அவர்கள் அரசாங்கத்தின் விருப்பத்தை அல்லது ஆளும் தரப்பின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்க��
�். இவ்வாறானதொரு நிலைமைகள் தொடர்கின்ற போது அவற்றை நிவர்த்திப்பதற்கான அல்லது அனைத்துக்குமான அரசியல் தீர்;வை முன்வைப்பதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதை விடுத்து புலிகள் வீழ்த்தப்படுகின்றார்கள். கிளிநொச்சி வீழ்ந்து விட்டது என எனக்கு மூக்கு போனாலும் எதிரிக்கு சகுனம் பிழையாக வேண்டும் என எம்மவர்கள் பலரும் ஆளும் அரசாங்கத்துடன் இணைந்து ஆர்ப்பரிக்கின்றார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றுத் தவறுகள் தயவு தாட்சன்மியம் இன்றி விமர்சிக்கப்பட வேண்டியவை. சுட்டிக் காட்டப்பட வேண்டியவை. அவை அமைப்பியல் சார்ந்து அரசியல் சார்ந்து ராணுவ தந்திரோபாயம் சார்ந்து மீள் பார்வைக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. இதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.
ஆனால் ஒரு அமைப்பின் தவறுகள் அல்லது அந்த அமைப்பின் மீதான விமர்சனங்கள், வாதப்பிரதிவாதங்கள், காள்புனர்வுகள் என்பன இன்று ஒரு இனத்தின் உரிமைக் கோரிக்கை மீதான, அந்த இனத்தின் அபிலாசைகள் மீதான, வாழ்வுரிமைக்கான போராட்டத்தின் மீதான தவறுகளாகவும், விமர்சனங்களாகவும், காள்புனர்வுகளாகவும், எதிர்ப்புகளாகவும் வெளிக்கிளம்பியுள்ளமை ஆபத்தானது என்பதனை எவரும் புரிந்து கொள்வதாக இல்லை.
அதனால் இங்கே ஒரு கேள்வி எழுகின்றது. கிளிநொச்சியின் வீழ்ச்சி என்பது ஒரு பிரதேசத்தின் வீழ்ச்சியாக அல்லது விடுதலைப் புலிகளின் பலவீனமாகக் கருதப்படுவதற்கு அப்பால் ஒரு இனத்தின் வீழ்ச்சியாக அவ்வினத்தின் வாழ்வியலின் வீழ்ச்சியாக வாழ்வுரிமைக் கோரிக்கைiயின் வீழ்ச்சியாக கட்டியெழுப்பப்படுகிறது என்ற ஆபத்தினை நாம் புரிந்து கொளகிறோமா ?

 

ராஜா பரமேஸ்வரி

Read more...

கிளிநொச்சியை தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் கைப்பற்றுவர்

தமிழகம் திருச்சிராப்பள்ளி கொட்டாப்பட்டு அகதிமுகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகள், கிளிநொச்சி நகரம் படையினரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளமை தொடர்பில் தமது கவலையை வெளியிட்டுள்ளார்கள். எனினும் அந்தப் பிரதேசத்தை மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் கைப்பற்றுவார்கள் என அவர்கள் நம்பிக்கையை வெளியிட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

இலங்கையின் இடம்பெற்று வரும் யுத்தம் பொதுமக்களின் உயிர்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த தமிழ் அகதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Read more...

கிளிநொச்சி வீழ்ந்து விட்டது; இனி எதற்கு அரசியல் தீர்வு?

கிளிநொச்சியும் இராணுவத்திடம் வீழ்ந்துவிட்ட பிறகு,  இனி தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்ற ஒன்றை வழங்கவேண்டிய அவசியமே கிடையாது. எனவே, அரசியல் தீர்வு முயற்சிகளுக்காக உருவாக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவை அரசு உடனடியாக கலைத்துவிடவேண்டும்.
இப்படி வலியுறுத்தியிருக்கிறது ஜே.வி.பி. சார்பு அமைப்பான  தேசப்பற்றுள்ள தேசிய மத்திய நிலையம்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற அந்த அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைப்பின் செயலாளரும் ஜே.வி.பியின் பிரசார செயலாளரும், எம்.பியுமான விஜித ஹேரத்தே இவ்வேண்டுகோளை விடுத் தார். அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:
கிளிநொச்சியைப் புலிகள் கைவிட்டமை அவர்களுக்கு யுத்த ரீதியாகக் கிடைத்த
தோல்வி மாத்திரமின்றி உளவியல் ரீதி யாகவும்  கிடைத்த தோல்வியாகும்.
கிளிநொச்சி புலிகளின்  தலைநகரமாக விளங்கியது. இந்த நகரில்தான் புலிகளின் சமாதான செயலகம் உட்படப் பல அலு வலகங்கள் இருந்தன. படையினர் மீதான பாரிய தாக்குதல்களுக்கான திட்டங்கள் அங்கிருந்துதான் வகுக்கப்பட்டன.
இவ்வாறானதொரு முக்கிய நகரம் பறிபோயுள்ளதால் புலிகள் உளவியல் ரீதியாகத் துவண்டுபோயுள்ளனர்.
இந்த வெற்றியை இந்நாட்டுக்குப் பெற்றுத்தந்த  படையினருக்கு நாம் எமது கௌரவத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். படையினர் தொடர்ந்து முன்னேறுவதற்கு இந்நாட்டு மக்கள் தொடர்ந்தும் ஆதரவு வழங்கவேண்டும்.
தோல்வியடைந்த புலிகள் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர்.இது தொடர்பாக மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும்.
இந்த நிலையில் அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசப்படுகிறது. அதிகாரப் பகிர்வு என்பது மற்றுமொரு பிரிவினைவாதத்திற்கே வழிவகுக்கும். யுத்தம் மூலம் புலிகளைத் தோற்கடிப்பதுதான்  ஒரேதீர்வு.
ஆகவே, இச்சந்தர்ப்பத்தில் அரசியல் தீர்வு பற்றிய பேச்சுக்கே இடமில்லை. அரசியல் தீர்வு தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு உடன் கலைக்கப்படல் வேண்டும். அக்குழு அறவே தேவையற்ற ஒன்று  என்றார்.

Read more...

கிளிநொச்சி வெற்றி பற்றி கிழக்கு முதலமைச்சரின் கருத்து

pillaiyan-002

 

  • புலிகளினது நிருவாக கேத்திரமுக்கியத்துவம் வாய்ந்த இடமாக விளங்கிய கிளிநொச்சியை படையினர் கைப்பற்றியதானது, பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சமாதானம், ஜனநாயகம் என்பன ஏற்படுத்தப்பட வேண்டும் என விரும்புகின்ற அனைவருக்குமே கிடைத்த ஓர் மாபெரும் வெற்றி என நான் கருதுகின்றேன்.
  • இந்த வெற்றியினூடாக வடபகுதிக்குள் குறிப்பாக பயங்கர வதாகளின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் சிக்குன்டிருக்கின்ற அப்பாவி பொதுமக்கள் மற்றும் இளைஞயுவதிகளையும் மீட்டு அவர்களுக்கான புணர்வு அழிக்கப்படுகின்றபோது இவ் வெற்றியானது தமிழ் மக்கள் மத்தியிலே மிகவும் வரவேற்கப்படும்.
  • கிழக்கைப் போன்றே வடக்கிலும் ஒரு ஜனநாயக சூழல் ஏற்படுத்த்தப்பட வேண்டும். அதற்க்காக எஞ்சியிருக்கின்ற பயங்கரவாதம் முற்றுமுழுதாக ஒழிக்கப்பட வேண்டும். இவ்வாறு பயங்கரவாதம் ஓழிக்கப்படுவதினுடாக கிழக்கு மக்களைப்போன்று வடபகுதி மக்களும் ஓர் ஜனநாயகப்பாதைக்குவந்து தங்களுக்கான பலமான அரசியல் இருப்பிடத்தையும் ஏற்படுத்திக்கொள்ளமுடியும். இதற்காக வேண்டியே எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களும் மிகவும் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றார்.
  • மேலும் இவ் வெற்றியானது அண்மைக்கால இராணுவ முன்ணேற்றங்களை வைத்துப் பார்க்கும்போது இப் பாரிய வெற்றியானது சமாதான விருப்பிகள் எல்லோராலும் எதிர் பார்க்கப்பட்ட ஓன்றே ஆகும்.
  • உண்மையிலே இலங்கையின் இறமைக்குட்ப்பட்ட எந்த ஓர் நிலப்பிரதேசத்திற்க்கும் இருக்கின்ற பயங்கரவாதம் முற்று முழுதாக ஓழிக்கப்படுகின்ற அதேவேளை மீண்டும் ஒரு முறை பயங்கரவாதம் பயங்கரவாதமானதாக துளிர்விடுவதறக்கு யாருமே அனுமதியளிக்க்கூடாது.
  • பயங்கரவாதத்தின் கெடூரபசிக்கு பலியாகுவது அப்பாவி பொதுமக்களும், அரச உடமைகளுமெ தவிர வேறெதுவுமில்லை. எனவே ஜனாதிபதி மகிந்த ராஜாபக்ஸ அவர்கள் வழிகாட்டளினுடன் படையினர் ஈட்டியிருக்கின்ற இந்த பாரிய வெற்றியினுடாக ஏற்படவிருக்கின்ற அனுகூலங்களை முழுமையாக இப் பயங்கரவாதத்தின் பிடியில் சிக்குண்டு தவிர்க்கின்ற மக்கள் அனைவருமே அனுபவிப்பவர்களாக இருந்தால் அது உண்மையிலே வரவேற்கத்தக்க தொன்றாகும்.

Read more...

Monday, January 5, 2009

மக்கள் எவரையுமே காணமுடியாத கிளிநொச்சி நகரில் தொடர்ந்தும் பலத்த துப்பாக்கிச் சூடு, ஷெல் சத்தங்கள்

மக்கள் எவரையுமே காண முடியாதவாறு காணப்படும் கிளிநொச்சி நகரில் கூரைகள் இல்லாத கட்டிடங்களும் குண்டுகள் துளைத்த கட்டிடங்களும் சேதமான சுவர்களுமே காணப்படுவதாக கிளிநொச்சிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் நகரைச் சுற்றி ஆங்காங்கே துப்பாக்கிச் சூட்டு சத்தங்களும் கடும் ஷெல் சத்தங்களும் கேட்ட வண்ணம் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கிளிநொச்சி நகரை வெள்ளிக்கிழமை படையினர் கைப்பற்றியதையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை சிங்கள, ஆங்கில ஊடகவியலாளர்கள் படைத்தரப்பால் அங்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஊடகவியலாளர்கள் அங்குள்ள நிலைமைகள் பற்றிக் கூறும் போதே இவ்வாறு தெரிவித்தனர்.

கிளிநொச்சியில் இருந்து காட்டுப் பகுதிகளை நோக்கி கடும் ஷெல் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. தூரத்தில் ஷெல்கள் வீழந்து வெடிக்கும் சத்தங்களும் கேட்கின்றன.

கவச வாகனங்களும் இராணுவ வாகனங்களும் "ஏ9' பிரதான வீதியிலும் குறுக்கு வீதிகளிலும் நடமாடுவதையும் காணமுடிந்தது. கண்ணிவெடிகள், மிதி வெடிகளை அகற்றும் பணிகளும் நடைபெறுகின்றன.

விடுதலைப் புலிகளின் முன்னர் காப்பரணாக அமைந்த இடத்தில் முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அருகில் ஊடகவியலாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

மண் அரண்கள் படையினரால் சிதைக்கப்பட்டுக் காணப்படுகின்றன. அடிக்கடி ஹெலிகொப்டர்களும் மிகத் தாழ்வாகப் பறந்து கொண்டிருந்தன.

அக்கராயன்குளம் அருகில் அமைந்த கட்டிடம் ஒன்றில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த 57 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் வன்னி யுத்தம் குறித்து விளக்கிக் கூறினார்.

முல்லைத்தீவு காடுகளில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பிடிக்கும் வரை இராணுவ நடவடிக்கை ஓயப்போவதில்லை என அவர் கூறினார்.

வடக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக எதிர்காலத் தாக்குதல்கள் கிளிநொச்சியில் இருந்தே மேற்கொள்ளப்படும்.

இந்த யுத்தத்தைத் தொடர்ந்தும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்வோம். இந்த யுத்தத்தால் விடுதலைப் புலிகளின் பகுதிகள் நாளுக்கு நாள் சுருங்கிக் கொண்டு வருகின்றன.

விடுதலைப் புலிகளின் படையணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றது.

கிளிநொச்சிக்காக புலிகள் மிகக் கடுமையாகப் போரிட்டனர். கிளிநொச்சிக்குள் படையினர் நுழைவது மிகக் கடுமையாக இருந்தது. இங்கு நுழைவதற்கு ஒன்றரை மாதங்களுக்கும் மேல் சென்றதாகவும் விரைவில் இந்த யுத்தத்தை முடித்து விடுவோம் எனவும் தெரிவித்தார்.

Read more...

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top