இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010
Showing posts with label US. Show all posts
Showing posts with label US. Show all posts

Saturday, October 24, 2009

ஈரானை நிலைகுலையச் செய்வது அமெரிக்காவுக்கு இலகுவானதல்ல

ஈரானில் ஜுன் 12ந் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 66.2 வீதம் பெற்றுத் தெரிவாகிய மஹ்மூத் அஹ்மதினேஜாத்தின் வெற்றியைக் கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களும் கண்டனப் பேரணிகளும் ஓய்ந்து அடங்கிவிட்டன. ஆனால் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கும் கண்டனப் பேரணிகளுக்கும் பின்னணி ஆதரவு வழங்கிய வெளிநாட்டு சக்திகள் இன்றும் ஓயவில்லை. குறிப்பாக அமெரிக்காவையும் ஐரோப்பிய யூனியன் நாடுகளையும் கூறலாம்.


அஹ்மதினேஜாத்தின் வெற்றிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற காலத்தில், ஈரானில் ஆட்சிமாற்றம் இடம்பெறப் போகின்றது என்ற பிரசாரத்தை மேற்குலகம் கட்டவிழ்த்து விட்டது. மத்திய ஆசிய நாடுகளில் அரங்கேற்றிய புரட்சிகளைப் போல (ஒறேஞ்ச் புரட்சி, அப்பிள் புரட்சி, பேப்பிள் புரட்சி) ஈரானிலும் ஒரு ‘புரட்சியை’ அரங்கேற்றலாம் என்ற அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. ஆட்சிமாற்றம் சாத்தியமில்லை என்பது தெளிவாகிய நிலையில், ஈரானை நிலைகுலைப்பதற்கான வழிவகைகளைத் தேடுகின்றார்கள்.

பராக் ஒபாமா அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஆரம்ப நாட்களில் ஈரானுடனான பிரச்சினையை நட்புறவுப் பாணியில் தீர்க்க வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தினார். ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஈரான் அரசாங்கத்தை 1953ம் ஆண்டு கவிழ்த்ததில் அமெரிக்காவுக்குப் பிரதான பங்கு உண்டு என்பதை ஒத்துக்கொண்ட முதலாவது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா.

கெய்ரோ பல்கலைக் கழகத்தில் ஜுன் மாதம் ஆற்றிய உரையில் “ஈரான் இஸ்லாமியக் குடியரசு” என்று பராக் ஒபாமா ஈரானைக் குறிப்பிட்டதை ஈரான் தொடர்பான அமெரிக்க அணுகுமுறையில் ஒரு திருப்புமுனை என்று சில அரசியல் நோக்கர்கள் அன்று கருதினர். ஈரானை இஸ்லாமியக் குடியரசு என்று எந்தவொரு அமெரிக்க ஜனாதிபதியும் இதற்கு முன்னர் குறிப்பிடவில்லை.

ஈரானில் ஆட்சிமாற்றம் சாத்தியம் என்று அமெரிக்கா கருதிய நாட்களிலேயே ஒபாமாவின் இந்த நிலைப்பாடு வெளிப்பாடு பெற்றது. இப்போது அணுகுமுறை மாறிவிட்டது.

அமெரிக்காவின் அதிகார வர்க்கத்தினது செல்வழியிலிருந்து ஒபாமா விலகிச் செல்வது சாத்தியமான காரியமல்ல. ஆட்சி மாற்றத்துக்குப் பதிலாக நிலைகுலைப்பு முயற்சி இப்போது முன்னெடுக்கப் படுகின்றது.

ஈரானில் ‘ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் சட்டத்தின் ஆட்சியையும்’ ஊக்குவிப்பதற்காக ஸிஷிதியிளி அமைப்பு இந்த வருடத்துக்கு 20 மில்லியன் டொலர்களை ஒதுக்கியிருக்கின்றது. இந்த அமைப்பு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் நேடியான கண்காணிப்பில் இயங்குவது. ஜனாதிபதி ஒபாமாவுக்கு இது தெரியாமலிருக்க முடியாது.

குர்திஷ் மற்றும் அஸேதி சிறுபான்மையின அமைப்புகளுடன் அமெரிக்கா இரகசிய உறவு வைத்திருக்கின்றது. இந்த அமைப்புகளின் அரச எதிர்ப்புச் செயற்பாடுகளுக்கு அமெரிக்கா இரகசியமான முறையில் நிதியுதவி செய்கின்றது. ஈரானுக்குள் உள்நாட்டு நெருக்கடியைத் தோற்றுவிப்பதற்கு வெளிச் சக்திகள் மேற்கொள்ளும் முயற்சி பலனளிக்கப் போவதில்லை. தேர்தல் முடிவுக்கு எதிராக இடம் பெற்ற ஆர்ப்பாட்டங்களின் தோல்வி இதையே உணர்த்துகின்றது.

இந்த நிலையில் ஈரானை நிலைகுலையச் செய்வதற்கு அமெரிக்காவுக்கு முன்னால் இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று ஐக்கிய நாடுகள் சபை மூலம் பொருளாதாரத் தடையைக் கொண்டுவருவது. மற்றது இராணுவ நடவடிக்கை. இரண்டும் அமெரிக்காவின் அதிகார வர்க்கம் நினைப்பது போல இலகுவானவையாகவோ எதிர்பார்க்கும் பலனைத் தருபவையாகவோ இல்லை.

வீட்டோ நாடுகளான ரஷ்யாவும் சீனாவும் பொருளாதாரத் தடையை எதிர்பதால் அது நடைமுறைச் சாத்தியமற்றது. இராணுவ நடவடிக்கை அமெரிக்காவையே பலவீனப்படுத்தும். ஆப்கானிஸ்தான் மீதும் ஈராக் மீதும் மேற்கொண்ட படையெடுப்புகள் அமெரிக்காவைச் சங்கடமான நிலைக்குத் தள்ளியிருக்கின்றன. ஈரான் மீது இப்போது தாக்குதல் நடத்தினால் எட்டு வருட காலத்தில் அமெரிக்காவினால் ஆக்கிரமிக்கப்பட்ட மூன்றாவது இஸ்லாமிய நாடாக அது இருக்கும்.

அமெரிக்கா இஸ்லாமிய விரோத நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுகின்றது என்ற குற்றச்சாட்டுக்கு அது வழிவகுக்கும். இப்போது நண்பர்களாக இருக்கும் இஸ்லாமிய நாடுகள் அமெரிக்காவிடமிருந்து தூர விலகுவதற்குத் தீர்மானிக்கலாம். யுத்தம் என்று வந்தால் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் பார்க்க மோசமான பாதிப்புக்கு அமெரிக்கா ஈரானில் முகங்கொடுக்க நேரிடும்.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கின்றது என்பது அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டு ஈரான் அதை மறுக்கின்றது. ஈரானிடம் அணு ஆயுதம் எதுவுமே இப்போது இல்லை. எனினும் ஈரான் தனது பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் எவரும் பிழை காண முடியாது. ஒரு எல்லையில் ஆப்கானிஸ்தான். இன்னொரு எல்லையில் ஈராக். இரண்டு நாடுகளிலும் அமெரிக்கப் படை நிலைகொண்டிருக்கின்றது. மூன்றாவது எல்லையில் பாகிஸ்தான். அது அமெரிக்காவின் செல்வாக்குக்கு உட்பட்ட நாடு. இந்த நிலையில் அமெரிக்காவிடமிருந்து தன்னைப் பாதுகாப்பதற்கான முன்னேற்பாடுகளை ஈரான் செய்வது நியாயமானதே. இஸ்ரேல் ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் என அணுசக்தி நாடுகளால் சூழப்பட்டிருக்கும் நிலையில் ஈரானும் அணுசக்தியின் பால் நாட்டம் கொள்வதும் இயல்பானதே.


Read more...

Wednesday, July 15, 2009

இறைச்சி மீது லட்சுமி இருப்பது போல் விளம்பரம்: இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு (வீடியோ படம் இணைப்பு)


இறைச்சி மீது லட்சுமி இருப்பது போல் அமெரிக்காவில் உள்ள உணவு விடுதியில் விளம்பரம் வைக்கப்பட்டுள்ளதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


அமெரிக்காவில் பர்கர் கிங் என்ற துரித உணவு தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு அமெரிக்கா முழுவதும் கிளைகள் உள்ளது. வெளி நாடுகளுக்கும் பாஸ்ட் புட் உணவுகளை இந்த நிறுவனம் அனுப்பி வருகிறது.

பர்கர்கிங் நிறுவனம் தயாரிக்கும் சாண்ட்விச் புகழ் பெற்றது. சமீபத்தில் இந்த நிறுவனத்தின் சாண்ட்விச் பாக்கெட்டுக்களில் இந்து கடவுளான லட்சுமி படம் இடம் பெற்றது. சாண்ட்விச் மீது லட்சுமி அமர்ந்திருப்பது போல அச்சிடப்பட்டிருந்தது.

சாண்ட் விச் என்பது இரு ரொட்டித் துண்டுகளுக்கு இடையே வெண்ணை, இறைச்சி போன்றவற்றை வைத்து சுற்றப்பட்ட கலவை யாகும். இறைச்சி உணவு மீது லட்சுமி இருப்பது போன்ற படத்தைப் பார்த்ததும் அமெரிக்காவில் உள்ள இந்துக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

வாஷிங்டனில் உள்ள இந்து அமைப்புகள் பர்கர்கிங் உணவு நிறுவனத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இறைச்சி மீது லட்சுமி இருப்பது போன்ற படத்தை இனி வெளியிடக்கூடாது என்று கூறியுள்ளனர்.

மேலும் இந்து கடவுளை அவமதித்ததற்காக மன்னிப்பு கேட்குப்படியும் அமெரிக்கா வில் உள்ள இந்து அமைப்பு கள் கோரிக்கை விடுத்துள்ளன.


Read more...

Monday, July 13, 2009

சாப்பாட்டை விமர்சித்த கணவனை அடித்து, உதைத்த மனைவி

மியாமி: சாப்பாடு சரியில்லை என கூறிய கணவனை அடித்து, உதைத்து பின்னர் கொன்றுவிடுவேன் என மிரட்டிய அமெரிக்க மனைவியை போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் போனிடா ஸ்பிரிங்ஸ் பகுதியில் வசிப்பவர் ரிச்சர்ட் ஜோன்ஸ்(71). இவரது மனைவி மிரிடித் முல்கஹி (66). இவர்கள் இருவரும் கடந்த 15 ஆண்டுகளாக ஒரே வீட்டில் குடும்பம் நடத்துகின்றனர்.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி இரவு 7 மணிக்கு வீட்டுக்கு ஜோன்ஸ் சாப்பிட வந்தார். அப்போது மனைவி அவருக்கு பிரட்டும், உருளை கிழங்கு ரோஸ்ட்டும் செய்து வைத்திருந்தார். சாப்பிட உட்கார்ந்த ஜோன்ஸ், பிரட் கருகி இருப்பதையும், உருளை கிழங்கு வேகாமல் இருப்பதையும் பார்த்து விட்டு, அதை விமர்சனம் செய்துள்ளார்.

பின்னர் தனது பெட்ரூமுக்கு வந்துள்ளார். தனது சமையலை கணவர் விமர்சித்ததை முல்கஹியால் தாங்கி கொள்ள முடியவில்லை.

பெட்ரூம் வந்த முல்கஹி அவர் மீது தொலைபேசியை எடுத்து எரிந்துள்ளார். அப்படியும் அவரது ஆத்திரம் தீரவில்லை. அவரை அடித்து உதைத்துள்ளர். உன்னை கொல்ல போகிறேன் என கூறி கணவரது கழுத்தை பிடித்து நெறித்துள்ளார்.

அவரிடம் இருந்து ஒருவழியாக தப்பித்த ஜோன்ஸ் போலீசில் புகார் கொடுத்தார். இதையடு்த்து போலீசார் அந்த கோபக்கார மனைவியை கைது செய்தனர்.

நல்லவேளை, நம்மூர்ல இந்த அளவுக்கு கொலை வெறியுடன் மனைவியர் கிடையாது..

Read more...

Wednesday, July 8, 2009

ஒபாமா விரும்பும் உலகத் தலைவர்கள்

மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன், நெல்சன் மண்டேலா ஆகியோரே தனக்கு முன் உதாரணமானவர்களென அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதற்தடவையாக ரஷ்யத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய போட்டியொன்றிலேயே ஒபாமா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அப்பேட்டியில் ஒபாமா மேலும் தெரிவிக்கையில்;

சர்வதேச அளவில் மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா ஆகியோரே எனது முன்மாதிரிகள்.

வன்முறை வழியைக் கையாளாமல் மக்களது மனங்களையும் இதயத்தையும் மாற்றிய தலைவர்களையே விரும்புகிறேன். தேசிய அளவில் ஆபிரகாம் லிங்கனை மிகவும் நேசிக்கிறேன்.

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்கொண்டார் என்பது மட்டுமல்ல, மனிதர்களை முழுமையாகப் புரிந்துகொண்டு அதன்படி செயலாற்றினார்.

உள்நாட்டுப் போர் நடந்துவந்த நேரத்திலேயே அதை எதிர்கொண்டதுடன் மட்டுமல்லாமல், அடிமைகள் முதல் அடிமைப்படுத்தியவர்கள் வரை அனைவரது உள்ளங்களையும் புரிந்துகொண்டு எல்லா மக்களையும் இணைக்க பெருமுயற்சி மேற்கொண்டதாலேயே தனித்துவம் மிக்க தலைவராக லிங்கன் பிரகாசிக்கிறார் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, தான் காந்தியால் கவரப்பட்டேன் என கடந்த ஆண்டு பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஒபாமா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read more...

யுஎஸ் பங்கு நிறுவன சர்வர்களை 'ஹேக்' செய்த 3 தமிழர்கள்

நியூயார்க்: ஆன்-லைன் பங்கு வர்த்தக நிறுவனங்களின் சர்வர்களை 'ஹேக்' செய்து மற்றவர்களது கணக்கில் பங்குகளை வாங்கி தங்கள் கணக்கில் விற்று கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக 3 தமிழர்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.


இதில் ஒருவர் ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டு அமெரிக்கா கொண்டு வரப்பட்டுள்ளார். இன்னொருவர் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுவிட்டார். மூன்றாவது நபர் தலைமறைவாக உள்ளார்.

சென்னையைச் சேர்ந்த ஜெய்சங்கர் மாரிமுத்து (34) என்பவர் கடந்த மாதம் 20ம் தேதி ஹாங்காங்கி்ல் கைது செய்யப்பட்டு அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டுள்ளார். இவர் அமெரிக்க ஆன்-லைன் பங்கு வர்த்தக நிறுவனங்களின் சர்வர்களை 'ஹேக்' செய்ததாக நெப்ராஸ்கா மாகாண நீதிமன்றத்தில் கடந்த 25ம் தேதி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஆனால், தான் தவறு செய்யவில்லை என அவர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆனால், இதே 'ஹேக்கிங்' காரணத்துக்காக இவர் இதற்கு முன்பும் ஹாங்காங் போலீசாரால் கைது செய்யப்பட்டவராம்.

இன்னொருவரான திருஞானம் ராமநாதன் என்பவர் தான் செய்த தவறை ஒப்புக் கொண்டுவிட்டார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பரில் கைது செய்யப்பட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால், இவரது முழு தண்டனைக் காலம் முடியும் முன்னரே நாடு கடத்தப்பட்டுவிட்டாக அமெரிக்க நீதித்திறை செய்தித் தொடர்பாளர் லேன் மெக்காலெப் இப்போது தகவல் வெளியிட்டுள்ளார்.

இவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.

மூன்றாவது நபரான சொக்கலிங்கம் ராமநாதன் இன்னும் தலைமறைவாகவே உள்ளார்.

இந்த மூவரும் இ.டி. டிரேட், டி.டி. அமெரிடிரேட் உள்ளிட்ட 9 ஆன்லைன் பங்கு வர்த்தக நிறுவனங்களின் 60க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்குகளி்ல் பங்குகளை வாங்கி, அதை தங்கள் கணக்கில் விற்று மோசடி செய்துள்ளனர்.

மேலும் தங்கள் வசம் இருந்த விலை குறைந்த பங்குகளை மற்றவர்களை வாங்கச் செய்து (அந்த நபருக்கே தெரியாமல் அவரது கணக்கில் வாங்கி) அவற்றின் விலையை தாறுமாறாகக் கூட்டிவிட்டுள்ளனர்.

இதில் ஒரு நிறுவனத்துக்கு மட்டும் 2 மில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும் கூகுளின் பங்குகளையும் பாதி விலைக்கு விற்கச் செய்துள்ளனர்.

இந்த மூவரும் பாங்காங்கில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது அங்கு வந்த சில அமெரிக்க, ஐரோப்பிய நபர்கள் தங்களது பங்குகளை ஹோட்டலில் இருந்த இன்டர்நெட் மையத்தில் ஆன் லைனில் வர்த்தகம் செய்வதைப் பார்த்துவிட்டு, அந்த கம்ப்யூட்டர்களில் அமர்ந்து பாஸ்வேர்ட்களை 'சுட்டுள்ளனர்'.

அதன் பின்னர் அந்த அக்கெளன்ட்களை 'ஹேக்' செய்து அவர்களது வாழ்க்கையில் 'விளையாடியுள்ளனர்'. தொடர்ந்து மேலும் பலரது அக்கெளன்ட்களையும் 'ஹேக்' செய்துள்ளனர்.

Thatstamil

Read more...

Tuesday, July 7, 2009

மைக்கல் ஜாக்சனின் ஆவி வீடியோவில் ஒளிப்பதிவாகியுள்ளது (வீடியோ இணைப்பு)


Jackson´s ghost caught on camera


Michael Jackson fans are in a frenzy over a possible sighting of the star's Ghost at Neverland.

An eerie shadow resembling Jacko's figure appeared on a wall in the singer's former home during a live television programme aired on CNN- and walked across the corridor.

The spooky sighting came during CNN's 'Inside Neverland', which featured an interview between interviewer Larry King and Michael's brother Jermaine.

Neither the presenter nor the cameraman noticed the spectre. But after it was posted on YouTube fans picked up the shadow and rumours spread across the internet like wildfire.

During the programme - aired a week after his death - Miko Brando, Marlon's son and a long-term friend of Jackson's, takes a film crew on a tour of Neverland.

At one point their camera is pointed down a long hall-way when the shadowy figure appears at its far end.

Chat forums were flooded with messages from fans last night who insisted the shadow was Michael's ghost.


Read more...

Monday, July 6, 2009

பராக் ஒபாமாவின் ஆண்டு சம்பளம் 2 1/2கோடி ரூபா

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு எவ்வளவு சம்பளம் நிர்ண யிப்பது என்று கடந்த சில தினங்களாக ஆலோசனை நடந்து வந்தது. பொரு ளாதார மந்த நிலையை கருத்தில்கொண்டு ஒபாமாவுக்கும், வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கும் சம்பளத்தை ஓரளவு உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

நீண்ட ஆலோசனைக்குப் பிறகு புதிய சம்பளப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதற்கு அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.

இந்தப்பட்டியல் படி ஒபாமாவுக்கு ஆண்டு ஒன்றுக்கு 2 கோடியே 65 இலட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும். மற்ற அலவன்சுகள் தனியாக கொடுக்கப்படும். வெள்ளை மாளிகை இணையத்தளத்தில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

ஒபாமா உத்தரவுப்படி செயலாற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிளுக்கும் ஊழியர்களுக்கும் சம்பளம் உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளில் 487 பேருக்கு சம்பள உயர்வு அதிகமாக உள்ளது.

மூத்த அதிகாரிகள் பலருக்கு ஆண்டு சம்பளம் ஒரு கோடி ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1995ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது தான் சம்பள உயர்வு அதிக விகிதத்தில் உயர்த்தப்பட்டு இருப்பதாக சிகாகோசன் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Read more...

Tuesday, June 30, 2009

Human Rights Leadership Coalition writes President Obama Urging Action on Sri Lanka

President Barack Obama
The White House
1600 Pennsylvania Avenue NW
Washington, DC 20500

Dear Mr. President,

We, representing several human rights organizations, are writing to express our deep concern about the situation in Sri Lanka and urge you to take immediate steps to address the dire human rights and humanitarian situation in that country.


Since December, during the last phase of intense fighting, tens of thousands of civilians have been killed, injured or displaced. Independent observers and media were denied access to the conflict zone. Three medical doctors who were providing independent information were arrested and held incommunicado. Even after the government claimed military victory, it denied access to camps and to the former safe zone where the final battle took place.

Despite repeated warnings by several international organizations of impending mass killings of civilians and despite strong statements of concern by you and several other world leaders, more than 20,000 civilians are reported to have been killed. The Times of London and Le Monde have published investigations, based on reliable data, and suggested that most of the civilian deaths were caused as a result of shelling by the Sri Lankan government.Thousands more were injured and the International Committee of the Red Cross was prevented by the Sri Lankan government for providing medical assistance resulting in many more civilian deaths.

The failure of the international community to take concrete action to protect civilians in Sri Lanka has given the green light to regimes around the world and has signaled that there is nothing that the international community will do when a government kills its own people under the cover of sovereignty.

It is now imperative that the United States assume the leadership necessary to mobilize the international community to protect the surviving civilians and to hold accountable those responsible for mass atrocities. Failure to do so would encourage governments to commit mass atrocities without fear of consequence. That is why your immediate action is important at this juncture.

We appeal to you to take steps to urgently address the plight of those in de facto internment camps and to initiate action to hold accountable those responsible for the mass killings. There are reports that some in the camps have already died from starvation or malnutrition. The United Nations Human Rights Council has called for an emergency meeting on Sri Lanka, but a UN resolution calling for immediate and unrestricted access to the camps failed, leaving individuals there still at risk.

Plight of those in the camps

Over three hundred thousand persons who fled the conflict zone are held in government run “internment camps.” Unrestricted humanitarian aid to those held in the camps will make the difference between life and death, and yet access for the UN and NGOs to the camps continues to be hampered by the government. According to Ms. Magdalena Sepulveda, who delivered a statement on May 26, 2009, on behalf of all UN Special Procedures mandate holders: “The Government of Sri Lanka, citing security concerns, after three months continues to detain in temporary camps the more than 300,000 men, women and children who escaped fighting. This gives rise to concerns of arbitrary detention. Many have endured months of terrible conditions in the conflict zone before their present internment…We deplore that in the camps some have already died from starvation or malnutrition.” According to Amnesty International, there are consistent reports of widespread and serious human rights violations facing the displaced people, including enforced disappearance, extrajudicial executions, torture and other ill-treatment, forced recruitment by paramilitary groups and sexual violence.

Sri Lankan government has misled the international community by consistently stating that there are no more than 70,000 to 100,000 civilians at risk. This is despite statements by the UN and international organizations that there are around 250,000 civilians at risk. Now, with the civilians out of the conflict zone, more accurate number of over 300,000 came to light.

Need for International Commission of Inquiry

Human rights organizations have documented serious violations of international humanitarian law by both the Sri Lankan government forces and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) during this period. Despite repeated denials, government forces repeatedly shelled densely populated areas, including at least 30 attacks on hospitals, in the government declared “no-fire area” where it had urged civilians to take shelter. The LTTE violated laws of war by using civilians as human shields and by using lethal force to prevent their escape. Three Sri Lankan doctors who provided detailed information about government shelling and civilian casualties in the conflict zone to outside media and human rights organizations have also been detained merely for fulfilling their ethical duties to their patients, in a clear violation of the rules of medical neutrality.

The situation for civilians was made worse by the Sri Lanka government’s inadequate delivery of relief supplies and the government‘s refusal to grant access to the region for aid agencies as required by international humanitarian law.

The Sri Lankan government’s record on investigating serious human rights abuses is poor and impunity has been a persistent problem. There have been serious ongoing violations of human rights and a backlog of cases of enforced disappearance and unlawful killings that run to tens of thousands, as described for example, in the 2008 Human Rights Watch report “Recurring Nightmare.” Despite this track record, there have been only a small number of prosecutions.

Past efforts to address violations through the establishment of ad hoc mechanisms in Sri Lanka, such as presidential commissions of inquiry have produced few results, either in providing information or in leading to prosecutions. To address abuses associated with the recent fighting, there is an urgent need for an independent, international commission of inquiry into many credible allegations of laws of war violations, including possible war crimes, by both sides, as well as illegitimate detentions.

Mr. President, we urge you to publicly call for an international commission of inquiry and to take necessary steps to achieve it. We also urge you to take steps for the full protection of internally displaced persons, including independent access to camps, former areas of conflict and to conflict-affected civilians by humanitarian and human rights organizations and the media.

Sincerely,

Mr. Larry Cox, Executive Director
Amnesty International USA

Ms. Karin Ryan, Director, Human Rights Program
The Carter Center

Ms. Jennifer Windsor, Executive Director
Freedom House

Mr. Robert Arsenault, President
International League for Human Rights

Ms. Felice D. Gaer, Director
Jacob Blaustein Institute for the Advancement of Human Rights

Mr. A. Frank Donaghue, Chief Executive Officer
Physicians for Human Rights

Cc: Secretary of State Hillary Clinton
US Ambassador to the United Nations Susan Rice

Click for copy of the Letter - PDF File

Read more...

Wednesday, June 24, 2009

புலிகள் மீதான தடையை மேலும் 5 வருடங்கள் நீடித்தது அமெரிக்கா

புலிகளின் சர்வதேசப் பிரிவின் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் `நாடு கடந்த தமிழீழ அரசு` அமைக்கப்படுமென அறிவித்துள்ள நிலையில், புலிகள் மீதான தடையை மேலும் 5 வருடங்கள் நீடிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டிலில் புலிகள் அமைப்புத் தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளது.

புலிகள் வன்முறைகளைக் கைவிட்டமையை அமெரிக்கா வரவேற்பதாகத் தெரிவித்திருக்கும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான கிரேக் சுலிவான்,
மோதல்களின் முடிவின் போது மோதல் பகுதிகளிலிருந்து பொது மக்களை வெளியேறவிடாது புலிகள் தடுத்துவைத்திருந்தனர். பொதுமக்களிருக்கும் பகுதிகளிலிருந்து தாக்குதல்களை நடத்திப் பொதுமக்களை ஆபத்துக்குள் தள்ளியிருந்தனர். இந்த உத்திகளையே கடந்த 30 வருடங்களில் அவர்கள் கையாண்டிருந்தனரெனவும் தெரிவித்தார்.

1997ஆம் ஆண்டு முதல் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட அமைப்பு எனச் சுட்டிக்காட்டிய அவர், எதிர்வரும் 5 வருடங்களுக்கு விடுதலைப் புலிகள் மீதான தடையுத்தரவை நீக்குவதில்லையெனத் தீர்மானித்திருப்பதாகக் கூறினார்.

Read more...

Wednesday, June 17, 2009

வட கொரியாவுக்கு ஒபாமா கடும் எச்சரிக்கை

உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தனது அணு ஆயுதங்களையும், நீண்ட தூர ஏவுகணைகளையும் சமீபத்தில் சோதனை செய்தது.

இதைத்தொடர்ந்து வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் நேற்று வாஷிங்டனில் தென்கொரிய அதிபர் லீ மியுங்க் பக்கைச் சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஓபாமா,

"உலக நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் தனது அணு ஆயுத கொள்கைகளை வடகொரியா மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையேல் அது கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்" என எச்சரிக்கை விடுத்தார்.

Read more...

Monday, June 15, 2009

பரசூட்டில் குதித்து பிறந்தநாள் கொண்டாடிய 85 வயது புஷ்

அமெரிக்காவில் 1989 முதல் 1993ம் ஆண்டுவரை ஜனாதிபதியாக இருந்தவர் ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ். இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை 85வது பிறந்தநாள் ஆகும்.

இதையொட்டி, மைனே நகரில் தனது இல்லத்துக்கு அருகே, விமானத்தில் இருந்து, 10 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இருந்து பரசூட்டில் கீழே குதித்து அவர் பிறந்தநாள் கொண்டாடினார்.

அவரது சாகசத்தை அவரது மகன்கள் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ், ஜெப் புஷ், மனைவி பார்பரா ஆகியோர் கண்டு ரசித்தனர். இதுபோல் 90வது பிறந்த நாளிலும் பரசூட்டில் குதிக்கப் போவதாக புஷ் கூறினார். இவர் ஏற்கனவே, தனது 75 மற்றும் 80வது பிறந்த நாள்களிலும் இதேபோல் பரசூட்டில் குதித்து ள்ளார்.

Read more...

Wednesday, June 10, 2009

தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட புலி முகவர்கள் நால்வருக்கு அமெரிக்க நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது

Four Plead Guilty in Brooklyn to Conspiring to Support Sri Lankan Rebels

By JAMES BARRON
Published: June 9, 2009

Four people with connections to Sri Lanka pleaded guilty in federal court in Brooklyn on Tuesday to conspiring to provide support to the Tamil Tigers, the separatist rebels whom Sri Lankan troops defeated last month after more than a quarter-century of fighting for a homeland.

The United States attorney in Brooklyn, Benton J. Campbell, said in a statement that the four defendants had raised millions of dollars and obtained weapons and technology for the Tamil Tigers, formally known as the Liberation Tigers of Tamil Eelam, or L.T.T.E. Prosecutors said one of the four defendants, Karunakaran Kandasamy, was the director of the group’s American branch.

Prosecutors said two others, Pratheepan Thavaraja and Murugesu Vinayagamoorthy, had been involved in an attempt to bribe an agent posing as a State Department official to remove the L.T.T.E. from the government’s list of foreign terrorist organizations.

The government said the L.T.T.E., which dated to the 1970s, had relied on “sympathetic Tamil expatriates” to raise and launder money for the group. The government said, for example, that Mr. Vinayagamoorthy had helped to launder L.T.T.E. money through a Swiss bank to cover a trip to Sri Lanka by a congressman.

In 2006, The Chicago Tribune identified the congressman as Representative Danny K. Davis, a Democrat of Illinois. Last winter, Mr. Davis turned down an offer through an intermediary to discuss taking the Senate seat vacated by President Obama. The offer came from Rod R. Blagojevich, then the state’s governor, who had been accused of trying to sell the seat.

Mr. Kandasamy and Mr. Pratheepan, who goes by his first name, face sentences of up to 20 years each. Mr. Vinayagamoorthy and the fourth defendant, Vijayshanthar Patpanathan, face sentences of up to 15 years.

Mr. Kandasamy’s lawyer, Charles A. Ross, said his client “has taken responsibility for the actions set out by the government.” He said Mr. Kandasamy, 51, had serious health problems, adding, “We’re hopeful for a merciful and lenient sentence.”

Mr. Vinayagamoorthy’s lawyer, Michael Anthony Marinaccio, said he had no comment. Mr. Pratheepan’s lawyer, William Stampur, and Mr. Patpanathan’s lawyer, Susan G. Kellman, did not return calls Tuesday night.

Prosecutors said Mr. Kandasamy had laundered money through a charitable front organization called the Tamil Rehabilitation Organization. They said Mr. Patpanathan had helped with that effort.

Mr. Thavaraja was accused of buying weapons for the Tamil Tigers, including anti-aircraft guns, automatic rifles and grenade launchers, along with ammunition and explosives. The government said a spreadsheet on Mr. Pratheepan’s laptop computer listed $20 million worth of arms as “priority” purchase items.

The State Department designated the Tamil Tigers as a foreign terrorist organization in 1997, and the government opened a wide-ranging investigation into its actions in this country in 1999. Three of the four defendants were arrested in 2006.

Newyork Times

Read more...

Wednesday, May 20, 2009

கிழக்கை புலிகளிடமிருந்து மீட்ட போது பதவிக்கு வந்த நான் வடக்கு கிழக்கை முழுமையாக மீட்கப்பட்டதாக ஜனாதிபதி அறிவித்திருக்கின்ற நிலையில் விலகிசெல்கின்றேன்

மோதல் இடம்பெற்ற பிரதேசங்களிலும் பாதுகாப்பு வலயத்திலும் என்ன நடந்ததென்று சர்வதேச சமூகத்திற்குத் தெரியும் என்று தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபட் ஓ பிளேக், சகல சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அதிகாரப் பகிர்வை முன்வைப்பதற்கான நல்லதொரு ஆரம்பம் தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.

கொழும்பு, கோல்பேஸ் ஹோட்டலில் இன்று (மே. 20) புதன்கிழமை நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இலங்கையில் கடமையை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் ரொபட் ஓ பிளேக் இன்று இறுதி செய்தியாளர் மாநாட்டை நடாத்தினார்.
அங்கு செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்ததாவது;

இலங்கை முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கின்றது கிழக்கை புலிகளிடமிருந்து மீட்ட போது பதவிக்கு வந்த நான் வடக்கு கிழக்கை முழுமையாக மீட்கப்பட்டதாக ஜனாதிபதி அறிவித்திருக்கின்ற நிலையில் விலகிசெல்கின்றேன். இது பலவற்றிக்கு நல்ல ஆரம்பமாகும்.

கடந்த 26 வருட இனமோதலின் பின்னர் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஐக்கியப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு ஐ.நாவின் நிறுவனங்கள், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் என்பன உதவிகளை வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

இவ்வாறானதொரு நிலையில் அரசாங்கம் சகல இனங்களை சேர்ந்தவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகார பகிர்வை முன்வைத்து வெளிப்படையான கருத்தாடல்களை செய்யவேண்டும் இதற்கு அமெரிக்கா அரசாங்கமும் உதவும்.

மோதல் இடம்பெற்ற பகுதிகள் மற்றும் பாதுகாப்பு வலயத்தில் என்ன நடந்ததென்று சர்வதேச சமூகத்திற்கு தெரியும் அவை தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் பல்வேறு தகவல்களை வழங்கியுள்ளது.

நலன்புரி நிலையங்களில் வாழ்கின்ற மக்களின் மேம்பாடுகளுக்கு அரசாங்கத்திற்கு அமெரிக்கா ஒத்துழைப்பு நல்கும் அதேநேரத்தில் பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்கள் அவர்களின் மேம்பாட்டிற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் அவர்கள் நிதியுதவி கொடுத்து உதவலாம் அது அரசாங்கத்திற்கு பெரும் உதவியாக அமையும் என்றார்.

Read more...

Friday, May 15, 2009

இலங்கைக்கு உதவிவழங்க அமெரிக்க கடற்படை தயார்

இலங்கையில் பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது அல்லது மனிதாபிமான உதவிகளை வழங்குவது ஆகிய இரண்டு தெரிவுகளை அமெரிக்க கடற்படையினர் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இரண்டு மூன்று மாதங்களுக்கு தமது மதிப்பீட்டு குழு இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்ததுடன் அது தொடர்பான அறிக்கையை அமெரிக்க அரசாஙகத்திடம் வழங்கியிருப்பதாக அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் திமேத்தி ஜே கீட்டிங் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு தெரிவுகள் குறித்து இலங்கையில் உள்ள தமது தூதுவர் ஊடாக ராஜாங்க திணைக்களத்திற்கு அறிக்கையினை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ளும் நிலைப்பாட்டில் அமெரிக்க கடற்படையினர் உள்ளனர்.

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் சுரேஸ் மேத்தாவின் அழைப்பை ஏற்று இந்திய சென்றுள்ள கீட்டிங், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரை சந்தித்துள்ளார்.

இதன் போது அமெரிக்க கடற்படையினருக்கும் இந்திய கடற்படையினருக்கும் இடையில் உள்ள நீண்டகால உறவுகள் மற்றும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. சீனா இந்து சமுத்திரத்தில் தனது துறைமுகங்களை அபிவிருத்தி செய்துள்ளதுடன் தனது கப்பல்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக அமெரிக்க அட்மிரல் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

Thursday, May 14, 2009

இலங்கை நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கவலை

இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும், இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் இடையில் நடக்கும் மோதலில் அகப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலைமை குறித்து தான் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
இன்று வெள்ளை மாளிகையில் அவர் ஆற்றிய செய்தி ஊடகங்களுக்கான உரையின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் தம்வசம் உள்ள ஆயுதங்களை களைந்து தாம் பிடித்து வைத்திருக்கும் பொதுமக்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ள ஒபாமா அவர்கள், அங்குள்ள மனித அவலத்துக்கு தீர்வுகாண இலங்கை அரசாங்கம் பல நடவடிக்கைகளை உடனடியாக செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார்.


''விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை கைவிட்டு, தம்வசம் உள்ள மக்களை வெளியேறிச் செல்ல அனுமதிக்க வேண்டும். மக்களை பலவந்தமாக படைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதும் மற்றும் அவர்களை மனித கேடயமாக பயன்படுத்துவதும் மிகவும் கண்டிக்கத்தக்கவையாகும். இப்படியான நடவடிக்கைகள் அவற்றைச் செய்வோரை தனிமைப்படுத்த மாத்திரமே உதவும்.'' என்றார் ஒபாமா.

அதேவேளை இந்த மனித அவலத்தை ஒழிக்க இலங்கை அரசாங்கமும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டிருக்கிறார்.

''முதலாவதாக பல நூற்றுக்கணக்கான உயிர்களையும், மருத்துவமனைகளையும் பலிகொண்ட கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதலை அரசாங்கம் நிறுத்த வேண்டும். மோதல் பகுதியில் கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்ற தனது உறுதிமொழியை அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும். இரண்டாவதாக, மோதல் பகுதியில் அகப்பட்டுள்ள மக்களுக்கு, அவர்களது உயிர்களை காப்பாற்றிக் கொள்வதற்கு உதவக்கூடிய உதவிகளை வழங்குவதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் உதவிக்குழுக்களை உள்ளே செல்ல அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும். அத்துடன், மூன்றாவதாக இந்த மோதலில் இடம்பெயர்ந்துள்ள ஒரு லட்சத்து தொண்ணூறாயிரம் மக்களுக்கு உதவுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையையும், செஞ்சிலுவைச் சங்கத்தையும் அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.'' என்றார் அதிபர் ஒபாமா.


''இலங்கை மக்கள் துயருறுகின்ற இந்த வேளையில், அவர்களுக்கு உதவுவதற்கு சர்வதேச சமூகத்துடன் இணைத்து செயற்பட அமெரிக்க தயாராக இருக்கிறது. நாம் இனிமேலும் தாமதிக்கலாம் என்று நான் கருதவில்லை. அங்கு மேலும் மனிதாபிமான அவலங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கு நாம் இணைந்து செயற்பட வேண்டிய தருணம் வந்துள்ளது.'' என்றார் ஒபாமா.

''இவற்றுக்கு எல்லாம் அப்பால், இலங்கை மக்கள் எல்லாரையும் அங்கீகரித்து, அவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலான நிரந்தர சமாதனம் ஒன்று இலங்கையில் ஏற்படுத்தப்பட வேண்டும். அதிகரிக்கின்ற மனித இழப்புகளும், மறுவாழ்வு முகாம்களில் போதுமான வசதிகள் இல்லாமையும், இலங்கையில் மக்கள் எதிர்பார்க்கின்ற அமைதியை பெறுவதை மேலும் கடினமாக்கவே உதவும்.'' என்று கூறினார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

BBC Tamil

Read more...

Sunday, May 10, 2009

"இலங்கையின் மனிதாபிமான நெருக்கடியும் ஒபாமா நிர்வாகமும்'

இலங்கையின் மனிதாபிமான நெருக்கடியை அதிகளவிலோ அல்லது குறைந்த மட்டத்திலோ அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் நிர்வாகம் சிறப்பாக கையாண்டுள்ளதாக "த நியூ ரீ பப்ளிக்' பத்திரிகை தெரிவித்திருக்கிறது.

பார்க் கோல்ட்பேர்க் என்பவர் இது தொடர்பாக த நியூ ரீ பப்ளிக் இல் எழுதியிருக்கிறார்.

குறிப்பிட்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை சர்வதேச நாணய நிதியத்தின் கடனை அமெரிக்கா தாமதப்படுத்திவைத்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கையின் மூலம் ஒபாமாவின் நிர்வாகமானது குறிப்பிட்ட நோக்கத்தை வென்றெடுக்க பணத்தை பந்தயம் கட்டியிருப்பதாக கோல்ட்பேர்க் எழுதியிருக்கிறார்.

யாவும் சரியானது என்றும் சிறந்த ஆரம்பம் என்றும் கோல்ட்பேர்க் கூறினாலும் இது இப்போதே ஆரம்பமாகியுள்ளது. ஆனால் இப்போதும் எதிர்கொள்ளவேண்டிய பலவிடயங்கள் உள்ளன.

முதலாவதாக இலங்கை நெருக்கடியானது ஒபாமாவின் நிர்வாகத்தின் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டதல்ல. தசாப்தங்களாக நீடித்துவரும் பிரச்சினையாகும்.

2008 இன்முற்பகுதியில் அரசாங்கம் யுத்தநிறுத்தத்தை முறித்துக்கொண்டு யுத்தத்தை இறுதிக்கட்டத்திற்கு கொண்டுவந்துள்ளது. இதனை முடிவுக்குக் கொண்டுவரப்போவதாக சூளுரைத்திருக்கிறது.

ஆனால் அமெரிக்காவோ அல்லது வேறு எவரோ இந்த தற்போதைய நெருக்கடி வந்துகொண்டிருப்தை நீண்டகாலமாக பார்த்துவந்துள்ளனர். இது ஆச்சரியமானதல்ல.

அரசாங்கங்களிடமிருந்து கடுமையான அறிக்கைகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையிலும், ஐ.நா. சந்தர்ப்பத்தை தவறவிட்டுவிட்டது.

பாதுகாப்பு சபையின் ஒப்பீட்டளவிலான மௌனமானது கடந்து செல்லும் ஒவ்வொருநாளிலும் வெட்கத்தை அதிகரித்து செல்வதாக உள்ளதாக சர்வதேச நெருக்கடிக்குழுவின் தலைவர் கரத் இவான்ஸ் எழுதியுள்ளார். உறுப்பு நாடுகள் மத்தியில் இலங்கை அரசாங்கம் ஆதரவை கோரி பேச்சுவார்த்தை மேற்கொள்வதே இதற்கு காரணம் என்று கூறிகிறார்.

பாதுகாப்பு சபையில் செயற்பாட்டுத் திறன் எந்தளவு தூரம் கனதியாக இருக்கிறது என்பதை இது நிரூபிக்கிறது.

சர்வதேச நாணயநிதியத்தின் கடன் தாமதமானால் இலங்கை வேறு எங்கும் பணத்தை பெற்றுக்கொள்ளமுடியாது என்ற எண்ணத்தில் இருக்கமுடியாது. பாரம்பரியமாக கடன் பெற்றுக்கொள்வோரை விடுத்து ஏனைய வளங்கள் குறித்து அண்மையில் நாட்டின் கவனம் திரும்பியுள்ளது. சீனா, பாகிஸ்தான் குறித்து சிந்திக்கிறது. அப்படியானால் ஒபாமா என்ன செய்வார்? ஆனால் இலங்கை தொடர்பான புதிரானது அதிகளவுக்கு என்ன செய்வது என்று நிச்சயிக்க முடியாத நிலைமையையே ஏற்படுத்தும் என்று கோல்ட் பேர்க் எழுதியுள்ளார்.


Read more...

Saturday, April 25, 2009

மோதல்கள் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும்: வெள்ளைமாளிகை கோரிக்கை

விடுதலைப் புலிகள் மோதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கும் அமெரிக்க வெள்ளை மாளிகை, இராணுவ ரீதியாக இனப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கைகளை எடுத்துள்ளபோதும் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
இரண்டு தரப்பாலும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களைக் கவனத்தில் கொண்டிருப்பதாக ஜனாதிபதியாகப் பராக் ஒபாமா பதவியேற்ற பின்னர் முதன் முதலில் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் வெள்ளைமாளிகை இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.


“எதிர்ப்புக்களும், வன்முறைகளும் நீடித்து தற்பொழுது காணப்படும் நிலைமை தொடர்ந்தால் நிலைமை மிகவும் மோசமடைந்து பாரிய அழிவுக்குச் சென்றுவிடும்” என வெள்ளைமாளிகையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மோதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவந்து, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கு இரண்டு தரப்பும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெள்ளைமாளிகை கோரிக்கை விடுத்துள்ளது.


அத்துடன், பாதுகாப்பு வலயங்களுக்குள் தாக்குதல் நடத்துவதை இலங்கை அரசாங்கம் நிறுவத்துவதுடன், அந்தப் பகுதிகளுக்குள் மனிதநேயப் பணியாளர்கள் சென்றுவருவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் வெள்ளைமாளிகை கோரியுள்ளது.


இலங்கை மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே, இலங்கைப் பிரச்சினை குறித்து அமெரிக்க வெள்ளைமாளிகையும் தனியான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.


மூன்று மாதங்களில் 6,500 பேர் பலி: ஐ.நா.


இதேவேளை, இலங்கையில் கடந்த மூன்று மாதங்களில் 6,500 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் அறிக்கையிட்டிருப்பதாக சர்வதேச செய்திச் சேவையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் 13,946ற்கும் அதிகமான மக்கள் காயமடைந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எனினும், இந்த இழப்பு விபரங்களைப் பகிரங்கப்படுத்த ஐ.நா. மறுத்துவிட்டதாக அந்தச் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

Read more...

ஆயுதங்களைக் கைவிட்டுப் புலிகள் சரணடையவேண்டும்; மோதல்களுக்கு முடிவு கட்ட சர்வதேசம் தயாராகவேண்டும் - அமெரிக்கா

இலங்கையில் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், புலிகள் ஆயுதங்களைக் கையளித்து மூன்றாம் தரப்பொன்றிடம் சரணடையவேண்டும் என்று, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் றொபேர்ட் வூட் கோரிக்கை விடுத்துள்ளார்.
“பொதுமக்களை தடுத்து வைத்து அவர்களுக்கு தீங்கு விளைவிப்பதை தமிழ்ப் புலிகள் நிறுத்தவேண்டும். தமது ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு அவர்கள் மூன்றாம் தரப்பு ஒன்றிடம் சரணடையவேண்டும்‘‘ என்று வூட் தெரிவித்தார்.

இலங்கையில் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், ராஜபக்ச அசாங்கமும், விடுதலைப் புலிகளும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர ஆவண செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இணைத்தலைமை நாடுகளும் ஜீ 8 நாடுகளும் மிகவும் நெருக்கமாக இந்த விடயத்தில் இணைந்து பணியாற்றுவதாகத் தெரிவித்த வூட், மோதல்களுக்கு முடிவுகட்ட சர்வதேச சமூகம் தயாராக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இலங்கை ஜனாதிபதிக்கும், ஐ.நா. செயலாளரின் பிரதிநிதி நம்பியாருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டபடி, மோதல் தவிர்ப்புப் பிரதேசத்துக்கு ஐ.நா. பிரதிநிதிகளை அனுப்பும் ஐ.நா. செயலாளரின் தீர்மானத்தை தாம் பூரணமாக ஆதரிப்பதாக வூட் தெரிவித்தார்.

இயன்றளவு விரைவில் ஐ.நா. பிரதிநிதிகள் மோதல் தவிர்ப்புப் பிரதேசத்துக்குச் செல்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்கவேண்டும் எனவும், சோதனை நிலையங்களைக் கடந்து உதவிப்பொருள்கள் தொடர்ச்சியாக அனுப்பப்படுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் இலங்கை அரசாங்கம் செய்யவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான பதிவுகளை ஐ.நா.வுடன் அரசாங்கம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று தெரிவித்த வூட், மக்களைத் தங்கவைப்பதற்குத் தேவையான மேலதிக கூடார வசதிகளைக் கண்டுபிடிக்கவேண்டும் எனவும், மோதல் தவிர்ப்புப் பிரதேசத்திலிருந்து மருத்துவத் தேவையுள்ளவர்களை வெளியேற்றும் நடவடிக்கையைத் தொடரவேண்டும் என்றும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்தும் வழமையான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதுடன், இலங்கை விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் வூட் தெரிவித்தார்.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்தப் பகுதியிலிருந்து வெளியேறியிருக்கின்ற போதிலும், ஏராளமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதுடன், இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் மோதல் நடைபெறும் பகுதிகளில் சிக்கியிருப்பதாக வூட் தெரிவித்தார். இவர்களுடைய பாதுகாப்புத் தொடர்பாக அமெரிக்கா மிகுந்த கவலையடைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.



Read more...

Tuesday, April 21, 2009

பொதுமக்களை இரண்டு தரப்பும் பாதுகாக்க வேண்டும்: அமெரிக்கா

இலங்கையின் வடபகுதியில் நடைபெறும் மோதல்களில் சிக்குண்டிருக்கும் மக்களை இரண்டு தரப்பும் பாதுகாக்க வேண்டியது அவசியம் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
“இலங்கையின் மனிதநிலைமைகள் தொடர்பாக நாங்கள் கவலையடைந்துள்ளோம். அங்கு நிலைமை மோசமடைந்துள்ளது. பொதுமக்களுக்கு ஏற்படும் இழப்புக்களைக் குறைத்து அவர்களைப் பாதுகாப்பதற்கு மோதலில் ஈடுபட்டுள்ள இரண்டு தரப்பும் முன்வரவேண்டும்” என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பேச்சாளர் ரொபேர்ட் வூட் கூறினார்.


இலங்கையில் தொடரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அமெரிக்கா பல்வேறு தருப்புக்களின் ஊடாக முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.


“நிலைமை தற்பொழுது மோசமடைந்துள்ளது. எனினும், இதனைக் கையாழ்வதற்கு எம்மிடம் மந்திரக் கோல்கள் எதுவும் இல்லை. ஆனால், மோதல்களை சர்வதேச சமூகத்துடன் இணைந்து தடுப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் அமெரிக்கா மேற்கொண்டுள்ளது” என வூட் கூறினார்.


விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்த 24 மணித்தியால கால அவகாசம் குறித்து தாம் எதுவும் கூறவிரும்பவில்லையெனவும், இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக அண்மையில் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.

Read more...

Sunday, March 29, 2009

வன்னி மக்களை அப்புறப்படுத்தும் திட்டம் அமெரிக்காவிடம் இல்லை

வன்னி மக்களை போர்ச் சூழலில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான திட்டங்கள் எதுவும் அமெரிக்காவிடம் தற்போது இல்லை.
வன்னியில் இருந்து பொது மக்களை விடுவிப்பது தொடர்பாக பல தவறான கருத்துக்கள் எழுந்துள்ளன.
அரசும் விடுதலைப் புலிகளும் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே மக்களை வெளியேற்றவது சாத்தியமாகும்'' என அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளாக் இன்ரநியூஸ் செய்தியாளர் எஸ். ரமணனுக்கு வழங்கியுள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அப்பேட்டியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: இலங்கையில் நிரந்தர அமைதியை உண்டாக்குவதே எமது அடிப்படை எண்ணமாக உள்ளது. கிழக்கில் அமைதியும் அபிவிருத்தியும் ஏற்பட ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

வன்னியில் போர் பிரதேசங்களில் சிக்கியுள்ள மக்களை விடுவிக்குமாறு அரசு தரப்பிற்கும் விடுதலைப் புலிகள் தரப்பிற்கும் நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இவ்வருட இறுதிக்குள் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களில் 81 சதவீதமானோர் மீள்குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என்ற அறிவிப்பை அமெரிக்கா வரவேற்கிறது. இருப்பினும் அமெரிக்காவிடம் தற்போது வன்னி மக்களை போர் சூழலில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான திட்டங்கள் ஏதும் இல்லை. மனித உரிமைகள் தொடர்பாகவும் பத்திரிகை சுதந்திரம் பாதிப்படைந்திருப்பதை இட்டும் அமெரிக்கா மிகுந்த கவலை கொண்டுள்ளது.

ஒபாமா நிர்வாகம் இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும் என்றே செயற்பட்டு வருகிறது. ஜனநாயக கட்சியோ, குடியரசுக்கட்சியோ இலங்கை தொடர்பாக சீரான கொள்கைகளையே கொண்டுள்ளன. அமெரிக்காவின் இலங்கை தொடர்பான பிரதான இலக்கு இங்கு அமைதியை காண உள்ள வழிவகைகளை ஊக்குவிப்பதாகும்.

இனப்பிரச்சினையோ மனித உரிமைப் பிரச்சினையோ மனிதாபிமான பிரச்சினையோ அதனை தீர்க்கவே அமெரிக்கா உதவுகிறது.

விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிய பிரதேசங்களில் அமைதியையும் அபிவிருத்திøயயும் கட்டியெழுப்பலாம் என்றே அமெரிக்கா கருதுகிறது. தனியார் நிறுவனங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க உருவாக்கப்பட வேண்டும். துணை இராணுவ படைகள் களையப்பட வேண்டும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் சிறுவர் போராளிகள் களையப்பட்டமையை இதற்கு ஒரு உதாரணமாக காணலாம். இலங்கையின் கிழக்கு பகுதியில் இதன் மூலம் சுபீட்சத்தை காண முடியும்.

கிழக்கில் அரசு தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பை உருவாக்க ஊக்குவிக்கப்பட வேண்டும்.கிழக்கில் பெருந்தொகையான இடம்பெயர்ந்த மக்கள் மீள அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களும் விரைவில் மீள சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர். இதற்கு நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்படுவது பிரதானமாகும். அரசு இது தொடர்பாக உறுதிபூண்டுள்ளது என்றே நம்புகிறோம்.

மனித உரிமைகள் தொடர்பாக கடந்த சில வருடங்களாக இலங்கையில் நிலவும் சூழ்நிலையை இட்டு அமெரிக்கா கவலை அடைந்துள்ளது. அதிகரித்துள்ள ஆள் கடத்தல்கள், பொது மக்கள் காணாமல் போதல், நீதிக்கு புறம்பான கொலைகள் இதனை இட்டு அமெரிக்கா கவலை கொண்டுள்ளது. அரசு இது தொடர்பாக முகம் கொடுக்க அமெரிக்க ஊக்குவிக்கும்.

மனித உரிமைகள் தொடர்பாக ஆண்டுதோறும் அமெரிக்கா அறிக்கை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. தொண்டு நிறுவன ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், சட்டத்தரணிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். மனித உரிமை மறுப்பு என்பது தமிழர்களை இங்கு பெரிதும் பாதித்துள்ளது. தேசிய ஒருமைப்பாடு, யுத்தத்தின் பின்னர் எட்டப்படக்கூடும். மனித உரிமைகள் நிலைமைகளை முன்னேற்றுவதன் மூலம் அமைதியை காண முடியும். மனித உரிமைகளை இங்கு நிலை நாட்டுவதற்கு அமெரிக்கா ஐ.நா.உடனும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்என்பவற்றுடன் இணைந்து செயலாற்றி வருகிறது.

வன்னியில் இருந்து பொது மக்களை விடுவிப்பது தொடர்பாக பல தவறான கருத்துக்கள் எழுந்துள்ளன. விடுதலைப் புலிகளும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இது சாத்தியமாகும். வன்னியில் இருந்து பொது மக்கள் வெளியேறுவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதி வழங்க வேண்டும். மக்கள் இலங்கையில் சுதந்திரமாக நடமாட உரிமை உள்ளது போர்ச் சூழலில் இருந்து மக்களைவிடுவிக்க அரசோ விடுதலைப்புலிகளோ அமெரிக்காவிடம் கோரிக்கை ஏதும் முன்வைக்கவில்லை.

இவ்வாறு கோரிக்கை வைக்கும் பட்சத்தில் அதை அமெரிக்கா நிச்சயம் பரிசிலிக்கும் முதலில் விடுதலைப் புலிகள் வன்னி போர் பகுதியில் தடுத்து வைத்துள்ள மக்களை விடுவிக்க முன்வர வேண்டும். இதற்கு ஐ.நா, அனுசரனை அவசியம் இல்லை. அனேகமாக தினமும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வன்னியில் காயமடைந்தவர்களை, நோயாளிகளை அப்புறப்படுத்தி வருகிறது.

Read more...

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top