இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010
Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Friday, May 28, 2010

இறுதிக் கட்டம்! தமிழுலகம் அறியாத தகவல்கள்!

2009-ம் ஆண்டு மார்ச் மாதத்தின் முதல் வாரம். இந்தியாவின் இன்றைய பாதுகாப்புச் செயலரும் அப்போது வெளியுறவுச் செயலருமாயிருந்த சிவசங்கர் மேனன் முக்கிய பயணமாக அமெரிக்கா சென்றார். வழமையான ராஜாங்கப் பயணம்போல் இது வெளிக் காட்டிக் கொள்ளப்பட்டாலும் மிக முக்கியமானதும், உண்மையில் மிக அவசரமானதுமாயிருந்தது. விடுதலைப் புலிகளுக்கும்-இலங்கை ராணுவத்திற்கும் இடையே சண்டை நிறுத்தம் கொணர்வது, முற்றுகையிடப்பட்டு நின்ற லட்சக்கணக்கான தமிழ் மக்களை புதுக்குடியிருப்பு- முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து பாதுகாப்பாக முகாம்களுக்கு நகர்த்துவது, தனது நேரடி மேற்பார்வையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமிடையே அரசியற் பேச்சுவார்த்தைகள் நடத்தி கூட்டாட்சி அடிப் படையிலான ஓர் தீர்வினை அடைவது ஆகிய மூன்று நோக்குகளுடன் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை ஒன் றிற்கு அமெரிக்கா கொள்கை ரீதியான முடிவெடுத்து, செயற் திட்டம் நோக்கி நகரத் தொடங்கியிருந்த சூழலில்தான் சிவசங்கர் மேனன் அவசரமாக அமெரிக்கா சென்றார்.இங்கு நக்கீரனில் எழுதப்படுபவை தமிழுலகம் இது வரை அறியாத தகவல்கள்.

மார்ச் 05-ம் தேதியன்று வாஷிங்டன் டி.சி.யில் வைத்து பூர்வாங்கமாக சிவசங்கர் மேனனிடம் அமெரிக்கா தனது திட்டத்தைத் தெரிவித்ததாக, சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு முன்ன ரேயே அமெரிக்காவின் நகர்வுகள் இந்தியா வுக்கு தெரிந்தே இருந்தன. தென் ஆசியாவில் முதன்முறையாக மிகப்பெரும் ராணுவ நடவடிக்கை ஒன்றை மேற் கொள்ளும் அமெரிக்காவின் இத்திட்டத்தில் மைய மாக இருந்தது. PACOM என்று ஆங்கிலத்தில் பொதுவாக அறியப்படும் அமெரிக்காவின் "ஆசிய பசிபிக், ராணுவப் பிரிவாகும். 2009 பெப்ருவரி மூன்றாம் வாரத்தில் அமெரிக்க ஆசிய பசிபிக் ராணுவப் பிரிவின் முக்கிய அதிகாரிகள் கொழும்பு நகரில் கோத்தபய்யா உள்ளிட்ட முக்கிய ராணுவத் தளபதியர்களை சந்தித்து இது தொடர்பாக விரிவாக விவாதித்திருந்தமையால் அமெரிக்கத் திட்டத்தினது பரிமாணங்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் தெரிந்தே இருந்தது.

வெளிப்படையாக அமெரிக்காவை பகைத்துக்கொள்ள ராஜபக்சே சகோ தரர்கள் தயங்கியபோதும் அமெரிக்காவின் ராணுவத் திட்டத்தை அவர்கள் விரும்பவில்லை. அமெரிக்கா இலங்கைக்குள் ராணுவரீதியாய் நேரடியாகக் காலூன்றிவிட்டார்கள் என்றால் அவர்களது நீண்டகால கட்டுப்பாட்டிலிருந்து மீள முடியாதென்பதும், தனித்தமிழ் ஈழத்தை வலியுறுத்தாவிட்டாலும் 2003 நார்வே நாட்டு இடைப்பாட்டிலான ஓஸ்லோ (Oglo) பிரகடனத்தின் அடிப்படையில் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய தன்னாட்சி அமைப்பொன்றினை அமெரிக்க-மேற்குலக நாடுகள் தமிழருக்காக வலியுறுத்துவார்களென்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே அமெரிக்காவின் இத்திட்டம் செயல்வடிவ நிலைக்கு நகருமுன் அதிரடி யாக -பெரும் மனித அழிவு நேர்ந்தாலும்கூட -யுத்தத்தை முடுக்கி முடித்து விட ராஜபக்சே சகோதரர்கள் விரும்பியதில் வியப்பில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவில் நிறைவுற்ற அந்த இன அழித்தல் கடைசிப் போருக்குத் தானாகவே முன்வந்து ஊக்கமும் உறுதுணையும் தந்தது சீனா. போரினை இத்துணை கொடூர மாக முடிவுக்குக் கொண்டுவருவதனால், எதிர்காலத்தில் அனைத்துலக அளவில் ஏற்படும் அத்தனை நெருக்கடிகள்... சங்கடங்களிலிருந்தும் ராஜபக்சே சகோதரர்களைக் காப்பாற்றும் வாக்குறுதியினை சீனா கொடுத்தது. போரில் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திட பச்சைக் கொடி காட்டியதும் சீனாதான்.

அமெரிக்காவின் வல்லாதிக்க அபிலாஷைகளைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரியும். அதுபற்றி இடது சாரி சிந்தனையாளர்கள் தமிழில் நிறையவே எழுதியிருக்கிறார்கள். அது உண்மையும்தான். இப்பூவுலகின் கோடானுகோடி மக்களது வாழ்வு வறுமையுற்று நலிந்திட அமெரிக்காவின் வல்லாதிக்க பொருளியல் -ராணுவ கொள்கைகள் காரணமாக அமைந்திருக்கிறது. அமெரிக்காவுக்காய் வக்காலத்து வாங்குவது நம் வேலையல்ல. அதேவேளை சீனாவின் வல்லா திக்க, மேலாதிக்கக் கனவுகள் (Imperial Dreams) அமெரிக்காவை விட பன் மடங்கு வக்கிரத்தன்மையும் இன வெறித் தன்மையும் கொண்டவை. அதுபற்றி தமிழில் அதிகம் விவாதிக்கப் படவில்லை. காரணம் தமிழ் சிறு பத்திரிகை வட்டத்தில் இயங்குகிற பெரும்பான்மையோரின் இடதுசாரிச் சார்பு நிலை.

உண்மையில் அமெரிக்கா, போரின் இறுதிக் கட்டத்தில் நேரடியாக ராணுவத் தலையீடு செய்வதென்ற நிலைப்பாடு நோக்கி நகர்ந் தமைக்கு காரணமும்கூட தமிழ் மக்கள் மீதான அன்பு, பாசம் அல்ல. சீனா -தனது எதிர்கால வல்லாதிக்க விரிவாக்கத்திற்கு (Imperial Expansion) இந்தியப் பெருங்கடல் மேலாண்மை மிக முக்கியமானதென்ற கருதுகோளுடன் இலங்கையை தன் கட்டுக்குள் கொண்டு வந்துகொண்டிருக்கிறதென அமெரிக்கா கருதியதும் அதனைத் தடுத்து நிறுத்தவும் -தொடர்ந்தும் எதிர்காலத்தில் சீனாவை சற்று கிடுக்கிப்பிடி நிலையில் வைத்திருக்க வும் இலங்கையில் நேரடி ராணுவ நிலைகொள்ளல் உதவுமென கருதி யதும்தான் முக்கிய காரணங்கள்.

2009 மார்ச் 6-ந் தேதி வாஷிங்டனில் செய்தியாளர்களிடையே பேசிய அமெரிக்க துணை வெளியுறவுச் செயலர் ரிச்சர்ட் பவுச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்: ""இலங்கை போர்க்களத்தில் என்ன நடக்கிறதென்பதை கவனிக்கவும், அமெரிக்காவால் என்ன செய்ய முடியுமென்ற வாய்ப்புகளை அடையாளப்படுத்தவும் எங்களது அதிகாரிகள் அங்கே நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். துன்பப்படும் அந்த மக்களுக்கு எங்களால் என்ன செய்ய முடியுமோ, அதனை நாங்கள் செய்வோம்.

மிகவும் நுட்பமான ராஜதந்திர சொல்லாடல்களால் போர்த்தப்பட்ட ரிச்சர்ட் பவுச்சர் அவர்களின் இந்தக் கூற்றினை அமெரிக்கா தன் திட்டத்திற்கு கட்டியம் கூறுவதாகவே இலங்கை -சீனா -இந்தியா உள்ளிட்ட நாடுகள் பார்த்தன.

முன்னதாக அமெரிக்க அதிகாரிகள் கொழும்பு வந்து ராஜபக்சே சகோதரர்களுடன் தமது ராணுவத் திட்டம் குறித்து விவாதித்த அதே காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தோடும் -அவர்களின் அனைத்துலக பிரதிநிதி களூடாய் விவாதங்கள் நடத்தப்பட்டிருக்கிறது. அதன்படி ஆயுதங்களை மௌனிப்பதாக விடுதலைப்புலிகள் முதலில் அறிவிக்க வேண்டும் -அதனைத் தொடர்ந்து அமெரிக்க இடைப்பாட்டில் இலங்கை அரசும் போரினை நிறுத்தும். அமெரிக்கப் படையினர், மக்களை முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து செஞ்சிலுவைச் சங்க ஈடுபாட்டுடன் பாது காப்பான முகாம்களுக்கு அப்புறப்படுத்துவர். புலிகளின் ஆயுதங்கள் அனைத்தும் அமெரிக்க ஏற்பாட் டின் கீழ் பூட்டி வைக்கப்படும் (Locking of Weapons). தொடர்ந்து அமெரிக்க ஏற்பாட்டில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே முறிந்துபோன அரசியற் பேச்சுவார்த்தை கள் மீண்டும் தொடங்கும். பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் பூட்டி வைத்த ஆயுதங்களை அமெரிக்கா விடுதலைப்புலிகளிடமே திருப்பித் தந்துவிடும். இவையே விடுதலைப்புலிகளுடன் விவாதிக்கப்பட்டவை.

மேற்சொன்னவற்றில் ஆயுதங்களை பூட்டி வைக்க ஒப்படைப்பதில் மட்டும் விடுதலைப்புலிகளின் தலை மைக்கு உடன்பாடு இருக்க வில்லையெனவும், அதே வேளை அமெரிக்காவின் நேரடித் தலையீட்டினை ஏற்றுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

இன்னொருபுறம் முள்ளிவாய்க்கால் நடவடிக்கைக்காக அமெரிக்கா ஆயத்தப் பணிகள் செய்யத் தொடங்கியிருந்தது. அதன்படி PACOM-அமெரிக்காவின் ஆசிய-பசிபிக் கடற்பிரிவினது Marine Expeditionary Brigade முல்லைத்தீவு கடற்பரப்பில் தரையிறங்கும். PACOM-ன் கடற்படை மற்றும் விமானப்படை பிரிவுகளும் இந்நடவடிக்கையில் இணைந்திருக்கும்.

மிக முக்கியமான செய்தி என்ன வென்றால் தென் ஆசிய மற்றும் இந்தியப் பெருங்கடல் ராணுவ அரசியல் வரலாற்றின் தீர்க்கமானதொரு திருப்பு முனையாக அமையவிருந்த இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா (Coalition Humanitarian Task Force)- "நேச நாடுகளின் மனிதாபிமான செயற் படை' எனப் பெயரிட்டிருந்த போதும் அமெரிக்க ராணுவக் குறிப்புகள் அனைத்தும் இந் நடவடிக்கையை (Invasion) "படையெடுப்பு' என்றே குறித் திருந்ததாய் சொல்லப்படுகிறது.

NATO (North Atlantic Treaty Organization) அமெரிக்கா தலை மையிலான ராணுவக் கூட்டமைப்பு நாடுகளோடும் இத்திட்டம் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறது. வழமையாக அமெரிக்காவின் உலக ராணுவ விரிவாக்கத்தை எதிர்க்கும் பிரான்சு நாடு முல்லைத்தீவு நோக் கிய அமெரிக்காவின் திட்டத்திற்கு தீவிர ஆதரவு தெரிவித்திருக்கிறது.

இந்த காலகட்டத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் அடிநிலைச் செயலர் ஜான் ஹோல்ம்ஸ் அவசர மாக கொழும்பு வந்தார். ""போரினை முறைப்படியாகவும், மனித நேயத்தோடும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒழுங்குகளை செய்ய வேண்டியே அவசர பயணம் வந்தி ருக்கிறேன்'' என தனது பயண நோக்கு பற்றி குறிப்பிட்டார் ஜான் ஹோல்ம்ஸ். அமெரிக்காவினது ராணுவத் திட்டத் தினது ஓர் அங்கமாகவே இவரது பயணம் இருந்ததென பின்னர் கூறப்பட்டது.

இதற்கிடையில் தென்ஆசியாவில் அமெரிக்காவின் புதிய இந்த ராணுவ ஈடுபாடு தொடர்பாக அதிபர் ஒபாமா நிர்வாகத்திலேயே கருத்து வேறுபாடுகள் எழுந்திருக்கின்றன. அவற்றை சரிசெய்யும் பொறுப்பு வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டனுடையதாயிருந்திருக்கிறது. அவரே கூட ராணுவ நடவடிக்கை தொடர்பான பூரண விசுவாசம் கொண் டிருக்கவில்லையென்றே சொல்லப்படு கிறது. ராணுவ நடவடிக்கையின் களநிலை அவசியத்தை மேலும் உறுதி செய்ய வேண்டி ""உண்மை நிலை'' அறிக்கை யொன்றினை வாஷிங்டனுக்கு அனுப்பி வைக்கும்படி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் பணிக்கப்பட்டதாகவும், அதன் படி கொழும்பு, அமெரிக்க தூதரகத்தின் தலைமை துணை பொறுப்பாளர் ஜேம்ஸ் மூர் யாழ்குடாவுக்கு அவசரப் பயணம் மேற்கொண்டு ராணுவத் தளபதிகள், மதத் தலைவர்கள், மக்கள் என பலரையும் சந்தித்து விரிவான அறிக்கை ஒன்றினை அனுப்பியதாகவும், ஜேம்ஸ் மூர் அவர்களின் இந்த அறிக்கை தான் ராணுவ நடவடிக்கை தொடர்பாக ஊசலாடும் மனநிலையிலிருந்த ஹிலாரி கிளிண்டன் அவர்களை ராணுவ நடவடிக்கை அவசியம் என்ற உறுதி நிலைக்கு இட்டுச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் அமெரிக்கா செயலில் இறங்குமுன் சீனாவின் தீர்க்கமான சமிக்ஞையோடு முழு மூர்க்கமான கடைசி யுத்தத்தை ராஜபக்சே சகோதரர்கள் தொடங்கினர். அமெரிக்கா ராணுவ நட வடிக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காலத்தில்தான் இந்தியாவும் சண்டை நிறுத்த முயற்சியொன்றினை அவசரத் தன்மையோடு முன்னெடுத்தது.

அம்முயற்சியில் சிறியதோர் தபால் காரனாக நானும் இருந்தேன். அந்த முயற்சி தோற்றது ஏன்? அமெரிக்காவின் ராணுவ திட்டத்தை இந்தியா ஆதரித்ததா?

அருட் தந்தை கஸ்பர் ராஜ்

Courtesy: நக்கீரன் - வைகாசி 26, 2010


Read more...

Monday, October 12, 2009

சுனாமி நிவாரணத்தில் ரூ.7.5 கோடி மோசடி: பெண் டாக்டர் கைது- பெற்றோருக்கு வலை


சென்னை: தென்னிந்திய திருச்சபையின் சுனாமி நிவாரண பணிகளில் ரூ.7.5 கோடி மோசடி செய்த சென்னை பெண் டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடிக்கு முக்கிய காரணமான இவரது பெற்றோரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய சி.எஸ்.ஐ. திருச்சபையின் பொதுச் செயலாளர் மோசஸ் ஜெயக்குமார் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதில்,

தென்னிந்திய திருச்சபையின் கீழ் 24 துணை திருச்சபைகள் உள்ளன. இதில் 9 திருச்சபை பகுதிகளில் கடந்த 2004ம் ஆண்டு சுனாமி பாதிப்பு ஏற்பட்டது. இந்தப் பகுதியில் வசிக்கும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அமெரிக்காவில் உள்ள இ.ஆர்.டி தொண்டு நிறுவனம் ரூ.17.63 கோடி ஒதுக்கியது.

இந்தப் பணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி கொடுத்தல், மருத்துவ வசதி செய்து கொடுத்தல் மற்றும் மீன்பிடி படகு, மீன்பிடி வலை, வீட்டு உபயோக பாத்திரங்கள் போன்றவற்றை வாங்கிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

கடந்த 2006லிருந்து 2008ம் ஆண்டு வரை இந்த பணிகள் செய்யப்பட்டன. அப்போது தென் இந்திய திருச்சபையின் செயலாளராக இருந்த பாலின் சத்தியமூர்த்தி இந்தப் பணிகளை முன்னின்று செய்தார்.

அவர் தனது கணவர் சத்தியமூர்த்தி, மகள் பெனடிக்டா, உறவினர் ராபர்ட் சுனில் மற்றும் கஸ்தூரி ஆகியோரை இந்த பணிகளை மேற்கொள்ள பாலின் நியமித்தார்.

ஆனால், இவர்களுக்கு பெரிய அளவில் சம்பளம் கொடுத்தும், சொகுசு கார்கள் வாங்கியும், ஆடம்பர பங்களா கட்டியும் பல்வேறு முறைகேடுகள் நடந்து விட்டன.

மேலும் செலவு செய்த பணிகளுக்கு சரியாக கணக்கும் காட்டவில்லை. சுமார் ரூ. 7.5 அளவுக்கு இதில் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெண் டாக்டர் பாலின் சத்தியமூர்த்தி, அவரது கணவரான ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி சத்தியமூர்த்தி, மகள் டாக்டர் பெனடிக்டா, உறவினர்களான ராபர்ட் சுனில் மற்றும் கஸ்தூரி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதில் டாக்டர் பெனடிக்டா, ராபர்ட் சுனில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுனாமி நிவாரண நிதியில் தங்களுக்கு இரு போர்டு எண்டவர் கார்களை வாங்கியுள்ளனர் இந்த இருவரும். இந்த இரு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட கார்களின் மதிப்பு ரூ.36 லட்சம் ஆகும்.

திருச்சியில் வசிக்கும் பாலின் சத்தியமூர்த்தி மற்றும் சத்தியமூர்த்தி, கஸ்தூரி ஆகியோரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாலின் தென்னிந்திய திருச்சபையின் செயலாளராக உள்ளார். இதற்கு முன் கல்லூரி பேராசிரியையாக பணியாற்றியுள்ளார். கஸ்தூரி தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் பொருளாளர் ஆவார்.

Thatstamil

Read more...

கிழக்கு மாகான முதல் அமைச்சருக்கு முகத்தில் பூசப்பட்ட வர்ணக்கரிப் பூச்சு…

கிழக்கு மாகான முதல்அமைச்சரை, அமைச்சர் சந்திரகாந்தனாக நினைக்காது பிள்ளையானாக நினைத்த காரணத்தால்தான் இந்திய அரசின் தூதுக்குழுவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. இதில் இருந்து பிள்ளையானுக்குத்தெரிய வேண்டிய விடயம் என்னவென்றால் கிடைத்த பதவி தன்னுடையதல்ல, தான் வெறும் விளையாட்டுப்பொம்மையே! தனது பதவிக்குரிய மனிதன் என்றுமே அம்மான் அவர்களே என்பதனை.

வந்த தூதுக்குழு, கூட்டணியினரைச் சந்தித்தது, அமைச்சர் டக்ளசையும் சந்தித்தது, ஏன் முதல் அமைச்சராக இருப்பவரை சந்திக்கவில்லை!!!! ??? எல்லாத்திட்டங்களையும் கிழக்குமாகானத்தில் ஏற்பாடுசெய்தும் இறுதியில் கைவிடப்பட்டதற்குக்காரணம்தான்என்ன???

அவரை இன்னும் எந்தக்கண்கொண்டு சமூகம் பார்க்கின்றது என்பதனை அவர் முதலில் உணரவேண்டும். ஒரு தலைமைக்குள் அவர் இருந்திருந்தால், முதல் சந்திப்பு அத்தலைமைக்கே கிடைத்திருக்கும். அதைவிடுத்து தன்னிச்சையாக இயங்கிவருவதுடன், தகாத செயல்களையும் அப்பதவியை வைத்து மேற்கொண்டுவருவது இத்தோடு நிறுத்தப்பட்டு, அம்மானின் தலைமையில் மீண்டும் தனது பாதையினைச் செம்மைப்படுத்த அவர் முன்வராவிட்டால், மக்கள் அவருக்கு தக்க பதிலை வழங்குவார்கள் என்பது நிச்சயம்.

முட்டைக்குள் வாழ்ந்தால் குஞ்சுக்கு முட்டைதான் மிகப்பெரிய உலகம். கிணற்றுத்தவளையாக வாழாது, உலகின் அரசியலையும் நாட்டுநடப்புகளையும் கருத்தில் கொண்டுதான் உள்@ர் அரசியலும் ஆடவேண்டும். சாதாரண எம்பிக்கள் அறிந்திருக்கும் அரசியலைக்கூட அறிந்துகொள்ளாமல் எப்படி முதல் அமைச்சினை நடாத்தமுடியும். முதல் அமைச்சர் இல்லாவிட்டாலும், அமைச்சின் செயற்பாடுகள் நடக்கத்தான் செய்யும். ஆனால் சரியான ஆலோசனையுடைய அமைச்சைக்கொண்டால்தான் அரசு வல்லரசாக முடியும். அந்தத்தகுதி பிள்ளையானுக்கு இருக்கின்றதா என்ற வினா தற்போது எழுகின்றதோடு, மக்கள் மத்தியில் விரக்கியும் புகையாகக்கிழம்புகின்றது.

ஒரு பானை சோற்றிற்கு ஒருசோறு பதம் என்பார்கள், நாட்டில் தமிழர்களின் நிலையினை அறிய வந்த தூதுக்குழு ஒரு தமிழ் முதல் அமைச்சரைச் சந்திப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால், உள்நாட்டில் எவ்வாறு அவ் முதல் அமைச்சர் தனது ஆதிக்கத்தை தமிழர்களுக்கு முழுமையாக வழங்கமுடியும். சுhதாரணமாக அரசினைச் சந்திக்கவந்திருந்தால், ஒருவேளை இச்செயற்பாடு மக்களை துருவாமல் சென்றிருக்கும். ஆனால் தமிழர்களின் நிலவரத்தை அறிய வரும் தூதுக்குழுவில் முதல் அமைச்சரின் பங்கே இல்லை என்றால் இதன் கருத்து என்ன வென்பது அரசியல் அறிவில்லாத நபர்கூட நன்கு புரிந்து கொள்ளகூடியது.

தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு பலர் மிரட்டல், கொள்ளை, கொலை, கடத்தல், மொட்டைக்கடதாசி, போன்று பல்வேறு சட்டத்திற்குப்புறம்பான செயல்களில் ஈடுபடுவதுதொடர்பான பல தகவல்கள் இணையங்களில் ஏலவே போதியளவு வந்தேறியது. இன்னும் அவர்கள் நிலைத்திருக்கின்றார்கள் என்றால் தமது பதவியைப்பயன்படுத்தி அதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து மூடி மறைக்கப்பார்க்கின்றமையே. இது இப்படி இருக்க, அவர்களால் எப்படி தமிழர்களுக்கு அப்பதவியினால் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க முடியும்?

தமிழர்கள் அன்றன்றுள்ள அரசியலினை நன்கு மனதில் பதித்து, வருகின்ற காலங்களில் யார் மக்களின் பிரதிநிதி யாருக்கு தக்க தலைமை இருக்கின்றது என்பதனை நிர்ணயிக்க வேண்டும்.

தென்றல் இணையம்

Read more...

Saturday, October 10, 2009

சுடுகாட்டில் சாப்பாடு : குஜராத்தில் புரட்சி

மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் விதமாக, தீபாவளிக்கு முதல்நாள், சுடுகாட்டில் ‘டிபன்’ சாப்பிடும் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர் பகுத்தறிவுவாதிகள். குஜராத் மாநிலத்தில், தீபாவளிக்கு முதல்நாள் ‘கலி சதுர்த்தசி’ என்று அழைக்கப்படுகிறது.


தாந்திரீக முறைப்படி, கலி சதுர்த்தசியன்று, இரவில் பில்லி, சூனியம் போன்ற சில சடங்குகளைச் செய்தால், வசிய சக்தி மற்றும் நோயற்ற உடல், செல்வம், வாழ்வில் அமைதி கிடைக்கும் என்பது இங்குள்ள நம்பிக்கை. இதை மூடநம்பிக்கை என்கின்றனர் ‘பாரத் ஜன விஞ்ஞான ஜாதா’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள். அந்த அமைப்பினர், கலீ சதுர்த்தசியன்று சுடுகாட்டில் வடை, டீ, காபீ சாப்பிடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மூடநம்பிக்கையைத் தகர்க்கும் இந்த நிகழ்ச்சி ஒப்டோபர் 16ல் மாநிலம் முழுவதும் 450 இடங்களில் நடக்கிறது.

Read more...

Friday, October 9, 2009

அகதிகள் விடுவிக்கப்படுவார்களா?: காவல்துறை விளக்கம்

தமிகத்தில் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் விடுவிக்கப்படுவார்களா என்பது பற்றி தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி:


இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாய் வந்துள்ளவர்களில் தற்சமயம் சுமார் 73,210 பேர் இலங்கை தமிழர்களுக்கான 114 அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு அனைத்து வசதிகளும் தமிழக அரசால் செய்து தரப்பட்டுள்ளது. இதுதவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் நிலையத்தில் பதிவு செய்து கொண்டு 31,398 பேர் வெளிப்பதிவு அகதிகளாக தங்கியுள்ளனர்.

இதுதவிர, தற்சமயம் 64 இலங்கை தமிழர்கள் மட்டும் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பலர், இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு வெடிமருந்து மற்றும் பல பொருட்களை கடத்திய வழக்குகளில் தொடர்புடையவர்களும் மற்றும் சிலர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறி வந்து இயக்க நடவடிக்கைகளுக்காக தகவல் தொடர்பு மற்றும் பொருட்களை வாங்க உதவியவர்களும் ஆவார்கள்.

இவர்களில் வழக்குகள் முடிந்த 10 நபர்களுக்கு அவர்கள் விரும்பியபடி வெளிநாடுகளுக்கு செல்ல தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும், இவர்கள் இந்தியாவிலேயே தங்கியிருக்க அனுமதி கோருகின்றனர். இவர்களது கோரிக்கையை நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக ஏற்க இயலாது.

கடந்த 3 மாத காலத்தில் சிறப்பு முகாமில் தங்கியிருந்து வழக்குகளை சந்தித்து கொண்டிருந்தவர்களில் உடல்நலம் குன்றியவர்கள், வயதானவர்கள் ஆகிய 45 நபர்களின் கோரிக்கையினை தமிழக அரசு பரிசீலனை செய்து அவர்கள் விரும்பியபடி தமிழகத்தில் உள்ள திறந்த முகாம்களிலோ அல்லது வெளிப்பதிவிலோ தங்கியிருக்க அனுமதி வழங்கி சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்சமயம், செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் மீதுள்ள வழக்குகள் முடிந்த பின்னர் இவர்களது கோரிக்கை பரிசீலனை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(டிஎன்எஸ்)

Read more...

Thursday, October 8, 2009

ஓடும் ரயிலில் திடீர் பிரசவம் கழிப்பறை ஓட்டையில் தவறி விழுந்த சிசு உயிர் தப்பிய அதிசயம்


ஓடும் ரயிலில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. கழிப்பறை துவாரம் வழியாக தவறி கீழே விழுந்த அந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. குழந்தையை காப்பாற்ற ரயிலில் இருந்து குதித்த தாயும் தப்பினார்.

ஜார்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து பீகார் மாநிலம் சாப்ராவுக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் போலோ நாத் என்பவர் மனைவி ரிங்குவுடன் பயணம் செய்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரிங்குவுக்கு நள்ளிரவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அந்த பெட்டியில் நிறைய ஆண்கள் இருந்ததால், கழிப்பறைக்கு ரிங்கு சென்றார். சிறிது நேரத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது. குழந்தையின் முகத்தை ரிங்கு பார்ப்பதற்குள் கழிப்பறையில் இருந்த துவாரம் வழியாக அந்த குழந்தை தண்டவாளத்தின் நடுவே தவறி விழுந்துவிட்டது.
"ரயிலில் இருந்து குழந்தை விழுந்துவிட்டதே" என்று அலறியபடி கழிப்பறையைவிட்டு ரிங்கு வெளியே ஓடிவந்தார். வெளியே நின்றிருந்த போலோ நாத் அபாய சங்கிலியை பிடித்து இழுக்கச் சென்றார். அப்போது, குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஓடும் ரயிலில் இருந்து ரிங்கு குதித்துவிட்டார். இதற்கிடையே அபாய சங்கிலியை போலோநாத் இழுத்ததால் 2 கி.மீ. தூரம் சென்று ரயில் நின்றது. பயணிகள் இறங்கி ஓடிவந்து பார்த்தபோது, ரிங்குவும், குழந்தையும் காயத்துடன் கிடந்தனர். அவர்களை மீட்டு ரயிலுக்கு தூக்கி வந்தனர். மேற்குவங்க மாநிலம் புரூலியா ரயில் நிலையத்துக்கு ரயில் வந்ததும் அவர்களை தயாராக இருந்த ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ரிங்குவுக்கும், குழந்தைக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த சிசுவும், குழந்தையை காப்பாற்ற பாய்ந்த தாயும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது உலக அதிசயங்களில் ஒன்று என்று டாக்டர்கள் கூறினர்.

Read more...

பி.டி.உஷாவுக்கு போபாலில் அவமானம் செய்தியாளர் முன்னிலையில் கண்ணீர்


போபாலில் ஆரம்பித்துள்ள தேசிய தடகளப் போட்டிக்கு பயிற்சியாளராகச் சென்றுள்ள முன்னாள் தடகளப் புயல் பி.டி.உஷாவுக்கு தங்குவதற்கு உரிய இட வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல் அதிகாரிகள் அவமானப் படுத்தியுள்ளனர். இது குறித்து இவர் செய்தியாளர்கள் முன்னிலையில் கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார்.
பய்யோலி எக்ஸ்பிரஸ் என அழைக்கப்பட்ட பி.டி.உஷா. தேசிய அளவில் தடகளத்தில் ஏற்படுத்திய சாதனைகள் இன்றுவரை முறியடிக்கப்படாமல் உள்ளன.

இந்நிலையில், போபாலில் நடைபெறும் தேசிய தடகளப் போட்டியில் பயிற்சியாளராக சென்றுள்ள இவருக்கு இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) விடுதியில் அவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அறை பராமரிப்பின்றி மோசமாக இருந்ததால் அதிர்ச்சி அடைந்த உஷா, புகார் செய்தார். எனினும், சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் இந்த விஷயத்தில் அக்கறை காட்டாமல் அலட்சியப்படுத்தினர்.

(வீடியோவை காண படத்தின் மீது கிளிக்செய்யவும்)

இது குறித்து, பி.டி.உஷா கூறியதாவது: எனக்கு ஒதுக்கப்பட்ட அறை மிக மோசமான நிலையில் இருந்தது. சாய் நிர்வாகிகளிடம் இது பற்றி தெரியப்படுத்தினேன். அதன் பிறகும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தினர். பிரபலமான எனக்கே இந்த நிலை என்றால், சாதாரண வீரர், வீராங்கனைகளை இவர்கள் எப்படி நடத்துவார்கள்? இதனால்தான் பெற்றோர் தங்கள் குழந்தைகளை தடகள விளையாட்டில் ஈடுபடுத்த தயங்குகிறார்கள். சர்வதேச போட்டிகளிலும் வெறும் கையுடன் திரும்புகிறோம். என்னை அவமானப்படுத்தி விட்டார்கள். இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.

ஏற்கனவே தேசிய குத்துச் சண்டைப் போட்டியில் சரியான வசதிகள், தங்குமிடம் செய்து தரப்படவில்லை என்று உலக குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் இப்போது பி.டி.உஷாவுக்கும் அப்படி ஒரு அவமானம் நேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more...

Tuesday, October 6, 2009

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதால் பயன் என்ன? ஜெயலலிதா கேள்வி


தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவதால் என்ன பயன் ஏற்படப் போகிறது என்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கேள்வியெழுப்பியுள்ளார்.


இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:



தி.மு.க. சார்பில் அண்மையில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு விழாவில், 1984 முதல் தமிழகத்துக்கு வந்துள்ள ஒரு லட்சத்துக்கும் மேலான இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் நிரந்தர குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவதாக அறிவிப்பதால் அவர்களுக்கு கூடுதலாக எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.


'நிரந்தரக் குடியுரிமை' என்ற தகுதி காரணமாக அவர்களுடைய தற்போதைய நிலைமையில் ஏதாவது முன்னேற்றம் ஏற்படுமா? 115 அகதிகள் முகாம்களில் இருந்து அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விடுவார்களா? தமிழ் நாட்டில் புதிதாக அவர்கள் வாழ்க்கையைத் தொடங்க நிதி உதவியோ அல்லது வெகுமதியோ அளிக்கப்படுமா? கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு போன்ற சமூக உதவிஅவர்களுக்கு அளிக்கப்படுமா? உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீட்டிற்கு வரம்பு விதித்திருக்கின்ற நிலையில், யாருடைய ஒதுக்கீட்டிலிருந்து வழங்கப்படும்?


இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமைத் தகுதி என்ற முன்மாதிரி உருவாக்கப்பட்டால், வங்கதேசம், மியன்மர் மற்றும் திபெத் ஆகியவற்றில் இருந்து வந்துள்ள அகதிகள் கோரும் நிரந்தரக் குடியுரிமைத் தகுதி குறித்து இந்திய அரசு என்ன செய்யும்?


மற்ற நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் எந்தவொரு இடம் பெயர்ந்த சமுதாயமும், தங்கள் சொந்த மண்ணில், மறுவாழ்வு அளிக்கப்படுவதையே விரும்பும். நிரந்தரக் குடியுரிமை வழங்க வேண்டும் என்கிற தன்னிச்சையான கோரிக்கை, இலங்கை அரசின் 'சிங்களர்கள் மட்டும்', மற்றும் 'தரப்படுத்தல்' கோட்பாடுகளுக்கு எதிராக துவங்கப்பட்ட தமிழர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.


இவ்வாறு ஜெயலலிதா தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

Sunday, October 4, 2009

டில்லியை பிடிக்க 2 நாள் போதும் - சீனாவின் மிரட்டல் ஈ மெயில்

டில்லியை கைப்பற்ற தங்களுக்கு இரண்டு நாட்கள் தான் ஆகும் என சீன இணையத்தளம் ஒன்று தெவித்துள்ளது. இது தொடர்பாக அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் இந்திய சுற்றுலா நிறுவனங்களுக்கும் இமெயிலை அனுப்பியுள்ளது அந்த தளம்.
சீனா கடந்த 1ஆம் திகதி தனது 60 ஆவது தேசிய தினத்தை கொண்டாடியது. அப்போது தனது இராணுவப் பலத்தையும், தங்களது வளர்ச்சியையும் உலகிற்கு காட்டியது.

ஆனால், அதே நேரத்தில் இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசம் தங்களுக்கு சொந்தமானது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு விசா கொடுப்பதில்லை. மேலும், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி அருணாசல பிரதேசத்துக்கு நிதி உதவி செய்வதற்கு எதிர்ப்பு தெவித்து வருகிறது.

மேலும், இந்தியாவுடனான எல்லைக்கோடான மெக் மோகன் கோட்டை தாண்டி பல முறை அத்துமீறல் செய்து வருகிறது.இதையடுத்து தற்போது இந்திய, சீன எல்லை பகுதி பதற்றம் நிறைந்தவையாக மாறியுள்ளது.

இந்நிலையில் தற்போது அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் சுற்றுலா நிறுவனங்களுக்கு சில மிரட்டல் இமெயில் வந்துள்ளன. அதில் சில வரைபடங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
அதில் ஒன்றில் அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொன்றில் டில்லி மீது ஒரு வட்டம் போடப்பட்டுள்ளது. அதன் அருகே இந்த இடத்தை சீன இராணுவம் பிடிக்க இரண்டு நாட்கள் தான் தேவைப்படும் என கூறப்பட்டுள்ளது.

இவை இரண்டும் ஒரு சீன இணையத் தளத்தில் இருந்து தான் அனுப்பப்பட்டுள்ளன. இது குறித்து ஹிமாலயன் ஹொலிடேஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் டேங் வாங்கே கூறுகையில், அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் சுற்றுலா நிறுவனங்கள் அனைத்துக்கும் இது போன்ற மிரட்டல் இமெயில் வருகிறன. எங்களுக்கு சில இமெயில்கள் வந்துள்ளன. இது அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது. இது எங்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விஷயத்தை மத்திய அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதன்மூலம் அருணாச்சலம் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை உறுதியாக தெவிக்க வேண்டும். அங்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

Read more...

Tuesday, September 29, 2009

லால்கரில் நடப்பது என்ன?


ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் உண்மையறியும் குழுவின் அறிக்கை


ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் சமீபத்தில் லால்கர் பகுதிக்கு அப்பகுதியில் நடந்து வரும் மக்களின் போராட்டத்தை குறித்து ஆய்வு செய்ய சென்று வந்தோம். அங்கு நாங்கள் நேரில் கண்டவற்றை ஒரு முன்வரைவு அறிக்கையாக இங்கு முன்வைத்துள்ளோம். அங்குள்ள மக்கள் இயக்கத்தை குறித்து வெளியில் வராத சில செய்திகளை நாங்கள் இங்கு குறிப்பிட்டுள்ளோம். தாங்கள் அதனை தங்களது தினசரியிலோஃ செய்தியிலோ மின்னணு தொடர்பு சாதனத்திலோ வெளியிடுமாறும், அதனை தனிச்சிறப்பு செய்தியாக அளிக்குமாறும் கோருகிறோம்.

நவம்பர் 2008ஆம் ஆண்டு புத்ததேவ் பட்டாச்சார்யாவின் பாதுகாப்பு வண்டிகளின் மீது கண்ணிவெடி தாக்குதல் நடந்த பின்பு லால்கரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பெரிய அளவிலான அரசு ஒடுக்குமுறை இருப்பதாக நாங்கள் செய்தி ஊடகங்கள் மூலமும் பிற ஆதாரங்களில் இருந்தும் அறிய வந்தோம். குறிப்பாக சோட்டோபேலியா மற்றும் கட்டாபஹாரி போன்ற பகுதிகளில் உள்ள பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும் கடுமையான போலீசு அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது என்பதை கேட்டறிந்தோம்.



அந்த காவல்துறையினரின் வெறியாட்டத்திற்கு பின்பு, காவல் துறையின் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் போராட்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும், அவர்கள் அப்பகுதிகளில் (லால்கர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில்) காவல்துறை மற்றும் பிற நிர்வாக துறையினரின் ஆளுமையிலிருந்து விடுவித்து, தடையரண் எழுப்பியுள்ளனர் என்பதையும் கேட்டறிந்தோம். இத்தகைய முன்னறிந்த செய்திகளுடன் நாங்கள் லால்கர் பகுதிக்கு சென்றோம். நாங்கள் அங்கு ஜூன்-7 முதல் ஜூன்-10ம் தேதி வரை தங்கியிருந்தோம். சோட்டாபேலியா, கட்டாபஹாரி, போஹர் டங்கா, சிஜூவா, டைன் டிக்ரி, சிந்தூர்பூர், மதுபுர், பபூய் பாஷா, ஷாலுகா, மோல்டோலா கட்டாசோல், பஸ்பான், பாப்புரியா, கோம்லாடாங்கா, புக்ரியா, கேஎதென்கா புரா, கோபால்நகர், காஷ் ஜொன்கோல், ஷால்போனி, ஷால்டாங்கா, அந்தர்மாரி, டரிகேரா, புலாடென்கா, சிடாராம் டஹி, டேஷா பந்த், புலா டங்கா கிராமங்களை சென்று பார்வையிட்டு, அங்குள்ள மக்களுடன் விரிவாக பேசினோம். லோதாஷ{ல்லி என்ற பகுதியில் அக்குழுவினரால் கூட்டப்பட்ட பெரும் கூட்டத்தைப் பார்வையிட்டோம்.


மேலும் கிராமங்களில் நடந்த வேறு சிறு கூட்டங்களிலும் பங்கு பற்றினோம். தற்போதைய சமீபத்தில் தரம்புறா மற்றும் மதுபுர், ஷிஜீவா பகுதிகளில் அரசுடனும், சிபிஎம் கட்சியுடனும் மக்கள் நேரடியாக போராட்ட களத்தில் இறங்கியதும், அதில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூடும் நாங்கள் அப்பகுதியை சென்று பார்வையிட்ட நேரத்தில் துவங்கியதாகும். எனவே, இந்த மக்கள் இயக்கத்தின் பன்முகங்களை மிக அருகாமையில் இருந்து நாங்கள் கண்டதாகவே நாங்கள் கருதுகிறோம்.


லால்கருக்கு சென்று அந்த மக்களை நேரில் சந்தித்ததானது நாங்கள் செல்வதற்கு முன்பு அது குறித்து எங்களிடமிருந்த பிரமைகளை உடைத்து எறிந்தது. அப்பகுதியில் காவல்துறையினரால் நடத்தப்பட்ட கொடுமைகளை வரலாற்று ரீதியாக வரிசைக்கிரமமாக மக்களிடம் கேட்டறிந்த பின்பு, நவம்பர் மாதம் நடந்த சம்பவம் ஒரு தனித்துவமானதாக எங்களால் கருத இயலவில்லை. இது, 2000ம் ஆண்டு முதல் அப்பகுதியில் உள்ள மக்கள் மீது நடத்தப்பட்ட மோசமான அரசு பயங்கரவாதம் மற்றும் காவல்துறை கொடுமைகளின் தொடர்ச்சியேயாகும். மக்களிடம் இருந்து வெளிப்படும் எதிர்ப்புணர்வே தற்போது காணப்படும் தனித்துவம் ஆகும்.


காவல்துறையினர் மக்களை எவ்வாறு சித்ரவதை செய்தனர் என்பதையும், தேடுதல் வேட்டை என்ற பெயரில் இரவு நேரம் வீட்டை உடைத்து நுழைந்தனர் என்பதையும் எவ்வாறு மக்களை அடித்து உதைத்தனர் என்பதையும் தனது கால்நடையை தேடுவதற்காக வேண்டி இரவு நேரத்தில் வெளியே உலவுவது தடைசெய்யப்பட்டிருப்பதையும், ஒவ்வோர் குடும்பத்தில் இருந்தும் ஏதோ ஒரு நபர் “மாவோயிஸ்ட்’’ என்று குறிப்பிடப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதையும், 90 வயதான மைக்கூ முல்மு என்ற தேஷபந்த் பகுதியை சேர்ந்த வயது மூத்தவர் 2006ஆம் ஆண்டில் காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதையும் குறித்து மக்கள் எங்களுக்கு நடைமுறை காட்சியாக சித்திரித்து காட்டினர். “உடல் பரிசோதனை’’ என்ற காரணம் காட்டி இளம் சிறுமிகள் காவல்துறையினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர். இரவு நேரத்தில் “தேடுதல் வேட்டை’’யின் போது பாலினத்தை நிரூபணம் செய்ய உள் உறுப்புகளை காண்பிக்க நிர்பந்தப்படுத்தப்பட்டனர்.



எதிர்கட்சியினரை வலுவிழக்க செய்ய வேண்டி, தேர்தல் நேரத்தில் கிராமத்தை சேர்ந்த 30-40 பேர் “மாவோயிஸ்ட்’’ என்ற பெயரில் கைது செய்து கொண்டு செல்லப்பட்டனர். சோட்டாபேலியாவில் பல பெண்களை மிருகத்தனமாக அடித்து உதைக்கப்பட்டதும், அதில் ஒருவரான சித்தாமோனி என்பவர் தனது கண்களை இழக்க நேரிட்டதும் மக்களின் பொறுமையை பெரிதும் சோதித்தது. இந்த நீண்ட காவல்துறையினரின் கொடுமைகளுக்கு எதிராக மக்கள் தற்போது திரண்டு எழுந்துள்ளனர்.

காவல்துறையினரின் பயங்கரவாதத்தை தொடர்ந்து சிறிவி ன் பயங்கரவாதம் குறித்தும் அவர்கள் குறிப்பிட்டனர். சிறிவி ன் கீழ்மட்ட உறுப்பினர்களும்இ தலைவர்களும் காவல் துறைக்கு உளவாளிகளாக செயல்பட்டுள்ளனர் என்று மக்கள் எங்களிடம் குறிப்பிட்டனர். அனுஜ் பாண்டேயின் வீட்டை இடித்த பின்பு மக்களிடம் பெரும் ஆர்ப்பரிப்பு இருப்பதை நாங்கள் கண்டபோது, அவர்களின் உணர்ச்சியை எங்களால் உணர முடிந்தது. ஏனெனில் சிறிவி மீது மக்கள் அந்த அளவு வெறுப்புணர்வு கொண்டிருந்தனர். ஹர்மத் வாஹினி என்ற குண்டர் படையின் முகாமாக வட்டார பஞ்சாயத்து அலுவலகம் மாறியிருப்பதை மதுபுர் பகுதியில் உள்ள மக்கள் எங்களுக்கு சுட்டிக் காட்டினர். இந்த குண்டர் படையினர் எவ்வாறு கிராமம் முழுவதும் “மோட்டார் சைக்கிள் படையினராக’’ உலவி திரிந்தனர் என்றும், மக்களை பயமுறுத்தி வந்தனர் என்றும், மக்களின் வீட்டை மிருகத்தனமாக உடைத்து எறிந்தனர் என்றும், வானத்தில் துப்பாக்கி சூடு நடத்தியபடியும், மக்களை உதைத்தும் திரிந்தனர் என்றும் மக்கள் எங்களிடம் தெரிவித்தனர். இந்த ஹர்மத் வாஹினி குழுவினர் ஒரு கிராமவாசியின் வீட்டை உடைத்த போது அவர் காவல்துறையினரை அழைத்தும் பயனின்றி, அவரது வீடு இடிக்கப்பட்டது குறித்தும் விரிவாக எங்களிடம் குறிப்பிட்டார். ஆயுதம் தாங்கிய எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட பின்பே ஹர்மத் குண்டர் படையினர் மெமுல் மற்றும் ஷிஜீவா பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.

இதுபோலவே, காஷ் ஜொன்கோல் பகுதியில் ஆயுத தயாரிப்புடன் கிராமக்குழுவினர் இல்லாத காரணத்தால் ஹர்மத் குண்டர் படையினர் கிராமத்தில் காவல்துறையுடன் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில், மூவர் (கிராம மக்கள்) உயிரிழந்ததும், மூவர் காயமுற்றதும் கிராம மக்களால் நினைவுகூரப்பட்டது.

காவல்துறையினரும், சிறிவி கட்சியினரும் கூட்டணியாக செயல்படுவதாக கருதத் தேவையில்லை. இருவரும் ஒரே முகம் தான். ஹர்மத் என்ற சிறிவி ன் குண்டர் படையினர் வெறியாட்டம் நடத்தும் போது காவல்துறையினர் எவ்வாறு கைகட்டி வேடிக்கை பார்த்தனர் என்று கிராம மக்கள் எங்களிடம் குறிப்பிட்டனர். இவர்கள் காவல்துறையினரின் ஜீப் வண்டிகளை கூட சில சமயங்களில் பயன்படுத்தினர். கிராமத்தில் உள்ள மக்கள் குறித்த விபரங்களை சி.பி.எம். அடிமட்ட உறுப்பினர்கள் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தினர்.
கிராம மக்களின் குழு காவல்துறையினரின் ஒடுக்குமுறைக்கு எதிராக உருவாக்கப்பட்டது.

எங்களை பெரிதும் கவர்ந்தது என்னவெனில் இக்குழுவினரும், கிராம மக்களும் கடந்த 7 மாதமாக லால்கரில் நடைமுறைப்படுத்தி வரும் மாற்று வளர்ச்சி திட்டம் குறித்த செயல்பாடே ஆகும். இப்பகுதி முழுவதும் பெரிதும் ஏழ்மையாலும், பிற்போக்கு நிலைமையாலும் பாதிக்கப்பட்டுள்ளது. மழையின் அளவு இப்பகுதியில் மிகவும் குறைவு. மக்கள் இப்பகுதியில் விவசாயத்திற்கு வானத்தையே நம்பி உள்ளனர். செயல்பாடற்ற அரசு கால்வாய், வற்றி கிடப்பதை நாங்கள் நேரில் கண்டோம். அரசு நீர்தேக்கங்கள் யாவும் பாழ்பட்டுக் கிடப்பதையும் இதன் காரணமாக இயற்கை மழையளவு பாதிக்கப்படுவது குறித்தும் அவர்கள் எங்களுக்கு விவரித்துக் கூறினர். மழைக்காலங்களில் சாலைகள் பயன்பட ஏற்றவாறு இல்லாமல் போவதும் அதன் மோசமான நிலைமை குறித்தும் அவர்கள் எங்களுக்குக் காண்பித்தனர்.

இந்தக் கிராமக்குழுவினர் தமது சொந்த முயற்சியில் 20ளீனீ நீளத்தில் சாலை விதித்தனர். இந்த சாலைகளை உருவாக்க மக்கள் தமது சொந்த உழைப்பைப் பகிர்ந்து கொண்டனர். இந்த சாலையை உருவாக்க 20கி.மீ நீளத்திற்கு; 47000 ரூபாய் மட்டுமே செலவிட்டனர் என்றும், ஆனால், பஞ்சாயத்தினர் 1கி.மீ. நீள சாலை அமைக்க 15000 ரூபாய் செலவு ஆவதாகக் காண்பிப்பதையும் மக்கள் சுட்டிக் காட்டினர். அவர்கள் பல குழாய்க் கிணறுகளைப் பழுதுபார்த்துள்ளனர். பஞ்சாயத்தினரின் செலவை காட்டிலும் 50வீத அளவு செலவில் புதிய குழாய்கிணறைத் தோண்டியுள்ளனர். பஹார்டங்கா பகுதியில் நீர் நெருக்கடியைத் தீர்ப்பதற்காக ஒரு தடுப்பு நீர்தேக்கத்தை அவர்கள் கட்டி எழுப்பியுள்ளனர். மேலும் இரு முக்கிய செயல்பாடுகள் என்னவெனில் இக்குழுவினர் கட்டாபஹாரி பகுதியில் நிலப்பகிர்வு செய்தனர்.

மற்றும் தனியான உடல் ஆரோக்கிய மையத்தை ஏற்படுத்தியுள்ளனர். மேற்கு வங்க அரசாங்கத்தின் ஒரு சட்ட மசோதாவின்படி காட்டு நிலங்கள் அம்மக்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஆயின், அது இந்நாள்வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போது, பனஸ்பரி மற்றும் பிற கிராமங்களில் நிலத்தை பகிர்ந்தளிக்க இக்குழுவினர் முன்முயற்சி எடுத்து வருகின்றனர். ஒரு கிராமத்தில் பட்டா பகிர்ந்து அளிக்கப்படுவதை நாங்கள் நேரில் கண்டோம். கிராமங்களில் உடல் ஆரோக்கியத்திற்கான வசதிகள் இன்றி இருப்பதையும், அங்கு கிராம உடல் ஆரோக்கிய மையம் ஏதும் இல்லாதிருப்பதையும் எங்களால் அறிய முடிந்தது. லால்கரிலும், ராம்கரிலும் இருக்கும் உடல் ஆரோக்கிய மையமே மிக அருகாமையில் இருந்ததாகும்.

மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே நோயாளிகள் உயிரிழப்பது என்பது சாதாரண நிகழ்வாக இருந்துள்ளது.மழைக்காலத்தில், பாம்புக்கடிக்காக சிகிச்சை பெற கிராம மக்கள் மருத்துவமனை வருவது அதிகம். கட்டாபஹாரியில் உள்ள உடல் ஆரோக்கிய மையம் செயலற்று கிடந்தது. அதனை காவல்துறை யினருக்கான முகாமாக மாற்ற நிர்வாகம் முடிவு செய்திருந்தது.



காவல்துறையினருக்கு எதிரான சமூக தடை விதிக்கப்பட்ட பின்பு அது மீண்டும் உடல் ஆரோக்கிய மையமாக மாற்றப்பட்டிருந்தது. கல்கொத்தா மற்றும் பிற பகுதிகளில் இருந்து மருத்துவர்கள் வாரம் மூன்று முறை இம்மருத்துவமனைக்கு வந்து சென்றனர். தினமும் 150 நோயாளிகள் இம்மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இவ்வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள லோதாஷ{ல்லியின் அழுந்தும் எஃகு தொழிற்சாலைக்கு எதிராக அக்குழுவினர் அழைத்த கூட்டத்திற்கு பெருமளவு மக்கள் திரண்டிருந்தனர். நாங்கள் அந்த தொழிற்சாலைக்குச் சென்று அதனால் ஏற்படும் மாசு எவ்வாறு மரம் மற்றும் வட்டாரத்தை பாதிக்கிறது என்பதை நேரில் கண்டோம். அங்குள்ள நெல் வயல் முழுமையும் கறுத்துப் போயிருப்பதை எங்களுக்கு தெரியப்படுத்தினர்.

பஞ்சாயத்தினர் நெல் சாகுபடி கறுத்து இருப்பதால் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த சம்பவமும் உண்டு. இந்தத் தொழிற்சாலையின் அருகாமையில் மருத்துவமனையும் பள்ளிகளும் அமைந்துள்ளன. சி.பி.எம். கட்சியினரால் பஸ் நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்ட பின்னரும் இந்தக் கூட்டத்திற்கு, பெருமளவிலான மக்கள் திரள் அணி திரண்டு வந்திருந்தனர். இதில் பங்கேற்ற மக்கள் அனைவரும் இத்தொழிற்சாலைக்கு எதிராக போராடி, தொழிற்சாலையை நிறுத்தச் செய்வது என முடிவு எடுத்தனர்.

லால்கரில் மாவோயிஸ்டுகள் காணப்படுகின்றனர் என்பது அனைவராலும் கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகிறது. நாங்கள் மாவோயிஸ்டுகள் அங்கே இருப்பதையும் அதனை மக்கள் ஏற்றுக் கொண்டதையும் வெளிப்படையாகக் கண்டோம். அவர்கள் சுவரொட்டிகளை ஒட்டுவதும் பத்தாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் கூட்டங்களை நடத்துவதையும் கண்டோம். மாவோயிஸ்டுகள் ஜார்கண்டிலிருந்து வந்த வெளிமாநிலத்தவர்கள் என்ற பொதுவான கருத்துக்கு மாறாக மாவோயிஸ்ட் படையினரை சூழ்ந்து அவ்வட்டார மக்கள் இருப்பதை நாங்கள் கண்டோம்.

சி.பி.எம். மற்றும் அரசினால் நடத்தப்பட்டு வரும் தொடர்ந்த தாக்குதலுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய எதிர்ப்பு நடவடிக்கைகள் தேவை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். மரபு ரீதியான ஆயுதங்களை கொண்டு செல்வதற்கு அரசு தடைவிதித்துள்ளது என்பதே இயக்கத்தை செயலிழக்க செய்வதாக உள்ள ஒரு அடையாளமாக காணமுடிந்தது.

லால்கரைவிட்டு வரும்போது இந்த போராட்டம் ஏற்கனவே தீவிரமடைந்திருந்தது தற்போது மக்கள் தனது உடனடி எதிரியான சி.பி.எம் மற்றம் காவல்துறையினர் தப்பி ஓடும் அளவு வெற்றிகரமாக முன்னேறியுள்ளனர். மக்களிடம் நாங்கள் கண்ட ஆர்வம் மிக அபரிதமாக இருந்தது. முதன் முறையாக அவர்கள் ஓட்டுக்களை குவித்து செல்லும் அரசியல் கட்சிகளின் ஒரு பிரிவாக இல்லாமல் தமக்கே சொந்தமான ஒரு குழுவின் பங்காக இருந்தனர்.

அரசு பயங்கரவாதத்திலிருந்து விடுதலை பெற்ற வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்தனர். தமக்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்களை தாமே கட்டி எழுப்பினர். பல்வேறு கிராமங்களில் தங்கியிருந்த பலர் ஒரு பொதுவான கருத்தை வெளிப்படுத்தினர். “தமக்கு முதன்முறையாக இப்போதுதான் சுதந்திரம் கிடைத்திருக்கிறது’’- என்பது தான் அது. அவர்களுடைய போராட்டம் பல ஆண்டுகளாக அவர்கள் சுரண்டபடுவதற்கும், துன்புறுத்தப்படுவதற்கும் அவர்கள் மீது பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுவதற்கும், அவர்கள் உரிமை மறுக்கப்படுவதற்கும் எதிராக இருந்தது. இவ்வகையில் இது ஒரு வரலாற்று பூர்வமான போராட்டமாகும். “அராஜகம்’’ என்று கருதப்படுவது யாவும் உண்மையில் விடுதலைக்கான போராட்டம் தான் என்று நாங்கள் உறுதியாக உணருகிறோம்.

ஊடகங்கள் யாவும் லால்கருக்கு மீண்டும் சென்று திரும்ப வேண்டும் என நாங்கள் அழுத்தமளிக்க விரும்புகிறோம். இந்த இயக்கம் அரசின் செயலற்ற தன்மையால் ஏற்பட்டுள்ள மக்களின் மிகவும் ஏழ்மையான சமூக பொருளாதார நிலைமையை ஆதாரமாக கொண்டுள்ளது. மக்களின் இந்தப் போராட்டத்திற்கு எதிராக அரசு திருப்பித் தாக்கவே செய்யும்.

உறுதியாக இருக்கும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த ஆணையைப் பெற்று மத்திய ரிசர்வ் காவல் படை மீண்டும் திரும்பக்கூடும். மக்கள் இயக்கத்தை ஒடுக்குவதற்கு கொடூரமான கேவலமான கோப்ரா படையினரும், கிரே வேட்டை நாய்களும் தேவை என மாநில அரசாங்கம் வெட்கமின்றி கோரிக்கை வைத்துள்ளது. அது மிக துரதிஸ்டமானதும், கண்டிக்கத்தக்கதும் ஆகும். பெருமளவிலான அரசு பயங்கரவாதம் குறைவளர்ச்சி, ஊழல் ஆகியவற்றிற்கு. எதிரான மக்களின் கோபம் மிகவும் சரியானதே. அதுபோன்றே அதற்கு எதிரான நீண்ட காலமாக எதிர்பார்த்த தாக்குதலும் சரியானதே.

இது குறித்த விரிவான அறிக்கை எங்களால் பின்னர் சமர்ப்பிக்கப்படும். வங்காளத்தின் வட்டார ஊடகங்கள் நந்திகிராம் இயக்கத்தின் போது மிகச்சரியான முற்போக்கான பங்கை ஆற்றியது என்பதை நாங்கள் நினைவு கூர்கிறோம். எனவே அரசு மீண்டும் ஒரு இனப்படுகொலை நிகழ்த்துவதற்கு முன்பு லால்கரில் உள்ள மக்களுக்கும் உண்மையான போராட்டத்திற்கும் ஆதரவாக துணை நிற்க கோருகிறோம்.

நன்றி

ப்ரியரஞ்சன்;, பனோஜ்யோத்சனா, அளீர்பான் ர கொகோல், குசூம், ரியாஸ், ஏதுவின்தர், வீர்சிங், சுமதி

தொடர்புஎண் : 09711826861

Read more...

Monday, September 28, 2009

இந்தியா தப்பிவிட்டது

பிரபாகரனிடம் இந்தியாவை கொடுத்திருந்தால் அப்துல்கலாம் கனவு நிறைவேறியிருக்கும்:சீமான்

பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகில் நேற்று இரவு 7 மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக திலீபன் நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.

முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியை தொடங்கிவைத்தார்.

பொதுக்கூட்டம் நடைபெறும் அழகிரி சிலை வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சீமான் திலிபனுக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு பேசினார்.

’’புலிகளை அழித்தால்தான் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தார்கள். அதற்கான வழிகளை எல்லாம் செய்தார்கள். அழித்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

பாகிஸ்தானும்,சீனாவும் இந்தியாவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இது ஏன் இந்தியாவுக்கு புரியமாட்டேங்குது.

அண்ணன் பிரபாகரன் எப்போதுமே இந்தியாவை தன் நட்பு நாடாகத்தான் பார்த்துவந்தார். அதனால்தான் இந்தியாவை பாதுகாத்து வந்தார். ஆனால் சிங்களவன் இந்தியாவுடன் நெருங்கியே இருந்தான்.

இந்தியா-சீனா எல்லைப்பிரச்சனை வந்தபோது சீனாவுக்குத்தான் ஆதரவாக இருந்தான் சிங்களவன். இப்போதும் ஆதரவாகத்தான் இருக்கிறான். இந்தியா உள்நோக்கத்துடனேயே உதவுகிறது என்று சரத்பொன்சேகா சொல்லியிருக்கிறார். ஈழம் கிடைத்திருந்தால் எப்போதும் நட்பாகவே இந்தியா இருந்திருக்கும்.

2020ல் இந்தியா வல்லராக ஆகும் என்று அப்துல்கலாம் கனவுகண்டார். அந்த கனவு நிறைவேறுவது மாதிரி தெரியவில்லை.ஆனால் ஒன்று மட்டும் உண்மை.

பிரபாகரனிடம் இந்தியாவை ஒப்படைத்திருந்தால் 2020ல் அல்ல; இன்னும் 5 ஆண்டுகளிலேயே உலகின் மிக பெரும் தேசமாக இந்தியாவை மாற்றியிருப்பார். அப்துல்கலாம் கனவு வெகு சீக்கிரமே நனவாகியிருக்கும்’’என்று பேசினார்.

Read more...

ராகுல்காந்திக்கு தொடர்ந்தும் புலிகளின் அச்சுறுத்தல்

இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ராகுல் காந்திக்கு எஞ்சியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களால் அதிக அளவிலான அச்சுறுத்தல் இருப்பதாக இந்திய புலனாய்வு துறையினர் எச்சரித்துள்ளனர். ஒருபக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டு வந்தாலும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோருக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்திய சட்டமுறைகளின் கீழ் ராகுல்காந்திக்கு அவரது தாயார் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அடுத்த படியாக அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு விசேட பயிற்றப்பட்ட பாதுகாப்பு குழு ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.


இதன் காரணமாகவே அண்மையில் தமிழகத்திற்கான விஜயம் மேற்கொண்டிருந்த ராகுல்காந்தி நீண்ட தூர பாதைப் பயணங்களை மேற்கொள்வதை அறைமனதுடன் தவிர்த்துள்ளார்.


இதேவேளை ராகுல் மற்றும் அவரது தாயிற்கும் ஜெயிஸ் ஈ மொஹமட் போன்ற பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத அமைப்பின் அச்சுறுத்தலும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்ட ஜெயிஸ் ஈ மொஹமட் அமைப்பின் உறுப்பினர்கள் மூவரிடம் தனித்தனியே மேற்கொண்ட விசாரணைகளில் ராகுல்காந்தி அவர்களின் முதன்மை இலக்காக காணப்படுவதாக தெரியவந்துள்ளது.


ராகுல்காந்தி தமிழகத்திற்கான தொடர்ந்தும் விஜயம் செய்யும் போது அவருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தமிழக பொலிசாரும் புலனாய்வு துறையினரும் இணைந்து செயற்படவுள்ளனர்.

Read more...

Tuesday, September 22, 2009

விடுதலைப்புலிகளின் தோல்வியில் இருந்து தாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். மாவோயிஸ்டுகளின் கசிந்த ஆவணம்

இந்திய மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களில் யுக்திகள் குறித்த தகவல்களைக் கொண்ட கசிந்த ஆவணம் ஒன்றை இந்திய அரசாங்கம் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
மாவோயிஸ்ட்டுகளின் அதியுயர் நிர்வாக பீடமான பொலிற்பீரோ இதனை வடிவமைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்திய பாதுகாப்புப் படையினருக்கு எதிரான யுக்திமிக்க இராணுவ நடவடிக்கைகளை திட்டமிட்டு, நடைமுறைப்படுத்துமாறு தமது போராளிகளுக்கு அழைப்பு விடுக்கும் மாவோயிஸ்டுகளின் இந்த 20 பக்க ஆவணம், தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை நிர்மூலம் செய்வதற்கு மன்மோகன் சிங் அரசாங்கம் தயாராவதாக கூறுகிறது.

ஏகாதிபத்திய அமெரிக்காவுடன் தொடர்பு வைத்திருப்பதாக இந்தியாவை குற்றஞ்சாட்டுவதுடன், மாவோயிஸ்ட்டுகள் இந்திய அரசின் சின்னங்கள் மற்றும் குறியீடுகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி, அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுமாறும் அந்த ஆவணம் கோருகிறது.

தமது அமைப்பின் போராளிகள் மெத்தனமாக இருந்து விடக்கூடாது என்று கூறுகின்ற மாவோயிஸ்டுகளின் பொலிற்பீரோ, இந்தியாவுக்கு, அமெரிக்காவிடம் இருந்து உதவிகள் கிடைப்பதாகவும், விடுதலைப்புலிகளின் தோல்வியில் இருந்து தாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இராணுவங்களின் யுக்திகளில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் எவ்வாறு அவற்றின் வீழ்ச்சிக்கு வழி செய்கிறது என்பது குறித்து விடுதலைப்புலிகளின் தோல்வியில் இருந்து புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அந்த ஆவணம் கூறுகின்றது.

Read more...

Monday, September 21, 2009

சிதார் இசை கலைஞர் ரவிசங்கரின் மகளை மிரட்டிய தொழிலதிபர் கைது

சிதார் இசை கலைஞர் ரவிசங்கரின் மகள் அனுஷ்காவை பல கோடி கேட்டு மிரட்டிய மும்பை தொழிலதிபர் போலீசில் சிக்கினார். பிரபல சிதார் இசை கலைஞர் பண்டிட் ரவிசங்கர். தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவரது மகள் அனுஷ்கா (28) டெல்லியில் வசித்து வருகிறார். இவரும் சிதார் இசை கலைஞர்தான். அனுஷ்காவிடம் பணம் கேட்டு இமெயிலில் மிரட்டல் வந்துள்ளதாக டெல்லி போலீசில் ரவிசங்கர் கடந்த மாதம் புகார் செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, அனுஷ்காவின் சில ரகசிய போட்டோக்களை வெளியிடாமல் இருக்க பல கோடி ரூபாய் கேட்டு மர்ம ஆசாமி மிரட்டுவது தெரியவந்தது. தீவிர விசாரணைக்கு பின், அனுஷ்காவின் இமெயில் முகவரியில் இருந்த அந்த போட்டோக்களை அந்த ஆசாமி திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், பணம் கேட்டு அனுஷ்காவை மிரட்டியதாக மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஜூனைத்(29) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். ஜூனைத்திடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

அனுஷ்காவுக்கு ஜூனைத் ஏற்கனவே அறிமுகமானவர்தான். ஆனால், ஜூனைத்தின் நடத்தை சரியில்லாததால் அவரது நட்பை அனுஷ்கா துண்டித்துள்ளார். இதனால், ஜூனைத் ஆத்திரம் அடைந்துள்ளார். அனுஷ்காவின் இமெயில் முகவரியின் பாஸ்வேர்ட் தெரிந்ததால், அதை பயன்படுத்தி இமெயிலில் அனுஷ்கா வைத்திருந்த சில ரகசிய போட்டோக்களை திருடி யுள்ளார். அந்த போட்டோக்களை வெளியிடாமல் இருக்க தனக்கு பல கோடி தர வேண்டும் என்று அனுஷ்காவை இமெயிலில் மிரட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Read more...

நாளைய ஐநா சபைக்கூட்டத்தில் இந்திய சிறுமி உரை


உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் யுக்ரத்னா ஸ்ரீவாஸ்தவா (வயது 13). இவர் லக்னோவில் உள்ள ஜெயின் பிடெவிஸ் கல்லூரியின் 9ஆவது வகுப்பு மாணவி.

'துன்ஷா' (வளர்ச்சி) என்ற இளைஞர் அமைப்பில் இவர் உள்ளார். நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. சபையில் உலக சுற்றுச்சூழல் குறித்த கூட்டம் நாளை (22ஆந் திகதி) நடைபெறுகிறது. இதில் இந்திய குழந்தைகள் சார்பில் சிறுமி யுக்ரத்னா ஸ்ரீவாஸ்தவா கலந்து கொள்கிறார்.

அங்கு அவர், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட 100 நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் 'பூமியில் சீதோஷ்ண நிலை மாற்றம்' என்ற தலைப்பில் பேசுகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

"நமது முன்னோர்கள் மிகவும் நேர்த்தியான கிரகமாக பூமியை நமக்குத் தந்தனர். முன்பு அது பசுமையாக இருந்தது. தற்போது அது மிகவும் பாழ்படுத்தப்பட்டுள்ளது.

அதை மாசுபடுத்தி மிகவும் மோசமான கிரகமாக நாம் மாற்றி விட்டோம். இது சரியல்ல” என்றார்.

மேலும், சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க வலியுறுத்தி பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் மந்திரி ஜெய்ராம் ரமேஷ் ஆகியோருக்கும் இவர் செய்தி அனுப்பி வைத்துள்ளார்.

Read more...

Friday, September 18, 2009

தென்கச்சி சுவாமிநாதன் நேற்று காலமானார்


அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் உதவி இயக்குநரும், பிரபல எழுத்தாளருமான தென்கச்சி கோ. சுவாமிநாதன் நேற்று காலமானார்.

இறக்கும்போது அவருக்கு வயது 67. அவர் சில நாட்களாக உடல் நலம் குன்றி இருந்தார். சென்னை வானொலியில் ‘இன்று ஒரு தகவல்’ என்னும் மிகப் பிரபலமான நிகழ்ச்சியை தொடர்ந்து பல ஆண்டுகள் வழங்கியவர் தென்கச்சி சுவாமிநாதன்.

அது ஒலிபரப்பான காலகட்டத்தில் அதை கேட்காதவர்களே இல்லை என்ற அளவுக்கு, அந்நிகழ்ச்சி புகழ்பெற்று விளங்கியது. அதில் தினம் தினம் புதுப்புது தகவல்களை, நகைச்சுவையுடன் வழங்கியவிதம் ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது.

அவர், பிரபல எழுத்தாளராகவும் விளங்கினார். ‘அன்பின் வலிமை’, ‘தீயோர்’ மற்றும் ‘அறிவுச் செல்வம்’ உட்பட ஏராளமான புத்தகங்களை தென்கச்சி சுவாமிநாதன் எழுதியுள்ளார். 1977ம் ஆண்டில் அகில இந்திய வானொலி பணியில் சேர்ந்த அவர், விவசாய நிகழ்ச்சிப் பிரிவு இயக்குநராக நியமிக்கப்பட்டபோது, ‘வீடும் வயலும்’ என்ற சிறப்பான நிகழ்ச்சி மூலம் விவசாயத்துறையின் மேம்பாட்டுக்கு பெரிதும் உதவி புரிந்தார்.

இது தவிர, குழ ந்தைகளுக்கான ஏராளமான நிகழ்ச்சிக ளையும் தயாரித்து வழங்கியவர் தென்கச்சி சுவாமிநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்கச்சி சுவாமிநாதன் மறைவுக்கு பா.ஜனதா தலைவர் இல. கணேசன், இந் திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா. பாண்டியன், திராவிட கழக தலைவர் கி. வீரமணி ஆகியோர் அனுதாபம் தெரிவித் துள்ளனர்.

Read more...

Wednesday, September 9, 2009

பாரதப்பிரதமரின் மகள் அமெரிக்காவிற்கு கொடுக்கும் குடைச்சல்



ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் பிடிபட்ட சிறை கைதிகளை கொடுமைப்படுத்தியது தொடர்பான ரகசிய ஆவணங்களை பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் மகள் அம்ரீத் சிங், அமெரிக்க கோர்ட்டில் வாதாடி பெற்றுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்ட கைதிகளை குவான்டனாமோ சிறையிலும், ஈராக்கில் கைது செய்யப்பட்ட கைதிகளை அபு கிரெய்ப் சிறையிலும் அடைக்கப்பட்டு அமெரிக்க ராணுவத்தினரால் பல்வேறு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். இது தொடர்பாக அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களான எப்.பி.ஐ., சி.ஐ.ஏ., போன்றவை பதிவு செய்த ஆவணங்கள் மற்றும் வீடியோ டேப்புகளை ஒப்படைக்கும் படி அமெரிக்க மனித உரிமை இயக்கம் நீண்ட நாட்களாக (ஏ.சி.எல்.யூ.,) கோரி வந்தது.
கியூபா நாட்டுக்கு அருகே உள்ள குவான்டனாமோ சிறை மற்றும் அபு கிரெய்ப் சிறையில் கைதிகள் கொடுமைப்படுத்தப்பட்ட அனைத்து விவரங்களையும் அளிக்கும்படி அமெரிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி, ஏ.சி.எல்.யூ., இயக்கத்தில் உள்ள அமெரிக்க வக்கீலான மன்மோகன் சிங் அவர்களின் மகள் அம்ரீத் சிங், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். சிறை கைதிகளுக்கு நேர்ந்த கொடுமை, காவலில் இறந்த கைதிகளின் பிரேத பரிசோதனை அறிக்கை அனைத்தையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்க வேண்டும், என ஏ.சி.எல்.யூ., நீண்ட நாட்களாக கோரி வந்தது.

இந்த அமைப்பின் சார்பில் அம்ரீத் சிங்கும், கனடா நாட்டைச் சேர்ந்த ஜமீல் ஜாபரும் கோர்ட்டில் வாதாடி, ஒரு லட்சத்து 30 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்களை பெற்றுள்ளனர்.இந்த ஆவணங்களை அரசிடமிருந்து போராடி பெறுவதற்கு ஒன்பது கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த தொகையை அரசிடமிருந்து பெறவும் இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே, இரண்டு கைதிகளை கொடுமைப்படுத்தியது தொடர்பான வீடியோ டேப்புகளை எரித்து விட்டதாக சி.ஐ.ஏ., தெரிவித்துள்ளது. இது கோர்ட் அவமதிப்பு செயலாகும் என கூறும் அம்ரீத் சிங், இன்னும் வெளியிடப்படாத ஆவணங்களையும் ஒப்படைக்கும் படி கூறி வாதாடி வருகிறார்.அமெரிக்கரை திருமணம் செய்து கொண்டுள்ள அம்ரீத் சிங்(40) யேல் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே சர்வதேச எல்லையாக அங்கீகரிக்கப்பட்டுள்ள கியா மலைப் பகுதியில் சீன ராணுவம் சுமார் 1.5 கி.மீ. தூரம் ஊடுருவி பாறைகளில் சிவப்பு வண்ணத்தைப் பூசி, அதில் சீனா என்று எழுதிவிட்டுச் சென்றுள்ளது என்ற செய்தி அதிர்ச்சி அளிப்பதாகும்.

Read more...

Monday, August 31, 2009

இந்திய முன்னாள் பிரதமர் திரு ராஜிவ் காந்தி அவர்களின் கொலையில் பணம் கொடுத்தது யார்? பிடிபட்ட ‘கேபி’யை விசாரித்து அறிய முடிவு

இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் செல்வராசா பத்மநாதனிடம், முன்னாள் இந்தியப் பிரதமர் திரு ராஜிவ் காந்தி அவர்களின் கொலை தொடர்பாக நடந்த பணப்பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்த, சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கே.பி., என்ற செல்வராசா பத்மநாதன், சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இலங்கை பாதுகாப்புப் படையினர், ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பத்மநாதனின் பெயரும் உள்ளது. எனவே, ராஜிவ் கொலை வழக்கு தொடர்பாக அவரிடம் இந்தியா சார்பில் விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.ராஜிவ் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகள் தனு, ஒற்றைக்கண் சிவராசன், பொட்டு அம்மான், பிரபாகரன் ஆகியோர் இன்று இல்லை.ஆனால், புலிகள் இயக்கத்திற்கு ஆயுதங்கள் பெறுவதுடன், சர்வதேச அளவில் மூளையாக இருந்து செயல்பட்ட, கே.பி., என்ற பத்மநாதன் பிடிபட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.ராஜிவ் கொலைச் சதியில் பல்வேறு தகவல்கள், பணப்பரிமாற்றம், அது எப்படி நிறைவேற்றப்பட்டது போன்ற தகவல்கள் வெளிவரும் என்பதால், இவ்வழக்கு புத்துயிர் பெற்றுள்ளது.

இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:ராஜிவ் கொலை வழக்கில் பத்மநாதனுக்கு தொடர்பு உள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ., மற்றும் இன்டர்போல் போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக பத்மநாதன் அறிவிக்கப்பட்டார்.கடந்த 2002ம் ஆண்டு பத்மநாதனை பிடிப்பதற்காக சி.பி.ஐ., அதிகாரிகள், நியூசிலாந்து சென்றனர். இது தொடர்பாக அங்குள்ள மூன்று தமிழர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இருந்தாலும், பத்மநாதனை பிடிக்க முடியவில்லை.ராஜிவ் கொலை வழக்கின் சதி குறித்து விசாரிப்பதற்காக, பல்வேறு உளவு அமைப்புகளின் நிபுணர்களை உள்ளடக்கிய பல்நோக்கு கண்காணிப்பு ஏஜன்சி (எம்.டி.எம்.ஏ.,) அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு, ராஜிவ் கொலைக்கான சதித் திட்டம் குறித்து விரிவாக விசாரணை நடத்தியது.இதற்கிடையே, இந்த அமைப்பின் பதவிக் காலம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்தது. தற்போது இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி, அதன் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பத்மநாதன் இலங்கை பாதுகாப்புப் படையினர் வசம் சிக்கியுள்ளதால், அவரிடம் ராஜிவ் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த, இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.அவரிடம் என்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்பது குறித்த பட்டியலை சி.பி.ஐ., தயாரிக்கிறது.

புலிகள் அமைப்புக்காக பல்வேறு நாடுகளில் நிதி திரட்டும் பணியையும், ஆயுதங்கள் கடத்தி வரும் பணியிலும் பத்மநாதன் ஈடுபட்டு வந்ததால், அது தொடர்பான கேள்விகளும் விசாரணையில் இடம் பெறும் என தெரிகிறது.பத்மநாதன் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய இந்தியர்கள் சிலர் உள்ளிட்டோரின் வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களை விசாரிக்கவும் இந்த அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது. பத்மநாதனுக்கு ஜெர்மனியில் வங்கிக் கணக்குகள் உள்ளதாக தெரியவந்துள்ளதை அடுத்து, ஜெர்மனி அதிகாரிகளின் உதவியுடன் அதை அறிவதற்கும் ஏஜன்சி அதிகாரிகள் ஆர்வமுடன் உள்ளனர்.இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.பத்மநாதனிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதை அடுத்து, ராஜிவ் கொலை வழக்கு விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.
Mahaveli

Read more...

Monday, August 24, 2009

செங்கல்பட்டு சிறப்புமுகாம்(சிறை)வாசிகள் விடுக்கும் அறிவித்தல்

விடுநர்
முகாம்வாசிகள்
சிறப்பு முகாம்
செங்கல்பட்டு.

செங்கல்பட்டு சிறப்பு முகாம் என அழைக்கப்படும் இம்முகாம் ஆனது1993 ஆண்டு ஏற்படுத்தப்பட்டது, இப்பொழுது இங்கு 67 ஈழத் தமிழர்கள் வாடிவருகின்றோம்.

நாங்கள் எங்களது குடும்பங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு இங்கு அடைக்கப்பட்டுள்ளோம். ஈழத் தமிழராகிய எங்களது இவ்விடுதலை போராட்டம் முடிவில்லாத தொடர் போராட்டமாக நீடிக்கிறது, இங்குள்ள பெரும்பாலான நாங்கள் இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை எடுத்து சென்ற போது சட்ட விரோதம், சந்தேகம் என்ற பெயர்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம்,பின்பு நீதிமன்றத்தின் மூலமாக ஜாமீன் பெற்று விடுதலையான போது சிறைவாயினில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டு எங்கள் பெற்றோர்உறவினர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு இந்த தடுப்பு முகாமில் அடைத்துவைக்கப்பட்டுள்ளோம், எங்கள் மீது போலீஸாரால் தொடுக்கப்பட்ட வழக்குகளின் குற்றப்பத்திரிக்கைகளை தாக்கல் செய்ய காவல்துறை முயல்வதில்லை.

நாங்கள்இங்கு அடைக்கப்பட்டு இருப்பதால் எங்கள் மீதான வழக்குகள் தொடர்பான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போலீஸ். காவல்துறைக்கு உடனடி தேவையும்இல்லை, எனவே நாங்கள் மூன்று மாத தண்டனை கிடைக்க கூடிய வழக்கிற்கு மூன்றுவருடமாக இங்கு அடைக்கப்பட்டுள்ளோம், எங்களது உறவுகளாகிய மனைவி. பிள்ளைகள்.உற்றார். உறவினர் வெளியே அகதி முகாம்களிலும் வெளிக்காவல் பதிவுகளிலும் பதிந்துகொண்டு துணை. ஆதரவு இல்லாமல் பரிதவித்து வருகின்றார்கள், இலங்கையில் இனக் கலவரம் முடிந்து விட்டது, ஆனால் இங்கோ நாங்கள் இந்தத் தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டு வதைபடுகின்றோம்.

நாங்கள் எங்கள் உற்றார் உறவினர்களுடன் வெளிமுகாம்களில் இருந்து, எங்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளைச் சட்ட ரீதியாகச் சந்திப்போம் என்றும் எங்கள்அனைவரையும் வெளி முகாம்களுக்கு மாற்றக் கோரியும் பல விண்ணப்பங்களும்.உண்ணாவிரதப் போராட்டங்களும் நடத்தியும் உள்ளோம். ஆனால் விடுதலை தொடர்பாக எங்களுக்கு முடிவு கிடைக்கவில்லை. எங்களில் பலரின் குடும்ப உறுப்பினர்கள் இலங்கையில் நடைபெற்ற இறுதி போரில் பலியாகிவிட்டனர், பலர் காணாமல்போய்விட்டனர், பலரின் மனைவி மற்றும் குழந்தைகள் எங்குள்ளார்கள் என்றே தெரியவில்லை, இச்சூழ்நிலையிலும் நாங்கள் இங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளோம்.

இந்த வதை முகாமில் சித்தப்பிரமை பிடித்தவர்கள் போல வாழ்ந்து வருகின்றோம், இப்படியே தொடர்ந்து இங்கு அடைக்கப்பட்டு இருந்தால் நிச்சயமாக பைத்தியகாரர்களாக ஆகிவிடுவோம், எங்களை விடுதலைசெய்யக் கோரி சென்ற மாதம் உண்ணாவிரதம் இருந்தோம். அப்பொழுது அரசுசார்பில் ஒரு மாதத்திற்குள் தீர்வு கிடைக்குமெனவும் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டி கேட்டு கொண்டதற்கு இணங்கி நாங்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டோம்,ஆனால் உண்ணாவிரதம் கைவிட்டு பதினைந்து நாட்கள் ஆகியும் தற்போது இங்குவரும் அதிகாரிகளின் பேச்சுகளிலும் இருந்தும் எங்களின் விடுதலைதொடர்பாகவும் எந்தவித முன்னேற்றமும் நடைபெறவில்லை என்பது தெரியவருகிறது,எனவே எங்கள் அனைவரையும் இந்த தடுப்பு முகாமில் இருந்து விடுதலை செய்து எங்கள் உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதிகாரிகள் எங்களது விடுதலை தொடர்பாக முடிவெடுக்கத் தயங்கும் பட்சத்தில் நாங்கள் அனைவரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி முதல் மீண்டும் எமதுஉண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவோம் என தீர்மானித்துள்ளோம் என்பதைத் தங்களுக்கு தாழ்மையுடன் அறியத் தருகிறோம், மேலும் எங்கள் மீது அனுதாபமும் ஆதரவும் காட்டும் சக்திகள் எங்களுக்குத் துணையாக இப்போராட்டத்தில் கலந்து கொண்டு எங்களுக்கு ஆதரவுதிரட்டி எங்கள் போராட்டத்தை வலுப்படுத்தி எங்கள் விடுதலைக்கு உதவுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கிறோம், எங்களை வெளியில் விடும்வரை காலவரையற்ற உண்ணாவிரத்தை நாம் தொடர்வோம்,இவ்வாறு செய்வதைத் தவிர வாக்குறுதியை நம்பி இடைநிறுத்தியோ அவகாசம் கொடுத்தோ எம்மால் தீர்வு காணமுடியாது, இதைத் தவிர நாம் நிம்மதியாக வாழ்வதற்கு வகையோ வழியோ இல்லை, அதற்கேற்றது போலவே முன்கூட்டியே எல்லோருக்கும் எமது நிலைப்பாட்டையும் அறிவுறுத்தலையும் தந்துள்ளோம், எமது வழக்குகளில் இருந்தோ தண்டனைகளில் இருந்தோ சலுகைகள் கேட்கவில்லை. எல்லா நாட்டவரையும் போல வெளியே இருந்து வழக்கை முடிப்பதற்குஅனுமதியை கேட்கிறோம்.

தங்களால் முடியக்கூடிய கோரிக்கையை நாம் முன்வைத்துள்ளோம், உறுதியான தெளிவான முடிவுகளுடனேயே இவ்வழியை கையாள்கிறோம். இதிலிருந்து பின்வாங்குவதற்கு நாம் தயாராக இல்லை, எமது உறவுகள் துன்பப்படும்போது நீங்கள் ‘எல்லா வசதிகளும் செய்து தருவோம்’ என்று வாக்குறுதி வழங்கி, தொலைக்காட்சி பெட்டியையும் விளையாட்டு பொருட்களையும் கொண்டு வந்து தருவது, எமது உணர்வைக் கொச்சைப்படுத்துவதாக உள்ளது. எந்த மிருகத்தைக் கூட கூண்டில் அடைத்து விட்டு அதற்கு என்ன உணவை கொடுத்தாலும் அதற்கு கூட அது சிறைவாழ்க்கையாகவே இருக்கும். காயப்படும் விலங்குகள், பறவைகள் எல்லாவற்றுக்கும் மருத்துவம் செய்து சுதந்திரமாக உலாவருவதற்கும் எற்பாடு செய்வதை பத்திரிக்கை வாயிலாக தெரிந்து கொள்கிறோம்.

திசைமாறி வரும் கொடிய மிருகம் என்றாலும் கூட அதைக் காப்பாற்றி அனுப்புவதைக் காண்கிறோம், இவ்விலங்குகள் அளவுக்குக்கூட நாம் இல்லையே என்பது எமக்கு பெரும்வேதனையான விஷயம். நாம் இங்கு இருக்கும் உறவுகளுடன் சேர்ந்து வாழவே கேட்கிறோம், இக்கோரிக்கையை நிறைவேற்றித் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் உண்ணாவிரதத்திற்கு முன்னரே தங்களிடம் இம்மனுவை அனுப்பி வைக்கிறோம்.

இப்படிக்கு
முகாம் வாசிகள்
நாள் – 22.8.09
இடம்: சிறப்பு முகாம். செங்கல்பட்டு

Read more...

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்!

டெல்லி: இலங்கைக்கு ஆயுத உதவிகள் கிடையாது என்று இந்தியா திரும்பத் திரும்பக் கூறி வந்தாலும் கூட விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை வெற்றி பெற மிகப் பெரிய அளவில் இந்தியா மறைமுகமாக உதவியுள்ளது. குறிப்பாக இந்திய கடற்படையின் மிகப் பெரிய உதவியால்தான் விடுதலைப் புலிகளின் பலத்தை நொறுக்கி, இலங்கை ராணுவத்தால் அதை வெற்றி கொள்ள முடிந்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.


என்டிடிவி டிவியின் பாதுகாப்புப் பிரிவு ஆசிரியர் நிதின் ஆனந்த் கோகலே, Sri Lanka: From War to Peace என்ற நூலை எழுதியுள்ளார். அதில், இலங்கையின் வெற்றிக்கு இந்தியா எந்த வகையில் எல்லாம் உதவியாக இருந்தது என்பதை விவரித்துள்ளார்.

இலங்கைக்கு இந்தியா செய்த மறைமுகமான உதவிகளால்தான் விடுதலைப் புலிகள் வீழ்ந்தார்கள் என்றும் கோகலே தெரிவித்துள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ராணுவ ரீதியிலான உதவிகளை இந்தியா செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் அரசியல் நெருக்குதல்கள் (தமிழக கட்சிகள்) காரணமாக வெளிப்படையாக உதவிகள் செய்யாத மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, மறைமுகமாக அனைத்து உதவிகளையும் செய்துள்ளதாகவும் கூறுகிறார் கோகலே.

இந்தியா மறைமுகமாக மிகப் பெரிய உதவிகளைச் செய்ததும், சீனா, பாகிஸ்தான் நாடுகள் பகிரங்கமாக ஆயுதங்களை அள்ளிக் கொடுத்ததுமே புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறார் கோகலே.

கோகலேவின் நூலிலிருந்து சில பகுதிகள்...

2005ம் ஆண்டு நவம்பர் மாதம் ராஜபக்சே இலங்கையின் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அடுத்த மாதமே, அவர் இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது விடுதலைப் புலிகளை அழிக்க அவர் உறுதியுடன் இருந்ததும், அதை மிகப் பெரிய லட்சியமாக கொண்டிருந்ததையும் இந்திய அரசு புரிந்து கொண்டது.

இதைப் பயன்படுத்திக் கொள்ள இந்தியத் தரப்பு முடிவு செய்தது. தொடக்கத்தில் பேச்சுவார்த்தை மூலம் விடுதலைப் புலிகளுடன் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளுமாறு அவருக்கு அறிவுரை கூறப்பட்டது. ஆனால் அதனால் எந்தப் பயனும் விளையாது. விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தையை சாக்காக வைத்து மீண்டும் ஆயுதங்களைக் குவிப்பார்கள், ஒன்று கூடுவார்கள், சண்டை முடிவின்றி நீளும் என்று இந்தியத் தரப்பிடம் வாதிட்டார் ராஜபக்சே.

அவரது பேச்சை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டது. அதேசமயம், விடுதலைப் புலிகளுடன் மோதுவதாக இருந்தால் ஒரே மூச்சாக சண்டையிட்டு வெற்றி பெற வேண்டும். அவர்களிடம் இலங்கைப் படையினர் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டு விடக் கூடாது. அதற்கு இலங்கைப் படையினரை பலப்படுத்திக் கொண்டு களம் இறங்க வேண்டியது அவசியம் என்பதையும் ராஜபக்சே இந்தியத் தரப்பிடம் தெரிவித்தார்.

ராஜபக்சேவின் இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து, தங்களுக்கு என்னென்ன ஆயுதங்கள் தேவை, என்ன மாதிரியான உதவிகள் என்ற பட்டியலுடன் அவரது சகோதரர்கள் பசில் மற்றும் கோத்தபயா ஆகியோர் டெல்லி விரைந்தனர். அந்தப் பட்டியலில் - வான் பாதுகாப்பு சாதனங்கள், ஆர்ட்டில்லரி துப்பாக்கிகள், ஆளில்லாத உளவு விமானங்கள் (நிஷாந்த்), லேசர் சாதனங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.

ராஜபக்சேவைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற மன நிலையில் இந்தியா அப்போது இருந்தாலும் கூட அவர் கேட்ட ஆயுதப் பட்டியல் குறித்து எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தது.

இந்தியத் தரப்பிலிருந்து சரி, இல்லை என்ற பதில் வராததால், சற்று ஏமாற்றத்துடனேயே பசிலும், கோத்தபயாவும் கிளம்பிப் போனார்கள். இருந்தாலும் இந்தியா உதவும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது.

ஆனால் இந்திய அரசு இலங்கைக்கு உடனடியாக பதில் தராமல் இருந்ததற்குக் காரணம் உள்ளூரில் அதற்கு இருந்த அரசியல் நெருக்கடிகளே. ஆட்சியில் நீடிக்க திமுகவின் ஆதரவை அப்போது காங்கிரஸ் கட்சி நம்பியிருந்தது. திமுக ஆதரவை விலக்கிக் கொண்டால் உடனே ஆட்சி கவிழும் அபாயம்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான பகிரங்க நடவடிக்கைக்கு நிச்சயம் கருணாநிதி ஆதரவு தர மாட்டார், அதை அனுமதிக்கவும் மாட்டார் என்பதால், இந்திய அரசு தயக்கம் காட்டியது.

எனவே இலங்கைக்கு வெளிப்படையான ஆயுத உதவிகளை, ராணுவ ரீதியிலான உதவிகளைச் செய்வதிலலை என்ற முடிவை காங்கிரஸ் கூட்டணி அரசு எடுத்தது.

முதலில் போன ஹெலிகாப்டர்கள்...

2006 தொடக்கத்தில், இந்தியா தனது மறைமுக ராணுவ உதவிகளை இலங்கைக்கு வழங்கத் தொடங்கியது. முதலில் ஐந்து எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர்களை இலங்கை விமானப்படைக்கு இந்தியா ரகசியமாக அனுப்பி வைத்தது. ஆனால் இந்த ஹெலிகாப்டர்களை இலங்கை விமானப்படையின் பெயரில்தான் பயன்படுத்த வேண்டும். இந்தியாவின் பெயர் இதில் வந்து விடக் கூடாது என்று இலங்கைக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.

அதற்கு முன்பாக 2002ம் ஆண்டு இந்திய கடலோரக் காவல் படை, இலங்கைக்கு சுகன்யா என்ற அதி நவீன கடல் ரோந்துப் படகை வழங்கியிருந்தது.

இந்தியா வழங்கி ஹெலிகாப்டர்கள்தான் இலங்கைக்குப் பேருதவியாக இருந்ததாக இலங்கை அதிகாரிகள் கூறுகின்றனர். இலங்கை ராணுவம் அமைத்த எட்டு வீரர்களைக் கொண்ட சிறு சிறு குழுக்கள், ராணுவத்தின் ஆழ் ஊடுறுவும் பிரிவினர் உள்ளிட்டோரை புலிகளின் பகுதிகளுக்கு கொண்டு செல்ல இந்த ஹெலிகாப்டர்கள் உதவியாக இருந்தனவாம்.

மேலும் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டு காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வரவும் இந்த ஹெலிகாப்டர்கள் உதவிகரமாக இருந்தன.

இலங்கை ராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவினர் திறமையாக செயல்பட இந்தியா வழங்கிய ஹெலிகாப்டர்கள் பேருதவியாக இருந்ததாக இலங்கை ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

இந்தக் கட்டத்திற்கு மேல் இந்தியா ராணுவ ரீதியிலான உதவிகளைச் செய்ய தயக்கம் காட்டியது. காரணம், திமுகவின் ஆதரவை அது நாடியிருந்ததால்.

ஆனால் புலிகள் தங்களுக்கு எதிராக பெரும் தாக்குதலைத் தொடக்கலாம் என்ற பதட்டத்தில் இருந்து வந்த இலங்கை அரசுக்கு இந்தியாவின் இந்த நிதானமான போக்கு கவலையை அளித்தது.

2004ம் ஆண்டு இந்தியா, இலங்கை இடையே ஏற்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தின் கீழ் தங்களுக்கு பெருமளவில் உதவிகள் செய்ய வேண்டும் என்று இந்தியாவை வலியுறுத்தத் தொடங்கியது இலங்கை.

இந்த ஒப்பந்தத்தை இந்தியா நடைமுறைப்படுத்தாதற்கு வேறு ஒரு காரணம் இருந்தது. அது யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான தளத்தை தங்களது பொறுப்பில் இலங்கை ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கோரியிருந்தது. ஆனால் இதை இலங்கை ஏற்கவில்லை. இது இந்தியாவின் ஆதிக்க மனப்பான்மையைக் காட்டுகிறது, தங்களை அவமதிக்கும் அம்சம் இது என்று இலங்கை கருதியது. இதனால்தான் இலங்கைக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பை வழங்க இந்தியா தயக்கம் காட்ட இன்னொரு காரணம். இருப்பினும் ஈழத்தில் போர் முடிந்த தற்போதைய நிலையில் பலாலி விமானதளத்தை சீரமைத்துத் தருவதாக இந்தியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை வழிக்குக் கொண்டு வந்த ராஜபக்சே சகோதரர்கள்...

இந்திய அரசின் கவலை மற்றும் பிரச்சினைகளை ராஜபக்சேவும் உணர்ந்திருந்தார். தமிழகத்தை மையமாக வைத்துத்தான் இந்திய அரசியல் இருக்கிறது என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.

அதேசமயம், இலங்கைக்கு உதவுவது இந்தியாவுக்கு அவசியம் என்பதையும் அவர் புரிந்திருந்தார். இல்லாவிட்டால் தெற்காசியப் பகுதியில், இந்தியாவின் பிடி தளர்ந்து போய் விடும் என்பது இந்தியாவுக்குத் தெரியும் என்பதையும் அவர் புரிந்து வைத்திருந்தார்.

இதை ராஜபக்சே சகோதரர்கள் சரியாகப் புரிந்து கொண்டு காய்களை நகர்த்தத் தொடங்கினர். பாகிஸ்தான், சீனாவின் உதவிகளை அவர்கள் நாடத் தொடங்கினர். அதே சமயம், முற்று முழுதாக இந்தியாவை புறக்கணித்து விட முடியாத நிலையும் ராஜபக்சேவுக்கு.

இதனால் இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய மூன்று பேரையும் சரிசமமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்ட அவர் பசில், கோத்தபயா மற்றும் அதிபரின் செயலாளர் லலித் வீரதுங்கா ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்தார்.

இந்தக் குழுவின் வேலை, தினசரி, இந்திய அரசுடன் தொடர்பு கொண்டு போர் குறித்த நிலவரங்களை அப்டேட் செய்வது.

அதேபோல இந்தியத் தரப்பிலும் ஒரு ரகசியக் குழு அமைக்கப்பட்டது. சிவசங்கர மேனன், எம்.கே.நாராயணன், பாதுகாப்புத்துறை செயலாளர் விஜய் சிங் ஆகியோர் அந்தக் குழுவில் இடம் பிடித்தனர்.

இந்த இரு குழுக்களும் தினசரி போர் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டன. ஒருவருக்கொருவர் தகவல்களையும் பரிமாறிக் கொண்டனர். இரு குழுக்களும் பெரும்பாலும் தொலைபேசி மூலம் பேசிக் கொண்டாலும் கூட அவ்வப்போது நேரிலும் சந்தித்துக் கொள்ளத் தவறவில்லை. மேலும் ஒவ்வொரு சந்திப்புக்கும் ஏதாவது ஒரு காரணம் கூறி வைக்கப்பட்டது. ஆனால் இவர்களின் ஒவ்வொரு சந்திப்பின்போதும் புலிகள் அழிப்பு குறித்துத்தான் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது.

2007-09 ஆண்டுகளில் இலங்கைக் குழு இந்தியாவுக்கு ஐந்து முறை வந்தது. இந்தியக் குழு 3 முறை இலங்கை போனது.

இந்தியக் குழுவின் பயணங்களிலேயே மிகவும் முக்கியமானது 2008ம் ஆண்டு ஜூன் மாதம் மேனன் தலைமையிலான குழு இலங்கை போனதுதான். அப்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் விறுவிறுப்படைந்திருந்தது.

2008 ஆகஸ்ட் மாதம் கொழும்பில் சார்க் அமைப்பின் 15வது மாநாடு நடக்கவிருந்தது. இந்த நிலையில்தான் ஜூன் மாதம் இந்திய விமானப்படை விமானம் மூலம் ரகசியமாக வந்து சேர்ந்தனர் நாராயணன், மேனன், விஜய் சிங் குழுவினர். அவர்களது வருகை கிட்டத்தட்ட ரகசியப் பயணமாக வைக்கப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகள் , சார்க் மாநாட்டில் பெரும் தாக்குதல் நடத்தக் கூடும் என அப்போது எதிர்பார்ப்பிருந்தது.

அதுபோல நடந்து விடாமல் தடுப்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை முடுக்கி விட வேண்டும் என மேனன் குழுவினர் கேட்டுக் கொண்டனர். மேலும், இந்தியப் பாதுகாப்புப் படையினரை பாதுகாப்புப் பணிக்காக அனுப்புவதாகவும் இந்தியா தெரிவித்தது. இதை ஏற்குமாறும் இலங்கையை அது வலியுறுத்தியது.

ஒருவேளை இந்தியாவின் பாதுகாப்புப் படையினரை இலங்கை ஏற்காவிட்டால் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என்றும் மிரட்டலாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியாவின் படை வருகையை இலங்கை அரை மனதுடன் ஏற்றுக் கொண்டது.

அதன்படி இந்திய கடற்படைக் கப்பல்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் ஆகியவை கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் குவிக்கப்பட்டன.

தேர்தலுக்கு முன்பு 'முடிக்க' விரும்பிய இந்தியா...

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்தியக் குழு கொழும்பு வந்து சேர்ந்தபோது பத்திரிக்கையாளர் குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். இதுபோன்ற ஒரு பாதுகாப்பை நான் அதுவரை இலங்கையில் பார்த்ததே இல்லை. அந்த அளவுக்கு வரலாறு காணாத பாதுகாப்பு முற்றுகையில் இருந்தது இலங்கைத் தலைநகர்.

கிட்டத்தட்ட கொழும்பு நகரம் மூடப்பட்டதைப் போன்ற ஒரு சூழ்நிலை காணப்பட்டது.

பண்டாரநாயகே விமான நிலையத்திலிருந்து மாநாடு நடந்த இடத்திற்கு மன்மோகன் சிங் உள்ளிட்ட இந்திய அதிகாரிகள் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். அனைத்து சாலைகளும் பல மணி நேரத்திற்கு மூடப்பட்டன. பாதுகாப்பு கெடு பிடி காரணமாக கொழும்பில் வசித்து வந்த பலர் வீடுகளை விட்டே வெளியேறியதும் எனக்கு நினைவில் உள்ளது. பிரச்சினை எதுவும் இல்லாமல் சார்க் மாநாடு முடிந்தது.

இந்த பயணத்தின்போது இந்திய அதிகாரிகள், விடுதலைப் புலிகளுடனான போரின் நிலவரம் குறித்தும் முக்கியமாக ஆலோசித்தார்கள். இலங்கை ராணுவ தளபதி பொன்சேகா, கடற்படைத் தளபதி கரன்னகோடா ஆகியோருடன் இந்தியக் குழு ரகசியமாக சந்தித்துப் பேசியது.

இந்த சந்திப்பின்போது சீன மற்றும் பாகிஸ்தான் தலையீடுகள் குறித்து இந்தியத் தரப்பினர் கவலை தெரிவித்தனர். ஆனால் இந்தியா ஆயுத உதவிகளைச் செய்ய மறுத்ததால்தான் சீன, பாகிஸ்தான் உதவியை நாட நேரிட்டதாக இலங்கைத் தரப்பு கூறியபோது இந்தியாவால் அதற்குப் பதிலளிக்க முடியவில்லை என்று இலங்கை அதிகாரி ஒருவர் பின்னர் என்னிடம் தெரிவித்தார்.

இருப்பினும் அதைப் பொருட்படுத்தாத இந்தியா, ராஜபக்சேவிடம் ஒரே ஒரு முக்கிய செய்தியை மட்டும் சற்று உறுதிபட தெரிவித்து விட்டு வந்தது. அது - 2009ல் நடைபெறவுள்ள இந்திய லோக்சபா தேர்தலுக்கு முன்பாக போரை முடித்து விடுங்கள் என்பதுதான்.

தேர்தலின்போது ஈழப் போரின் நிழல் விழுவதையும், அதனால் தங்களது வெற்றி வாய்ப்புகள் பாதிக்கப்படுவதையும் காங்கிரஸ் அரசு விரும்பவில்லை. மேலும், தேர்தல் நேரத்தில் போர் நீடித்துக் கொண்டிருந்தால் அது சரியாக இருக்காது, தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் அரசு பயந்தது.

இந்தியாவின் கவலையைப் புரிந்து கொண்டார் ராஜபக்சே. அதேசமயம், அவர் காலக்கெடு எதையும் நிர்ணயித்துக் கொள்ள விரும்பவில்லை. அதேசமயம், நடவடிக்கைளை விரைவுபடுத்துவதாக அவர் உறுதியளித்தார்.

இதையடுத்து மேனன், நாராயணன், விஜய் சிங் கோஷ்டியினர், பாதி கோரிக்கைள் நிறைவேறிய அரை குறை திருப்தியுடன் டெல்லி திரும்பினர்.

கை கொடுத்த இந்திய கடற்படை...

இலங்கையின் போர் நடவடிக்கைகளுக்கு இந்த சமயத்தில் பெரும் உதவியாக வந்து சேர்ந்தது இந்தியக் கடற்படை.

இந்தியக் கடற்படையின் பேருதவியால் விடுதலைப் புலிகளின் பத்து ஆயுதக் கப்பல்களை தாக்கி தகர்த்தது இலங்கை கடற்படை. சிறிய ரக ஆயுதங்கள் முதல் மிகப் பெரிய கனரக ஆயுதங்கள் வரை இந்த கப்பல்கள் மூலம் புலிகளுக்காக கொண்டு வரப்பட்டன. இவற்றை இலங்கை தாக்கி அழித்ததால் புலிகளுக்கு அது பெரும் இழப்பாக அமைந்தது.

2006ம் ஆண்டு முதல் போர் முடியும் காலம் வரை இந்திய மற்றும் இலங்கை கடற்படைகள் மிகத் திட்டமிட்ட ஒருங்கிணைப்பை மேற்கொண்டிருந்தன. இந்த கூட்டுச் செயல்பாடுகள் காரணமாக, விடுதலைப் புலிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்தியக் கடற்படை, இலங்கைக்கு பல வழிகளில் உதவி புரிந்தது.

உதாரணத்திற்கு, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி மையத்திலிருந்து இந்திய கடற்படை உளவு மற்றும் ரோந்து விமானங்கள் தொடர்ந்து இலங்கைக் கடல் பகுதியை அங்குலம் அங்குலமாக கண்காணித்து வந்தன. தொடர்ந்து அவை இலங்கைக் கடற்பகுதியை சுற்றி வந்தன.

அதிக சக்தி வாய்ந்த ரேடார்கள் பொருத்தப்பட்டவை இந்த விமானங்கள். இலங்கைக் கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான கப்பல் அல்லது படகின் நடமாட்டம் தெரிந்தால் இவை உடனே இலங்கைக் கடற்படைக்குத் தகவல் அனுப்பி அவர்களை உஷார்படுத்தும்.

உடனடியாக விரையும் இலங்கைக் கடற்படையினர், அந்த மர்மக் கப்பல் அல்லது படகை தாக்கி அழிப்பார்கள். இதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கடல் மார்க்கமாக கொண்டு வருவது முற்றிலும் தடைபட்டது. இந்தியாவின் இந்த உளவு வேலையால் கடற்புலிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.

இப்படி இந்தியாவின் உதவியால் முதலில் 2006, செப்டம்பர் 17ம் தேதி விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய ஆயுதக் கப்பலை இலங்கை கடற்படை தாக்கி அழித்தது. 2007ம் ஆண்டின் தொடக்கத்தில் மேலும் 3 கப்பல்கள் அழிக்கப்பட்டன.

இதுதவிர இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்திய கடற்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புப் படையினர், பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடாப் பகுதியில் தொடர்ந்து ரோந்து சுற்றி வந்தனர். இதனால் கடற்புலிகளின் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முற்றிலும் நின்று போயின.

இந்திய கடற்படையின் உதவி குறித்து இலங்கை கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடா 2008ம் ஆண்டு இவ்வாறு கூறினார் - இந்தியாவுடன் ஏற்பட்ட ஒத்துழைப்பு, விடுதலைப் புலிகளை வெற்றிகரமாக எதிர்க்க பேருதவியாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையினருடன் நான்கு முறை இலங்கைக் கடற்படையினர் சந்திப்புகளை மேற்கொள்கின்றனர். இந்திய கடற்படையுடன் இணைந்து ஒருங்கிணைந்த ரோந்துப் பணியையும் இலங்கை கடற்படை மேற்கொள்கிறது என்றார்.

மேலும், விடுதலைப் புலிகளின் அனைத்து ஆயுதக் கப்பல்களையும் தகர்த்து விட்டோம். அவர்களிடம் இப்போது எந்தவகையான கப்பலோ அல்லது படகோ இல்லை. அத்தனையையும் தகர்த்ுத விட்டோம்.

ஒரே ஆண்டில், கிட்டத்தட்ட 10 ஆயிரம் டன் ஆயுதங்களைக் கொண்ட விடுதலைப் புலிகளின் கப்பல்களை தகர்த்து விட்டோம். இந்தக் கப்பல்களில் பிரித்துக் கொண்டு வரப்பட்ட 3 விமானங்களின் உதிரி பாகங்கள், ஆர்ட்டில்லரி, மார்ட்டர்கள், குண்டு துளைக்காத வாகனங்கள், நீர்மூழ்கி சாதனங்கள், ஸ்கூபா டைவிங் செட், ரேடார் உள்ளிட்டவை முக்கியமானது.

இந்தியாவின் உதவியால், 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒருமுறை கிட்டத்தட்ட ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசிய கடல் எல்லை வரை இலங்கை கடற்படை சென்று, புலிகளின் மூன்று கப்பல்களை தகர்த்தனவாம். அக்டோபர் 7ம் தேதி மேலும் ஒரு கப்பலை இலங்கை கடற்படை தகர்த்தது.

இலங்கைக் கடற்படையிடம் போர்க் கப்பல்கள் எதுவும் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவர்கள் தங்களிடம் இருந்த ரோந்துப் படகுகள் உள்ளிட்டவற்றை வைத்துத்தான் விடுதலைப் புலிகளின் கப்பல்கள், படகுகளைத் தகர்த்தனர். இந்த நடவடிக்கைகளை அவர்கள் தெளிவாகவும், துல்லியமாகவும் செய்ய முக்கிய காரணமாக அமைந்தது இந்தியக் கடற்படைக் கொடுத்து வந்த உளவுத் தகவல்களே.

கடல் பகுதியில் எங்கு எந்தக் கப்பல் வருகிறது என்பதை துல்லியமாக இலங்கைக் கடற்படைக்கு இந்தியா சொல்லிக் கொண்டே வந்தது. அதை வைத்து அங்கு சென்று திடீர்த் தாக்குதல்களை நடத்தி புலிகளை நிலை குலைய வைத்தது இலங்கை கடற்படை.

புலிகள் இதை எதிர்பார்க்கவில்லை. காரணம், இலங்கைக் கடற்படையின் திறமை மற்றும் அவர்களின் தாக்குதல் வசதி மகா ஓட்டையானது என்பது அவர்களுக்குத் தெரியும். உண்மையில் இலங்கைக் கடற்படையை விட கடற்புலிகள் பிரிவு பெரும் பலம் படைத்தது. ஆனால் இந்தியா இப்படி உளவு சொல்லி இலங்கைக் கடற்படைக்கு உதவி செய்ததை அவர்கள் அறிந்து கொள்ளாமல் விட்டு விட்டதால் பேரிழப்பை சந்திக்க நேரிட்டது.

கடந்த மார்ச் மாதமே, இந்தியாவின் உதவிகள் குறித்து அரசல் புரசலாக செய்திகள் வெளியாகத் தொடங்கின. ஆனாலும் இதை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளாமல் இருந்தது இலங்கை. காரணம், அப்போது இந்தியாவில் லோக்சபா ஜூரம் தீவிரமாக இருந்ததால்.

ஆனால் இந்தியக் கடற்படை செய்த உதவிகள், இலங்கைக்கு மிகப் பெரிய உதவியாக அமைந்தன என்பது நிதர்சனம். கடற்படையின் தென் பிராந்திய கமாண்ட் மூலமாக மூன்று அதி விரைவு படகுகள், ஒரு ஏவுகணை பொருத்தப்பட்ட கப்பல் ஆகியவை இலங்கைக்காக தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்தன. 2007ம் ஆண்டின் பின் பகுதியிலிருந்தே இந்தியாவின் இந்த உதவி தொடங்கி விட்டது.

இப்படி இந்தியக் கடற்படையும், இலங்கைக் கடற்படையும் சேர்ந்து கடல் பகுதியை முற்றுகையிட்டு தொடர்ந்து இறுக்கி வந்ததால் கடற்புலிகள் கிட்டத்தட்ட செயலாற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்த நிலையில் நெடுந்தீவு புலிகளுக்கு பெரும் அடியாக அமைந்து போனது. யாழ்ப்பாணம் குடா பகுதியில் மக்கள் அதிகம் வசிக்கும் தீவுதான் நெடுந்தீவு.

இந்தத் தீவு ராமேஸ்வரம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களிலிருந்து கிட்டத்தட்ட சம தொலைவில் உள்ளது.

இந்த தீவை கடற்புலிகளைக் கண்காணிக்க மையமாக மாற்றிக் கொண்டது இலங்கைக் கடற்படை. யாழ்ப்பாணம் கடல் பகுதியை மட்டுமல்லாமல் மன்னார் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளையும் இந்தத் தீவிலிருந்தே கண்காணித்து வந்தது இலங்கைக் கடற்படை.

ஆனால் 2007ம் ஆண்டு மே மாதம் நெடுந்தீவில் உள்ள கடற்படை முகாமை விடுதலைப் புலிகள் துணிச்சலுடன் தாக்கினர். அங்கிருந்த 7 வீரர்களைக் கொன்ற கடற்புலிகள், 2 விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், 2 மெஷின் கன், ஒரு ஆர்பிஜி லாஞ்சர், எட்டு ரைபிள்களை தூக்கிக் கொண்டு தப்பினர்.

இந்த முகாமிலிருந்து ஒரு ரேடாரையும் புலிகள் எடுத்துக் கொண்டு போய் விட்டதாக கூறப்பட்டது. இது கடற்படைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தியாவிடம் உதவி கோரியது. இந்த முறை இந்தியா உடனடியாக உதவி செய்தது. ஆனால் என்ன மாதிரியான உதவி என்பதை இரு தரப்பும் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

இப்படி இலங்கைக்கு மறைமுகமாக பல வழிகளில் ஒத்துழைப்பு கொடுத்தும் கூட, பாகிஸ்தான், சீனாவுடனான தனது நெருக்கத்தை இலங்கை அதிகரித்துக் கொண்டே போனது இந்தியா கடுப்பாக்கியது.

இந்தியாவின் புழக்கடை வழியாக சீனாவும், பாகிஸ்தானும் மெல்ல மெல்ல ஊடுறு வருவதை இந்தியா மெளனம் மற்றும் பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.

இந்த நிலையில்தான் 2007ம் ஆண்டு மே மாதம் எம்.கே.நாராயணன் இப்படிக் கூறினார் - இந்தப் பிராந்தியத்தில் இந்தியாதான் மிகப் பெரிய சக்தி என்பதை இலங்கை புரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துள்ளது. பாகிஸ்தான் அல்லது சீனாவிடம் ஆயுதம் வாங்குவதை அது கைவிட வேண்டும். எங்களது வெளியுறவுக் கொள்கைக்குட்பட்டு இலங்கைக்கு உதவ இந்தியா எப்போதும் தயாராக உள்ளது என்பதை இலங்கை உணர வேண்டும் என்றார்.

இலங்கைக்கு உதவ வேண்டும். அதேசமயம், வெளிப்படையான ஆயுத உதவிகளால் ஆட்சி பறி போகும் என்ற இரட்டைக் குழப்பத்தில் அப்போது இருந்தது காங்கிரஸ் அரசு. இருப்பினும் இந்தக் குழப்பம் ஏற்பட உண்மையில் இலங்கை காரணம் அல்ல. அது காங்கிரஸ் அரசாக ஏற்படுத்திக் கொண்ட குழப்பம்தான்.

ஆட்சியையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், அதேசமயம், சீனா, பாகிஸதானையும், இலங்கைக்குள் விட்டு விடக் கூடாது என்ற இரட்டை நப்பாசையால் ஏற்பட்ட குழப்பம் அது.

ஆனால் இலங்கைக்கு அந்தக் குழப்பம் இல்லை. இந்தியா இல்லாவிட்டால் சீனா, பாகிஸ்தான் என அது தெளிவாகவே இருந்தது.

இந்தியாவின் குழப்பம்- சீனா, பாக்.கின் லாபம் ...

இதுகுறித்து முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவிடம் பின்னர் நான் ஒருமுறை பேசியபோது அவர் கூறினார் - முதலில் இந்தியாவிடம்தான் நாங்கள் ஆயுத உதவி கோரினோம். இந்தியா மறுத்த பின்னரே, பிற வாய்ப்புகளை நாங்கள் நாடினோம்.

முதலில் மேற்கத்திய நாடுகளை அணுகினோம். ஆனால் அவர்களின் ஆயுதங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. அதையும் மீறி அவர்களிடம் ஆயுதங்களை வாங்கினால் தொடர்ந்து தருவார்களா என்ற சந்தேகமும் இருந்தது.

இதையடுத்து சீனாவிடம் திரும்பினோம். எங்களுக்கேற்ற விலையில் பெருமளவில் ஆயுதங்களைத் தர அவர்கள் தயாராக இருந்தனர். மேலும் ஐந்து வருட கடனுக்கு அவர்கள் ஆயுதங்களைக் கொடுக்க முன்வந்தனர். இதையடுத்து அவர்களிடம் கொள்முதல் செய்தோம்.

அதேசமயம், பாகிஸ்தானிடம் அவசரமாக தேவைப்பட்ட ஆயுதங்களை மட்டுமே கொள்முதல் செய்தோம் என்றார்.

இந்தியாவின் குழப்பத்தை சீனாவும், பாகிஸ்தானும் இப்படி சாதுரியமாக பயன்படுத்திக் கொண்டன. இதன் விளைவு இன்று இந்தியாவின் பின்புறம், சீனாவும், பாகிஸ்தானும் சத்தம் போடாமல் வந்து நின்று விட்டன என்று தனது நூலில் எழுதியுள்ளார் கோகலே.

Thatstamil

Read more...

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top