இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010
Showing posts with label முல்லைத்தீவு. Show all posts
Showing posts with label முல்லைத்தீவு. Show all posts

Thursday, February 12, 2009

மக்களை கேடயங்களாக பயன்படுத்த வேண்டாம்

இராணுவ ரீதியான நன்மை கருதி தமது கட்டுப்பாட்டுக்குள் சிக்கியிருக்கும் பொது மக்களை உபயோகிக்க வேண்டாமென கிறிஸ்தவ ஆயர்கள் புலிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொதுமக்களின் வாழ்விற்கும் அவர்கள் அசையும் உரிமைக்கும் எதுவித கட்டுப்பாடும் இருக்கக் கூடாது என்றும் ஆயர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

யாழ். ஆயர் அதிவணக்கத்துக்குரிய தோமஸ் செளந்தரநாயகம், மன்னார் ஆயர் அதிவணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப், அநுராதபுரம் ஆயர் அதிவண. நோர்பட் அன்ட்ராடி, குருணாகல் அங்கிலிக்கன் ஆயர் அதிவண. குமார இலங்க சிங்க, கொழும்பு ஆயர் அதிவண. டுலிப் டி. சிக்கேரா ஆகியோர் கூட்டாக இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள வேண்டு கோளில் மேலும் குறிப்பிடுகையில்:-

வன்னி யுத்தத்தில் காயமடையும் பொதுமக்களின் தொகை அதிகரிப்பது குறித்து சமீபத்திய அறிக்கைகள் எம்மை மிகுந்த கரிசனையடையச் செய்தது. மரணமடைந்தவரின் குடும்பங்களிற்கு எமது அனுதாபங்களை தெரிவிக்கி றோம்.

“யுத்தமற்ற வயலம்” ஒன்றை அமைப்பதற்கு எடுத்த முயற்சியை நாம் மறுபடியும் வரவேற்கிறோம். ஆரம்ப கட்டநடவடிக்கையை எடுத்ததற்கு இலங்கை அரசிற்கு எமது நன்றி. இந்த ஒழுங்கின் முறைமைகளுக்கு மதிப் பளித்து மிகவும் அவதானத்துடன் அப்பிரதேசத்தை சூழ உள்ள அண்மித்த பகுதிகளில் யுத்தத்தை தவிர்க்கும்படி இருபகுதியினருடனும் பணிவுடன் கேட்கிறோம்.

பொதுமக்கள் தத்தமது வீடுகளுக்குத் திரும்பவும்செல்லும் சாதகமான சூழ்நிலை உருவாகும் வரைக்கும் அவர்கள் இவ்வலயத்தில் அடைக்கலம் தேடி தங்கியிருக்க சகல உதவிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும். இவ்வலய த்தின் கண்காணிப்புக்கும், நிர்வாகத்திற்கும் உதவியை வழங்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் அகதிகள் வீடமைப்புச் சங்கம், சுயாதீன தமிழ் தலைவர் களை அழைக்கும்படி இலங்கை அரசிடம், எமது கோரி க்கையை நாம் மீண்டும் முன்வைக்கிறோம்.

வன்முறையற்ற முழுமையான இலங்கை உருவாகுவ தற்கு எமது செபங்களையும், முயற்சிகளையும் உறுதியளி க்கிறோம்.

Read more...

Wednesday, February 11, 2009

விடுதலைப் புலிகள் இந்தத் தாக்குதலை நடத்தவில்லையெனவும், இராணுவத்தினரே இந்தத் தாக்குதல்களை நடத்தியதாகவும் தமிழ்நெட் இணையத்தளத்தை மேற்கோள்காட்டி ரொய்டர்ஸ் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது

Sri Lanka rebels deny gunning down civilians

COLOMBO (Reuters) - The Tamil Tigers on Wednesday denied gunning down civilians streaming out of Sri Lanka's war zone, and the Red Cross said 16 patients had been killed in shelling.

Tens of thousands of civilians are trapped in a 175-square-km (67 sq miles) area held by the Liberation Tigers of Tamil Eelam (LTTE), surrounded by a military intent on crushing the separatist rebels and finishing a civil war that started in 1983.

Another 2,260 streamed out of the tiny war zone on Tuesday, keeping up the rapid pace of exodus that started last week, the military said.

On Tuesday, the military accused the LTTE of killing 19 civilians and wounding 69 more trying to flee. Sri Lanka's government, aid agencies and rights groups say the LTTE has forced Tamils to stay in the war zone, which the rebels deny.

Pro-rebel web site www.TamilNet.com said on Wednesday the rebels blamed Sri Lankan troops for the shooting. The web site quoted C. Ilamparithy, whom it identified as LTTE political chief for the area in question, Puthukudiyiruppu.

"Sri Lankan military machinery, which has relentlessly killed and maimed thousands of civilians during the past four weeks, is now engaged in a propaganda drive to divert the mounting pressure on the Colombo government," TamilNet quoted him as saying.

It is impossible to verify either side's claims, since the war zone is off-limits to unaccompanied journalists and both sides have engaged in a relentless propaganda duel for years.

"SITTING DUCKS"

For weeks, the LTTE through TamilNet has accused the military of killing civilians, which the government again rejected as a classic ploy of the rebels when they have been cornered throughout the war's history.

"They know the moment these civilians move out on them, they are sitting ducks and there will be nothing they can do," military spokesman Brigadier Udaya Nanayakkara said.

More than 50,000 soldiers are converging on the tiny wedge of jungle in northeastern Sri Lanka which is all the Tigers still hold. Analysts say they have no more than 2,000 hardcore guerrillas remaining and are facing conventional defeat.

At least 30,000 people have fled this year, nearly all of them in the past week, according to the military. That is despite a suicide blast blamed on a female LTTE fighter that killed 29 soldiers and civilians at a refugee encampment on Monday.

Aid agencies say 250,000 civilians are caught in the fighting, although the government puts the number at half of that. The United Nations said on Tuesday it was preparing for an exodus of 150,000 people.

Nanayakkara said footage from an unmanned aerial drone (UAV) taken this week showed the rebels were herding people further into their territory, toward the coastline.

The International Committee of the Red Cross (ICRC) on Wednesday was preparing to ferry another 140 patients out of the war zone by boat. 

On Tuesday, it had sailed 260 patients out from the coastal village of Putumattalan, where it had set up a makeshift hospital. Shelling there on Monday killed 16 people, the ICRC said without saying who was responsible.

"We are shocked the patients are not afforded the protection they are entitled to," ICRC's mission head for Sri Lanka, Paul Castella, said in a statement late on Tuesday.

He urged both sides to allow refugees to leave and aid to be brought in to the war zone. The government has promised safe passage but rebuffed calls for a ceasefire. Aid agencies say the LTTE has blocked aid convoys from leaving at times.

By C. Bryson Hull

(Editing by Bill Tarrant)

Read more...

முல்லைத்தீவு குருவிக்குளம் சந்தி நேற்று படையினர் வசம்: பிரிகேடியர் உதய நாணயக்கார

முல்லைத்தீவு, குருவிக்குளம் சந்தியை பாதுகாப்புப் படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.முல்லைத்தீவு முழுவதையும் புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கும் நோக்குடன் முன்னேறிவரும் இராணுவத்தின் 57வது படைப் பிரிவினர் இந்தப் பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் இந்த குருவிக்குளம் பிரதேசம் அமையப்பெற்றுள்ளதாக தெரிவித்த அவர் புலிகளால் மறைத்து வைக்கப் பட்டிருந்த பெருந்தொகையான ஆயுதங்களையும் படையினர் மீட்டெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரி - 56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் துப்பாக்கி ரவைகள் மற்றும் பல்குழல் இயந்திர துப்பாக்கி ரவைகள் முழுமையாக நிரப்பப்பட்ட கொள் கலன் ஒன்றையும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இராணுவத்தினர் மீட்டெடுத்துள்ளனர்.

குருவிக்குளம் மேற்கு பிரதேசத்தை முழுமையாக கைப்பற்றிய இராணுவத் தின் 57வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தலைமையிலான படைப் பிரிவினர் இந்தப் பிரதேசத்தில் தொடர்ந்தும் பாரிய தேடுதல்களை மேற் கொண்டு வருவதாக பிரி கேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, முல்லைத்தீவில் எஞ்சியுள்ள புலிகளின் பிரதேசங்களை நோக்கி பாதுகாப்புப் படையினர் முன்னேறி தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்த இராணுவப் பேச்சாளர் அங்கிருந்து பெருந்தொகையான ஆயுதங்களையும் மீட்டெடுத்துள்ள தாகவும் அவர் குறிப்பிட்டார்.

Read more...

Tuesday, February 10, 2009

Sri Lankan rebels accused of gunning down civilians

 

Sri Lanka's Tamil Tiger guerrillas on Tuesday ot dead 17 civilians and wounded nearly 70 others fleeing territory still under rebel control, military spokesperson Udaya Nanayakkara said.

Survivors of the attack who arrived at a military post told how Tiger fighters had fired on a group of 1 000 people trying to cross the frontlines to safety, he said.

"The civilians came to an army position carrying the 17 dead and 69 others who had gunshot injuries," Nanayakkara said.
According to the government, increasing numbers of non-combatants are attempting to escape from the rebels, who face imminent defeat in their decades-long armed struggle for an independent Tamil homeland.

Among those wounded in the attack were 27 women and 11 children, the military spokesperson said.
It came a day after a Tamil Tiger suicide bomber killed 30 people at a centre for fleeing civilians, in another apparent attempt to stop them from leaving.

But thousands of Tamils are crossing the frontlines in the north of the island each day, the government has said, as it pushes on with a massive offensive to crush the Tamil Tigers after 30 years of unrest.
Sri Lanka accuses the Liberation Tigers of Tamil Eelam (LTTE) -- as they are formally known -- of using the civilians as "human shields".
Monday's suicide bombing was condemned by the United Nations and the United States, which backed Colombo's stance, saying that the attack was an "apparent effort by the LTTE to discourage Tamils from leaving the conflict area".

http://www.mg.co.za/article/2009-02-10-sri-lankan-rebels-accused-of-gunning-down-civilians

Read more...

இடம்பெயர்ந்தோர் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 பொதுமக்கள் கொலை 69 பேர் காயம்

பொதுமக்கள் அரசக்கட்டுப்பாட்டுப்பகுதிக்கு புதுகுடியிருப்பு முல்லைத்தீவு வனப்பகுதிக்கூடாக வந்து கொண்டிருந்த வேளை, புதுக்குடியிருப்புப் பகுதியில் வைத்து இன்று காலை விடுதலைப் புலிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உள்ளதாகவும் இவர்களில் 17பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மற்றும் 69பேர் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

 Fired_Civillian_J

Rebels shoot dead 17 civilians

SRI Lanka's Tamil Tiger guerrillas hav shot dead 17 civilians and wounded 69 others fleeing the shrinking territory still under rebel control, military spokesman Udaya Nanayakkara said.

Survivors of the attack who arrived at a military position in Iddayarkattu told how Tiger fighters fired on them as they tried to cross the frontlines, Mr Nanayakkara said.

The group of about 1000 civilians were carrying 17 bodies, and said the Tigers opened fire to stop them seeking shelter with the security forces, he added.

http://www.news.com.au/story/0,27574,25036872-23109,00.html

Read more...

Monday, February 9, 2009

விடுதலைப் புலிகள் இப்போது மிகக் குறுகியதொரு பகுதிக்குள்ளேயே முடக்கப்பட்டுள்ளனர்:பிரிகேடியர் உதய நாணயக்கார

விடுதலைப்புலிகளின் கடல் மற்றும் ஆகாய நடவடிக்கைகளை முற்றாக சீர்குலைப்பதில் படையினர் வெற்றி பெற்றுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.விடுதலைப் புலிகளின் சகல விமான ஓடுபாதைகளையும் படையினர் கைப்பற்றியுள்ளதன் மூலம் அவர்களது ஆகாய நடவடிக்கைகளும் சாலை கடற்புலித் தளத்தை கைப்பற்றிய தன்மூலம் அவர்களது கடல் நடவடிக்கைகளும் முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரிகேடியர் நாணயக்கார தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் இன்று மிகக் குறுகியதொரு பகுதிக்குள்ளேயே முடக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது தொடர்ந்தும் படையினர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

விடுதலைப்புலிகள் தற்போது இருக்கும் இடமும் பாதுகாப்பு படையினரால் விரைவில் கைப்பற்றப்படும் .

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்னமும் உயிருடன் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம் .

எனினும் விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை படையினரிடம் ஒப்படைத்துவிட்டு சரணடைவது தான் அவர்களுக்கு எஞ்சியுள்ள ஒரே வழியென்றும் தெரிவித்தார்.

Read more...

Suicide bomber kills 28 at Sri Lanka refugee camp: military

COLOMBO (AFP) – A suspected Tamil Tiger suicide bomber attacked a camp for civilians fleeing Sri Lanka's war zone on Monday, killing 20 soldiers and eight civilians, army spokesman Udaya Nanayakkara said.

He said the female bomber from the Liberation Tigers of Tamil Eelam (LTTE) targeted a camp near Visuamadu, an area the military recently captured from the rebels.

"Twenty soldiers, including three women soldiers were killed," Nanayakkara said. "Another eight civilians were also killed and 40 civilians were wounded."

Read more...

ஈழத்தமிழர்களை போரில் இருந்து காப்பாற்ற தமிழக வக்கீல்கள் 14 பேர் கள்ளத் தோணியில் தூத்துக்குடியில் இருந்து முல்லைத்தீவை நோக்கி சென்றனர்.

கரூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முருகையன் தலைமையில் ஈழத்தமிழர்களை காக்கக் கோரி, போராட்டம் நடத்தி வந்தனர். இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லையெனில் முல்லைத்தீவு சென்று பேராடுவோம் என்றும் அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று தூத்துக்குடி வழக்கறிஞர்கள் 6 பேரும், கரூர் வழக்கறிஞர்கள் 8 பேர் முருகையன் தலைமையில் முல்லைத்தீவு செல்ல முடிவு செய்தனர். தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், வழக்கறிஞர்கள் 14 பேரும் தூத்துக்குடிக்கு முன்பு 3 கி.மீ. தொலையில் இருந்து ஒரு கள்ளத் தோணியில் புறப்பட்டனர்.
முல்லைத்தீவு நோக்கி சென்றுக்கொண்டிருந்த முருகையனை தொடர்பு கொண்டு பேசியபோது, நாங்கள் இன்னும் இரண்டு மணி நேரத்தில் முல்லைத்தீவு சென்று விடுவோம் என்று தெரிவித்தார். வக்கீல்கள் முல்லைத்தீவு பயணம் செய்வதை அறிந்த கடலோர காவல்படையினர் அவர்களை பிடிக்க விரைந்துள்ளனர்.
ஈழத்தமிழர்களுக்காக தமிழக வக்கீல்கள் முல்லைத்தீவு பயணம் மேற்கொண்டுள்ள செய்தி தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்களிடையே பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more...

சுதந்திரபுரத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் 17 பேர் பலி, 45 பேர் காயம்

முல்லைத்தீவு மாவட்டம் விஸ்வமடு வடக்கில் அமைந்துள்ள சுதந்திரபுரம் பகுதியிலுள்ள முகாமில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டதுடன், 45 பேர் காயமடைந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த சுதந்திரபுரம் முகாமிலிருந்த பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் குண்டை வெடிக்கவைத்ததாகவும், இந்தச் சம்பவத்தில் 17 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது.

எனினும், இந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவரவில்லையெனவும், மருத்துவக் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாகவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

முல்லைத்தீவில் நேற்றும் ஷெ­ல் வீச்சு; 72 பொதுமக்கள் பலி; 198 பேர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம் பகுதியில் நேற்றும் ஷெல் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 72 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 198 பேர் காயமடைந்துள்ளனர், தாக்குதல் நடைபெற்ற பகுதி கண்கொண்டு பார்க்க முடியாத அளவுக்கு பெரும் அவலம் மிகுந்ததாக இருக்கிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.
சுதந்திரபுரம் பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து கொண்டிருந்த மக்கள் மீது ஞாயிறன்று காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை கடும் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என இணையத்தளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணையத்தளத்தில் வெளியிட்ட ஏனைய விவரங்கள் வருமாறு:
இரண்டு மைல் நீளமான தூரத்துக்கு மிகச் செறிவாக பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்த போது, விமானப்படையின் விமானங்கள் வட்டமிட்டன எனவும் அப்போதே பீரங்கித்தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் கூறப்பட்டது.
சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள், பச்சிளம் குழந்தைகள் என பெரும் எண்ணிக்கையான மக்கள் உடல் சிதறிக் கொல்லப்பட, மேலும் பெருமளவிலானோர் படுகாயமடைந்து வீழ்ந்த பெரும் அவலம் அங்கு நிலவியது. கொல்லப்பட்டவர்களின் உடல்களையோ, அல்லது காயமடைந்து வீழ்ந்தோரையோ மீட்டு எடுக்க முடியாத அளவுக்கு தொடர்ந்து கடுமையான பீரங்கி தாக்குதல்கள் நடந்தவண்ணம் இருந்தன. இதனால் காயமடைந்தோரை மீட்க முற்பட்டவர்களும் காயங்களுக்கு உள்ளாகி வீழ்ந்தனர் எனவும் கூறப்படுகிறது.
இதேபோன்று பிற்கல் 3 மணியளவில் ஷெல் தாக்குதல் ஓய்ந்த பின்பு காயமடைந்தவர்கள் மீட்கப்பட்ட போது காயமடைந்த பலர் இறந்து போயிருந்தனர். இறந்தவர்கள் போக, காயமடைந்த நிலையில் இருந்த 198 பேர் மீட்கப்பட்டனர்.
காயமடைந்தோர் பலர் மீட்கப்பட்ட போதும் தற்போது வைத்தியசாலைகள் எதுவும் வன்னியில் இல்லாத நிலையில் மரங்களின் கீழும், கொட்டகைகளின் கீழம், வெறும் பாய்களின் மீது வைத்தே அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றது.
ஞாயிறன்று நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 72 என முதற்கட்ட தகவல்களில் உறுதி செய்யப் பட்டுள்ளது. இருந்தாலும் மீட்புப்பணிகள் முழுமையாக நடைபெறாத நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

முல்லைத்தீவில் புலிகள் கொடுத்த அதிர்ச்சி தாக்குதல் -லக்பிம இதழின் பார்வையில்..

முல்லைத்தீவு பகுதியில் கடந்தவாரம் விடுதலைப்புலிகள் அலை அலையாக வந்து தாக்குதலை நடத்தியதாகவும் இத்தாக்குதலை முறியடிப்பதற்கு இராணுவ தலைமையகத்தில் இருந்து இராணுவத்தளபதி சரத்பொன்;சேகா தாக்குதலை நெறிப்படுத்தியதாகவும் லக்பிம ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது இதுதொடர்பாக லக்பிம வாரஏட்டில் வெளிவரும் பாதுகாப்பு பகுதியில் தெரிவிக்கப் பட்டுள்ளவையின் முக்கிய பகுதிகள்.. இலங்கை அரசாங்கம் தனது 61வது சுதந்திர தினமான நாளை கொண்டாடும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கையில் அதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகள் முல்லைத்தீவில் பாரிய தாக்குதல்களை நடத்தினர் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை பொலித்தீன் பைகளில் பொதிசெய்துவருகின்றனர் எனவே முல்லைத்தீவு நீரேரியை கடந்து தாக்குதலினை நடத்தக்கூடும் என கடந்தவாரம் இராணுவ புலனாய்வுத்துறையினர் எச்சரித்திருந்தனர். 59வது படையணியின் முன்னனி பாதுகாப்பு நிலைகள் கடல் நீரேரியை நோக்கியே அமைந்துள்ளன எனினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விடுதலைப்புலிகளின் 30 கரும்புலிகள் படையினரின் நிலைகளுக்குள் ஊடுருவியிருந்தனர் அவர்கள் படையினரை ஏற்றிச்சென்ற உழவூர்த்தி மற்றும் பேருந்து என்பவற்றை முதலில் தாக்கியழித்தனர் இதனைத்தொடர்ந்து பீரங்கி மற்றம் மோட்டார் தாக்குதல்கள் படையினரின் நிலைகள் மீது மழைபோல பொழியப்பட்டன எறிகணைகள் வீழ்ந்து வெடித்தபோது ஏறத்தாழ 700 தொடக்கம் 1000 வரையான விடுதலைப்புலிகள் தாக்குதலை தொடங்கினர். 59 பிரிகேட்டைச்சேர்ந்த 7வது கெமுனுவோச் பற்றலியன் இந்த மோதலில் சிக்கிக்கொண்டது இதனைத்தொடர்ந்து படையினர் 3 சதுரகிலோ மீற்றர் தூரம் பின்நகர்ந்தனர் மோத் இடம்பெற்ற பகுதிக்கு மேலதிக படையணிகள் நகர்த்தப்பட்டன 53வது படையணியின் வான்நகர்வு பிரிகேட்டைச்சேர்ந்த படையினரும் அங்கு நகர்த்தப்பட்டனர் முல்லைத்தீவு நகரத்தை கைப்பற்றுவதே விடுதலைப்புலிகளின் திட்டம் இராணுவம் பெருமளவில் பல்குழல் எறிகணைகள் மற்றும் பீரங்கி எறிகணை தாக்குதல்களை நடத்தியதுடன் வான்படையினரும் உதவிக்கு அழைக்கப்பட்டனர். கடற்புலிகளின் தளபதி சூசை கடல் நடவடிக்கைகயை வழிநடத்த கேணல் பானு மற்றம் சொர்ணம் ஆகியோர் தரைநடவடிக்கைகளை வழிநடத்தினர் 59வது படையணியின் முல்லைத்தீவு நகரத்தில் இருந்தும் படையணி நான்கை ஓட்டுச்சுட்டான் வரையிலும் பின்நகர்த்துவதற்கு அவர்கள் முயற்சித்திருந்தனர். படையினரின் பதில் நடவடிக்கைகளை இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா இராணுவத்தலைமையகத்தில் இருந்து நேரடியாக நெறிப்படுத்தினார் இரண்டாவது நாள்விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் படையினரின் முன்னணி நிலைகள் மீது வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனம் மூலம் தாக்குதலை நடத்தினர் இதனைத்தொடர்ந்து விடுதலைப்புலிகளின் அணிகள் தாக்குதலை உக்கிரப்படுத்தியிருந்தன இராணுவம் சிறப்பு அணிகளையும் கொமாண்டோ அணிகளையும் அங்கு நகர்த்தியது கடந்த புதன்கிழமை அதிகாலைவரை மோதல்கள் தொடர்ந்தன இராணுவத்தளபதி கடந்த புதன்கிழமை அதிகாலை 3.00 மணிவரை கட்டளை தலைமையகத்தில் இருந்து தாக்குதலை நெறிப்படுத்தினார் எனினும் பாதுகாப்பு அமைச்சு இத்தாக்குதல் தொடர்பான விபரங்களை வெளியிடவில்லை என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

புலிகளின் ட்ரக் வண்டி மீது படையினர் தாக்குதல் 34 புலிகள் பலி: புதுக்குடியிருப்பில் சம்பவம்

குண்டு துழைக்காத தகடுகள் பொறுத்தப்பட்ட புலிகளின் ட்ரக் வண்டி ஒன்றை இலக்கு வைத்து படையினர் நடத்திய பாரிய தாக்குதல்களில் அந்த வாகனம் பலத்த சேதங்களுக்குள்ளானதுடன் அதில் இருந்த 34 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு, ஒட்டுச்சுட்டான் வீதியின் ஊடாக முன்னேறிவரும் இராணு வத்தின் 53வது படைப் பிரிவினர் கனரக யுத்த தாங்கிகளை பயன்படுத்தி நேற்று முன்தினம் மாலை இந்த கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பை நோக்கி வேகமாக முன்னேறிவரும் இராணுவத்தினரை இலக்கு வைத்து கடுமையான தாக்குதல்களை மேற்கொள்ளும் பொருட்டே புலிகளின் ட்ரக் வண்டி வேகமாக வந்ததாகவும் இதனை அவதானித்த படையினர் அந்த ட்ரக்கை இலக்கு வைத்து கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட புலிகளின் 12 பேரின் சடலங்களை நேற்று மாலை வரை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளனர்.



Read more...

விசுவமடு, குருவிகுளம் தேடுதல்: மோட்டார் குண்டு ஏவும் கருவிகள் கண்டுபிடிப்பு

விடுவிக்கப்பட்ட விசுவமடு மற்றும் குருவிகுளம் பகுதிகளில் படையினர் மேற்கொண்ட பாரிய தேடுதல்களின் போது புலிகளின் மோட்டார் குண்டு களை ஏவும் இரண்டு கருவிகளை இராணுவத்தினர் நேற்றுக் கைப்பற்றியுள் ளதாக இராணுவப் பேச்சாளர் பிரி கேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

60 மி.மீ. ரக மோட்டார் குண்டுகளை ஏவும் கருவிகள் ஒன்றும், 80 மி.மீ. ரக மோட் டார் குண்டுகளை ஏவும் கருவி ஒன்றும் இவற்றில் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார். படையினர் கடுமையான தாக்குதல்களினால் சேதமடைந்த நிலையில் புலிகள் விட்டுச் சென்றுள்ள இந்த மோட்டார் குண்டுகளை ஏவும் இரண்டு கருவிகளையும் இரா ணுவத்தின் இரண்டாவது செயலணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ரோஹன பண்டார தலைமையிலான படைப்பிரிவினரே கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இராணுவத்தின் 57வது படைப்பிரிவினர் ராமநாதன்புரம் பகுதியில் நடத்திய பாரிய தேடுதல்களின் போது கைக்குண்டுகள் 26, 152 மி.மீ. ரக மோட்டார் குண்டுகள் 2, 122 மி.மீ. ரக மோட்டார் குண்டுகள் 10, ரி-56 ரக துப்பாக்கிகள் 2 என்பவற்றை மீட்டெடுத்துள்ளனர்.

இது தவிர ஒரு இடத்தில் களஞ்சியப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த பெருந்தொகையான உலர் உணவுகளையும், 7350 லீட்டர் டீசல்களையும் மீட்டெடுத்துள்ளனர். ஒவ்வொன்றும் 210 லீட்டர்களைக் கொண்ட 35 பரல்கள் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். புதுக்குடியிருப்பு, தாமரக்குளம் பகுதிகளில் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றுவருவதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Read more...

Sunday, February 8, 2009

முல்லைத்தீவு கடற்பரப்பில் புலிகளின் இரு படகுகள் அழிப்பு - டோரா படகு தாக்கப்படவில்லை என்கிறார் பேச்சாளர்

முல்லைத்தீவு கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்த கடற்படையினரின் டோராப் படகுகள் மீது கடற்புலிகள் எவ்வித தாக்குதலையும் நடத்தவில்லை.
மாறாக, புலிகளின் படகுகள்மீது கடற்படையினர் தாக்குதலை நடத்தி ஆறு புலிகள் இயக்க உறுப்பினர்களைக் கொன்றதுடன், இரண்டு புலிகளின் படகுகளையும் அழித்துள்ளனர். என்றும் அதனால் கடற்படையினருக்கு எவ்விதச் சேதங்களும் ஏற்படவில்லை என்றும் கடற்படையின் பேச்சாளர் டீ.கே.பீ. தசநாயக்க தெரிவித்தார்.
கடற்புலிகள் நடத்திய வலிந்த தாக்குதலில் கடற்படைக்குச் சொந்தமான டோராப் படகொன்று மூழ்கடிக்கப்பட்டதுடன் மேலுமொன்று சேதமாக்கப்பட்டதில் கடற்படையினர் 15 பேர் கொல்லப்பட்டதான இணையத்தளச் செய்தியானது ஜோடிக்கப்பட்டதாகும் எனவும் அவர் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
இன்று அதிகாலை 5.30 மணிமுதல் 6 மணிவரையான காலப்பகுதியில் முல்லைத்தீவிலிருந்து சுமார் 52 கிலோமீற்றர் தொலைவிலான கடற்பரப்பில் கடற்புலிகளுக்குள்ம் கடற்படையினருக்கும் இடையில் கடும் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த மோதல் சம்பவத்தில் கடற்புலி உறுப்பினர்களில் நால்வரும் கடற்கரும்புலிகளில் இருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். அத்துடன் இதன் போது கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் கடற்படைக்குச் சொந்தமாக சூப்பர் டோரப் படகொன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் மேலுமொன்று பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளது என்று இணையத்தளங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
இவ்வாறான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் பலவீனமடைந்துள்ள புலிகள் இவ்வாறான பொய்யான செய்திகளின் மூலம் அனைவரது கவனத்தையும் திசை திருப்ப முÙற்சிக்கின்றனர் என்றும் கடற்படையின் பேச்சாளர் மேலும் கூறினார்.

Read more...

முல்லைத்தீவுப் பிரதேசங்களில் உக்கிரமோதல். தற்கொலைப் போராளிகள் களமிறங்கலாம்.

நேற்று முதல் முல்லைத்தீவு புலொப்பளை, விசுவமடு, ராமநாதபுரம் பகுதியில் படையினருக்கும் புலிகளுக்கும் உக்கிர மோதல் இடம்பெற்று வருவதாக தெரியவருகின்றது. தற்போது பலதரப்பட்ட ஆழுத்தங்களுள் நிற்கும் புலிகள் இறுதி யுத்தத்தை அடைந்துள்ளனர். இனிவரும் சண்டைகளில் தற்கொலைப் போராளிகளை இறக்கலாம் என களநிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Read more...

படையினர் புதுக்குடியிருப்பு நகரை முற்றுகையிட்டுள்ளனர்

விடுதலைப்புலிகளின் இறுதி பலம் பொருந்திய நகராக கருதப்பட்ட புதுக்குடியிருப்பு நகரின் வாயிலை கடும் மோதல்களிடையே இராணுவத்தின் 59 , 53 படையணிகளும் நான்காவது செயல் படையணியும் முற்றுகையிட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

Read more...

Saturday, February 7, 2009

பொன்னம்பலம் தனியார் மருத்துவமனை மீது நடத்திய தாக்குதலில் நோயாளர் 61பேர் படுகொலை

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பில் இயங்கி வந்த "மருத்துவர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை" மீது சிறிலங்கா வான்படையின் "மிக்" ரக வானூர்திகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் அங்கு சிகிச்சை பெற்று வந்த 61 நோயாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

வன்னி எங்கும் நேற்றும் இன்றும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மட்டும் 126 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 238 பேர் காயமடைந்துள்ளனர்.
புதுக்குடியிருப்பில் உள்ள "மருத்துவர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை" மீது நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் சிறிலங்கா வான்படை குறிவைத்து குண்டுத் தாக்குதலை நடத்தியது.

இதில், அங்கு காயங்களுக்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் இருந்த நிலைலேயே மருத்துவமனை முற்றாக அழிக்கப்பட்டு விட்டது.
இதில் 61 வரையான நோயாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நோயாளர்களில் பெருமளவிலானோர் தமது உறவினர்களின் தொடர்புகளை இழந்து, அவர்களின் தொடர்பிற்காக காத்திருந்து சிகிச்சை பெற்று வந்தவர்கள் எனவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

இத்தாக்குதலின் போது வீதியால் சென்று கொண்டிருந்த 12 பேர் காயமடைந்துள்ளனர்.

Read more...

Surrender or face complete rout- President

COLOMBO - Sri Lanka President Mahinda Rajapakse warned cornered Tamil Tiger rebels to lay down their arms and unconditionally surrender or face a complete rout.

"I want to tell the Tigers: 'lay down arms and surrender to security forces'," the president told a public rally in the northwestern district of Kurunegala.

He said the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had been encircled in a narrow strip of land and had taken thousands of civilians hostage.

"They must let the civilians go and then unconditionally give themselves up," he said.

The president, who earlier in the week vowed to defeat the militants within days, said the Tiger guerrillas had no choice but to surrender.

"I must warn them we will not halt our operations against terrorism until we reach our final objective," he said to resounding applause from thousands of supporters.

The military said the Tigers had been restricted to an area less than 100 square kilometres (38 square miles) in the northeastern district of Mullaittivu where officials estimate 120,000 civilians are also trapped.

The president's call-to-surrender came amid mounting international appeals for a "no-fire" period to allow the civilians to get out of the conflict zone.

International rights groups and foreign governments have accused the Tamil Tigers of holding the civilians as human shields, a charge repeated by Rajapakse's government.

The president's speech came as the military said they had stepped up air attacks against key Tamil Tiger targets in the shrinking area still under rebel control.

A senior Sea Tiger leader known as Soosai was among 11 rebels killed in an air strike on Friday evening, officials said.

Rajapakse said the Tigers were no longer able to escape by boat because security forces had taken control of the sea board the rebels earlier held under their control.

"They can jump into the lagoon but they can't even jump into the sea any more," the president added.

- AFP

Read more...

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடமிருந்து இறுதியாக கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் 89 ஆயிரம் சிவிலியன்களே புலிகளின் பிடியில் சிக்கியுள்ளனர்.

புலிகளைப் பாதுகாக்கும் முயற்சியை கைவிட்டு விட்டு புலிகளின் பிடியிலுள்ள அப்பாவித் தமிழ் மக்களை பாதுகாப்பதே சர்வதேச அமைப்புக்களின தும், தன்னார்வ நிறுவனங்களினதும் முன்னுள்ள மிக முக்கிய பணியாகும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் படை நடவடிக்கைகள் தொடர்பாக விமர்சிப்பவர்களும், அதனை திரிவுபடுத்தி பொய்ப் பிரசாரங்கள் செய்கின்றவர்கள் எவரும் அப்பாவி பொது மக்களை புலிகள் பலாத்காரமாக பிடித்து மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி வருவதையோ விடுவிக்காமல் இருப்பதையோ பேசுவதில்லை.
ஆயுதங்களை மாத்திரம் ஏந்தி யுத்தம் செய்வது எமது நோக்கமாக இருந்திருந்தால் இன்று இந்த யுத்தம் முடிவுக்கு வந்திருக்கும். பொது மக்களின் நலனிலும் பாதுகாப்பிலும் அக்கறைகொண்டதனாலேயே இந்த நடவடிக்கையை எமது படையினர் இன்று வரை நீடித்துச் செல்கின்றனர்.
புலிகள் இயக்கத்திலிருந்து தப்பி வருபவர்களுக்கு பொது மன்னிப்பு கொடுப்பது தொடர்பாக பலர் பேசுகின்றனர். இவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக புதிதாக கூற வேண்டியது ஒன்றும் இல்லை. ஏனெனில், அவர்கள் சரணடைய வேண்டியது மாத்திரமே உள்ளது. இதில் எமக்கு எந்தப் பிரச்சினைகளும் கிடையாது.
கிழக்கை விடுவிக்கும் மனிதாபிமான நடவடிக்கையின் போது புலிகள் இயக்கத்திலிருந்து தப்பி வந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தேவையான புனர்வாழ்வையும், பயிற்சிகளையும் வழங்கி அவர்களில் சிலர் வெளி நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எனவே, பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பான நடவடிக்கையை நாங்கள் நடைமுறையில் காண்பித்துள்ளோம் என்றார்.
இலங்கையில் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள், தன்னார்வ, அமைப்புக்கள் சிறந்த சேவைகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கி வருகின்றன. இதில் மாற்றுக் கருத்தில்லை. என்றாலும் இந்த நிறுவனங்களில் பணி புரியும் அதிகாரிகளோ மோசமாகவும், புலிகளுக்கு சார்பான நிலையிலும் செயற்படுகின்றனர்.
புலிகள் ஆயுதத்தை மாத்திரம் ஏந்தி யுத்தம் செய்யவில்லை. இந்த யுத்தத்தை முன்னெடுப்பதற்கு வேறு வழிகளையும் பயன்படுத்தியுள்ளார்கள். எனவே தான் புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தில் இருப்பவர்களும், சில சர்வதேச அமைப்புக்களும் புலிகளுக்குச் சார்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
படையினர் நடத்திய மோட்டார் தாக்குதல்களிலேயே அநேகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என்று சிலர் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்களில் சிலரிடம் சூட்டுக் காயங்களும் காணப்படுகின்றன.
நேருக்கு நேர் மோதல்களில் ஈடுபடுபவர்களுக்கே சூட்டுக் காயம் ஏற்படும். துப்பாக்கியுடன் காயமடைந்த நிலையில் இருப்பவர்களை புலி உறுப்பினர்கள் என்றும், துப்பாக்கி இல்லாத நிலையில் காயமடைந்தவர்கள் இருந்தால் அவர்கள் சிவிலியன்கள் என்றும் சொல்கின்றார்கள். ஆனால் தற்பொழுது அநேகமான புலிகள் சிவில் உடைகளுடன் இருந்து கொண்டே மோதல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
தற்பொழுது புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தின் அரைவாசி பிரதேசத்திலேயே அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயம் அமைந்துள்ளது.
இலங்கை போன்று பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முகம் கொடுத்து வரும் எந்த ஒரு நாடும் வழங்காத பல சந்தர்ப்பங்களை நாங்கள் பொது மக்களுக்காக வழங்கியுள்ளோம் என்றும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
புலிகளின் பிடியில் நான்கரை இலட்சம் மக்கள் இருப்பதாக ஒருசிலரும், இரண்டரை இலட்சம் மக்கள் இருப்பதாக இன்னும் சிலரும் தெரிவிக்கின்றனர். இந்த எண்ணிக்கையை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஏனெனில் இந்த எண்ணிக்கை புலிகளின் அழுத்தத்தினால் கூறப்பட்டவையாகும்.
இரண்டு இலட்சத்து எட்டாயிரம் பொதுமக்களே உள்ளார்கள் என்று 2002 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் இடம்பெயர்ந்து வந்தவர்களில் சுமார் 60 ஆயிரம் பேர் கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் வசித்து வருகின்றனர். இது தவிர மலையகம் உட்பட ஏனைய பகுதிகளை நோக்கியும் பெருந்தொகையானவர்கள் சென்றுள்ளதுடன், மேலும் சிலர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்றார்.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடமிருந்து இறுதியாக கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் 89 ஆயிரம் சிவிலியன்களே புலிகளின் பிடியில் சிக்கியுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அதேசமயம், கடந்த சில மாதங்களாக வருகை தந்த பெருந்தொகையானோர் வவுனியாவிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

அமைச்சர் கெஹெலிய

படையினரால் அண்மையில் மீட்டெடுக்கப்பட்ட பிரதேசங்களில் புலிகளும், அவர்களுக்கு சார்பானவர்களும் கூறுவது போன்று பெருந்தொகையான பொதுமக்கள் வாழ்ந்தமைக்கான எந்தவித தகவல்களும் இல்லை என்று தெரிவித்த தேசிய பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, முல்லை மாவட்டத்தில் எத்தனையோ குளக்கட்டுகள் வந்த போதிலும் அவற்றை பயன்படுத்தி மக்கள் விவசாய நடவடிக்கைகள் செய்த எந்த தடயங்களும் இல்லை என்றும் தெரிவித்தார்.
புலிகள் உலகளாவிய ரீதியில் பாரிய வலையமைப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சர்வதேச மட்டத்திலும் பெரு மளவிலானவர்களை பணம் கொடுத்து வாங்கியுள்ளமையும் தெரிய வருகிறதென்றும் குறிப்பிட்டார்.
புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கும் வரையில் இராணுவ ரீதியான நடவடிக்கை நிறுத்தப்பட மாட்டாது என்று உறுதியாக தெரிவித்த அவர், பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்தார்.

Read more...

கடற்புலிகளின் தலைவர் சூசையை இலக்கு வைத்துத் தாக்குதல்: பதினொரு பேர் பலி


முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள,புதுக்குடியிருப்பின் வடக்காக அமைந்திருந்த கடற்புலிகளின் தலைவரான சூசையின் மறைவிடம் மீது விமானப்படையினர் நேற்று (06) மாலையில் பாரிய தாக்குதலை மேற்கொண்டதாக விமானப்படைப் பேச்சாளர் விங்கமாண்டர் ஜானக நாணயக்கார தெரிவித்தார்.

விமானப் படையினரின் இந்தத் தாக்குதல் காரணமாக புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் உட்பட பதினொரு பேர் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

விமானப் படைக்குச் சொந்தமான கிபீர்-7 ரக யுத்த விமானங்கள் நடத்திய தாக்குதல் காரணமாக, புதுக்குடியிருப்பின் வடக்காக ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருந்த இந்த சொகுசுக் கட்டடத் தொகுதி முற்றாகச் சேதமடைந்தது.

இந்தத் தாக்குதல் இடம் பெற்றபோது கடற்புலிகளின் தலைவர் சூசை அங்கிருந்ததாகவும் இச்சம்பவத்தில் அவர் கொல்லப்பட்டோ காயமடைந்தோ இருக்கலாமென உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

Read more...

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top