இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010
Showing posts with label பாடல்கள். Show all posts
Showing posts with label பாடல்கள். Show all posts

Saturday, December 26, 2009

உங்கள் அபிமானத் திரையரங்குகளில் காணத்தவறாதீர்கள்





புலி நடுங்குது புலி நடுங்குது
இடி இடிக்குது இடி இடிக்குது
வெள்ளைக் கொடி பறக்குது கொடி பறக்குது
வேட்டைக்காரன் மகிந்தவைப் பாத்து


தொடை நடுங்குது குலை நடுங்குது
துடி துடிக்குது பதை பதைக்குது
நிலை குலையுது கதி கலங்குது
வேட்டைக்காரன் மகிந்தவைப் பாத்து


கரும்புலியளும் நிலை குலையுது
கடற் புலியளின் தலை பறக்குது
பறந்து வாறான் மகிந்த ராசா
துண்டைக் காணோம் துணியைக் காணோம்
நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
துவக்கைப் போடு கொடியைக் காட்டு


புலி நடுங்குது புலி நடுங்குது
இடி இடிக்குது இடி இடிக்குது
வெள்ளைக் கொடி பறக்குது கொடி பறக்குது
வேட்டைக்காரன் மகிந்தவைப் பாத்து


தொடை நடுங்குது குலை நடுங்குது
துடி துடிக்குது பதை பதைக்குது
நிலை குலையுது கதி கலங்குது
வேட்டைக்காரன் மகிந்தவைப் பாத்து


யாரிவன் யாரிவன் யாரிவன்
கோத்தபாயாவின் கொண்ணன் தானிவன் தானிவன் தானிவன்
ஒத்தயா வாறான் ஒண்ணுக் கொண்ணா வாறான்
சிங்கத்துக்கு பிறந்த சிங்கம் தான்டா வாறான்
விழுந்து குப்பறப் படுத்து வெள்ளைக் கொடியைக் காட்டு


இவனுக்கு இல்லாத கரும்புலி
வேறு எவனுக்கும் இல்லாத வெறும்புலி
திரும்பும் திசையெல்லாம் அவனடா
இவன் திமிருக்கு முன்னாலை எவனடா


காட்டு கொடியைக் காட்டு வெள்ளைக் கொடியைக் காட்டு
பங்கரு பங்கரு பங்கரு பங்கரு பங்கரு பங்கருடா
எங்கை பங்கரு பங்கரு பங்கர் எங்கடா எங்கடா


புலி நடுங்குது புலி நடுங்குது
இடி இடிக்குது இடி இடிக்குது
வெள்ளைக் கொடி பறக்குது கொடி பறக்குது
வேட்டைக்காரன் மகிந்தவைப் பாத்து


தொடை நடுங்குது குலை நடுங்குது
துடி துடிக்குது பதை பதைக்குது
நிலை குலையுது கதி கலங்குது
வேட்டைக்காரன் மகிந்தவைப் பாத்து

நன்றி ஈழநாசம்


Read more...

Monday, June 22, 2009

கொடுங்கோல் அழிய கொடிபிடிப்பர் பார்

மண்டியிட்டு சரணடைந்து மாண்டுபோன புலிகள் போய்..
பிஞ்சுகளின் உறவுகளை பிணமாக்கி.. இறுதியிலே
அகதியாய் வேடமிட்டு உன் அரவணைப்பு தேடி வந்துள்ளார்
சிங்கக்கொடியை கொடு சிம்மாசனமும் கொடு.. அவர்
கையைப் பிடித்து தமிழினத்தின் கண்ணில் குத்து
உலகுக்கு பறைசாற்று.. கையேந்து
ஒட்டு மொத்த இலங்கையையும் அடகுவை

எரிமலையை மிதித்து வந்த…பிஞ்சுகள்
பாதத்து வெந்தபுண் ஆறவில்லை
வெடித்து சிதறிய குண்டுக்குள்…தாய்
இறக்கைக்குள் காத்த குஞ்சுகள்
கழுத்தளவு நீரில் காவி
கரைசேர்த்த கண்மணிகள்…கைகளிலே
சிங்கக்கொடி திணித்து
சீண்டுகிறான் ராசபக்ச…….

எம் பிஞ்சுகளிடம்
பிரித்தெடுத்த பெற்றோரைக்கொடு……..
சுற்றிப்போட்ட முள்வேலியை எடு……..
உடன் பிறந்த உறவுகளுடன் வாழவிடு……
ஒடித்திரிந்த மண்ணில் உலாவவிடு…
பிடித்த நிலத்தில் இராணுவ முகாம்களை அகற்று
குண்டழித்த பாடசாலைகளைக் கட்டி தா
குழந்தைகளைப் படிக்கவிடு சுதந்திரமாய்…….



கங்கா

Read more...

காலத்தின் கட்டாயம் மக்கள் களம்திறக்கும்

களமாடி மடிந்தவர்கள்..எம் இனத்தின்
காலம் விடியுமென்ற கனவுடனே சென்றவர்கள்
தலைமையை நம்பி தம்உயிரை ஈந்த…எம்பிள்ளைகள்
உடல் தேடிப்புணர்வதற்கு போரின் தர்மம் அறியா
பாசிசவெறிநாய்கள் பகலிரவாய் அலைகிறது

புலத்து ஆய்வாளப்புலிகளோ ..தலைவர்
இறுதிக்கண நினைவுகட்கு ஆருடம் சொல்கிறது
என்ன கொடுமை
எழுதி உசுப்பேத்தி.. புலத்துமக்களை
மாயைக்குள் தள்ளி மண்ணின் அழிவுக்கு வித்திட்டோரே
தமிழ்செல்வனும் தலமையும் இருக்கட்டும்..முதலில்
நீங்கள் மக்களிடம் மன்னிப்பு கோருங்கள்

ஜநாவே மனிதஉரிமை மகான்களே
வென்றுவரவில்லையென்று எம்மக்கள் வேதனையில் அழவில்லை
பாசிசத்தின் கரங்களிலே
குதறக்குடுத்ததெண்ணி இதயம் வெடிக்கிறது
கொடுமைக்கு குரலெழுப்பா அமைப்பெதற்கு
மானுடத்தின் மீதான ஈனத்தனத்திற்கெதிராய்
துரும்பைத்தன்னும் தூக்கிப்போடமுடியா அமைப்பெதற்கு
இழுத்து முடுங்கள்…இல்லையேல்
சுயமாய் செயலாற்றும் வல்லானாய் மாறு

சமுதாயஆர்வலர்கள் ஓர்வழியில் சங்கமிக்கும் நேரமிது
இன்னமும் முட்டிமோதல் முடிவற்று
வடக்குஇகிழக்கு தமிழனாய் முஸ்லிமாய் சிங்களவனாய்
பிரித்துப்போடும் வக்கிரம் நிமிர்கிறதா
பிள்ளைகளைப் பெற்ர வயிறுகட்கு…

நாளை
உங்கள் பிள்ளைகள் கனவுவெல்லுமென்ற
நம்பிக்கையை கொடுங்கள்
போரடிக்கும் காலமல்ல
ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கும் நேரமிது


கங்கா

Read more...

மக்கள்குரல் மட்டுமே மலையைப் பிளக்கும்

நாடுகடந்தெனினும் காசியண்ணா கனவு மெய்ப்படப்போகிறது
மேதகு எல்வாம் முடித்து மிதவாத தலைவர்களிடம்
தமிழன் தலைவிதியை தள்ளியுள்ளார்-
மண்ணில் எந்த முற்போக்குமெழா வண்ணம்
துடைத்தழித்து துரத்தி, யதார்த்தவாதி ராஜபக்ச
காலில்விழப்பாதி மீதியெல்லாம் புலத்தில் பிரகடனம்

இனிப்பழம் பழுக்கும் வெளவால் வரும்
பதின்மூணாம் சட்டம் எழும்
மேடைபோட்டு முழக்கமிடும்…எனினும்
இரத்தத்திலகமிட எவனும் வரமாட்டான்
மண்ணில் கொட்டிய குருதிகாயவில்லை
எடுத்துப்பொட்டிடுங்கள்
விசிலடிக்க கைதட்ட தென்பில்லை
வேதனையின் வடுக்கள் ரணமாகி
அழுகின்ற ஓலத்தை கேளுங்கள்
கைதுசெய்து கொண்டுசென்ற பிள்ளைகளின்
கதையெல்லாம் மறக்கும்…முகாமிலும்
தேர்தல்வரும் ஆச்சரியமில்லை

எந்தக்கண்ணிவெடி கிடக்கிறது..யாழில்
முஸ்லிம் சோதரர்கள் வாழ்ந்த நிலத்தில்
மீளக்குடியேற்று
காட்டைவெட்டி களனியாக்கி வாழ்ந்த கரங்களிலே
வீட்டைக்கட்டிக்கொடு
மீள்கட்டுமானம் நீட்டியதுவக்குகளின் நடுவே
முகாமிற்குள் றோட்டுப்போடுவதில்லை
வாழ்ந்த நிலத்திற்கு மீளச்செல்வது
கேட்டுப்பாருங்கள் பேரினவாதப் பேயிடம்
பின்னணியில் நின்ற காந்திதேசத்திடம்
கண்மூடிக்கிடந்த கருணை வள்ளல்களிடம்
எவன் வருவான்
உழைக்கும் மக்களும் சிந்தனையும்
ஓங்கிஒலிக்காவரை எவன் தருவான்

கங்கா

Read more...

இழப்பு உனக்கேது மண்ணில் மக்களிற்கே

குண்டுகட்டிவெடித்துச் சிதறி;
கொஞ்சமா இழந்தோம்
நெஞ்சத்து ஈரமற்று
இறந்த இராணுவத்தின் எண்ணிக்கை மட்டுமே கணக்குப்பார்த்தவன்
வெடித்துச்சிதறிய பிள்ளைகட்காய் இரக்கப்பட்டதாயில்லை
அடித்துப்பிடியுங்களென்று பணம்கொடுத்து
காருக்குள் புலிப்பொம்மையும்
கார்த்திகைக்கு மண்டபத்தில் மலரும்தூவியவன்
புலத்துத்தமிழன்
வருடாந்த உரைகட்;காய் வாழ்வைதொலைத்தவர்கள் எத்தனை


இன்னமுமா இறுமாப்பும் இனவெறியும்
கொல்லக்கொடுக்க பிள்ளைகளில்லை
கோரத்தின் கரங்களில் எல்லாமிழந்து
ஊனமாய் நடைப்பிணமாய்
சிறப்புமுகாமெனும் சிறைக்குள் வதைப்பட்டும்
நகர்வுகளோ மீண்டும்
நம்பிக்னைக்கான துளிர்களைகிள்ளியெறிந்து
தளிர்களை கருக்கும்
தன்னலமும் வீம்பும் வீராப்பும்
அழிவின்பின் மீண்டெழுதல்
அர்த்தமற்றுப் போதலெனின் எழாமல் இருத்தல்மேல்
கடந்த கொடியபொழுதுகளின் தவறுகளை பகிரங்கப்படுத்து
அனைத்தையும் சுயவிமர்சனம் செய்
அரசுஇயந்திரத்தையும் மக்களையும் இனம்காணு
இறுககப்பற்று எந்தஇனம் மதமென்று பார்க்காதே
நேசசக்திகளை அரவணைத்துக்குரலெழுப்பு

புலத்திலுன் புலன் புதியபாதைபற்ரி சிந்தித்தல் தகர்த்து
எழுகின்ற போலிக்குள் இழுபட்டாய்
இழப்பு உனக்கேது இனத்திற்கே
இளையதலைமுறையே
உன்பெற்றோரின் மாயையை உடைத்தெழு…..
உலகப்பரப்பே கணனிக்குள்உன்காலம் தேடுதல் செய்….
தேசப்பரப்பெங்கும் விரிகின்ற விடுதலையின் வீச்சைக்காண்பாய்…..
மக்கள்சக்தியின் மகத்துவம் உணர்வாய்…
இனிவரும் எழுச்சி இனஜக்கியத்தில்
வெல்லப்படமுடியுமென்ற இயங்கியல் புரிவாய்..

கங்கா

Read more...

Sunday, June 21, 2009

நச்சுக்குண்டைப் போடவைத்த நாசக்காரி -இவள் நாடுவிட்டு நாடுவந்தமோசக்காரி‏

பொழுதுபோக்கு பாடல்கள்

http://www.tamilkathir.com/news/1505/58//d,view_audio.aspx

http://www.tamilkathir.com/news/1504/58//d,view_audio.aspx

http://www.tamilkathir.com/news/1503/58//d,view_audio.aspx

http://www.tamilkathir.com/news/1500/58//d,view_audio.aspx

http://www.tamilkathir.com/news/1496/58//d,view_audio.aspx

Read more...

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top