இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010
Showing posts with label கருணாநிதி. Show all posts
Showing posts with label கருணாநிதி. Show all posts

Tuesday, November 24, 2009

ஈழ விடுதலைப்போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள் நீரைப் பொழிகின்றன: கலைஞர்

பிரபாகரன் மீது புகார் கூறி முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கைக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன.




இதுதொடர்பாக முதலமைச்சர் கருணாநிதி கேள்வி-பதில் வடிவில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.




- நீங்கள் 18-11-2009 அன்று "நம் மவுன வலி; யாருக்கு தெரியப் போகிறது?'' என்ற தலைப்பில் எழுதிய கடிதம் பற்றி பலபேர் ஒன்றுபட்ட கருத்துக்களை தெரிவித்த போதிலும், ஒருசிலர் அதை ஏற்காமல் விமர்சனம் செய்கிறார்களே?




ஈழ விடுதலைப்போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள் நீரைப் பொழிகின்றன- அதே நேரத்தில் இளந்தலைவர் ராஜீவ்காந்தியும், நாவலர் அமிர்தலிங்கமும், யோகேஸ்வரனும், முகுந்தனும், சிறீ சபாரத்தினமும், பத்மநாபாவும், யோதீஸ்வரனும் கொல்லப்பட்ட போது, அவர்களை இழந்த மனைவி மக்களும், உற்றார் உறவினர்களும், நண்பர்களும் கண்ணீர் பெருக்கிய போது - அவர்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்துவதற்கு எனக்கு உரிமை இல்லையா?




விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த தமிழ்ச் செல்வன் மறைந்தபோது 4-11-2007 தேதிய பத்திரிகைகளில் நான் ஒரு இரங்கல் கவிதை எழுதினேன். அது,




’’எப்போதும் சிரித்திடும் முகம் எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்! இளமை, இளமை, இதயமோ; இமயத்தின் வலிமை, வலிமை! கிழச் சிங்கம் பால சிங்கம் வழியில் பழமாய்ப் பக்குவம் பெற்ற படைத் தளபதி! உரமாய்த் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய உத்தம வாலிபன் - உயிரனையான் - உடன்பிறப்பனையான்; தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் உளமெலாம் தன்புகழ் செதுக்கிய செல்வா; எங்கு சென்றாய்?''




மடிந்த ஒருவருக்கு அனுதாபம் தெரிவித்ததைக் கூட, ஜெயலலிதாவினால் பொறுத்துக்கொள்ள முடியாமல், அவர் வெளியிட்ட அறிக்கையில் புலிகளுடன் கருணாநிதிக்கு ரகசியத் தொடர்பு இருக்கின்றது என்றும், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தவர்தான் அவர்.




அப்படியெல்லாம் அறிக்கை விட்டவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமல், சொல்ல மனம் இல்லாமல் அல்லது துணிவு இல்லாமல் என்மீது பாய்கிறார்களே; தமிழ் இனம் தாழ்வதற்கும், வீழ்வதற்கும் இதைவிடக் காரணங்கள் இருக்க முடியுமா என்று எண்ணிப் பாருங்கள்!’’என்று தெரிவித்துள்ளார்.








நன்றி நக்கீரன்

Read more...

Tuesday, November 17, 2009

2005ல் கிடைத்த ஜனநாயக வாய்ப்பினை பிரபாகரன் தட்டிவிட்டார் - முதல்வர் கருணாநிதி

ஈழவிடுதலைப் போராட்டத்தினை எதிர்காலக் கணிப்போடு விடுதலைப்புலிகள் நடக்காததால் பல உயிர்கள் பலியாகின. 2005ல் கிடைத்த ஜனநாயக வாய்ப்பினைப் பிரபாகரன் எட்டி உதைத்துவிட்டார் என தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி கூறியள்ளதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக அறிய வருகிறது. இது குறித்து மேலும் அறிகையில், வி.புலிகள் எதிர்கால கணிப்போடு போர் தந்திரத்தை செயற்படுத்தாததால் பல உயிர்கள் இழந்ததார்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ள தவறியதால் தமிழ் மக்கள் உயிரிழக்க நேரிட்டதாகவும் , சகோதர யுத்தம் காரணமாக தமிழர்களின் உயர்வுக்காக பாடுபட வேண்டியவர்களும் அர்ப்ப நாளில் உயிரிழக்க நேரிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.


யார் மீது குற்றம் கூறுவதற்காக தான் இதனைக் கூறவில்லையெனத் தெரிவிக்கும் அவர், ராஜீவ் காந்தியின் கொலை ஈழ விடுதலைப்போராட்டத்தை தண்ணீர் விட்டு அணைத்தது போல ஆகிவிட்டது எனவும், 2005 ம் ஆண்டு ஜனநாயக ரீதியாக கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு வந்த போதும், அதை பிரபாகரன் எட்டி உதைத்து தவறான காரியம் செய்துவிட்டதாகவும், விடுதலைப்புலிகள் அவசரமாக எடுத்த அரசியல் முடிவின் விளைவுகள் எங்கே போய் முடிந்தன என்பதை எண்ணிப்பார்த்து மௌனமாக அழுவதாகவும் கூறியுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்காக தந்தை செல்வா காலத்திலிருந்து திமுக நடத்திய போராட்டங்களையயும் இந்த அறிக்கையில் அவர் பட்டியலிட்டுள்ளதாவும், மேலும் அச் செய்திகள் தெரிவிக்கின்றன.


அன்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்த, சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள நேர்க்காணல் ஒன்றை சுட்டிக்காட்டிய, முதலமைச்சர் அச் செவ்வியின் சார்பாகவே இந்த அறிக்கையில் கருத்துக்கள் வெளியிடப்படுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Read more...

Monday, October 12, 2009

தமிழக எம்.பிக்கள் குழு யாழ்ப்பாணம்,நிவாரண கிராமங்களுக்கு நேரில் விஜயம்

இடம்பெயர்ந்தோர் நிலைமைகளை ஆராய்வு மக்களுடன் உரையாடி குறைநிறைகளை கேட்டறிந்தனர்

இலங்கை வந்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்றக் குழுவினர் நேற்றுக் காலை யாழ். நகருக்கும், அங்கிருந்து வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கும் விஜயம் செய்தனர்.

நேற்றுக் காலை விமானப் படை விமானம் மூலம் இரத்மலானையிலி ருந்து யாழ். நகரைச் சென்றடைந்த குழுவினர் பலாலி விமானத் தளத்தி லிருந்து ஹெலிகொப்டர் மூலம் யாழ். கோட்டையை சென்றடைந் தனர்.

காலை 9.45 மணியளவில் யாழ். கோட்டையை வந்தடைந்த குழுவினரை வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, யாழ். அரச அதிபர் கணேஸ் ஆகியோர் வரவேற்றதுடன் தந்தை செல்வா நினைவுத் தூபி அருகே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரவேற்றார்.

தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்தபின்னர் பேண்ட், மற்றும் நாதஸ்வர மேள வாத்தியங்களுடன் ஊர்வலமாக யாழ். பொது நூலகத்துக்கு குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திலும் தமிழக குழுவினர் கலந்துகொண்டனர்.

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழக குழுவின் தலைவர் ரி. ஆர். பாலுவுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். யாழ். மேயர் பதவிக்கு தெரிவாகியுள்ள திருமதி யோகேஸ்வரி கவிஞர் கனிமொழிக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். இந்த நிகழ்வுகளின் பின்னர் யாழ். நூலகத்துக்கு முன் குழுமியிருந்த மக்களுடனும் தமிழக் குழுவினர் உரையாற்றினர்.

தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் யாழ். ஆயரும், செல்வநாயகம் ஞாபகார்த்த அறங்காவல் குழுவின் தலைவருமான பேராயர் வணக்கத்துக்குரிய ஜெபநேசன் அடிகளாரும் தமிழக குழுவினருடன் பேசினார்.

யாழ். நிகழ்வுகளை முடித்துக் கொண்ட தமிழக குழுவினர் ஹெலிகொப்டர்களில் காலை 11.30க்கு வவுனியா புறப்பட்டனர்.

வவுனியா மனிக்பாம் நிவாரணக் கிராமத்தை அண்டியுள்ள ஹெலிக்கொப்டர் நிறுத்துமிடத்துக்கு பகல் 12.15 மணியளவில் வந்து சேர்ந்த தமிழக குழுவினர் மனிக்பாம் நிவாரணக் கிராமத்தின் வலயம் 1, வலயம் 2 என்பவற்றுக்கு விஜயம் செய்தனர்.

நிவாரணக் கிராமத்திலுள்ள பாடசாலைகளை பார்வையிட்டதுடன் அங்கிருந்த மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்துகொண்டனர். நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்கள் தமிழக குழுவில் அங்கம் வகிக்கும் கலைஞர் கருணாநிதியின் புதல்வி கவிஞர் கனிமொழியையே பெரும்பாலும் சூழந்துகொண்டனர்.

கதிர்காமர், அருணாசலம், இராமநாதன் வலயம் 4, 5 போன்ற நிவாரணக் கிராமங்களுக்கும் அவர்கள் விஜயம் செய்தனர். சில நிவாரணக் கிராமங்களின் உள்ளே சென்று மக்களுடன் உரையாடினர். சில கிராமங்களை வாகனத்தில் சென்றபடியே பார்வையிட்டனர்.

சென்னையிலுள்ள துணை உயர் ஸ்தானிகராலயத்தின் உதவி உயர் ஸ்தானிகர் வீ. கிருஷ்ணமூர்த்தி, வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலர் காரியவசம், இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் ஆகியோரும் தமிழக குழுவினருடன் சென்றுள்ளனர்.

வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்து தமிழக குழுவினர் நேற்று மாலை 4.00 மணிக்கு மீண்டும் கொழும்பு திரும்பினர்.


Thinakaran

Read more...

Sunday, July 12, 2009

கனிமொழி தலைமையிலான குழு விரைவில் இலங்கைக்கு வருகிறது

இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மகளுமான கவிஞர் கனிமொழி தலைமையிலான தமிழக குழு ஒன்று விரைவில் இலங்கை வரவுள்ளது. இக்குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களைப் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கவிஞர் கனிமொழி இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இலங்கையில் சுமார் மூன்று இலட்சம் தமிழர்கள் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் சரிவர செய்து கொடுக்கப்படவில்லை என்று பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது தொடர்பான செய்திகளை தமிழகத்திலுள்ள பல பத்திரிகைகள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.

Read more...

Wednesday, July 1, 2009

தனி ஈழம் சாத்தியமல்ல, சுயாட்சியே சாத்தியம்-கருணாநிதி

சென்னை: ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது முக்கியமா? அல்லது தமிழர்களை காப்பாற்றி அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாப்பது முக்கியமா? என்பதை யோசி்த்து தமிழர்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாத வகையில் நம்முடைய கருத்துக்களை நீக்குபோக்குவுடன் தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.


மேலும் எதிர்காலத்தில் தமிழர்கள் சிங்களர்களுடன் சேர்ந்து ஒரு தமிழர் அரசை அமைக்கும் நிலை உருவாகலாம் என்றும் அவர் கூறினார்.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அங்கு தமிழர்களுக்கு வாழ்வுரிமை பெற்றுத் தரவும், மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட அடிப்படை வசதிகளை வழங்குவது குறித்தும் விவாதிக்க சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்மீது, அதிமுக சார்பில் பன்னீர் செல்வம், காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ், பாமக சார்பில் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ராமசாமி ஆகியோர் பேசினர்.

இலங்கையில் தமிழர்களின் நிலைமை படுமோசமாக இருப்பதாகவும், திறந்தவெளியில் ஆடு, மாடுகளை போல் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர்கள் அந்த மக்களுக்கு தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க செய்ய வேண்டும் என்று கோரினர்.

மேலும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களர்களை குடியேற்றும் முயற்சிகளை தடுத்து வடக்கு, கிழக்கு பகுதிகளை மீட்டு தமிழர்கள் முழு உரிமையுடன் சிங்களர்களுக்கு இணையான சமவாழ்வு வாழ்வதற்கு மத்திய அரசு மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதற்கு பதிலளித்து முதல்வர் கூறுகையில்,

இன்று இலங்கைத் தமிழர் பிரச்சனையை அரசியல் ஆக்காமல் அனைத்து கட்சியினரும் ஒரே விதமான கருத்தை தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இலங்கையில் நடைபெறும் பிரச்சனை என்பது சிங்களர்களுக்கும், தமிழ் இனத்திற்குமான போராட்டமாகும். 50 ஆண்டு காலமாக இலங்கை தமிழர் தலைவர் செல்வா, அமிர்தலிங்கம், குட்டிமணி, ஜெகன் காலம் முதல் போராட்டம் நடைபெறுகிறது.

இலங்கையில் உள்ள தமிழர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். தமிழ் மொழி சீரழியாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக போராட்டம் நடைபெற்றது. இதற்காக தமிழீழம் அமைய வேண்டும் என்ற குரலும் எதிரொலித்தது.

இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளுக்கு இதில் பல்வேறு நிலைப்பாடுகள் உண்டு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழீழம் என்கிற பிரிவினைக்கு ஆதரவு இல்லை. மாநில சுயாட்சி என்றஅளவில்தான் தீர்வு அமைய வேண்டும் என்பதுதான் அவர்களின் கொள்கையாக இருந்து வந்தது. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இப்போது தமிழீழம்தான் தீர்வு என்று தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளது.

பாமக கூட தமிழீழம்தான் தீர்வு என்று பேசி வந்தது. ஆனால் இன்று மாநில சுயாட்சி போதும் என்ற அளவிற்கு பேசி இருக்கிறார்கள். அதுதான் இப்போது முடியும். தமிழர்களுக்கு சம உரிமை, தமிழ்மொழிக்கு சம தகுதி, தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு இதற்காக நாம் போராடும் நிலைதான் தற்போது உள்ளது.

பேரறிஞர் அண்ணா திராவிட நாடு கோரிக்கையை முதலில் எழுப்பி பின்னர் அதை கைவிட்டு விட்டார். அதற்காக இந்த சபையிலேயே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் பாராட்டி பேசியுள்ளார். மக்கள் தலைவர்களாகிய நாம் மக்களை பாதிக்கக் கூடிய ஒரு பிரச்சனை உருவானால் அதற்கு மாற்று என சிந்தித்து எந்த வழியில் சென்றால் அது சரியாக இருக்கும் என தீர்மானித்து செயல்பட வேண்டும்.

அப்படித்தான் திராவிட நாடு கொள்கையை கைவிட்ட போதும் அதற்குரிய காரணம் அப்படியே இருக்கிறது என்று மத்திய அரசிடம் நாம் வலியுறுத்தியதன் விளைவாக இன்று மாநில அரசுகளை மதிக்கும் போக்கு மத்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.

அதே போல இலங்கையில் தமிழர்களை மதிக்கின்ற ஒரு அரசு அமைய வேண்டும்.

எதிர்காலத்தில் தமிழர்கள் சிங்களர்களுடன் சேர்ந்து ஒரு தமிழர் அரசை அமைக்கும் நிலை உருவாகலாம். ஒரு காலத்தில் வெள்ளையர்கள் மட்டுமே அதிபராகலாம் என்று அமெரிக்காவில் இருந்த நிலை மாறி இப்போது கருப்பர் இனத்தை சேர்ந்த ஒபாமா அதிபராகி இருக்கிறார். இதே போல இலங்கையிலும் தமிழர்களின் அரசு அமைவதற்கு வெகு தூரம் இல்லை என்கிற நம்பிக்கையை நாம் பெற வேண்டும்.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதனால் என்னைப் போல இந்த உலகில் யாரும் மகிழ்ச்சி அடைந்துவிட முடியாது.

ராஜபக்சேவை கூண்டில் ஏற்றி விசாரிக்க வேண்டும் என்று இங்கு பேசப்பட்ட கருத்தை கருணாநிதி கேட்கவில்லை. இன்னும் அவர் ராஜபக்சேவுக்கு மரியாதை தருவதை பார்த்தீர்களா என்று பேசக்கூடும். அப்படி பேசுபவர்கள் அவர்களுடைய மனசாட்சியை எடுத்து வெளியில் வைத்து விட்டுத்தான் சொல்ல வேண்டும்.

தமிழர்களை காப்பாற்ற வேண்டும். அவர்களுடைய வாழ்வாதாரம் வளமிக்கதாக ஆக்க வேண்டும் என்பது முக்கியமா? அல்லது ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது முக்கியமா? என்பதை நாம் சிந்தித்து பேச வேண்டும். அங்குள்ள தமிழர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டும் என்றால் அது சிங்கள அரசின் மூலம்தான் முடியும். அதற்காக இந்தியாவை நாம் வற்புறுத்த செய்ய வேண்டும்.

நம்முடைய குரல் உயர்ந்த அளவிற்கு மத்திய அரசின் குரல் உயர்த்தப்படவில்லை என்ற கருத்தை இங்கு பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் பேசியதிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. எனவே சிங்களர்களுக்கு எதிராக பேசி அவர்களை கோபமடைய செய்யக் கூடாது. சிங்கள பௌத்த துறவிகள் கூட நம் மீது கோப அக்னியை வீசக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள்.

எனவேதான் இலங்கை தமிழர்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாத வகையில் நீக்குபோக்குவுடன் நம்முடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். இலங்கை பிரச்சனையை பொறுத்தவரை ஆதி முதல் அந்தம் வரை முழுமையாக தெரிந்தவன் நான். இதை 'பண்டாரக வன்னியன்' என்ற நாவல் மூலம் நான் விரிவாக எழுதியிருக்கிறேன்.

இலங்கை தமிழர்களுக்கான நிவாரணப் பொருட்கள் அவர்களை சென்றடைவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஏற்கனவே செஞ்சிலுவை சங்கம் மூலம் தமிழக அரசோ, மத்திய அரசோ நிவாரண உதவிகளை அவர்களுக்கு வழங்கி இருக்கிறது. தற்போது வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்களும் பாதிக்கப்பட்ட தமிழர்களை சென்றடைவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. நிச்சயம் தமிழர்களிடம் அந்த பொருட்களை கொண்டு சேர்க்கும்.

இலங்கை தமிழர்களுக்கு தற்போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தொண்டைமான் மற்றும் அவருடைய மகன் ஆகியோர் என்னை வந்து சந்தித்திருக்கிறார்கள். ஒரு குழு வந்து இலங்கையில் பார்வையிட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். மத்திய அரசின் அனுமதி பெற்று உரிய அதிகார அழைப்பின் பேரில்தான் அங்கு செல்ல முடியும் என்று நான் தெரிவித்திருக்கிறேன்.

தற்போது இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு உரிய வழிவகைகளை சிங்கள அரசு மூலம் நீங்கள் செய்யுங்கள். நாங்கள் துணை நிற்கிறோம். நிச்சயம் உரிய நல்ல பலன் கிடைக்கும் என்று அவர்களிடம் நானே பேசியிருக்கிறேன். இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அமைச்சர்கள் மூலமாகவும் தெரிவித்திருக்கிறேன். நானே தொலைபேசி மூலமாகவும் பேசியிருக்கிறேன். நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும். எப்போதும் இதே போல தமிழர்களாக ஒற்றுமையாக இருந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்போம் என்றார் கருணாநிதி.

இதையடுத்து பேசிய ஜி.கே.மணி இலங்கை விஷயத்தின் தனது கட்சியின் நிலையை விளக்கினார். அவர் கூறுகையில் பாமகவைப் பொறுத்தவரை தமிழீழம்தான் இறுதி தீர்வு என்பதில் உறுதியாக இருக்கிறோம். இடைக்காலத் தீர்வாக தமிழர்களுக்கு மாநில சுயாட்சி கிடைக்க வேண்டும் என்றுதான் கூறுகிறோம் என்றார்.



Thatstamil

Read more...

Friday, June 26, 2009

கேப்டன் “கருணா நிதி”

புலியின் முகத்தில் சாணியடித்தே தீருவது என்பதில் முழு உலகமும் எவ்வளவு தீவிரமாக இருந்திருக்கிறது என்பதை இறுதியில் கலைஞரிடம் “வணங்கிய மண்” தெளிவு படுத்தியிருக்கிறது.

இன விடுதலையா? போராட்டமா? இன உணர்வா? அதெல்லாம் அவர்களிடம் எங்கே இருந்தது? என்று ஒவ்வொரு புலி ஆதரவாளரும் தம்மைத்தாமே கேள்வி கேட்க அவர்கள் நிர்ப்பந்திக்கப்படும் வகையில் உலக அரசியல் நடந்தேறுகிறது.

பேச்சுக்குத்தானும் புலிக்கு அப்படியொரு நினைப்பு இருந்தது என்று ஒத்துக்கொண்டால், புலி எனும் உலகமெங்கும் தடை செய்யப்பட்ட அதுவும் பயங்கரவாத இயக்கமாகத் தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கம் தமது 30 வருட கால இருப்புக்கு பல்வேறு உயர் மட்ட அரசியல் தொடர்புகளை பல்வேறு நாட்டில் பேணிப்பாதுகாத்து வைத்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்கும், அதை அவர்கள் செய்யாமல் தனிமையில் வெறும் துப்பாக்கியை நம்பி எதையுமே சாதிக்க முடியாது என்பதை ஆகக்குறைந்தது புலித் தலைவர்கள் எல்லாம் அழிக்கப்பட்டு, இப்போது எஞ்சியிருக்கும் முன்னாள் காட்டு மிராண்டிப் புலிகளை இலங்கை அரசு தேடியழிக்கும் இந்தத் தருணத்திலாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழீழம் என்று ஒரு தேசம் அமைய வேண்டுமாக இருந்தால் முதலில் அண்டை நாடும் அதற்கடுத்ததாக தாம் சார்ந்த பிராந்தியம் முதல் உலகின் பல்வேறு சக்திகளின் அனுசரணை இல்லாவிடினும் விருப்பம், ஆதரவும் இருந்தால் மட்டுமே முடியும் என்பது புலி ஆதரவாளர்கள் தவிர்ந்த சிறு பிள்ளைகளுக்கும் தெரிந்த விடயம்.

அப்படி அமைய வேண்டுமானால் தம்மைப் போராட வைக்கும் சித்தார்ந்தம் தெளிவானதாகவும், அதனடிப்படையில் தாம் செய்யும் செயல்கள், எடுக்கும் நடவடிக்கைகள், போரிடும் முறைகள், தாக்குதல் வகைகள் என அனைத்தும் தமது உளத் தூய்மையான போராட்டத்தை வெளியுலகிற்கு கொண்டு செல்வதாக இருந்திருக்க வேண்டும்.

தவிரவும் தம்மை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திப்பதற்காக, அல்லது கூட்டு உடன்படிக்கையில் அப்பாவி உயிர்களைப் பலி கொடுக்க, தாம் விரும்பாவிட்டால் அது தம் இனமாகவே இருந்தாலும் அழித்து விட்டுத் தம் ஏக பிரதிநிதித்துவத்தை நிலை நாட்டியே தீருவது என்று தம் போக்கை எப்போது புலி மாற்றிக்கொண்டதோ அப்போதே அது உலகத்தால் நிராகரிக்கப்பட்ட இயக்கமாகியது.

படித்தவனோ படிக்காதவனோ தாம் எதைச் செய்தாலும் அவன் அதை நியாயப்படுத்த மட்டுமே வாய் திறக்க வேண்டும் எனும் பாசிசம் மேலோங்கியதால் தம் சித்தார்ந்தத்தை அவருக்குச் சொல்லி விளங்கப்படுத்தவோ அல்லது அதே மண்ணில் பிறந்திருந்தும், தமிழர்களாக இருந்தும் சட்ட வல்லுனர்களாக, இலங்கை அரசின் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களாக இருந்த நீலன் திருச்செல்வம், கதிர்காமர் போன்ற பல தரப்பட்ட உலகறிந்த “தலை” களைப் பாவிக்கவோ முடியாமல் போன வெற்றுச் சித்தார்ந்தம், தம் கொள்கைகளுக்கு உடன்படவில்லை என்று அவர்களை இன்னொரு அப்பாவி உயிரைக் கொடுத்தாவது கொன்றொழித்தது.

எனவே, புலியையும் அதன் சித்தார்ந்தத்தையும் ஏற்றுக்கொண்டோர் தவிர மற்ற அனைவரும் தமிழர்களாகவே இருந்தார்கள் என்றாலும் பயங்கரவாதப் புலிகளிடமிருந்து அன்னியப்பட்டே இருந்தார்கள் என்பது வரலாறு நமக்குக் கற்பித்த பாடம்.

இது புலிகளின் நடைமுறை வங்குரோத்து நிலையாக இருந்த போதே இதற்கான விமர்சனங்கள் எந்தத் தரப்பில் இருந்து எழுந்தாலும் அதற்கு செவி சாய்க்கும் நிலையில் புலி இருக்கவில்லை, அவற்றை மீள் பரிசீலனை செய்யவும் அவர்கள் தயாராக இருக்கவில்லை.

அதற்கான காரணம், அவர்கள் கைகளில் எப்போதும் இருந்த இரும்புத் துண்டங்களும், கழுத்தில் கவர்ச்சிக்காகத் தொங்க விடப்பட்டிருந்த சயனைட் குப்பிகளும் மட்டுமல்ல, அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஈழ தேசத்தின் நிலங்களும், அதற்குள் அடக்கப்பட்ட அப்பாவி மக்களும் சேர்ந்தாயாகும்.

உலகில் இருந்து தாம் அன்னியப்படுத்தப்பட்டு விட்டோம் என்பதை புலி ஆதரவாளர்கள் வேண்டுமானால் 2009ம் ஆண்டுதான் உணர்ந்திருக்கலாம், பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்? “வன்னியிலிருந்து” செய்தி வருகுதாம் என்று அவிழ்த்து விடப்படும் குரூரப் பொய்கைளை மட்டுமே நம்பி வாழ்பவர்கள்.

ஆனால், புலிகளுக்குமா இது தெரியாமல் போனது? இதை சிறு குழந்தையும் ஏற்றுக்கொள்ளாது. புலிக்கு இது எப்போதோ தெரியும்.

ஆகக்குறைந்தது 10 வருடங்களுக்கு முன்னராவது தெரியும்.

அப்படித் தெரிந்தும் என்ன செய்தார்கள்? பழகிப்போன வாழ்க்கையைக் கைவிட முடியாமல் கட்டிப்பிடித்துக் கொண்டு, வன்னிக் காடுகளுக்குள் இருந்து உணர்வு உணர்வு என்று வெளி நாடுகளில் இருந்தவர்களைப் பிழிந்து உணர்வுச் சாற்றைப் பருகிக்கொண்டு அவர்கள் நீச்சல் தடாகங்களில் பிள்ளை குட்டிகளோடு கும்மியடித்துக் கொண்டிருந்தார்கள்.

இவர்கள் கும்மியடித்துக்கொண்டிருந்தாலும் உலகம் சும்மாயிருக்கவில்லை, தம்மிலிருந்து படிப்படியாகப் புலியை நிரந்தரமாக அன்னியப்படுத்திக்கொண்டு வந்தது.

எப்போதாவது ஒரு நிலையான அரசு இலங்கையில் வரும், அப்போது இந்தப் புலிக்கொட்டம் அடங்கும், அன்று தங்கள் கைகளைக் கழுவிக்கொண்டு அந்த அரசோடு கை குலுக்கிக்கொள்ளலாம், அதன் பின் இந்த வளம் மிகுந்த தீவினைப் பொருளாதார ரீதியாகக் கொள்ளையிடலாம் என்று “ஆ” வெனப்பார்த்துக்கொண்டிருந்தது.

அந்த நிலையும் வந்தது, இலங்கையில் நிரந்தரமான ஒரு அரசு உருவானது, நிலையான ஒரு கொள்கையை அது கொண்டிருந்தது, போர் தொடுத்தது, புலியை அழித்தது எல்லாம் இப்போது பேசிப் பேசி அலுத்துப் போன விடயங்கள்.

ஆனால், போருக்குப் பின் வந்து சேரப்போகும் புதிய கூட்டாளிகளோடு கை குலுக்கக் காத்திராமல் பல பங்காளிகளைச் சேர்த்துக்கொண்டே போரை ஆரம்பித்து, அதை நிறைவு செய்து, இன்று தம் நன்றிக் கடனை உலகறியச் செய்து வெள்ளை ஆசாமிகளுக்கும் சேர்த்தே முகத்தில் சாணியடிக்கும் இன்றைய இலங்கை அரசின் சித்தார்ந்தம் சந்தேகமே இல்லாமல் பலருக்குப் புதிய அனுபவம்.

ஆக மொத்தத்தில் உலக அரசியல் பற்றிய ஒரு தெளிவு இல்லாத வங்குரோத்து நிலையில் ஒரு அரசாங்கம் அமைக்க முடியாது என்பதை நன்கறிந்த புலி, தம்மால் இயன்ற மட்டும் காலத்தைக் கடத்தி தமது இருப்பைப் பாதுகாத்துக்கொண்டால் மாத்திரம் போதும் எனும் தெளிவான முடிவுக்கு வந்திருந்தார்கள் என்பதும் இனியும் மறுக்க முடியாத விடயம்.

தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காக வெளிநாட்டில் ஈழத்தமிழர்களை உணர்ச்சி மயப்படுத்திக்கொண்டு, அதே வேளை தாம் பாரிய அரசியல் ராஜ தந்திரிகள் என்று பறைசாற்றுவதற்கு வைகோ, நெடுமாறன் வகையறாக்களை தமிழகத்திலும், ஒரு சில வெள்ளைக்கார எம்.பிக்களை இங்கிலாந்து, ஜேர்மனி, கனடாவிலும் “பிலிம்” காட்டப் பயன்படுத்திக்கொண்டார்களே தவிர, உண்மையாகவே மக்கள் அபிப்பிராயம் தமிழீழமாக இருந்தால் அந்தத் தமிழீழத்தைப் பெற்றுக்கொள்ள, இறுதியாகக் கிடைத்த சமாதானக் காலத்தில் தானும் ஒன்றையும் உருப்படியாகச் செய்யவில்லை.

ஆகக்குறைந்தது அண்டை அயல் நாடுகளில் உள்ள உறவுகளை சீர்ப் படுத்தவோ இல்லை தமது அரசியல் சி்த்தத் தெளிவை நிரூபிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ இல்லை. மாறாக சோதனைச் சாவடியில் சுங்க வரி முதல் வீட்டுக்கொரு பிள்ளையைப் பலி கொடுக்கச் செய்வதற்கும் முழு மூச்சாக இருந்தார்கள்.

இதன் கொடூரப் பின்ணனியை இனிமேல் தான் தமிழினம் தோண்டி அறிந்து கொள்ளும்.

இதற்கிடையில் தமக்கொரு நண்பனைத்தான் உருவாக்கவில்லை என்றாலும், அதற்கு சற்றும் குறையாமல் பகைவர்களை உருவாக்குவதில் மிகவும் கடினப்பட்டு உழைத்திருக்கிறார்கள் புலிகள்.

செய்தால் நான் தான் செய்ய வேண்டும், பிடித்தால் நான் தான் பிடிக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்த புலியின் தலைவரும் முள்ளிவாய்க்கால் புலிகளும், இறுதிக்கட்டத்தில் தாம் ஓடும் இடங்களெல்லாம் மக்களை இழுத்துச் சென்று விட்டு, அரசு அனுப்பும் உணவைக் கூட அவர்கள் அபகரித்து, அதிலிருந்து மக்களுக்கு “கஞ்சி” ஊற்றினார்களே, அந்த தியாகத்தை தமிழினம் ஒரு போதும் மறக்கக் கூடாது.

தம் தலைவருக்கு மிஞ்சிய சீடர்களோ புலியால் முன் வைக்கப்பட்ட உப்புசப்பில்லாத பிரிவினையை உலகுக்கு நியாயப்படுத்த “வணங்கா மண்” எனும் பெயரில் பழைய சரக்குக் கப்பலை வழங்கிப் பார்த்தார்கள்.

உணர்ச்சி மேலோங்கிய நிலையில் இந்தக் கப்பல் எல்லாம் இலங்கைக் கடற்கரையில் அதுவும் இலங்கை அரசின் அனுமதி இல்லாமல் கரை சேருமா என்று கூட சிந்திக்காமல் தம் உறவுகள் மீது கொண்டிருந்த உண்மையான பாசத்தையும் ஒன்றரக்கலந்து அரை குறை நம்பிக்கையிலாவது கப்பலை நிரப்பியனுப்பினார்கள்.

மக்கள் கணக்கு இப்படியாக இருந்திருந்தாலும் இன்னும் கொஞ்ச நாள் தாக்குப்பிடித்தால் போதும், கப்பலில் வரும் வெளிநாட்டுச சாப்பாடாவது வந்து சேரும், அதைக் காட்டி இங்கே பாருங்கள் நமக்கு வெளிநாடுகளில் இருந்துதான் உதவி வருகிறது என்று தம் பிடிக்குள் இருந்த மக்கள் மனங்களில் வாழ்வா சாவா எனும் நிலையில் ஆயுதத் திணிப்பை மேற்கொள்ள புலி நினைத்திருக்கும்.

அப்படியொரு கப்பல் வந்து சேர்ந்தால் அதை வைத்து உலகத்துக்கும் ஏதாச்சும் பிலிம் காட்டலாம் என்று கணக்குப்போட்ட புலியோ, இந்தப் போர் ஆரம்பிக்க முதல் கடலைச் சுற்றி இலங்கை அரசு நிலை கொண்டிருப்பதையோ அல்லது அவர்களை மீறி வர முடியாது என்பதையோ மறைத்தது கூட பரவாயில்லை, பாதுகாப்பு இணையம் நவீன கிராபிக்ஸ் மூலம் புலியின் கட்டுப்பாட்டில் இருந்த இறுதி நிலத்தைக் காட்டிய போதும், சிங்களவன் பிலிம் காட்டுகிறான் என்று தம் ஆதரவாளர்களையம் குமுதம்,ஜுவி ஆவி,நெடுமாறன்களையும் நம்ப வைத்திருந்தார்களே, அதற்கு நிச்சயமாக அவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும்.

ஆனாலும் அப்படியொரு கப்பலை புலி ஏற்றும் போதே அந்தக் கப்பலுக்குப் பெயர் “கப்டன் அலி” இல்லை “கப்டன் கருணா நிதி” என்று திட்டமிட்டுவிட்டார்கள் ஆசியாவின் நவீன அரசியல் பங்காளிகள்.

தம் நாட்டிற்கு அச்சுறுத்தல் என்று சோமாலியா கடற்பரப்பு வரை நீண்டு செல்லும் கைகளைக் கொண்ட இந்தியாவை மீறி இந்து சமுத்திரத்தில் ஒரு வணங்காமண் நிலை கொள்ள முடியாது. அதையும் மீறி சண்டையிட்டு முல்லைத் தீவை வந்தடைய அது ஒன்றும் யுத்தக் கப்பல் இல்லை, சாதாரண பழைய சரக்குக் கப்பல்.

அப்படித்தான் முல்லைத் தீவை வந்தடைந்தாலும் அதை இலங்கையிடம் தான் கொடுக்க வேண்டுமே தவிர பிரபாகரன் உயிரோடு இருப்பதெல்லாம் ஊகம் மற்றும் சந்தேகம் மட்டுமே, அப்படி அனைத்துத் தடைகளையும் தாண்டி மிகப் புனிதமாக மக்களுக்கான உணவை மட்டும் கொண்டு போன வணங்கிப்போன மண் அப்படி அந்த ஊகம் நிறைவேறியிருந்தால் வரும் வழியில் பிரபாகரனையும் ஏற்றி வந்திருக்கலாம்.

சினிமாவில் தான் இப்படியான கதைகளைப் பார்க்கலாம், நிஜத்தில் இதுவெல்லாம் பகற்கனவு என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் ஏதோ ஒரு நப்பாசையில் என்னவோ எல்லாம் நடந்தேறிவிட்டது.

முடிவில், கேப்டன் அலி கேப்டன் கருணாநிதியாகி மக்களுக்குப் போய் சேர்வதில் அந்தக் கப்பலை நிரப்பியனுப்ப உதவி செய்த மக்களாவது நிம்மதியடையலாம்.

நம்பிக் கெட்ட தலைவனாலும் அவர் படைகளாலும் கொண்டு சேர்க்க முடியாமற் போன தம் உழைப்பையும்,உறவையும் நம்பாமல் கை விட்டாலும் தானாக வந்து தம் உறவைப் பலப்படுத்திய புதிய தலைவன், தான் உயிரோடு இருக்கும் வரை என்றுமே தமிழினத் தலைவனாக இருக்க விரும்பும் கேப்டன் கருணா நிதியாவது கொண்டு சேர்த்திருக்கிறார் எனும் போது, தம் கடந்த கால வரலாற்றுகளில் சந்தர்ப்பத்திற்காகப் பல தடவைகள் கலைஞரி்ன் பெயரை வைத்து தமிழீழ வியாபாரம் செய்திருந்தாலும், உண்மையில் கடந்த 30 வருட காலங்களாக ஏன் இந்த மனிதர் மறைக்கப்பட்டார் அல்லது மறக்கடிக்கப்பட்டார் எனும் கேள்வியை ஒவ்வெரு வெளிநாடு வாழ் தமிழரிடமும் விதைத்திருக்கிறது இந்த கேப்டன் கருணி நிதி.

ஆக மொத்தத்தில் அதி புத்திசாலிப் புலி மீண்டும் தன் புத்திசாலித்தனத்தை நிரூபித்திருக்கிறது.

புலியிள் புத்திசாலித்தனத்தை “மோட்டுச் சிங்களவன்” எப்படியெல்லாம் பாவித்திருக்கிறான் என்பதற்கு இது இன்னொரு மகத்தான சான்று.

அன்று முதல் இன்று வரை பல மூகமூடிகளை மாற்றிக்கொண்டாலும் செயற்பாட்டில் அதே புலி அதே கதையாக இன்றும் தமிழீழத்தை நாடு கடத்திச் செயற்பட வரும் அதே புத்திசாலிப் புலியை மக்கள் இனிமேலும் எப்படிக் கையாள்வார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆகக்குறைந்தது, மக்களுக்கு இதில் நன்மை எனவே கேப்டன் கருணா நிதி செஞ்சிலுவைக் கொடியோடாவது வந்து கொழும்புத் துறை முகத்தைத் தட்டட்டும்.

அறிவுடன்

Read more...

Monday, April 20, 2009

நான் பிரபாகரனை நண்பர் என்று கூறவில்லை- கருணாநிதி

சென்னை: நான் என்டிடிவி பேட்டியில் கூறியதை அவர்கள் முழுமையாக ஒளிபரப்பவில்லை. என்டிடிவி எப்போதுமே திமுகவுக்கு விரோதமாகத்தான் செயல்படுகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
என்டிடிவிக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டியில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் எனது நல்ல நண்பர். அவர் பயங்கரவாதி அல்ல. அவரது இயக்கத்தில் இருக்கும் சிலர் பயங்கரவாதிகளாக இருக்கலாம். அதற்கு பிரபாகரன் என்ன செய்வார். பிரபாகரன் போரில் கொல்லப்பட்டால் நான் வருத்தமடைவேன் என்று கூறியிருந்தார்.

இது சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. இது கருணாநிதியின் தனிப்பட்ட கருத்து என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

அதேசமயம், கருணாநிதி அடித்துள்ள தேர்தல் நேரத்து ஸ்டண்ட் இது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

இந்த நிலையில் இன்று கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் தான் பேசியது குறித்து விளக்கம் அளித்தார் கருணாநிதி.

அப்போது அவர் கூறுகையில், தொலைக்காட்சியில் வெளியான செய்தி தவறானது. நான் சொன்ன கருத்தை மாற்றி வெளியிட்டுவிட்டது. நான் சொன்ன செய்திகளை முழுமையாக வெளியிடவில்லை.

தேவையில்லாமல் பிரச்சனைகளை கிளப்புகிறது அந்த சேனல்.

என்.டி.டி.வி எப்போதுமே திமுகவிற்கு எதிராகத்தான் செயல்படுகிறது.

விடுதலை இயக்கமாக உருவான விடுதலைப் புலிகள் இயக்கம், பின்னர் திசை மாறி இப்போது தீவிரவாத இயக்கமாகி விட்டது. ஆனால் இதை தேவையில்லாமல் மாற்றிக் காட்டி விட்டனர் என்று கூறினார் கருணாநிதி.

Thatstamil

Read more...

Saturday, April 4, 2009

முதல்வர் கருணாநிதிக்கு புலிகள் கொலை மிரட்டல்

முதல்வர் கருணாநிதிக்கு புலிகளால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. முதல்வரின் கோபாலபுரம் வீட்டுக்கு வந்த இந்தக் கொலை மிரட்டல் கடிதத்தில் விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பும் தொலைபேசியில் இவ்வாறான ஒரு கொலை மிரட்டல் கலைஞருக்கு விடப்பட்டது. தொலைபேசியில் பேசிய மர்ம நபர் ஒருவர், ஈழத் தமிழர்கள் இந்தியாவில் சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும். இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவத் தாக்குதல்களை நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைத் தமிழர் நலனில் முழுமையான அக்கறை செலுத்த வேண்டும். இல்லையென்றால் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்படுவார்கள் என்று கூறினார்.

முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த தொலைபேசி மர்ம நபரைப் பிடிப்பதற்காக மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் மத்திய குற்றப் பிரிவு மற்றும் சைபர் கிரைம் பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

கரூரில் உள்ள பொது தொலை பேசியில் இருந்து மர்ம நபர் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் கரூருக்கு சென்று மர்ம நபர் பேசியதாக கூறப்படும் தனியார் நிறுவன பொது தொலைபேசி நிலையத்தின் உரிமையாளர் மற்றும் பணியாளரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Read more...

Wednesday, March 25, 2009

ஜெயலலிதாவை தலைவியாக கொண்டு இலங்கை மீது படையெடுங்கள்-ராஜபக்சேயை போரில் வெல்வார்:கலைஞர்

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவ்வறிக்கையில்,


’’டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் இலங்கைப் பிரச்சினையிலே எங்களை விடத் தீவிரமானவர்கள் என்று காட்டிக்கொள்ள - காலையிலே ஒரு அறிக்கை, மாலையிலே ஒரு அறிக்கை என்று வெளியிட்டுக் கொண்டிருக் கிறார்கள்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையை கைகழுவி விட்டோம் என்று கதைக்கிறார்கள்.



அவர்கள் வாதப்படி நாம் கை கழுவி விட்டவர்கள் - அல்லது கையாலாகாதவர்கள் - இவர்கள்தான் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றும் அந்தக் கருமமே கண்ணாயினார் என்ற நிலையிலே உள்ளவர்கள் ஆயிற்றே; இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்புக் குழுவிலே இருக்கின்ற இந்த வீராதி வீரர்கள், சூராதி சூரர்கள், ரண ரங்க மார்த்தாண்டர்கள் - முழங்கட்டுமே முரசம் - கொட்டட்டுமே பேரிகை.



இலங்கை நோக்கி இராணுவ அணிவகுப்பு நடத்தட்டுமே! ராஜபக்சேயை முறியடித்துத் திரும்பட்டுமே! இங்கே யார் குறுக்கே நிற்கிறார்கள்?



ஒரு நாள் பகல் இரவு 24 மணி நேரத்தில் - 20 மணி நேரம் தொகுதிப் பங்கீடு - அட்வான்சாக ராஜ்ய சபா - இப்படி பேரம் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினை என்றாலே ஒரு "வீரம் அல்லவா பொசுக்"கென வந்து விடுகிறது.



உடனே பூகம்பமாக வெடித்துப் புயலாக சீறி - மத்திய ஆட்சியிலே இருக்கும் காங்கிரஸ் மீதும் கனல் கக்குகிறார்கள் - தமிழகத்திலே இருக்கும் கழக ஆட்சி மீதும் தணல் கொட்டுகிறார்கள்.


அய்யா, வேண்டாமய்யா, இந்த வம்பு. நாளைக்கே தோணிகளை தயார் செய்யட்டும். அவை கள்ளத் தோணிகளாக இருந்தாலும் பரவாயில்லை.



அவற்றில் படைகளை ஏற்றிச் செல்லட்டும். கோழைகளாகிய (?) நாங்கள் கண் கொட்டாமல் அவற்றைப் பார்த்துக் களிக்கிறோம். கை தட்டி ஜெய கோஷம் போடுகிறோம்.



இந்த இலங்கை மீது படை யெடுப்புக்கு தலைவியாக ஜெயலலிதாவையும் ஏற்றுக்கொண்டு - அவரையும் அழைத்துச் செல்லுங்கள்.


அவர் நிச்சயமாக ராஜபக்சேயை போரிலே வென்று - அவரைக் கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வருவார்.


எச்சரிக்கை. அவர் தவறிப்போய் 2002ஆம் ஆண்டு சட்டமன்றத்திலே முதலமைச்சராக இருந்து முன் மொழிந்து நிறைவேற்றினாரே ஒரு தீர்மானம் - தளபதி பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வருவோமென்று - அதை நினைத்து ராஜபக்சேவுக்குப் பதிலாக பிரபாகரனை கைது செய்து விடப்போகிறார்.



எச்சரிக்கையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

Nakkeeran

Read more...

Tuesday, February 24, 2009

உண்ணாவிரதம் அறிவித்தது ஏன்? கலைஞர் விளக்கம்

இன்று காலையிலிருந்து, ஏன் நேற்று மாலை தொலைக்காட்சி செய்திகளுக்கு பிறகு மருத்துவமனைக்கு ஏராளமான தொலைபேசி தொடர்புகள்! என்னிடம் பேச வேண்டுமென்று வற்புறுத்தல்கள்! தவிர்க்க முடியாமல் சிலரிடம் படுக்கையிலே படுத்தபடியே பேசினால் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தது குறித்து ஏராளமான கேள்விக்கணைகள் இவ்வளவு பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் உண்ணாவிரதம் இருக்கலாமா? அது உடல் நிலையை மேலும் பாதிக்காதா எதற்காக இப்படிப்பட்ட அறிவிப்பு காக்கிச் சட்டையினரும், கறுப்புச் சட்டையினரும் காது கொடுத்து உங்கள் பேச்சைக் கேட்க மாட்டார்களா?

ஒரு சிலரின் தூண்டுதல் உண்டு என்ற போதிலும், அவர்கள் உண்மையை அறிந்து கொள்ளாமலா போய் விடுவார்கள் வழக்கறிஞர்கள் போராட முன்வந்தது எதற்காக? இலங்கைத் தமிழர்களின் நலன்கள் கருதித் தானே! இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பிற்காக நீங்கள் பாடுபட்டது இன்று நேற்றிலிருந்தா? அரை நூற் றாண்டுக்கு மேலாக அல்லவா நீங்கள் அதற்காக எழுதியும், பேசியும், செயல்பட்டும் வருகிறீர்கள்! என்றெல்லாம் கேள்விக்கு மேல்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கடற்கரை பெருவெளியில் அமர்ந்தவாறு பிரபாகரனுடனும், சிறீ சபாரத்தினத்துடனும், பத்மநாபாவுடனும், முகுந்தனுடனும், பாலகுமாருடனும், ஆண்டன் பாலசிங்கத்துடனும், யோகியுடனும், பேபியுடனும், காசி ஆனந்தனுடனும் என்று மணிக்கணக்கிலே பேசிய நாட்கள் எனக்கு நினைவுக்கு வருகிறது. அது மட்டுமா? இன்று 2009ஆம் ஆண்டு. இதற்கு இருபதாண்டுகளுக்கு முன்பு 1989ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் நாள் தமிழீழத் தலைவர்கள் பலர், குறிப்பாக வழக்கறிஞர் சந்திரஹாசன், சச்சிதானந்தம், ஈழவேந்தன், சிவசுப்ரமணியம், சிவானந்தம், சிவநாயகன், பத்மநாபன், அருணாசலம், ஞானகணேசன், ஆனந்த ராஜா ஆகியோர் என்னை இல்லத்திலே சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து மூன்று மணி நேரம் உரையாடினர்.

அதற்குப்பின் நான்கு நாட்கள் கழித்து, 4.1.1990 அன்று இலங்கை அரசின் வெளி விவகாரத்துறை அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜயரத்னே, அவருடைய ஆலோசகர் பிராட்மேன் வீராகூன், மற்றும் ராணுவத் துறை செயலாளர் செபாலா அட்டிகலா ஆகியோர் என்னை இல்லத்தில் சந்தித்து, தமிழ்ப் போராளிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக நான் எடுத்து வரும் முயற்சிகளுக்காக தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். அதன்பிறகு இரண்டு நாட்கள் கழித்து 7ந்தேதி யன்று ஈராஸ் குழுவினைச் சேர்ந்த பாலகுமார், சங்கர், முகிலன் ஆகியோர் என்னைச் சந்தித்தனர். 8ந்தேதியன்று இலங்கையிலுள்ள இந்தியத் தூதர் மல்கோத்ரா என்னைச் சந்தித்தார்.

9ஆம் தேதியன்று இலங்கை வடகிழக்கு மாகாண முதல் அமைச்சர், ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்த வரதராஜ பெருமாள் என்னைச் சந்தித்தார். அதே ஆண்டு பிப்ரவரி 16, 17 ஆகிய நாட்களில் பாலசிங்கம், யோகி போன்றவர்கள் மீண்டும் சந்தித்தார்கள். அப்போது மத்திய அரசின் பிரதிநிதியாக தம்பி முரசொலி மாறன் மத்திய அமைச்சர் என்ற முறையில் உடன் இருந்தார். ஒருசில நாட்களில் இந்த அளவிற்கு போராளிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை மாற்றி மாற்றி தொடர்ந்து நான் சந்தித்தது தற்போது போராட்டம் நடத்த முன் வந்திருப்பவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

அந்தச் சந்திப்புகள் பற்றி செய்தியாளர்கள் என்னிடம் கேட்ட போது, போராளிகளுக்கிடையே மோதல் ஏற்படாமல் இருப்பதற்காகப் பேசிக் கொண்டிருக்கிறேன், சுமூகமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சிக்கிறேன் என்று கூறினேன். அந்தப் பேச்சுவார்த்தையின் போது விடுதலைப்புலிகள் ஜனநாயகப் பாதைக்கு வருவதற்கு சில நிபந்தனைகளுடன் ஒப்புக் கொண்டார்கள். ஈழத்தில் ஜனநாயக அடிப்படையில் அமைதியும் பாதுகாப்பும் தொடர்ந்து நிலவ வேண்டும் என்பதே என் நோக்கமும், அன்றைய பிரதமர் வி.பி. சிங்கின் நோக்கமும் ஆகும் என்று அவர்களிடம் தெரிவித்தேன்.

நான் அப்போது தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் மட்டும் பலித்திருக்குமேயானால், வெற்றி பெற்றிருக்குமேயானால் இந்த இருபதாண்டு காலத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் செத்து மடிந்திட நேர்ந்திருக்காது.

1990ஆம் ஆண்டைப் பற்றிச் சொன்னேன். அதற்கு முன்பே 1981ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு. கழகம் நடத்திய போராட்டங்கள் எத்தனையெத்தனை அதன் காரணமாக அப்போதிருந்த அ.தி.மு.க. ஆட்சியினரால் நான் கைது செய்யப்பட்டு சிறையிலே அடைக்கப்பட்டதும் அதனைக் கண்டித்து கோயிலடி பிருந்தாவன், திருச்சி மனோகரன், பெருந்துறை முத்துப் பாண்டியன், திருவாரூர் கிட்டு, சென்னை மேரி, கல்லாவி ராஜேந்திரன், மேல்மாயில் ஜெகன்னாதன் ஆகிய ஏழு பேர் தீக்குளித்து தங்கள் இன்னுயிரை தங்களுக்குத் தாங்களே போக்கிக் கொண்டார்கள் என்பது நாடறிந்த செய்தியாகும்.

அதன் பிறகு, யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்ட சிவனேசன் என்ற போலீஸ்காரரை சுட்டுக் கொன்றதாகக் கூறி தமிழ் இளைஞர்கள் குட்டிமணி, ஜெகன் ஆகி யோர் மீது வழக்கு நடைபெற்று, 13 8 1982 அன்று இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நீதி மன்றத்தில் அப்போது குட்டிமணி, தன்னைத் தூக்கிலிடுவதன் மூலம் பல்லாயிரக் கணக்கான குட்டிமணிகள் உதயமாவார்கள் என்றும், தன் இனத்திற்காக தரக்கூடியதாக இருப்பது தன் உயிர் மாத்திரம்தான் என்றும், தன் கண்களை பார்வையற்ற ஒரு தமிழ் மகனுக்கு வழங்கும் படியும், அந்தக் கண்களின் மூலம் மலரப் போகும் தமிழ் ஈழத்தைப் பார்க்கப் போவதாகவும், தன் உடலை யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மருத்துவ பீடத்திற்கு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டதோடு தனக்காக வாதாடிய வழக்கறிஞர்களிடம் தன் உயிரைக் காப்பாற்றுவதற்காக யாரிடமும் மண்டியிட வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டார்.

இந்தச் செய்தி வந்ததும், "தமிழ் இனம் மெல்ல மெல்ல அழிவதா?'' என்ற தலைப்பிலே முரசொலியிலே கடிதம் எழுதியவன் தான் இன்று உண்ணா விரதம் இருப்பதாக அறிக்கை கொடுத்துள்ளேன். முரசொலியில் அப்போது எழுதிய கடிதத்தில் "வாழ்வின் எல்லைக் கோட்டில் நிறுத்தப்பட்டுள்ள நேரத்திலும் அந்த வாலிபர்களின் வைரம் பாய்ந்த உள்ளத்தினை எண்ணியெண்ணி வையகமே திகைத்துத்தான் நிற்கிறது. தீரர் இருவர்க்கு அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு கேட்டுத் தீயை மிதிப்பது போல ஆகிவிட்ட தமிழா! நீ உலகத்தின் எந்த மூலையிலே இருந் தாலும் அந்த இடத்தில் நீ தன்னந்தனியனாக ஒருவனாக இருந்தாலும், அந்த இளந்தம்பிகளின் உயிரைக் காக்க, எஃகுக் கம்பிகளின் மரண தண்டனையைத் தடுத்து நிறுத்தக் குரல் கொடுத்தே ஆக வேண்டும். உடன் பிறப்பே, உனக்கும் எனக்கும் ஏற்படுகிற இந்த உணர்வு எங்கெங்குமிருக்கின்ற எல்லாத் தமிழர்க்கும் ஏற்பட்டே தீரும்! ஏற்பட்டே ஆக வேண்டும்! இல்லையேல் தமிழ் இனம், மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக அழிக்கப் பட்டே விடும்'' என்று இப்படித் தான் முடித்திருந்தேன்.

அதே திங்கள் 28.8.1982 அன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு நாள் என்ற பெயரில் அனைவரும் தங்கள் உடையில் கறுப்புச் சின்னங்கள் அணிய வேண்டுமென்றும், மாலையில் பொதுக் கூட்டங்களை நடத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டேன். சென்னையிலே நடைபெற்ற கூட்டத்தில் நான் கலந்து கொண்டு உரையாற்றினேன். மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விடுதலை செய்யும்படி கேட்டு இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவிற்கு தந்திகள் கொடுக்கும்படி வேண்டிக் கொண்டேன். அதற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு 25.7.1983 அன்று பிற்பகல் 2.30 மணி அளவில் வெலிக்கடை சிறைச்சாலைக்குள் இருந்த குட்டிமணி, ஜெகன், தங்கதுரை போன்ற தமிழ் இளைஞர்களை சிங்களக் காடையர் உள்ளே புகுந்து கொன்று குவித்தனர்.

பொங்கி வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மறுநாளே சென்னையில் தமிழர் பாதுகாப்புப் பேரணி நடைபெறும் என்று அறிவித்து, ஏழு மணி நேர அவகாசத்தில் எட்டு இலட்சம் பேர் சென்னையிலே திரண்டனர். கடைகளை மூட வேண்டுமென்று யாரும் கேட்கவில்லை, ஆனால் அன்று எந்தக் கடைகளும் திறக்கப்படவில்லை. ஆட் டோக்கள் ஓடாது என்று யாரும் கூறவில்லை, ஆனால் அன்று ஆட்டோக்கள் சென்னையிலே ஓடவில்லை. இதனைத் தொடர்ந்து எத்தனையெத்தனையோ போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்.

இதெல்லாம் தமிழகத்தின் வரலாற்றுப் புத்தகத்தில் அத்தியாயங்களாக பதிவாகியுள்ளன. ஆனால் தற்போது சிலர் இலங்கைத் தமிழர் பிரச்சினை என்பது அவர்களுக்கு மட்டுமே உரியதைப் போலவும் நானும், நமது கழகமும் அதிலே அக்கறையற்றதைப் போலவும் மக்களிடம் செய்தி பரப்பிட முனைகின்றார்கள். என் கையால் எழுதப்பட்ட செயற்குழு, பொதுக் குழு தீர்மானங்களிலேயே எந்தப் பிரச்சினைக்காக அதிகமான தீர்மானங்களை எழுதியிருப்பேன் என்று என் விரல்களைக் கேட்டால், அது கூறும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகத்தான் என்று.

ஆனால் சிலர் தற்போது நம்முடைய தீர்மானங்களில் தீவிரம் இல்லை என்கிறார்கள், பதவியைத்துறக்க விருப்பமில்லை என்கிறார்கள், ஆட்சியிலே இருப்பதால் அதனைக் காப்பாற்ற முயலுகிறேன் என்றெல்லாம் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆமாம், இலங்கையிலே இருக்கிற தமிழர்களைக் காப்பாற்ற எனக்கு இருக்கிற அக்கறையைப் போல, இங்கேயிருக்கின்ற தமிழர்களையும் காப்பாற்ற வேண்டிய அக்கறையும் பொறுப்பும் எனக்கு இருக் கிறது அல்லவா?

ஆனாலும், கடந்த மாதம் சட்ட மன்றத்திலே இலங்கைத் தமிழர்களுக்காக தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, இலங்கையிலே தமிழ் ஈழம் மலருமென்றால் அதற்காக ஆட்சியை இழக்கக் கூட நாங்கள் தயார் என்று அறிவித்தவன்தான் நான். ஆனால் அதையெல்லாம் வசதியாக மறைத்து விட சிலர் முயலுகிறார்கள். தாங்கள் தான் இலங்கைத் தமிழர்களுக்கான பாதுகா வலர்கள் என்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் தான் ஒரு சிலரைத்தூண்டி விட்டு தமிழகத்திலே ஒரு கலவரத்தைத் தூண்டி விட முடியாதா? அதைக் கொண்டு சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று ஆட்சியைக் கவிழ்த்து விட முடியாதா? சட்ட மன்றம் கூடப் போகிறது என்றவுடன் எந்தப் பிரச்சினையை கிளப்பலாம் என்று தேடிப் பார்த்து தேவையில்லாமல் ஏதோ ஒரு வழக்கிற்காக நீதி மன்றம் செல்கிறேன் என்று கூறிக் கொண்டு, அங்கே சென்று, அந்த இடத்திலே ஒரு தகராறு வரக் கூடிய அளவிற்கு நடந்து கொண்டு, அதன் காரணமாக அங்கே ஒரு விரும்பத் தகாத சம்பவத்தை உருவாக்கினார்கள். நீதி மன்றத்திலே தகராறு சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று ஏடுகளில் கற்பனையாக செய்தி வரக் கூடிய அளவிற்கு நிலைமை கள் ஏற்பட்டன. அந்தச் செய்தி கிடைத்தவுடன் நானே காவல் துறை அதிகாரிகளை விட்டு நடந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவிக்கச் செய்தேன்.

இதற்குப் பிறகும் பிரச்சினை தீர்ந்த பாடில்லை. வழக்கறிஞர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கசப்புணர்வு ஏற்படுகின்ற அளவிற்கு நிலைமை போய் விட்டது. வழக்கறிஞர் வீட்டிலே உள்ளவர்கள் பலர் காவல் துறையிலே பணியாற்றுகிறார்கள். காவல் துறையினர் வீட்டிலே உள்ளவர்கள் பலர் வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள். ஆனால் இருவருக்குமிடையே பகை உணர்ச்சி. இரு தரப்பினரும் யார்? இரு தரப்பினருமே தமிழர்கள் தான். என்னுடைய உடன் பிறப்புகள் தான்.

இவர்கள் இடையே மோது தல் உருவாகாதா, ரத்தம் வடியாதா? அதிலே இன்பம் காண முடியாதா என்று ஏங்குபவர்களுக்கு இடம் கொடுத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் நான் நேற்றையதினம் உண்ணா விரத அறிக்கையை விட நேர்ந்தது. என் உயிரைப் பற்றிக் கவலைப்பட்டு, உடல் நலம் இல்லாத நிலையில் இப்படி அறிக்கை விட லாமா என்று அன்போடு கோபிக்கிறார்கள். இருப்பது ஓர் உயிர் தான், அது போகப் போவது ஒரு முறை தான், அது ஒரு நல்ல காரியத்திற்காகக் போகட்டும் என்று சொன்ன பேரறிஞர் அண்ணா அவர்களின் உண்மையான தம்பி நான் என்ற உணர்வோடு விடப்பட்டது தான் அந்த அறிக்கை.

வீட்டிலே அண்ணன் தம்பி இருவரும் ஒருவருக்கொருவர் முரண்டு பிடித்துக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருக்கின்ற நேரத்தில் அவர்களை ஒற்றுமைபடுத்த உண்மையான ஒரு தாயார் வேறு என்ன தான் செய்ய முடியும் நீங்கள் ஒழுங்காக இல்லாவிட்டால் எனக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்று உரைப்பதில்லையா? அதைத்தான் நானும் அறிக்கை யாக்கியிருக்கிறேன்.

Nakkheeran

Read more...

Thursday, February 12, 2009

இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.க இரண்டு தடவை ஆட்சியிழந்துள்ளது : கருணாநிதி

இலங்கைத் தமிழர்களுக்காகத் திராவிட முன்னேற்றக் கழகம் தனது ஆட்சியை இரண்டு முறை இழந்திருப்பதாகத் தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருந்த போது இலங்கை தமிழர்களுக்காக எதனையும் செய்துவிட வில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் தெரிவித்திருந்த கருத்துக்குப் பதிலளிக்கும் முகமாகவே முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த 1976 ஆம் மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக தனது ஆட்சியை திராவிட முன்னேற்ற கழகம் இழந்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை இலங்கை தமிழர் பிரச்சினைகளுக்காக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் தாக்கப்படுவதைத் தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

Tuesday, February 10, 2009

இலங்கைத்தமிழர் பிரச்சனையில் திரு கலைஞர் கருணாநிதி அவர்களிற்கு இருக்கும் அனுபவம் இந்தியாவிலேயே எவருக்கும் இல்லை

70ம் ஆண்டிற்கு முன்பு இருந்தே இலங்கையில் இனக்கலவரம் நடந்த போதெல்லாம் திரு. கருணாநிதியின் ஆதரவுக்குரலே முதலில் ஒலிக்கும் அதன்பின்பு தான் மத்திய அரசே செயற்படத் தொடங்கும். கருணாநிதியின் குரல் ஓங்கி ஒலிக்கும் போதெல்லாம் அது இலங்கைத்தமிழரின் காதுகளில் தேனாகவும், இலங்கை அரசின் காதுகளில் ஈட்டியாகவும் பாய்ந்த காலம் ஒன்று உண்டு.

இவையெல்லாம் ராமதாசிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 1983 இனக்கலவரத்தின் போது நாமெல்லாம் இந்தியா வந்த போது ராமதாஸ், திருமாவளவன் அரசியலிலேயே இருக்கவில்லை. இடதுசாரிக் கட்சிகள் இலங்கையிலுள்ள இடதுசாரிகளின் சொற்கேட்டு சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழவேண்டியதுதானே எதற்கு தேவையில்லாமல் பிரச்சனை செய்கின்றீர்கள் என்று இலங்கைத்தமிழர்களைப் பார்த்துக் கேட்டவர்கள்.

வைகோ எம்முடன் கதைக்கும்போது நன்றாகத் தமிழ் கதைக்கின்றீர்களே சின்ன வயதில் இருந்தே தமிழ் படித்தீர்களா? ஏன்று அப்பாவித்தனமாகக் கேட்பார். அதாவது இலங்கையிலுள்ளவர்கள் எல்லோரும் சிங்களவர்கள் என்றும் சிலர் மட்டும் தமிழ் தெரிந்த சிங்களவர்கள் என்றும்தான் இவர்களில் பலர் இலங்கைத்தமிழரைப் பற்றி அப்போது நினைத்திருந்தது.

நெடுமாறனை 82ம் ஆண்டு அமெரிக்காவிற்கு ஒரு கருத்தரங்கிற்காக இலங்கைத் தமிழர்கள் அழைத்திருந்தார்கள். அதுவரையிலும் இலங்கைத் தமிழரைப் பற்றி எதுவுமே தெரியாமல் இருந்த நெடுமாறன் சில தமிழர்களின் வளமான வாழ்வைத் தெரிந்து கொண்டு இலங்கைத் தமிழருக்கு ஆதரவு அளிக்கத் தொடங்கிவிட்டார். ஆனால் அப்போதும் அவர் புலிகளின் ஆதரவாளராக இருக்கவில்லை.

அப்போது உமாவா பிரபாவா பெரிது என்று இருந்த காலம். முடிவெடுப்பது பலருக்கு கடினமாக இருந்தது. 83ம் ஆண்டு ஜப்பசி மாதம் நான் நெடுமாறனை சந்தித்த போது அவர் பிரபாகரனை கடுமையாக விர்சித்தார். அப்போதே பிரபாகரன் இரண்டு கார்களிலேதான் வெளியே செல்வது வழக்கம். பாதுகாப்பிற்கு ஒரு கார், பயணத்திற்கு ஒரு கார். அப்போது அமைச்சராக இருந்த ராசாராம் அவர்களின் வீட்டிற்கு முன்னால் உள்ள வீடொன்றில் மாதம் 5000 ருபா வாடகை செலுத்திக் குடியிருந்தார். அங்கு அப்போதே குளிர்சானப்பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி, தொலைபேசி போன்ற சகல வசதிகளும் இருந்தன. அங்கு தான் அவர் மதிவதனியை முதல்முதலாகப் பார்த்துக் காதல் கொண்டது. இந்த விடயங்கள் நெடுமாறனுக்கு அப்போது தெரிந்திருந்தது. ஆனால் நெடுமாறனுக்கு இவைகள் அப்போது பிடிக்கவில்லை. அவர் என்னிடம் இவைபற்றிக்கூறி ஒரு போராளிபோல் கஸ்ட்டமான வாழ்க்கை வாழாமல் தமிழ்நாட்டுத் தலைவர்களை விட பந்தாவாக இருக்கின்றாரே என்று குறைபட்டுக்கொண்டார்.

83ம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்பு தான் வீரமணி புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. சிறீசபாரட்டினம், பத்மநாபா, பாலகுமார் ஆகியோர் இணைந்து ஜக்கிய முன்னணி உருவாக்கியபோது கலைஞருடன் சோந்து புகைப்படம் எடுக்கச் சென்றிருந்தனர். அப்போது கலைஞர் வீரமணி தன்னுடன் இருந்தால் நல்லது என நினைத்து அவரிற்கு அழைப்பு விடுத்தார். (அப்போது நான் அங்கேயிருந்ததால் ) என்னிடம் வீரமணியின் இலக்கத்தைத் தந்து தான் கூறியதாகக் கூறி அவரை வரும்படி அழைத்தார். அப்போது வீரமணி தான் வேறு முக்கிய வேலையாக இருப்பதால் தன்னால் வரமுடியாது என்று மறுத்துவிட்டார். கலைஞரின் வேண்டுகோளையே மறுக்குமளவிற்கு அப்போது அவர் புலிகளுடன் ஜக்கியமாகியிருந்தார்.

இலங்கைத்தமிழர் அரசியல் தொடர்பாக கலைஞரின் செயற்பாடுகளில் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் ராமதாஸ், வைகோ, வீரமணி, தா.பாண்டியன், திருமாவளவன்களை விட பல சகாப்தங்கள் முன்பே இலங்கைத்தமிழர்கள்பால் அக்கறை கொண்டவர் என்பது சரித்திரத்தில் பதியப்பட்ட உண்மை. இந்த இடத்தில் சரித்திரத்தில் மறக்கப்பட்ட வேறு சிலரையும் நினைவு கூருவது முக்கியம். திரு. ஜனார்த்தனம், திரு. பாவரசு, திரு. ஆரண முறுவல், திரு. வள்ளிநாயகம், திரு. சேஷாஸ்த்திரி மற்றும் நினைவை விட்டு மறைந்து போன சிலர்.

- தினமலர்

Read more...

Monday, February 9, 2009

தொப்புள்கொடி உறவு

Read more...

Friday, February 6, 2009

இலங்கை தமிழருக்காக திமுக செய்த தியாக பட்டியல்

இலங்கை தமிழர் பிரச்சனையில் தி.மு.க.வின் நிலைப்பாட்டை பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக சாடி வரும் நிலையில், இலங்கை தமிழர்களுக்காக தி.மு.க. செய்த தியாகங்களையும், போராட்டங்களையும் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி பட்டியலிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி:- தி.மு.க. அரசு பொறுப்பிலிருந்து விலகவில்லை என்றதும் ஆத்திரப்பட்டு உங்கள் மீது சேற்றை வாரி இறைக்கிறார்களே, தி.மு.க. இலங்கை தமிழர்களுக்காக எதுவுமே செய்யவில்லையா?

கலைஞர்:- இலங்கை தமிழர்களுக்காக தி.மு.க. எந்தெந்த வகையில் போராடியிருக்கிறது, என்னென்ன தியாகங்களை செய்திருக்கிறது என்பதையும் ஆட்சியையே இழந்ததையும் இலங்கை தமிழர்களும், உலக தமிழர்களும், ஏன் இந்திய தமிழர்களும் நன்கறிவார்கள். ஆனால் தமிழர்களுக்காக தாங்கள்தான் போராட புறப்பட்டிருக்கிறோம் என்று சொல்பவர்களுக்கு வேண்டுமானால் அது தெரியாமல் இருக்கலாம். அவர்களும் தெரிந்து கொள்வதற்காக இதோ ஒரு பட்டியல்!

1956-ம்ஆண்டு அண்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்ற சிதம்பரம் கழக பொதுக்குழுவில் இலங்கை தமிழர்களுக்காக நான் முன்மொழிந்த தீர்மானம்,

1958-ம் ஆண்டு இலங்கையில் உரிமைகள் பறிக்கப்படுகின்ற தமிழின மக்களுக்காக பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் ஒரு மாபெரும் பேரணியை தி.மு.க. நடத்தியதை தொடர்ந்து இந்த பட்டியல் இங்கே இடம் பெறுகிறது.

*24.8.1977 அன்று சென்னையிலே 5 லட்சம் பேர் கலந்துகொண்ட பேரணி. கோரிக்கை வைக்காமலே அனைத்து கடைகளும் அன்று சென்னையில் மூடப்பட்டன.

*13-8-1981 அன்று பிரதமருக்கு இலங்கையிலே நடைபெறும் கொடுமை குறித்து தந்தி அனுப்பினேன்.

18.8.1981 அன்று பிரதமருக்கும், வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் தந்தி கொடுத்தேன்.

*21.8.1981 அன்று சட்டசபையில் அரசின் சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றினேன்.

*29.8.1981 அன்று தி.மு.க. கண்டன பேரணி-அரசு தடை தடையை மீறி ஊர்வலம்-250 பேர் கைது.

*2.9.1981 அன்று சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்.

*3.9.1981 முதல் சென்னையில் அன்றாடம் தடை மீறி ஊர்வலம்-இலங்கை தூதுவரது அலுவலகம் முன்பு மறியல்.

*15.9.1981 அன்று தடையை மீறி ஊர்வலம் புறப்பட்ட நான் கைது.

*27.7.1983 சென்னையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு பேரணி

*28.7.1983 தமிழகம் முழுவதும் இலங்கை தமிழர் பாதுகாப்பு பேரணி.

*2.8.1983 அனைத்துக்கட்சிகள் நடத்திய முழு அடைப்பு.

*4.8.1983 மத்திய அரசு அலுவலகங்களின் முன்னால் கறுப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம். தமிழர் வீடுகள், கடைகள், அலுவலகங்கள், தொழிலகங்கள், வாகனங்கள் அனைத்திலும் கறுப்புக்கொடி.

*5.8.1983 அன்று தமிழகம் முழுவதும் ரெயில் நிறுத்த அறப்போராட்டம்.

*11, 12, 13, 14.8.1983 தமிழகம் முழுவதும் கண்டன கூட்டங்கள்.

*10.8.1983 நானும் பேராசிரியரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்.

*1983 ஆகஸ்டு முதல்-இரண்டு கோடி கையெழுத்துக்கள் பெற்று ஐ.நா. மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

*8.8.1983 டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்ணாநோன்பு.

*85-ம் ஆண்டு மார்ச் 29 முதல் ஒருமாத காலத்திற்கு தமிழ்நாடு முழுவதும் சென்று இலங்கை தமிழர் இன்னல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஒருமாத காலத்திற்கு விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது.


*ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தி.மு.கழக பொதுக்குழு முடிவின்படி 29.4.1985 அன்று சென்னையில் நடைபெற்ற மறியலில் 4002 பேரும், 30-ம் தேதி திருச்சியில் 3000 பேரும், மே 3-ம் தேதி தர்மபுரியில் 1000 பேரும், 6-ம் தேதி சேலத்தில் 3000 பேரும், 7-ம் தேதி தஞ்சையில் 6000 பேரும், 8-ம் தேதி வட ஆற்காட்டில் 2500 பேரும், 13-ம் தேதி தென் ஆற்காட்டில் 3000 பேரும், 15-ம் தேதி பெரியார் மாவட்டத்தில் 1500 பேரும், 16-ம் தேதி செங்கை அண்ணா மாவட்டத்தில் 3000 பேரும், 17-ம் தேதி கோவை நீலகிரி மாவட்டங்களில் 3500 பேரும், 18-ம் தேதி ராமனாதபுரம், பசும்பொன், காமராஜர் மாவட்டங்களில் 3000 பேரும், 20-ம் தேதி மதுரை மாவட்டத்தில் 5000 பேரும், 22-ம் தேதி நெல்லை, குமரி, புதுவையில் 5500 பேரும் ஈடுபட்டு கைதாகினர்.

*16.5.1985 அன்று காஞ்சீபுரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் நானும் கலந்து கொண்டு கைதானேன்.

*23.8.1985 அன்று சந்திரஹாசன், பாலசிங்கம், சத்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து சென்னையில் "டெசோ''அமைப்பின் சார்பில் பேரணி. பேரணி முடிவில் நாடு கடத்தும் காரியம் நிறுத்தப்படாவிட்டால் போராட்டம் தொடரும் என்று அறிவித்து, அதனையொட்டி நாடு கடத்தல் உத்தரவு உடனடியாக திரும்ப பெறப்பட்டது.

*30.8.1985 அன்று தமிழகத்தில் வேலை நிறுத்த போராட்டம். ஆயிரக்கணக்கானவர்கள் கைது.

*டெசோ அமைப்பின் சார்பில் அக்டோபர் 3-ம் தேதி கோவையிலும், 4-ம் தேதி திண்டுக்கல்லிலும், ம் தேதி தூத்துக்குடியிலும், 6-ம் தேதி திருச்சியிலும், 7-ம் தேதி சேலத்திலும், 13-ம்தேதி வேலூரிலும் மிகப்பிரமாண்டமா பேரணிகளும், கூட்டங்களும் நடை பெற்றன.

*4.5.1986 அன்று மதுரையில் "டெசோ'' அமைப்பின் சார்பில் அகில இந்திய தலைவர்களையெல்லாம் அழைத்து மாநாடு. பொதுக்கூட்டம்.


*31.5.1986 அன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு கறுப்புச்சின்னம் அணிந்து கண்டன ஊர்வலங்கள்-பொதுக்கூட்டங்கள்.

*3.6.1986 அன்று என்னுடைய பிறந்த நாள் விழா ரத்து செய்யப்பட்டு, போராளி இயக்கங்களுக்காக உண்டியல் மூலம் நிதி வசூலித்துக் கொடுத்த நிகழ்ச்சி.

*1987-ம் ஆண்டு அக்டோபரில் பிரதமருக்கு லட்சக்கணக்கில் தந்திகள் கொடுக்கப்பட்டன.

*1987-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி தி.மு.க. நடத்திய பேரணி

*16.10.1987 அன்று தளபதி கிட்டுவை காணச்சென்ற வைகோ கைது செய்யப்பட்டதற்காக கண்டன அறிக்கை.

*இலங்கை தமிழர் பிரச்சினைக்காக எட்டு மாநில முதல்-அமைச்சர்களுக்கும் இந்தியாவிலுள்ள எதிர்க் கட்சி தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தேன்.

*17.10.1987 அன்று கிட்டுவை சந்திக்கச்சென்ற ஆற்காடு வீராசாமி, என்.வி.என்.சோமு கைது.

*22.10.1987 அன்று சென்னையில் இந்தியாவின் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டம்.

*24.10.1987 அன்று ரெயில் நிறுத்தப்போராட்டம். தொடர்ந்து மறியல் போராட்டம்-பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கழகத்தினர் கைது.

*6.11.1987 அன்று சென்னையில் ஈழத்தமிழர் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பாக பல்வேறு கட்சியினர், தமிழ்ப்புலவர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள், மகளிர் கலந்து கொண்ட மனிதச்சங்கிலி.

*11.11.1987 தமிழகம் முழுவதும் மனித சங்கிலி.

*15.3.1989 டெல்லியில் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களை இரண்டு முறை சந்தித்து ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து விவாதித்தேன்.

*2.5.1989 அன்று பிரதமர் ராஜீவ் காந்தி முரசொலி மாறனுக்கு இலங்கை பிரச்சினை குறித்து நீண்ட கடிதம். 15.5.1989 அன்று முரசொலிமாறன் பிரதமர் ராஜீவ் அவர்களுக்கு பதில் கடிதம்.

*15.6.1989 அன்று சென்னை விமான நிலையத்தில் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் இலங்கை பிரச்சினை குறித்து பேசினேன்.

*15, 16.12.1989 ஆகிய நாட்களில் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளான பாலசிங்கம், யோகி ஆகியோருடன் சந்திப்பு.

*20.12.1989 அன்று பிரதமருடன் சந்திப்பு.

*4.1.1990 பல்வேறு போராளி குழுவினருடன் பிரதமர் கூறியதின் பேரில் சந்திப்பு.

*1991-ம் ஆண்டு இலங்கை தமிழர் பிரச்சினைக்காக கழக ஆட்சி கலைக்கப்பட்டது.

*17.7.1995 அன்று ஒவ்வொரு நகரத்திலும் கழகத்தினர் கறுப்புச் சின்னம் அணிந்து உண்ணா நோன்பு.

*2.11.1995 அன்று சென்னையில் கறுப்புக் கொடி ஏந்திய பேரணி

*3.11.1995 அன்று மாவட்ட தலைநகரங்களில் கறுப்புக்கொடி பேரணி

*தி.மு.கழக அறக்கட்டளை சார்பில் 25 லட்சம் ரூபாய் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு மருத்துவ உதவி அளிக்க நிதி.

*30.11.1995 முழு அடைப்பு.

இவ்வாறு இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆனால், இதனையெல்லாம் தமிழ் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு இலங்கை தமிழர் பிரச்னையில் நம்மீது களங்கம் கற்பிக்க நினைத்தால், அது நிச்சயமாக நிறைவேறாது என்று கருணாநிதி கூறியிருக்கிறார்.

Read more...

உலகத் தமிழர்களை ஏமாற்றுகிறேனா?-ராமதாஸ்க்கு கருணாநிதி பதில் கூறியுள்ளார்.

தமிழர் பாதுகாப்பு என்ற பெயரால், ஆதாயம் தேடிக்கொள்ள முயலுபவர்கள் யார் என்பதை உலகத் தமிழர்கள் நன்றாகவே உணர்வார்கள்''என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து, கேள்வி - பதில் வடிவில் வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

"உலகத் தமிழர்களையெல்லாம் ஏமாற்றி காதில் பூ சுற்ற முயற்சிப்பதாக ஒரு தலைவர் கூறியிருக்கிறார். உலகத் தமிழர்களை ஏமாற்றுகிறேனா இல்லையா என்பதை அவர்களே அறிவார்கள். உலகத் தமிழர்களுக்காக உழைப்பவர்கள் யார், தியாகம் செய்தவர்கள் யார், செய்பவர்கள் யார், வேடம் போடுபவர்கள் யார், தமிழர் பாதுகாப்பு என்ற பெயரால் ஆதாயம் தேடிக்கொள்ள முயலுபவர்கள் யார் என்பதையெல்லாம் உலகத் தமிழர்கள் நன்றாகவே உணர்வார்கள்.

உலகத் தமிழர்களின் காதில் நான் பூ சுற்றுகிறேன் என்று சிலர் சொல்வதால், அவர்களின் ஆத்திரம் எந்த அளவுக்குப் பெருகியுள்ளது என்பதை உணர்ந்து கொள்ளத்தான் பயன்படுகிறது. என்னை எதுவும் பாதிக்கவில்லை.

திமுக செயற்குழுவில், இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக ஆட்சிப் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தால், அது திருப்தி தருவதாகச் சொல்லிருப்பார்கள். என்னைப் பொறுத்தவரை, அதற்கும் தயாராக இருப்பவன்தான்.

ஈழத் தந்தை செல்வாவின் மகன் சந்திரஹாசன் எனக்கு எழுதிய கடிதத்தில், ""தாங்கள் ஆட்சியில் இருப்பதால்தான் இலங்கையில் சிங்கள அரசு ஓரளவுக்கேனும் அடக்கி வாசிக்கிறது. உலகத் தமிழர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளியிட முடிகிறது. தாங்கள் உடல் நலத்தைப் போலவே, தமிழகத்தில் தங்களுடைய ஆட்சியும் நலமும், பலமும் பெற்றுத் தொடர வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

மருத்துவமனையில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் உள்ளார்ந்த உணர்வோடு கருத்துத் தெரிவித்த தலைவர்கள், பதவி விலக வேண்டுமென்று கூறுபவர்கள் தாங்கள் அந்த இடத்தைப் பெறலாமா என்ற நப்பாசையோடு கூறுகிறார்கள்; அவர்களின் வலைகளில் விழுந்து விட வேண்டாமென்று எச்சரித்ததும்தான் அத்தகைய தீர்மானத்தை திமுக செயற்குழு நிறைவேற்றாததற்குக் காரணம். அதனால், ஏமாற்றமடைந்தவர்களுக்கு என் அனுதாபம்.

இதில் என்ன தவறு... இலங்கைப் பிரச்னையில் 58 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவைத் தான் திமுக தற்போதும் எடுத்துள்ளது என ஒரு தலைவர் கூறியுள்ளார்.

அதில் இருந்தே, இலங்கைத் தமிழர் பிரச்னையில் இன்றோ நேற்றோ நான் அக்கறை காட்டவில்லை என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது அல்லவா? பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவைத் தான் இப்போதும் எடுப்பதாகச் சொல்கிறார்கள். அதில் என்ன தவறு உள்ளது? இவர்கள் மனதைக் குளிர வைப்பதற்காக திமுக ஒரு முடிவை எடுக்க முடியுமா என்ன?' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இலங்கைப் பிரச்னைக்காக,பல்வேறு போராட்டங்களையும்,நடவடிக்கைகளையும் திமுக மேற்கொண்டதைப் பட்டியலிட்டுள்ளார் கருணாநிதி.

இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும் என்றும், இதனையெல்லாம் தமிழ் மக்கள் மறந்து இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு இலங்கைத் தமிழர் பிரச்னையில் திமுக மீது களங்கம் கற்பிக்க நினைத்தால் அது நிச்சயமாக நிறைவேறாது என்றும் கூறியுள்ளார்.

Read more...

Thursday, February 5, 2009

கலைஞருக்கு வந்த முதுகுவலி

இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஒட்டி தமிழகத்தின் ஆளும் தி.மு.க. நேற்று முன்தினம் கூட்டிய செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானமும் அங்கு தி.மு.தலைவரும் முதல்வருமான் கருணாநிதி ஆற்றிய உரையும், அதற்குப்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் வழங்கிய பேட்டியும் இலங்தை; தமிழர் விடயத்தில் கருணாநிதியினதும், தி.மு.க.தலைமையினதும் அதன் மாநில அரசினதும் முகத்திரையைக் கிழித்து உண்மைச் சொரூபத்தை அம்பலப்படுத்தி விட்டன என்றே கூறவேண்டும்.

ஈழத்தமிழர்களின் இன்றைய பேரவல நிலைமையும் அவர்கள் சிங்களவர்களினால் கொடுமைக்கு உள்ளாக்கப்படும் நிஜத்தையும் கருணாநிதி இந்தப் பேட்டியில் திரும்பவும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். தமிழக மக்கள்; ஒவ்வொருவரினதும் மன எண்ணத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி நிற்கும் இந்தப் பெரும் கொடூரத்தை மறுக்க மறைக்க அதை ஒப்புக் கொண்டாரோ தெரியவில்லை.

இன்று ஈழத்தமிழர்கள் பச்சிளம் குழந்தைகள் கூட கொல்லப்படுகின்றார்கள். தாய் மார்கள் இழிவாக நடத்தப்படுகின்றார்கள். இந்த நிலையில் தமிழ்நாட்டின் தலைவர்கள் தங்களைக் காப்பாற்றுவார்கள் என்ற ஈழத்தமிழர்கள் குரல் கொடுக்கிறார்கள்..' கருணாநிதி கூறுகிறார்.

ஆனால் ஈழத்தமிழரின் அந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்யாமல் பதவிக் கதிரையை ஒட்டிப் பிடித்துக் கொண்டிருப்பதில்தான் 'திண்ணையைக் காலி செய்ய மாட்டேன் என அடம் பிடிப்பதில்தான் உறுதியாக நிற்கிறார் கருணாநிதி

'ஈழத் தமிழர்களின் நலனைப பாதுகாப்பாற்காகப் பதவியை இழந்து, அரசைத் துறக்கவும் தயார்' என்று அண்மையில் கூட 'வாய்வீரம்' காட்டிய 'வாய்ப்பேச்சு வீரர்' தான் இந்த கருணாநிதி என்பதனை மறுப்பதற்பாலானது.

'இலங்கையில் போரை நிறுத்தச் செய்வதற்கு இந்திய மத்திய அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறதே?' என்ற கேள்விக்குப் பதிலளித்த கருணாநிதி

"போதுமானதாக இல்லை என்பது தான் தி.மு.க.வின் நிலைமை. ஆனால் போரை நிறுத்தச் செய்யக் கூடிய அதிகாரமும் வலிமையும் மாநில அரசுக்கு இல்லையே ' எனப் பதிலளித்திருக்கிறார்.

அவர் கூறுவது போல இலங்கையில் போரை நிறுத்தச் செய்யக் கூடிய அதிகாரமமும் வலிமையும் மாநில அரசுக்கு இல்லை என்பது வாஸ்தவந்தான்.

ஆனால் அதனைச் செய்விப்பதற்கான அதிகார வலுவும், ஆளுமைப் பலமும், கட்டளை இடும் மிடுக்கும் இந்திய மத்திய அரசுக்கு நிலையவே உண்டு. அந்த வலிiமையை இந்திய மத்திய அரசு சரிவரப் பயன்படுத்தவிலை;லை என்பதுதான் பிரதான குற்றச்சாட்டு. 'மத்திய அரசு போதுமான நடவடிக்கை எடுக்வில்லை' என்பதை கருணாநிதியே நேரடியாக ஒப்புக் கொண்டமை கூட இந்த அடிப்படையில்தான்.

உண்மையில் இலங்கையில் போரை நிறுத்தச் செய்யும் நேரடி அதிகாரபலம் தமிழக அரசுக்கு இலாதபோதும் இப்படிச் செய்யும் வலிமை உடைய இந்திய மத்திய அரைச, அத்தியையில் செயற்படவைக்கும் அதிகாரமும், வலுவும் செல்வாக்கும் மாநில அரசுக்கும் தி.மு.காவிற்கும் ரொம்பவே தாராளமாகவே நிறையவே உளளன என்பது மறைக்கக் கூடியதொன்றல்ல.

அவரது தி.மு.க எம்பிக்களின் ஆதரவில்தான் மத்திய அரசு இன்று நிலைத்து நீடிக்கின்றது. மத்திய அரசுக்குத் தான் கொடுத்து வரும் முண்டைத் தி.மு.க விலக்கிக் கொண்டால் மத்திய அரசு கவிழ வேண்டியதுதான்.

ஆனால், அந்தச் செல்வாக்கை சாதக நிலையை ஈழத்தமிழர்களுக்காக இந்திய மத்திய அரசை செயற்பட வைக்கும் விடயத்துக்காக பயன்படுத்த கருணாநிதி விரும்பவில்லை. அப்படி மத்திய அரசை மிரட்டிப் பணிய வைப்பதற்கான 'முதுகெலும்பு' அவருக்கு இல்லை.

அப்படி மத்திய அரசையும், மத்திய அரசின் ஆளும் காங். கட்சியையும் இதற்காக அச்சுறுத்தப் போய், மத்தி அரசு தமிழக மாநில அரசின் ஆட்சியில் வைத்துக் காலை வாரி விட்டால் என்ன செய்வது என்ற பயம் பீதி அச்சம் கருணாநிதி
இதைத்தான் ஈழத்தமிழர் பிரச்சினையை வைத்து 'அண்ணன் எப்போது சாவான் திண்ணை எப்போது காலியாகும்' என சிலர் எதிர்பார்த்து நப்பாசையுடன் காத்துக் கிடக்கிறார்கள் என்று கருணாநிதி குறிப்பிடுகின்றார்

ஈழத்தமிழர் நலனுக்காகக் கூடத் திண்ணையை விட்டுக் கொடுக்கும் எண்ணத்தில் கருணாநிதி இல்லை என்பது தான் வெளிப்படை.

தமது முதல்வர் பதவியைக் கூட ஈழத்தமிழருக்காகத் துறக்கத் திராணியற்ற முதுகெலும்பற்ற நிலையில் தாம் உள்ளார் என்பதையும், பதவி மீது தமக்குள்ள மோகத்தையும் மேற்படி பேட்டிகளில் வெளிப்படையாகக் கருணாநிதி ஒப்புக் கொண்டுவிட்டார் என்பது தெளிவாகின்றது.

முதுகு வலியால் அவஸ்தைப்படும் அவர் மருத்துவமனையில ஏழு, எட்டு நாட்களாக இருக்கிறார் என்பதையும் இன்னும் ஒரு வாரம் இருக்க நேரிடும் என்பதையும கூட இப் பேட்டியில அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

'முதுகெலும்பு' இல்லாததால் வந்த முதுகு வலியோ இது.....?"

சுடர்ஒளி

ஆசிரியர் தலையங்கம்

Read more...

Wednesday, February 4, 2009

உலகத் தமிழர்களின்காதில் பூ சுற்றிவிட்டது திமுக

இலங்கைத் தமிழர் பிரச்னையில் உலகத் தமிழர் ஒவ் வொருவரின் காதிலும் பூ சுற்றி விட்டது திமுகவின் செயற்குழு முடிவு என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடுமையாக விமர்சனம் செய்தார்

வேலூரில் செவ்வாய்க்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசை நடத்தி வரும் கருணாநிதி ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரதிநிதியாக விளங்குவ தால், அவருடைய கட்சி இலங்கைத் தமிழர் பிரச்னை யில் எடுக்கும் முடிவால் தீர்வு ஏற்படும் என்று எதிர் பார்த்தனர். ஆனால் இந்த எதிர்பார்ப்பையும், ஏக்கத் தையும் நிறைவு செய்யும் வகையில் திமுக செயற்குழு வின் முடிவு இல்லை

இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார்களாம், இதன் மூலம் தமிழகம் முழுவதும் விளக்கக் கூட்டம், பேரணி, மனித சங்கிலி, மாநாடு, அறப்போராட்டம் இதையெல்லாம் நடத்தி இலங்கை அரசுக்கும், மத் திய அரசுக்கும் எட்டுமாறு எழுச்சிப் பயணத்தை தொடங்கப் போகிறார்களாம்
இதன் மூலம் உலகில் உள்ள ஒவ்வொரு தமிழரின் காதிலும் பூ சுற்றியுள்ளனர். இந்த முடிவின் மூலம் இலங்கைத் தமிழர்களைக் காப்பதில் திமுக 50 ஆண் டுகளுக்கு பின்னோக்கி சென்றுள்ளது

1958 ஜூன் 22-ல் திமுக பொதுச் செயலராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன், இலங்கைத் தமிழர் உரிமை பாதுகாப்பு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பேரணி, பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்று திராவிடநாடு பத்திரிகையில் தெரிவித்துள்ளார்
1958-ல் இலங்கைத் தமிழர் உரிமை பாதுகாப்பு என்றார்கள், 2009-ல் இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவை என்கிறார்கள். இரண்டுக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை. அதே நிலையை இன்றைக்கும் மேற் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கப் பார்க்கிறார்கள். இவர்கள் வெட்கப்படப் போவ தில்லை, வெட்கமும் இல்லை. அவர்களின் தீர்மானத் தைப் பார்த்து தமிழர்கள்தான் வெட்கப்படுகிறார் கள், வேதனைப்படுகிறார்கள்

போர்நிறுத்த கோரிக்கையை வலியுறுத்தி 3 முறை சட்டப்பேரவை தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இப்போது அந்த கோரிக்கையை திமுக கைக ழுவிவிட்டது. போர்நிறுத்தம் குறித்து செயற்குழுவில் ஒரு வார்த்தை கூட வலியுறுத்த வில்லை
வடக்குப் பகுதி, கிழக்குப் பகு திக்கு சுயாட்சி, முழுமையான அதி காரப்பகிர்வு உள்ள அரசியல் தீர்வு உருவாக்கி செயல்படுத்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். அதற்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற முடிவை வலியுறுத்தி பேரணி நடத்த திமுக செயற்குழு முடிவு செய்துள்ளது

போர்நிறுத்தம் இல்லாமல் எப்படி பேச்சு வார்த்தை தொடங்க முடியும், அமைதி ஏற்படும், அதிகார பகிர்வு ஏற்படும். இது ராஜபட்ச கட்சியின் தீர்மானம் போல் உள்ளது. இவையெல்லாம் கருணா நிதிக்கே வெளிச்சம். மொத்தத்தில் அன்றாடம் செத்து மடியும் இலங்கைத் தமிழர்களை திமுகவும், ஆளும் திமுக அரசும் கைவிட்டுவிட்டன. தமிழர்கள் நிர்கதியாக விடப்பட்டுள்ளனர்

ராஜபட்ச அரசுக்கும், திமுக அரசுக்கும் கொள்கை அளவில் எந்த வேறுபாடும் இல்லையென வெளிப்ப டையாகவே கருணாநிதி அறிவித்துள்ளார்
புதன்கிழமை நடைபெற உள்ள போராட்டத்தை நாங்கள் வேலை நிறுத்தம் என்கிறோம். முழுவேலை நிறுத்தத்தில் தான் கட்டாயம் உள்ளது. விரும்புகிற வர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கலாம், இது சட்டவிரோதம் இல்லை. உணர்வு பூர்வமாக நடக் கும் போராட்டத்தை, ஆட்சியை கவிழ்க்க சதி என்று கருணாநிதி கொச்சைப்படுத்தியுள்ளார். இதை அவர் தான் அரசியலாக்கப் பார்க்கிறார்

இலங்கை ராணுவமும், அரசும் தரும் பொய்த் தகவல் களை வெளியிட 3 நிருபர்கள் விலைக்கு வாங்கப்பட் டுள்ளனர். அவர்கள் பொய்யை பரப்பி வருகின்றனர்
திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ளோம்
அவர் ஒட்டுமொத்தமாக குரல் கொடுக்க வேண்டும் என்று காத்திருந்தோம். இப்போது என் மீதே கரு ணாநிதி குற்றம் சாட்டுகிறார். இப்பிரச்னையில் இளைஞர்கள் யாரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்றார்.

Read more...

புலிகளுக்கு ஆதரவில்லை: முதல்வர்

இலங்கை தமிழர்களுக்காக மத்திய ஆட்சியிலிருந்து விலக மாட்டோம்; மாநில அரசையும் இழக்க மாட்டோம்; திமுகவை பொறுத்தவரை இலங்கை தமிழர் பிரச்சனை தான் முக்கியம்; பிரபாகரனையோ மற்ற தமிழர் தலைவர்களையோ ஆதரிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். இந்த பிரச்சனையில் ராமதாஸ், ஜெயலலிதா போன்றவர்களின் சதிச் செயல்களுக்கு ஆளாக மாட்டோம் என்றும் கருணாநிதி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
.
சென்னையில் இன்று நடைபெற்ற திமுக செயற்குழுவில் முதலமைச்சர் கருணாநிதி பேசியதாவது: இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து திமுக கடந்த பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறது. அதற்காக வாதாடியும், போராடியும் வருகிறது. என்றும் இந்த நிலையில் தொடர்வோம்.

இப்போது தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்காக புதிய குரல் கிளம்பி இருக்கிறது. 1956 ஆம் ஆண்டு முதல் இலங்கை தமிழர் பிரச்சனைக்காக பல்வேறு தலைவர்கள் தமிழ்நாட்டை நாடி வந்திருக்கிறார்கள். அப்போது தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் பெரியார், அண்ணா, நான் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறார்கள்.

அதனடிப்படையில் அவர்களுக்காக குரல் கொடுத்துள்ளோம். அதனை தொடர்ந்து 198384 கால கட்டத்தில் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உள்ளிட்டோர் கொடூரமான படுகொலைக்கு ஆளாகி சிங்கள ராணுவத்தின் தமிழர் அழிப்பு நடவடிக்கை நடந்தது.
அப்போது மீண்டும் அமிர்தலிங்கம் தமிழகத்திற்கு வந்து ஆதரவு கோரினார். தமிழனுக்கு தமிழன் உதவி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தோம். அதன் பின்னர் விடுதலைப் போராட்ட இயக்கங்கள் தோன்றின.

அவர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து போராடியிருந்தால் அவர்கள் விரும்பியபடி தமிழீழம் என்றைக்கோ மலர்ந்திருக்கும். ஆனால் பிரபாகரனை ஒரு சர்வாதிகாரியாக ஏற்றுக் கொள் பவர்கள் மட்டுமே அங்கு செயல்பட முடியும் என்ற நிலை அங்கே உருவானது. இதனை தொடர்ந்து பலர் அழித்தொழிக்கப்பட்டனர்.

திமுகவை பொறுத்தவரை இலங்கை தமிழர்களுக்காகத்தான் எங்களுடைய குரல் ஒலிக்கும். பிரபாகரனையோ அல்லது எந்த தனிப்பட்ட தமிழர் தலைவர்களையும் நாங்கள் ஆதரிக்க வில்லை.

புலிகளின் நடவடிக்கைகளை ஏற்காமல் முகுந்தன், கருணா உள்ளிட்ட பலர் வெளியேறி இருக்கிறார்கள். இப்படி சகோதர யுத்தம் போன்ற கொடுமை களை நாங்கள் மறப்பதற்கு காரணம் அங்குள்ள தமிழர்கள் உரிமை பெற்று வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்து பத்திரிகையின் ஒரு சகோதர இதழான பிரண்ட்லைன் இதழில் பிரபாகரனின் அட்டைப் படம் போட்டு ஒரு பேட்டியை வெளியிட்டி ருந்தார்கள்.

அதனை கண்டு நான் திடுக்கிட்டுப்போனேன். என் விழிகள் ஆச்சரியத்தால் விரிய அதனை பார்த்தேன். அதில் ஒரு கேள்வி பிரபாகரனிடம் கேட்கப்பட்டது. நீங்கள் வெற்றி பெற்றால் உங்கள் ஆட்சி எப்படி இருக்கும் என்பதே அந்த கேள்வி. அது சர்வாதிகார ஆட்சியாக இருக்கும் என்று பிரபாகரன் பதிலளித்திருந்தார். அப்போதே அவர்களுடைய போராட்டம் புளித்துப் போய் விட்டது.

சகோதர யுத்தம் நடத்திய பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக் கான ஆதரவு குறைந்தும், மறைந்தும் போனது. ஆனால் இன்று பச்சை குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட இலங்கை தமிழர்கள் கொல்லப்படு கிறார்கள். தாய்மார்கள் இழிவுப் படுத்தப்படுகிறார்கள். இதனை தாங்காமல் கதறி அழும் அவர்கள் தமிழகம் நம்மை காப்பாற்றாதா என்று அவலக் குரல் எழுப்புகிறார்கள்.

அதற்கு நாம் உதவ வேண்டாமா என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த கூட்டத்தை இன்று நாம் கூட்டியிருக்கிறோம்.

ஆதரவு என்றால் ஆயுதமேந்தியோ, போர் தொடுத்தோ ஆதரவை அளிக்க முடியாது. தமிழக சக்தியை ஒன்று திரட்டுவதன் மூலமாகவே ஆதரவை அளிக்க முடியும். ஜனநாயக ரீதியில் தான் அந்த சக்தியை நாம் திரட்ட முடியும்.

அந்த வகையில்தான் இன்றைக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டி ருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகள் ஏதோ தாங்கள்தான் இலங்கை தமிழர்களின் பிரதிநிதி களைப் போல காட்டிக் கொள் கிறார்கள். நாம் இலங்கை தமிழர் களுக்கான போராட்டத்தை கைவிட்டு விட்டது போல பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். முதலமைச்சர் தலைமை யில் எல்லோரும் போராட்டம் நடத்துவோம் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார். எதற்கு சொன்னார் என்று இன்றுதான் புரிகிறது.

எனக்கும், மத்திய அரசுக்கும் விரோதத்தை ஏற்படுத்தி இவர் செல்வாக்கை பெருக்கிக் கொள் வதற்காக இந்த செயலில் ராமதாஸ் ஈடுபட்டிருக்கிறார். அவர் ஆதரவு பத்திரிகைகள் மூலமாக இந்த செய்திகளை அவர் பரப்பி வருகிறார்.

இன்று கூட நாம் ஆட்சியை கலைத்து விட்டு வெளியேறி விடுவோம் என்று ஒரு பத்திரிகை ஆசையோடு செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு திமுக ஆட்சி போய் விடும்; அடுத்த ஆண்டு அதிமுக ஆட்சி ஏற்படும் என்று ஜெயலலிதா சொல்வதற்கு காரணம், இலங்கை தமிழர்களுக்காக போராட்டம் நடத்தி மத்தியில் திமுக ஆதரவை வாபஸ் பெற்று விடும்.

இங்குள்ள ஆட்சியை கலைத்து விட்டு வெளியேறி திண்ணை காலியாகி விடும். நாம் வந்து படுத்துக்கொள்ளலாம் என்று அவர் கனவு காண்கிறார்.

அண்ணன் எப்போது சாவான், திண்ணை எப்போது காலியாகும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் உங்களை நம்பி சொல்கிறேன். இந்த அண்ணன் சாக மாட்டான்; திண்ணையும் காலியாகாது என்று அவர்களுக்கு உணர்த்தும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும்.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களோடு பேசக் கூடியதும், அவர்கள் மீது பற்றும்,பாசமும் வைக்கக் கூடிய ஒரே கட்சி திமுகதான். வேறு யாருக்கும் அந்த உரிமை இல்லை.

இலங்கை தமிழர்களை காப்பாற்ற புறப்படுவது போல சிலர் நாடகமாடுகின்றனர். அவர்களை பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்ல நாம் எப்படி செயல்படுவது என்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தை ஏற்று நீங்கள் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக செயற்குழுவில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Maalaisudar

Read more...

Tuesday, February 3, 2009

இலங்கை தமிழர்கள் உரிமைகளைப் பெற பேரணிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடத்த ஏற்பாடு : தி.மு.க. செயற்குழு தீர்மானம்

இலங்கைத் தமிழர்கள் அனைத்து நல உரிமைகளையும் பெற தேவையான நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகம் முழுவதும் பேரணிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடத்தப்படும் என தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என தமிழக சட்டசபையில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடைசியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார். இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால், தி.மு.க. செயற்குழுவைக் கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று தி.மு.க. செயற்குழு கூடியது. இக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பங்கேற்றார். சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவர் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார். ஓய்வு கட்டாயம் தேவை என டாக்டர்கள் வலியுறுத்தியுள்ள போதிலும், இன்றைய கூட்டத்தில் பங்கேற்க அவர் உறுதியாக இருந்தார். இதையடுத்து இன்று காலை அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றார். இதை முடித்துக் கொண்டு அண்ணா அறிவாலயம் வந்த முதல்வர் அங்கு தி.மு.க. செயற்குழுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் அன்பழகன், மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தென் மண்டல தி.மு.க. அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகத் தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாருக்கு இரங்கல் தெரிவித்து முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அடுத்து, இலங்கைத் தமிழர்களுக்கு நல உரிமைகளைப் பெற்றுத் தர ஒத்தக் கருத்துடைய அரசியல் கட்சிகள், சான்றோர்களைத் திரட்டி பட்டி தொட்டியெங்கும் விளக்கக் கூட்டங்கள், பேரணிகள், மாநாடுகளை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுமையான சுயாட்சி மற்றும் முழுமையான அதிகாரப்பகிர்வு ஆகியவை கிடைக்கும் வகையில் குறிப்பிட்ட காலத்திற்குள், அரசியல் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 7ஆம் திகதி சென்னையில் பிரசார கூட்டம் மற்றும் பொதுக் கூட்டம் நடைபெறும். பிற மாவட்ட தலைநகரங்களில் 8 , 9 ஆகிய திகதிகளில் கூட்டம் நடத்தப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

Read more...

Wednesday, January 28, 2009

காலோசிதமான அழைப்பு

இலங்கைக்கு வந்து உண்மை நிலையை நேரில் கண்டறியு மாறு தமிழக முதல்வர் கலை ஞர் கருணாநிதிக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்திரு க்கும் அழைப்பு காலோசிதமானது.

இலங் கையில் நிலவும் உண்மையான நிலையை அறியாது தமிழகத்தில் சில அரசியல் தலைவர்களும் பிரமுகர்களும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான உணர்வலையை வளர்க்கும் வகையில் பேசியும் எழுதியும் வரும் பின்னணியிலேயே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்திருக்கின்றார்.

தவறான கருத்துகளை வெளியிடும் எல் லோருக்கும் அழைப்பு விடுப்பது நடை முறைச் சாத்தியமானதல்ல. எனவே தான் மாநிலத்தின் முதலமைச்சருக்கும் பிரதான எதிர்க்கட்சியின் தலைவிக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருக்கின்றார்.

இலங்கையும் இந்தியாவும் மிக நெருக்க மான நட்புறவு பேணும் நாடுகள். இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகத் தமிழகத்தில் மேற் கொள்ளப்படும் பிரசாரம் இரு நாடுகளி னதும் நட்புறவுக்குக் குந்தகமான சூழ்நிலையை உருவாக்குவதாக இருப்பது கவலைக்குரி யது. இலங்கையில் என்ன நடக்கின்றது என் பதை இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத் திலிருந்து அறிந்துகொள்ள முடியும்.

அதற் கான எந்த முயற்சியும் மேற்கொள்ளா மலே தமிழகத் தலைவர்கள் இலங்கைக்கு எதி ரான விஷமப் பிரசாரத்தில் ஈடுபடுகின்ற னர். புலிகளும் தமிழர் விடுதலைக் கூட்ட ணித் தலைவர்களும் அளிக்கும் தகவல்க ளின் அடிப்படையிலேயே இப் பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது.

இலங்கையின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழகத் தலைவர்கள் முன்வைக்கவில்லை. யுத்தநிறுத்தமே அவர்களின் கோரிக்கையாக உள்ளது. இனப்பிரச்சினைக்கான தீர்வுக்குப் புலிகளே தடையாகச் செயற்பட்டவர்கள். இனப் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தால் அது தீர்வுக்குத் தடையாகச் செயற்பட்ட புலி களை அம்பலப்படுத்தும் என்பதாலேயே தமிழகத் தலைவர்கள் அக் கோரிக்கையை முன்வைக்கவில்லை.

அரசாங்கம் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கை புலிகளின் இருப்புக்கு மாத் திரமன்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினரின் அரசியல் இருப்புக்கும் அச்சுறுத்தலா னது. இன்று புலிகள் முல்லைத்தீவில் மிகக் குறுகிய பிரதேசத்துக்குள்ளேயே முடங்கியி ருக்கின்றனர்.

அவர்களின் கட்டுப்பாட்டிலி ருந்த ஏனைய பிரதேசங்கள் அரசாங்க கட் டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. புலிகள் முற்றுமுழுதாகத் தோல்வியடைவது உறுதியாகி விட்டது. புலிகளின் தோல்வியுடன் கூட்ட மைப்பினரின் அரசியல் எதிர்காலம் கேள் விக்கு உள்ளாகிவிடும்.

புலிகளையும் கூட்டமைப்பினரையும் பாது காப்பதற்கான இறுதி நேர முயற்சியா கவே திருமாவளவன், வைகோ, டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் யுத்தநிறுத்தக் கோரி க்கையைத் தீவிரமாக வலியுறுத்துகின்றார் கள். தங்கள் கோரிக்கையை நியாயப்படுத் துவதற்காக இலங்கையில் இன ஒழிப்பு நடைபெறுகின்றது என்ற பொய்யான பிர சாரத்தை முன்னெடுக்கின்றார்கள்.

இராணுவ நடவடிக்கையின் விளைவாக மரணங்கள் இடம்பெறாமலில்லை. ஆனால் தமிழகத் தலைவர்கள் கூறுவது போல வகைதொகை யின்றி மரணங்கள் சம்பவிக்கவில்லை. இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெறும் மரணங்களுக்குப் புலிகளே பொறுப்பேற்க வேண்டியவர்கள். மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்வதற்கு விடாமல் புலிகள் அவர்களைப் பலவந்தமாகத் தடுத்து வைத் திருப்பதாலேயே மரணங்கள் சம்பவிக்கின்றன.

இவையெல்லாம் தமிழக மக்களுக்குத் தெரியாத விடயங்கள். எனவேதான் தலை வர்கள் என்ற வகையில் கலைஞரும் ஜெய லலிதாவும் இலங்கைக்கு வந்து உண்மை நிலையை அறிந்து செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி அழைப்பு விடுத்திருக்கின்றார்.

உண்மையாகவே இலங்கைத் தமிழரின் நலனில் அக்கறை உள்ள தமிழகத் தலைவர் கள் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் வகையில் செயற்பட வேண்டும். அர சியல் தீர்வுக்குத் தடையான புலிகளுக்காக வக்காலத்து வாங்குவது தமிழ் மக்கள் மீதுள்ள அக்கறையை வெளிப்படுத்துவதா காது.

Read more...

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top