இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010
Showing posts with label சிந்திக்க வேண்டியவைகள். Show all posts
Showing posts with label சிந்திக்க வேண்டியவைகள். Show all posts

Sunday, May 23, 2010

தீக்குளித்தல் மகிமைப்படுத்தப்படலாமா?

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டுமெனக் கோரி தீக்குளித்த முத்துக்குமாரின் சிலையைத் திறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது.

விடுதலை புலிகளிடமிருந்து வன்னிப் பகுதியை மீட்கும் இறுதிக் கட்டப் போரில் இலங்கைப் படையினர் ஈடுபட்டிருந்த போது, கடந்த வருடம் 2009 ஜனவரி மாதம் 29 ஆம் திகதி தமிழ் நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகத்துக்கு முன்பாக முத்துக்குமார் என்ற இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தான் தீக்குளிப்பதற்கு சற்று முன்பதாக, இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும் என்றும், இலங்கையில் அவதியுறும் தமிழர்களை காப்பாற்ற இந்தியா உதவ வேண்டும் என்றும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார்.

பத்திரிகை நிருபராகவும் பல தெலைக்காட்சித் தொடர்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய, தமிழ்நாட்டைச் சேர்ந்த 30 வயதான முத்துக்குமார் ஈழப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவரல்ல. ஆனால் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அறிந்திருந்தார் என்பதற்கு தான் இறப்பதற்கு முன்னர் அவர் எழுதிய இந்த துண்டுப் பிரசுரங்கள் சான்றாக அமைகின்றன.

இலங்கைத் தமிழர்களின் துன்ப துயரங்களை தமது அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்திய தமிழக அரசியல்வாதிகளின் உணர்ச்சிபூர்வமான வீராவேசமான பேச்சுக்கு முதற் பலி முத்துக்குமார். அவர்களது பேச்சுக்களும், எனினும் எதுவும் செய்ய முடியாத நிலையும் தீக்குளித்துத் தன்னை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு முத்துக்குமாரை உந்தித் தள்ளியிருக்கிறது.

தீக்குளிக்காதீர்கள் என்று மேடைகளில் முழங்கியபடியே முத்துக்குமாருக்கு ‘வீரமகன்’ பட்டம் கொடுத்தார்கள். மேடைகளில் முத்துக்குமாருக்காக வீர வாசனங்கள் கவிதைகள் என்று முத்துக்குமாரின் உயிர்த் தியாகத்தை மெச்சினார்கள்.

போக்களத்தில் புறமுதுகிட்டோடுவது வீரர்களுக்கு இழுக்கு என்றும், எதிரியிடம் தோற்பதைவிட யுத்த களத்தில் உயிரை மாய்க்கலாம் என்றும், மகனுக்கும் கணவனுக்கும் இரத்தத்தால் திலகமிட்டு போர்க்களத்துக்கு அனுப்பும் தாய்மார்களைப் பற்றிய கதைகளையே கேட்டும் வளர்ந்த தமிழர்கள், தமிழக அரசியல் தலைவர்களின் உணர்ச்சிப் பெருக்கெடுக்கும் வார்த்தைகளால் எளிதாகத் தூண்டப்படுகின்றனர்.

விளைவு, தமிழகம், மலேஷியா, ஜெனீவா என்று மிகக் குறுகிய காலத்தில் சுமார் 12 பேர் வரை தீக்குளித்து தமது உயிரை மாய்த்துக் கொண்டனர்.

இவர்களில் அனேகருக்கு இலங்கையில் உண்மையில் என்ன நடக்கின்றது என்று தெரிந்திருக்கக் கூட வாய்ப்பில்லை.

ஆனால் இறந்தபின் அவர்களுக்குக் கிடைக்கும் பட்டமும், பணமும் அவர்களைத் தூண்டியிருக்கலாம் அல்லது பாரம்பரிய வீரத்தால் தூண்டப்பட்டிருக்கலாம். அதாவது ஒரு விஷயத்தின் ஆழ அகலம் மற்றும் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாது கண்மண் தெரியாமல் உணர்ச்சிவசப்படுவது.

தமிழகத்தில், நடிகர்களுக்காக, அபிமான அரசியல் தலைவர்களுக்கு உயிராபத்து ஏற்படும் போது, சொந்தப் பிரச்சினைகளின் பேரில் தற்கொலைகள் குறிப்பாக தீக்குளிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

இலங்கையில் இலங்கைப் படையினர் மீதான ஒரு தாக்குதல் உத்தியாகத்தான் தற்கொலையை விடுதலைப் புலிகள் உபயோகித்தார்கள்.

ஆனால் தமிழகத்திலும், மலேசியா, ஜெனிவாவிலும் நடைபெற்ற தீக்குளிப்புகளால் என்ன மாற்றம் ஏற்பட்டுவிட்டது?

இந்நிலையில் மீண்டும் அந்தத் தற்கொலை உணர்வைத் தூண்டி வரும் முகமாகவும் தற்கொலையை மகிமைப்படுத்தும் முகமாகவும் முத்துக்குமாருக்கு சிலை எழுப்பப்பட்டது. அச்சிலையை திறக்கவிடாததை எதிர்த்து ஆர்ப்பாட்டமும் தமிழகத்தில் இடம்பெற்றிருக்கின்றது.

தீக்குளிக்கும் கலாசாரம் என்பது பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்தது. அக்கினி வழிபாட்டை மனிதன் தொடங்கிய காலத்தில் இருந்தே அதில் தன்னை மாய்த்துக் கொள்ளத் தொடங்கிவிட்டான். அறியக்கிடக்கும் வரலாறுகளின் படி அரசியல், மதம், சமூகம் போன்ற நிலைகளில் ஒடுக்கப்படும் மக்களின் எதிர்ப்புப் போராட்டமாக தீக்குளிப்புகள் நிகழ்ந்துள்ளதைக் காணமுடிகின்றது-

இந்து, பெளத்த, கிறிஸ்தவ மத வரலாறுகளில், இதிகாசங்களில் தீக்குளிப்பு சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

சமூக நிலையில் ஒழுக்க விசாரணைக்குட்படுத்தப்பட்ட சீதை தீக்குளிக்கின்றாள். குறுநில மன்னனான பாரிக்கு எதிராக மூவேந்தர்களும் ஒன்று சேர்ந்து போர் தொடுத்து அவனைக் கொன்றதை எதிர்த்து சங்கப் புலவர் கபிலர் தீக்குளித்தது, தமிழர் வரலாற்றில் காணக்கிடைக்கும் மிகத் தொன்மையான தீக்குளிப்புச் சம்பவம். இந்திய ராஜபுத்திரர்கள் வரலாற்றில் தோற்றுப்போன மன்னனின் அந்தப்புரப் பெண்கள் தீக்குளித்திருப்பதாக வரலாறு கூறுகின்றது. சித்தூர் ராணி பத்மினி இப்படித்தான் தீக்குளித்தாள். பழைய ரஷ்ய கிறிஸ்தவ வரலாற்றில் ஒரு கிராமமே தீக்குளித்து ‘ஹிhலீ கிaptisசீ’ செய்து கொண்டதையும் 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரான்ஸ் நாட்டின் யேசு சபைப் பாதிரியார்கள் தங்களை எரியூட்டிக் கொண்ட நிகழ்வுகளையும் வரலாற்றில் பார்க்க முடிகின்றது.

வியட்னாமின் ஹோசிமின் நகரில் 1963 ஆண்டில், 73 வயதான பெளத்த பிக்கு ஒருவர் தீக்குளித்தார். தொடர்ந்து பல பல பிக்குகள் தீக்குளித்தனர். ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் இறங்கினர். வியட்னாம் போரை எதிர்த்து அமெரிக்கர்களும் தீக்குளித்தனர்.

சீனா அரசின் ஒடுக்குமுறையை எதிர்த்து சீனாவின் தியனமன் சதுக்கத்தில் பலர் தீக்குளித்தனர்.

தீக்குளிப்பு என்பது அவேசமாக வளர்முக நாடுகளிலேயே அதிகளவில் இடம்பெறுவது அவதானிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தியடைந்த நாடுகளில் தீக்குளிப்பு, தற்கொலை என்பன 0.1% சதவீத்துக்கும் குறைந்த அளவில் இருக்க அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இது மிகவும் கூடுதலாக இருக்கின்றது.

தற்கொலை, தீக்குளிப்பு என்பனவற்றில் ஈடுபடுபவர்கள் ஏதோவொரு விதத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

உலகெங்கிலும் உள்ள தீக்காய சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெறுபவர்களில் 41 சதவீதமானவை தீக்குளிப்பு சம்பவங்கள்.

2001 ஆம் ஆண்டில் ஈரானில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி, நாளொன்றுக்கு 11 ஈரானியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 4 பேர் தீக்குளித்து இறந்தவர்கள் என்ற ஆய்வுகள் கூறுகின்றன.

இந்தியாவில் மாமியார், கணவன் வீட்டில் நிகழும் கொடுமை களால் பெண்கள் தீக்குளிக்க வைக்கப்படுகின்றார்கள்.

இந்தியா, ஆப்கான் போன்ற நாடுகளில் பெண்கள் அதிகளவில் தீக்குளிப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

சாதி, இன, மத ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் தம்மீது பிரயோகிக்கப்படும் அதிகாரத்துக்கு எதிராக, தம்மைத் தீ வைத்து மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு உந்தித்தள்ளப்படுகின்றார்கள். அவர்கள் மீதான ஒடுக்குமுறை அதற்கெதிரான ஆயுதமாக தீக்குளிப்பைத் நாட வைக்கின்றது.

தொடர்ச்சியான தீக்குளிப்புகள் அதிகாரத்தை சலசலப்புக்கு உள்ளாக்குகின்றது. ஆனால் அதிகாரவர்க்கத்தை ஆட்டம் காணச் செய்வதற்கு இவ்வாறான தீக்குளிப்புகள் போதுமானவையல்ல என்பதை இவர்கள் உணர்வதில்லை.

தமது உயிரை மாய்த்தாவது அடக்குமுறைக்கு எதிரான தமது குரலைப் பதிவுசெய்து கொள்ள அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் முனைகின்றனர். ஆனால், அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் தீக்குளிப்புகளால் அதிகார வர்க்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தப்பட முடியாது. எனில் இவ்வாறான தீக்குளிப்புகள் இறந்தவர்களை மகிமைப்படுத்த இவ்வதிகார வர்க்கத்தினர் முயல்வதேன்?

உயிரை மாய்ப்பதை மகிமைப்படுத்துவதன் இன்னொரு பரிமாணம் தான் தற்கொலைப் பேராளிகளும்.

உயிரை மாய்ப்பதன் மூலம் எதனையும் சாதித்துவிட முடியாதென்பதை நாம் உணர்வது எப்போது?

உலகெங்கும் தீக்குளித்தல் நிகழ்ந்து வந்தாலும் தமிழகத்தில் போல் வேறெங்கும் தீக்குளித்தல் நடப்பதாகத் தெரியவில்லை. இங்கே இது ஒரு கலாசாரம். ஏழைகளை அல்லது மோசமான நோயாளிகளை தீக்குளிக்கச் செய்து அவர்களின் குடும்பத்துக்கு பணம் வழங்குவது, தீக்குளித்தல் என்பது ஒரு உயர்ந்த விஷயம் போல உருவகம் செய்வது, தமிழரின் பெருமையாக அதை வெளிப்படுத்துவது என்பது தமிழகத்தில் திராவிட நாகரிகமாகிப் போனது. ஒரு தமிழ் அரசியல் தலைவருக்கு ஏதேனும் நடந்து, அதன் விளைவாக வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தாலும், ஒரு தீக்குளிப்பாவது நடைபெறாவிட்டால் அக்கட்சிக்கோ தொண்டர்களுக்கோ திருப்தி ஏற்படப் போவதில்லை எனும் அளவுக்கு தமிழக அரசியலில் தீக்குளிப்பு ஒரு நட்சத்திர அந்தஸ்து வகிக்கிறது.

தமிழர்கள் மத்தியில், தீக்குளித்தல் என்பது ஒரு மனநோயே தவிர அதில் வேறெந்த மகிமையும் இல்லை என்பதை புரிய வைக்கு மட்டும் தீக்குளித்தல் மகிமைப்படுத்தப்படும் ஒரு விஷயமாகவே இருக்கும். மூட நம்பிக்கைகளை உடைக்கப் புறப்பட்ட திராவிட இயக்கமே தீக்குளிப்பை மகிமை படுத்த முற்பட்டது தான் விந்தை.


அட்சரா

thinakaran

Read more...

Friday, December 18, 2009

சிவாஜிலிங்கம் எம்.பி.யின் முடிவு ஏற்படுத்தப் போகும் பாதிப்பு என்ன?

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று நடைபெறவுள்ளது. வேட்பாளர்களுக்கான கட்டுப் பணம் செலுத்தும் கால அவகாசம் நேற்று நண்பகலுடன் முடிவடைந்து விட்டது. இந்த ஜனாதிபதித் தேர்தலில் 23 வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர்.
இதில் பிரதான வேட்பாளர்களாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஜெனரல் சரத் பொன்சேகாவும் திகழ்கின்றனர். இதனை விட இடதுசாரி ன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ணவும் குறிப்பிட்டு சொல்லக் கூடியவராக இருக்கிறார்.

தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதுடன் கட்டுப்பணத்தையும் நேற்று முன்தினம் செலுத்தியுள்ளார். இதேபோல் முஸ்லிம் வேட்பாளர்களாக பிரதிக் கல்வி அமைச்சர் மயோன் ஸ்தபாவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஐ.எம். இலியாசும் போட்டியிடுகின்றனர். இவர்களும் கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளனர்.

கடந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட 14 பேர் மட்டுமே போட்டியிட்டனர். ஆனால், இம்முறை 23 வேட்பாளர்கள் களத்தில் குதிக்கத் தயாராகவுள்ளனர்.

இந்த வேட்பாளர்களில் பலர் வேட்பு மனுத்தாக்கலுக்குப் பின்னர் பேரம் பேசல்களில் ஈடுபட்டு இரு பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கு ஆதரவு வழங்கும் நிலையும் காணப்படுகின்றது. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. எம்.கே. சிவாஜிலிங்கம் சுயேச்சையாக போட்டியிட ஏன் முன்வந்தார்? இதற்கான காரணம் என்ன? என்பது புரியாத புதிராகவே உள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் தனித்து போட்டியிடுவதில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏக மனதாக முடிவு செய்திருந்த நிலையில் ஏன் இவர் மட்டும் இத்தகைய முடிவினை எடுத்தார் என்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் ஆராய்ந்து வருகின்றது. இந்த நிலையில் கடந்த 8ஆம் 9ஆம் திகதிகளில் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் கூடிய எம்.பி.க்கள் 17 பேர் ஜனாதிபதித் தேர்தலில் எத்தகைய முடிவினை எடுப்பது என்பது குறித்து ஆராய்ந்தனர். இதன்போது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ இயக்கத்தின் எம்.பி.க்களான என். ஸ்ரீகாந்தன், எம்.கே. சிவாஜிலிங்கம், வினோநோகராதலிங்கம் ஆகியோர் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் தனி வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற கோக்கையினை ன்வைத்துள்ளனர்.
இதேபோல் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் செயலாளரும் எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கக்க வேண்டும். அதற்கான டிவை எடுக்க வேண்டும் என்று கருத்துக் கூறியுள்ளார்.
இதற்கு கஜேந்திரன் எம்.பி.யும் ஆதரவு வழங்கியுள்ளார். இதனை விட ஒரு சில எம்.பி.க்கள் ஆட்சி மாற்றம் ஏற்படும் வகையில் தமிழ் மக்களை வாக்களிக்குமாறு கோர வேண்டும் என்றும் கருத்து தெவித்துள்ளனர்.

இத்தகைய பல்வேறுபட்ட கருத்துகள் தெவிக்கப்பட்ட போதிலும் இறுதியாக கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில்லை என்றும் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து மீண்டும் கூடி முடிவு எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே சிவாஜிலிங்கம் எம்.பி. கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளார்.

சிவாஜிலிங்கம் எம்.பி.யின் முடிவு தன்னிச்சையானது. தேர்தலில் தனித்து வேட்பாளர்களை களமிறக்குவதில்லை என்ற முடிவையே கூட்டமைப்பு எடுத்துள்ளது என்று நேற்று முன்தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா தெவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப். சுரேஷ் அணி) ஆகிய நான்கு கட்சிகளின் எம்.பி.க்கள் மத்தியில் இது தொடர்பான கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது உண்மை. ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொதுப்பட ஒரு முடிவினை எடுத்த பின்னர் சிவாஜிலிங்கம் எம்.பி. மட்டும் தன்னிச்சையான முடிவு எடுப்பது எந்த வகையிலும் கூட்டமைப்பின் கட்டுக்கோப்புக்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ நன்மை பயக்கும் என எண்ணி விட டியாது.

ரெலோ அமைப்பின் எம்.பி.க்களான என்.ஸ்ரீகாந்தா, எம்.கே. சிவாஜிலிங்கம், வினோ நோகராதலிங்கம் ஆகியோர் தனித்து வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்ற கொள்கையில் இருந்தாலும் அதன் தலைவரும் வன்னி மாவட்ட எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் தனியான வேட்பாளர் களமிறங்கும் விடயத்துக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில்லை என ஏகமனதாக முடிவு எடுத்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான எத்தகைய முடிவானாலும் அது கூட்டமைப்பு ஒன்றிணைந்தே எடுக்கும். தனி வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் கடந்த வாரம் திட்டவட்டமாக தெவித்திருந்தார். இந்த நிலையிலேயே அவரது கட்சியைச் சேர்ந்த எம்.பி. எம்.கே. சிவாஜிலிங்கம் வேட்பாளராக களமிறங்குவதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் பிரதான வேட்பாளர்களான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஜெனரல் சரத் பொன்சேகாவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா. சம்பந்தனை அழைத்து பேசியிருந்தனர். இதனை விட எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவையும் சம்பந்தன் எம்.பி. பல தடவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதனை விட ஜனாதிபதியின் ஆலோசகரும் எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷவை ரெலோ அமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்களான செல்வம் அடைக்கலநாதன், என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் சந்தித்திருந்தனர். ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவரும் எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரனையும் பசில் ராஜபக்ஷ எம்.பி. சந்தித்திருந்தார்.

இவ்வாறு தனித்தும் கூட்டாகவும் சந்திப்புகள் இடம்பெற்று வந்த சூழ்நிலையிலேயே சிவாஜிலிங்கத்தின் களமிறங்கும் முயற்சி நடைபெற்றுள்ளது.

2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காது தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் முடிவு எடுத்திருந்தனர். இதனால் வடக்கு கிழக்கில் பெருமளவான மக்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அன்று விடுதலைப் புலிகள் பலம் பொருந்திய நிலையில் இருந்தாலும் கூட புலிகளின் கோரிக்கையையும் மீறி வடக்கு கிழக்கில் கணிசமான மக்கள் வாக்களித்திருந்தனர். முழுமையாக தமிழ் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் நிலைமைகள் மாறியிருக்கும்.

ஆனால், அன்று விட்ட தவறை மீண்டும் புரிவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்போ தமிழ் தலைமைகளோ இடம் விடக் கூடாது.

ஜனாதிபதித் தேர்தலில் தனித்து தமிழ் வேட்பாளர் அல்லது முஸ்லிம் வேட்பாளர் போட்டியிடுவதால் ஏற்படப் போகும் பலன்தான் என்ன?
தமிழ், முஸ்லிம் வாக்குகள் பிரிக்கப்படுமே தவிர வேறு எதுவும் இடம்பெறப் போவதில்லை.

தற்போதைய நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏகோபித்த முடிவுக்கு ரணாக சிவாஜிலிங்கம் எம்.பி. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் தமிழ் மக்கள் அவருக்கு ஒருபோதும் ஆதரவு வழங்க மாட்டார்கள் என்றே கருதப்படுகிறது. சிவாஜிலிங்கம் எம்.பி.யின் முடிவு கூட்டமைப்புக்குள் சிறிய முரண்பாட்டை கொண்டு வருமே தவிர வேறொன்றுக்கும் உதவாது.

கட்டுப்பணத்தை நேற்று முன்தினம் தாக்கல் செய்துவிட்டு கருத்து தெரிவித்த சிவாஜிலிங்கம் எம்.பி., கூட்டமைப்பு தனித்து போட்டியிடுவதற்கு வேட்பாளர் ஒருவரை நியமிக்குமானால் போட்டியிலிருந்து தான் விலகிக் கொள்ளத் தயார் என்றும் அதற்கான கட்டுப்பணத்தை கூட்டமைப்பு செலுத்த வேண்டும் எனவும் அவர் கருத்து தெவித்திருந்தார்.

இந்தக் கருத்தானது கூட்டமைப்புக்கான அவரது மிரட்டலாகவே அமைந்துள்ளது. வேட்பாளரை நிறுத்துங்கள் அல்லது நான் போட்டியிட்டே தீருவேன் என்பது போலவே அவரது செயற்பாடு அமைந்துள்ளது.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க அமைப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு காணப்படுகின்றது. இந்த நிலையில் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள், குழப்பங்கள் ஏற்படுவது எதிர்காலத்திற்கு நன்மையாக அமையாது.

தமிழ் மக்களுக்கான தீர்வு என்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டும் என்ற நிலை காணப்படுகிறது. நான்கு கட்சிகளும் ஒருமித்து ஒரே குடையின் கீழ் சென்றால் மட்டுமே எதிர்காலத்திலும் தமிழ் மக்கள் கூட்டமைப்பை ஆதரிப்பார்கள். இல்லையேல் நிலைமைகள் மாற்றமடையும் என்பது திண்ணமாகும். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் தனித்து களம் இறங்காது பிரதான வேட்பாளருடன் பேரம் பேசல்களை நடத்தி சிறுபான்மை மக்களின் உரிமைகளை யார் உறுதிப்படுத்த முனைகிறாரோ அவரை ஆதரிப்பதே இன்றைய சூழ்நிலையில் சயான முடிவாக அமையும்.
இதனை விடுத்து தேர்தலை பகிஷ்கரிக்கக் கோருவதோ, தனித்துப் போட்டியிட்டு சிறுபான்மையினன் வாக்குகளை சிதறடிப்பதோ நாமே எமக்கு படுகுழியைத் தோண்டும் செயலாகவே அமையும். எனவே தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ள கூட்டமைப்பு எம்.பி. எம்.கே.
சிவாஜிலிங்கம் மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா, முன்னாள் எம்.பி.
ஐ.எம். இலியாஸ் ஆகியோர் தமது முடிவுகளை மீள் பசீலனை செய்வது நல்லது.

கூட்டமைப்பின் தீர்மானத்துக்கு முரணாக சிவாஜிலிங்கம் எம்.பி. ஜனாதிபதித் தேர்தலில் குதித்து கணிசமான தமிழ் வாக்குகளைப் பெறுவது கடினமாகும். அப்படி வாக்குகள் கிடைக்காவிடின் அது அவரது பாராளுமன்ற அரசியலையே எதிர்காலத்தில் கேள்விக்குறியாக்கிவிடும்.

யுத்தம் உக்கிரமாக நடைபெற்ற காலத்தில் கூட்டமைப்பு எம்.பி.க்களான எம்.கே. சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், பத்மினி சிதம்பரநாதன், எஸ். கஜேந்திரன், சந்திரகாந்தன் சந்திரநேரு, எஸ். ஜெயானந்த மூர்த்தி ஆகியோர் வெளிநாடுகளில் தங்கியிருந்தனர். இவர்களில் சிவாஜிலிங்கம் உட்பட சிலர் நாடு திரும்ப முடியாத இக்கட்டான சூழலும் காணப்பட்டது.
ஆனால் தற்போது எஸ். ஜெயானந்த மூர்த்தி எம்.பி.யை விட ஏனைய அனைவரும் நாடு திரும்பியுள்ளனர்.

இவர்களில் சிலர் அரசாங்க உயர் மட்டத்துடன் சமரசம் இன்றி நாடு திரும்பியிருக்க முடியாது என்ற கருத்தும் நிலவுகின்றது. தேர்தல் காலத்தில் நாடு திரும்பியுள்ள இவர்கள் கூட்டமைப்புடன் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். இல்லையேல் அது பல்வேறு சந்தேகங்களுக்கும் வழிவகுத்து விடும்.

எனவே இரு பிரதான வேட்பாளர்களுடனும் இனப் பிரச்சினைக்கான தீர்வு, அதி பாதுகாப்பு வலய விவகாரம், மக்களின் மீள்குடியேற்றம் என்பன குறித்து திட்டமொன்றை முன்வைத்து பேச வேண்டும். தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதாக யார் உறுதி தருகின்றாரோ அவரைத் தேர்தலில் ஆதரிக்கும் டிவினை கூட்டமைப்பு எடுப்பதே சிறந்ததாகும். இதனையே இன்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆகவே கூட்டமைப்பின் முடிவுக்கு ரணாக தீர்மானம் எடுத்துள்ள சிவாஜிலிங்கம் எம்.பி.க்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. வேட்பு மனுவினை தாக்கல் செய்யாது கூட்டமைப்பின் ஒற்றுமையை அவர் உறுதிப்படுத்தினால் எதிர்காலம் சிறக்கும். இல்லையேல் தேர்தலில் தமிழ் மக்களின் தகுந்த தீர்ப்பு அவருக்குக் கிடைக்கும்.
அது அவரது கட்சியையும் பாதிக்கும் என்பது மட்டும் உண்மை.

தமிழ் மக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து களைத்துப் போய் மனடைந்த நிலையில் உள்ளனர். எனவே தற்போதைய நிலையை சிந்தித்து தமிழ் தலைமைகள் செயற்பட்டால் நல்லது. இல்லையேல் சோகங்களும் துக்கங்களுமே தமிழருக்கு தொடர் கதையாகும்.

கஜமுகன்

Read more...

Monday, December 14, 2009

The Structure of Tamil Names

My name is Sivapuranam Thevaram, and my origins are in the northern parts of Sri Lanka. I usually identify myself as a Sri Lankan Tamil, strictly in that order. And that order is not negotiable. Equally significant, and not for negotiation, is the order of the two identifiers in my name: Sivapuranam is the one given to my father at his birth, Thevaram is mine. My brothers are Sivapuranam Thiruvasakam and Sivapuranam Thirumanthiram. Again, Thiruvasakam and Thirumanthiram are tokens my dad looked up in the phone book. The full name of my dad is Thirukkural Sivapuranam. So the structure, sliding across generations is: One Two, Two Three, Three Four and so on.

This structure doesn't match the convention of my friend John Smith: Smith is his family name and John, the given name. His brothers are Mark Smith and Peter Smith, dad is Andy Smith and grandfather was Adam Smith (no, not the same chap). Their structure is like a tree: A great grandpa Smith, followed by a hierarchy of junior Smiths.

Nancy, our research group secretary isn't phonetically gifted. "You guys got it all so long", she complains.

Where I come from, Sivapuranam Thevaram is called Mr Thevaram for formal purposes, and should he acquire titles, he becomes Dr Thevaram, Professor Thevaram etc. Informally, people close to him say "Hey Thevaram".

My friend John Smith, who is Dr Smith for formal purposes, is "Hey John", informally. "Hey Smith" and "Dr John", are wrong. Should he gain membership of the second chamber of British governance, he becomes Lord Smith, but should Her Majesty be minded to honor him, he will be Sir John.

In the UK, I maintain the habit from home. People formally address me as "Mr. Thevaram", and informally also call me "Hey Thevaram". It takes a bit of training, but in my ivory tower circles, people learn fast. Vincent, our technician, once said to me: "well, in the lab people may learn to say Thevaram, but if you were in a factory, they will give you a Christian name everyone can pronounce". That explains why several Sri Lankans I know, working in petrol stations, have on their name badges "Mark", "Anthony" etc. Once I have met three guys, working eight-hour shifts, all using the same "Jonathan" name badge. "Who cares, just part of the uniform", they explained, in an amazingly detached view of life.

My brother Sivapuranam Thiruvasakam took a different approach. He has declared Thiruvasakam as his family name and a truncated version of my dad's name as his first name. His work colleagues have learnt to call him Siva, informally, and Dr Thiruvasakam, in a formal setting. It gets odd when he is in the company of a mixture of Sri Lankans and Europeans at parties: Europeans calling him "Hey Seeeva" and the Sri Lankans calling him "Hey Thiruvasakam".

I myself have abandoned the convention for the next generation, naming my kids One Thevaram, Two Thevaram and Three Thevaram, using Thevaram as family name and One, Two and Three as first names. In a few hundred years, you will find a whole family-tree of Thevarams, with me at the root.

Despite going into extensive searches, and sometimes numerical calculations, to find these names and sticking to their structures, we are reluctant to use them. We use a lot of uncle, aunty, annai, nangi, master and sir as substitutes for names -- the supposedly polite way. My mom would never call my dad: "Hey Sivapuranam", saying "Appa"-- meaning father -- instead. That has changed a bit in my generation. My wife addresses me as "injErungo Appa", "Hey Thevaram" or "chaniyan" with roughly equal probability and in decreasing order of expressed affection.

Thinking about all this started from a conversation with a retired Jaffna High Court judge, whose name I forget, and the former principal of St John's College, Anantharajan (see, just one name), at the Jaffna YMCA, in 1976/77. Having won the village chess tournament, I got to chat to these eminent gentlemen after the prize giving. The judge narrated a story of a woman witness, asked to identify her husband:

"Who is your husband?"

"It is him"

"What is his name?"

"It is him";

"Just tell us what his name is"

"It is him, you know him";

"For the last time, I will jail you for contempt of court if you don't tell us his name"

"It is him, my daughter's dad, you educated people -- you already know him".

It was sweet of Anantharajan to include this schoolboy in their conversation, and to let him laugh with them. If you will permit me a distraction just to complete the story, this man Anantharajan was shot about nine years after that conversation at the YMCA. It wasn't clear to me how killing this wonderful school principal was going to help Tamils achieve greater political space in Sri Lanka. Is it to you?

So I asked!

I was visiting an aunt's place in London when a coupe of chaps turned up to collect money for their war effort back home. She gave them 25 pounds and they were about to leave with the contribution, when I casually dropped my question:

"Are you taking this money to kill more of the likes of Anantharajan?"

Faces turned red. Tempers raised high.

"Are you calling us murderers?"

"Your words, not mine"

"You don't know much do you, about his CIA connections?"

"What makes you think Anantharajan was an agent of the CIA?"

"You don't know, I say, it is this type of people through whom the CIA operates".

My aunt was as shocked at this logic as I was, but kept her cool and said something to ease the tension and make them leave. Later, I ask her to explain why she was funding them. "I gave the [bleep]s 25 pounds", she said, "Otherwise they will come back and harass me, or even threaten me; no big deal 25 pounds for me, look at my grocery bill". It was 120 pounds.

(Some will say why bring up this story so many years since it happened. Perhaps it is all water under the bridge. Or perhaps how we face up to this might be the determinant of the future we build for the next generation of Sri Lankans. I do not know, and I leave it as an exercise to you readers.)

Let's get back to the name structure. Though Thevaram wasn't phonetically difficult, Nancy, even after much practice, continued to complain it was too long. Vincent continued to wish he could call me Bertram instead.

Being the only Sri Lankan member of the group, I survived a couple of years with Thevaram double acting as my first and last names, claiming it to be the Sri Lankan way and an aspect of my cultural heritage I shall stubbornly stick to. But it wasn't to last long.

On the first day of term, Nancy comes running into our lab. She is almost breathless and looks terrified. "Guess what", she exclaims, "We have another one from your country". She takes a deep breath. "Oh my God, his is even much longer!"

Polgahawela Aarachchilage Junius Solomon Rathmana Thanthiriya Bandarawela has joined our laboratory.

"Its OK, we can just call him Pol", I comfort Nancy.

Groundviews

Read more...

துரிதமாக மீண்டெழுந்து வரும் யாழ். குடாநாடு

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் யாழ்குடாநாடு பல்வேறு துறைகளிலும் துரிதமாக அபிவிருத்தியடைந்து வருவதை கண்கூடாகக் காண முடிகிறது. கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்பிடி போன்ற பல்வேறு துறைகளும் நீண்ட காலத்துக்குப் பின்னர் முன்னேற்றமடையத் தொடங்கியுள்ளன. அதே சமயம் யாழ்குடாநாட்டில் தொழில் வாய்ப்புகளும் பெருகி வருவதைக் காண முடிகிறது.

வட பகுதியில் முதல் தடவையாக தமிழ் பேசும் இளைஞர், யுவதிகள் எண்ணூறு பேர் பொலிஸ் சேவையில் இணைந்து ள்ளனர். வட பகுதியைப் பொறுத்தவரை இதுவொரு வரலாற்றுப் பதிவு ஆகும்.

வட பகுதி இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு கிடைப்பதென்பது ஒருபுறமிருக்க பொலிஸ் சேவையில் அவர்கள் இணைந்துகொள்வது முக்கிய விடயம்.

தமிழ் மொழியில் பணிபுரியக்கூடியவர்கள் பொலிஸ் சேவையில் அதிகமாகத் தேவைப்படுகின்றனர். தமிழ் பேசும் மக்கள் பொலிஸ் நிலையங்களுக்கு தங்களது தேவையின் நிமித்தம் செல்லும்போது, இலகுவாகக் கருமமாற்ற இதன் மூலம் வழியேற்படுகிறது. தமிழ் பேசும் இளைஞர், யுவதிகளை பொலிஸ் சேவையில் சேர்ப்பதென்பது மொழி ரீதியாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் பெருமளவில் குறைக்கவே செய்யும்.

இவ்விடயத்தில் அன்றைய காலப்பகுதி சம்பவங்களை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. புலிகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்திருந்த காலப்பகுதியில் தமிழ்ப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பரிதாபமாகச் சுட்டுக் கொல்லப் பட்டமை இங்கு ஞாபகம் வருகிறது. யாழ். குடாநாட்டில் புதிதாக நியமனம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருசிலர் அங்கு வீதிப் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் புலிகளால் அநியாயமாக வீதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த அச்சம் காரணமாக பொலிஸ் துறையில் சேருவதற்கே தமிழ் இளைஞர், யுவதிகள் அஞ்ச வேண்டியிருந்தது. இதனால் தொழில் வாய்ப்பையும் அவர்கள் இழந்தனர். இவ்வாறானதொரு நிலைமை இன்றில்லை. வடக்கில் மாத்திரமன்றி நாட்டின் எப்பகுதியிலும் தமிழ் இளைஞர், யுவதிகள் பொலிஸ் துறையில் சேர்ந்து பணியாற்றுவதில் தற்போது எந்தத் தடையுமே இல்லை.

இது ஒருபுறமிருக்க யாழ்குடாநாட்டில் கல்வி, சுகாதாரம் போன்ற அனைத்துத் துறைகளும் வேகமாக வளர்ச்சிய டைந்து வருகின்றன. யாழ். போதனா வைத்திய சாலையை நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை இத ற்கு உதாரணமாகக் கூறலாம்.

யாழ். வைத்தியசாலையில் ஊழியர் வெற்றிடங்கள் நிரப்பப் படவுள்ளன. நவீன வசதிகளுடனான அம்பியூலன்ஸ் வண்டியும் பரிசோதனைக் கருவிகளும் வழங்கப்படவு ள்ளன. அன்றைய காலத்தில் யாழ். குடாநாட்டிலிருந்து அவசர நோயாளர்களை கப்பல் மூலமே கொழும்புக்குக் கொண்டு வர வேண்யிருந்தது. கப்பல் பயணத்தின்போது நோயாளர் கள் பலர் உயிரிழந்த சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன.

தற்போது வைத்தியத்துறை அங்கு நவீனமடைந்து வரு கிறது. யாழ். வைத்தியசாலையை நாட்டின் ஏனைய வைத்தியசாலைகளுக்கு நிகராக அபிவிருத்தி செய்வதே அரசின் இலக்காக உள்ளது.

இதுபோலவே அங்கு தொழில்துறைகளும் அபிவிருத்திய டைந்து வருகின்றன. முன்னைய காலத்தில் விதிக்கப் பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் இதற் கொரு காரணமாகும். அதேசமயம் தொழில்துறைகளு க்கான ஊக்குவிப்புகளையும் அரசாங்கம் தற்போது வழங்கி வருகிறது.

யாழ். குடாநாட்டில் ஏற்பட்டுள்ள இத்தகைய மாற்றங்கள் யாவும் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் வடபகுதியை மீளக்கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள துரித திட்டங்களால் ஏற்பட்டவையா கும். யாழ். குடாநாடு நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் மீண்டெழுந்து வருவதை நாம் இப்போது நேரில் காண்கிறோம்.


Thinakaran

Read more...

Friday, December 11, 2009

சனீஸ்வரன் கொஞ்சம் சிந்தியுங்கள்

தமிழ் அரசியற் சூழலிலும் தமிழ் ஊடகச் சூழலிலும் தொடர்ந்து நிலவும் அராஜகத்தனம் அல்லது குருட்டுத்தனம் என்பது எப்போதும் தமிழ் மக்களையே பலவீனப்படுத்துகிறது!


ஆயுதத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் மட்டும்தான் அராஜக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்றில்லை. ஆயுதங்களின் மூலம்தான் ஜனநாயகத்தை மறுக்கமுடியும் என்றுமில்லை. எமது மக்களின் மூலம்தான் ஜனநாயகத்தை மறுக்கமுடியும் என்றுமில்லை எமது சமூகத்தில் பலரிடம் அராஜக மனோபாவமும் ஜனநாயக மறுப்புக் குணமும் உண்டு. இந்தக் குணங்களின் அடிப்படையில் இப்போது இணையங்களில் தாறுமாறாக ஏராளம் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. அவரவரின் மனம் போனபோக்கில் விருப்பு வெறுப்புக்களின்படி எந்தவிதமான முன்யோசனைகளுமின்றி இவர்கள் எழுதித்தள்ளுகிறார்கள். இவற்றால் சனங்களுக்கு உருப்படியாக எதுவும் கிட்டுவதில்லை ஆனால், இவ்வாறு எழுதப்படுகின்ற கட்டுரைகளிலும் விமர்சனங்களிலும் முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலாக மாற்று யோசனைகள், தீர்வுகளை இந்த ஜாம்பவான்கள் ஒருபோதும் வைப்பதில்லை.


நெருப்பு.கொம், தமிழ்வின் போன்ற இணையத்தளங்களில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு சனீஸ்வரன் என்பவர் எழுதியிருக்கும் பகிரங்க மடலும் ஏறக்குறைய இந்த வகையினதுதான். இதே மனோபாவம், இதே குணவியல்பின் அடிப்படையில் எழுதப்பட்டிருப்பதே.

பொதுவாக தமிழர்களுக்கு அரசியல் சரியாகக் கையாளத்தெரியாது என்று சொல்லப்படுவதுண்டு. இல்லையென்றால் அறுபது ஆண்டுகாலம் போராட்டத்தின் பின்னர் அவர்கள் இப்படியொரு தத்தளிப்பு நிலையில் திசைதடுமாறித் தவித்துக் கொண்டிருப்பார்களா? தமிழர்களால் ஜனநாயகத்தை முறையாகப் பேணமுடியாது. அவர்களுக்கு ஊடகங்களில் அதற்குரிய பண்பாட்டுடன் அவற்றை வளர்த்தெடுக்கவும் தெரியாது. அந்தப் பண்பாட்டில் வளரவும் தெரியாது. அதிகம் ஏன்? விடுதலைப் போராட்டத்துக்கெனத் தூக்கிய ஆயுதத்தைத்தான் ஒழுங்காக இலக்கை நோக்கிக் கையாளத் தெரிஞ்சுதா? இந்த மாதிரி நியாயபூர்வமான கேள்விகளை எழுப்பினால் உடனடியாக ஏதாவது வசைபாடி முத்திரை குத்தி எதிரி, துரோகி, ஒட்டிப்பிழைப்போர், இன்னும் அது இது என்று சொல்லி தீர்பளித்து விடுவார்கள். நம்முடைய ஜனநாயகத்தின் “விறுத்தம்’ அப்படி என்ன செய்வது உங்கள் முதுகிலேயே நாங்களே அடித்துக்கொள்ளும் வீரத்தை கொண்டாடாமல்? சரி, இந்தப் பகிரங்கக் கடிதத்துக்கே வருவோம். எல்லவகையான குறைபாடுகளின் மத்தியிலும் இந்தக் கடிதம் சில விசயங்களைச் சொல்கிறது.

1. புலிகளின் வீழ்ச்சி பற்றிய துக்கம்

2. பிரபாகரன் மீதான அபிமானம்

3. எல்லாத் தமிழ்கட்சிகளும் ஒன்றுபடவேண்டும் என்ற கோரிக்கை

4. உருவாகியிருக்கும் புதிய சூழலில் டக்ளஸ் தேவானந்தாவே அரசியல் தலைமைத்துவத்துக்குரியவர் என்ற தெரிவு. ஆனால், அவர் கவனிக்க வேண்டிய சில விடயங்கள் உண்டென்று சுட்டிக்காட்டுதல்.

5. டக்ளஸ் தேவானந்தாவுக்கு உருவாகிவரும் செல்வாக்குப் பற்றிய அச்சம்.

6. வேலைதேடும் பட்டதாரிகளும் ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களும் கேணயர்கள் என்று நினைத்துக் கொண்டே இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இப்படி இன்னும் சில விசயங்கள் உண்டு. இவை எல்லாவற்றினதும் பின்னணியில் இயங்கும் மனோபாவத்தை முதலில் விளங்கவேண்டும். புலிகளின் வீழச்சியையும் பிரபாகரனின் அழிவையும் இவ்வாறான பலர் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் அது வரலாற்று விதிப்படி நடந்துவிட்டது. 1980 களின் முற்பகுதியிலேயே புலிகளை ‘பாசிசப் புலிகள்’ என்று பல தரப்பினரும் தெரிவித்தனர். இதன் காரணமாக அவர்கள் “துரோகி” முத்திரை குத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்கள். மிஞ்சித்தப்பியவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றனர். ஆனால் புலிகளின் போக்குப் பற்றியும் அவர்களின் நடவடிக்கைகளைப் பற்றியும் தமது விமர்சனங்களையும் கண்டனங்களையும் முன்வைத்தே வந்தனர். பாசிசம் இறுதியில் அழிவையே சந்திக்கும் என்பதற்கமைய புலிகளின் இறுதிமுடிவு அமைந்தது. பிரபாகரனின் நடவடிக்கைகளின் இறுதிவிளைவு என்ன என்பதை வன்னி மக்கள் உட்பட சிந்திக்கும் அனைவரும் நன்றாக அறிவர். வரலாற்றில் யாருடைய தியாகங்களை யார் மதிக்கவில்லை என்பதை சொல்லிப் புரிய வைக்க வேண்டியதில்லை. இந்த மக்களும் விடுதலைக்காகப் போராட வந்த சகல அமைப்புகளின் போராளிகளும் செய்த தியாகங்களை பிரபாகரன் எந்த வகையான பொறுப்புமில்லாமல் நாசமாக்கிவிட்டார். அதுமட்டுமல்ல, தன்னைத்தவிர வேறு சக்திகள் எதுவும் இருக்கக்கூடாது என்ற ஏகோபித்த மனப்பாங்கில் செயற்பட்டு ஏனைய தரப்புக்களையும் அழித்து இன்று எல்லாவற்றையும் சூனியமாக்கிவிட்டுச் சென்றுவிட்டார்.

உண்மையில், தெளிவாகச் சிந்திக்கும் எவரும் பிரபாகரனின் தவறுகளையே இனங்காணுவர். அவர் மட்டுமல்ல கற்பனையில் தமிழ்த்தேசியம். தனிநாடு, உரிமைப்போர் என வாதிடுவோhரும் கனாக்காணுவோருமே மாபெரும் குற்றவாளிகள். இந்தச் சனங்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்தார்களோ அவ்வளவையும் நாசமாக்கி அழிந்து நிர்க்கதியாக்கி விட்டிருக்கிறார்க்ள இவர்கள். பிரபாகரனுக்காக உலகம் முழுவதிலும் உள்ள தமிழன் கண்ணீர் வடிப்பதொன்றும் புதினமல்ல.ஏனெனில், தமிழ் அரசியல் தமிழ் ஊடகவெளியும் அத்தகைய சீரழிவிலும் குருட்டுத்தனத்திலும் மாஜாவிக் கற்பனையிலுமே ஊறிக்கிடக்கின்றன. எனவே. ‘பொத்தம் பொதுவாக’ உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் பிரபாகரனுக்காக கண்ணீர் வடிக்கிறார்கள் என்று சொல்லி இன்னொரு மாயவிம்பத்தை – ஏகோபிதத்தை கட்டமைக்கலாம். உண்மையில் பிரபாகரனைப் பற்றியும் புலிகளைப் பற்றியும் இதுவரையில் எத்தனையோ எதிர்க்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கருத்துக்களும் விமர்சனங்களும் மிக செறிவானவையும் கூட. அதேவேளை புலிகளை எதிர்ப்போர் எப்போதும் பன்மடங்கில் உண்டு. தமக்கு எதிர்ப்பு வளையங்கள் இல்லையென்றால் புலிகள் எதற்காக கட்டுப்பாடுகளையும் பிரயோகிக்க வேண்டும். என்வே, சனீஸ்வரன் தனக்கிருக்கும் புலிவியாதியை நல்ல மருத்துவமனையில் காட்டிச் சுகப்படுத்திக் கொள்ளவேணும்.

அடுத்தது. எல்லாத்தமிழ்கட்சிகளும் ஒன்றுபடவேணும் என்ற அவருடைய ஆசையில் ஒரளவு நியாமுண்டு. இதற்கு எல்லாக்கட்சிகளும் தயாரா? கூட்டமைப்புக்குள்ளேயே பல கூடாரங்கள். அதற்குள்ளேயே பல இழுபறிகள் தவிரவும் முஸ்லிம் கட்சிகளிடையே ஏராளப் பிணக்குகள் இந்தச் சிக்களுக்குள் நின்று மேலும் மேலும் சிக்குப்படுவதா? அல்லது காயப்பட்ட மக்களையும் பசியாலும் சனங்களையும் பாதுகாத்துப் பராமரிப்பதா இப்போது அவசியம்? சாத்தியமற்ற விசயங்களில் வாழ்வைப் பணயம் வைக்கும் அரசியல் பாரம்பரியத்தில் இருந்து நோக்கும் போது இந்த மாதிரியான மக்கள் நேய நடவடிக்கைகள் ஒரு பொருட்டாகத் தெரியாது. வெறும்வாய்ப்பேச்சு அரசியலுக்கு கொடுக்கும் மரியாதையை சனீஸ்வரன் மக்களின் தேவைகளுக்கான அரசியலுக்கு கொடுக்கவேண்டும் என்று சிந்திக்கவில்லை. வேண்டுமானால் நாலு வீராவோசவார்த்தைகளை அள்ளிவீசி, இனமானம், தனிநாடு, அடைந்தால் மகாதேவி இல்லையென்றால் மரணதேவி என்று சொல்விடலாம். அதனால் யாருக்கு என்ன லாபம்?

மேலும், இன்று யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு தெருவிலிருந்தும் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அழைப்புகள் விடுக்கப்படுவது ஒரு இயல்பு. இதுவரையிலும் தமது உள்ளக்கிடக்கையை அடக்கி வைத்திருந்த மக்கள் இப்போது அதை வெளிப்படுத்துகின்றனர். அன்பு பாராட்டுகின்றனர். தமது அரசியல் மாதிரியை உருவாக்க எத்தனிக்கிறார்கள். இதற்கெல்லாம் இதுவரையிலும் யார் தடையாக இருந்தார்கள் என்பதை சனீஸ்வரன் நன்றாகவே அறிவார். இந்த மக்களின் இயல்பான ஜனநாயக விருப்பத்தை மீண்டும் அடக்கி தமது ஆதிக்கத்தை நிலைநாட்டவே அவர் விரும்புகிறார். ஆனால் அதற்கான சூழல் இல்லை எனவே பக்கரிக்கிறார் வசைபாடுகிறார். பொருமித் தள்ளுகிறார். எதையும் எதிர்த்து விடலாம் யாரையும் கிண்டலும் கேலியும் கூட எளிதிற் செய்துவிடலாம் ஆனால், ஒரு சிறிய காரியத்தைச் செய்வதற்குரிய உழைப்பையும் சிந்தனையும் செலவிடுவதே இங்கே முக்கியமானது. அது ஒரு நெருக்கடிச் சூழலில் இந்தப் பணி இன்னும் சிரமமானது.

சனீஸ்வரன் சொல்வதைப் போல பார்த்தால் தேவானந்தாவை அழைத்துக் கொண்டாடும் மக்கள் கேணயர்கள், பட்டதாரிகள் கேணயர்கள் அவருடன் ஆதரவைப் பெருக்கிக் கொண்டிருக்கும் அத்தனைபேரும் கேணயர்கள் இதை இந்த மக்கள் ஏற்றுக்கொள்ளுவார்களா? அல்லது அப்படித்தான் அவர் சொல்கிறாரா? அப்படியெண்டால் தமிழ்மக்களின் பெரும்பான்மையானோரும் கேணயர்களா?

இன்றைய சூழலில்எத்தகைய அரசியல் வழிமுறை பொருத்தமானது சாத்தியமானது என்று சனீஸ்வரன் விளக்கமளிக்கட்டும். அதாவது நடைமுறைரீதியில் பயனளிக்கக்கூடியது எது என்று அத்துடன் அவரே சொல்வதைப் போல மிகக்குறுகிய கால எல்லையில் பயனளிக்கக் கூடியதாக இன்று இந்த கையறு நிலையை ஏற்படுத்தியது எவருமல்ல வீணே பிறர்மீது பழியைப்போட்டு தாம் தப்பித்துக் கொள்ளும் ஒரு அரசியல் பாரம்பரியம் தமிழ்ச் சூழலில் உண்டு. அதையே சனீஸ்வரன் செய்கிறார். துரோகி – தியாகி என்ற பிரிகோடுகளை வைத்து எல்லாவற்றையும் அளக்கும் பழைய முறை. இதில் எப்போதும் தாம் தியாகிகள் பக்கமே என்பதே இவர்களது நிலைப்பாடு.

பேராசிரியர்கள் சிவசேகரம் சொல்வதைப்போல இவர்கள் ஆட்சியாளர்களுடன் கைகுலுக்குவதும் உடன்படிக்கை செய்வதும் பேரம் பேசுவதும் கொடுக்கல் வாங்கல் செய்வதும் அரசியல் நடத்துவதும் சரி. அது தியாகத்தின் பாற்பட்டது. ஆனால், அதை வேறு எவரும் மக்களின் நலன் கருதிச் செய்தால் அது தவறு அது துரோகம். அதை மன்னிக்க முடியாது. இதில் என்ன நியாயமுண்டு. தமிழரசுக் கட்சி தொடக்கம் கூட்டணி புலிகள் என்று ஏராளம் உதாரணங்களும் சம்பவங்களும் வரலாற்றில் உண்டே.

உரிமை வாங்கித்தாறோம், தனிநாடு அமைத்துத் தருவோம், ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை ஆளநினைப்பதில் தவறென்ன? மீண்டும் தமிழனின் பொற்காலமாம் சங்ககாலத்தை கைகளில் தருவோம் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி சனங்களை “உசுப்பேத்தி” அவர்களின் இரத்தச் சூட்டில் குளிர்காயும் தவறான (கேவலம் கெட்ட துரோகத்தனமான) அரசியலை விடவும் சனங்களுக்கு உதவும் அரசியல் நல்லது. இப்பொழுது உடனடியாக தமிழ்மக்களின் உரிமைப் பிரச்சினைக்கான தீர்வினை டக்ளஸ் தேவானந்தாவினால் மட்டுமல்ல வேறு எவராலுமே பெறமுடியாது. சனீஸ்வரன் கொண்டாடும் புலிகளால் கூட அதைப் பெறமுடியவில்லையே அதிகம் ஏன் தங்களைப் பாதுகாக்கும் குறைந்த அரசியல் தெளிவும் அணுகுமுறையும் கூட சனீஸ்வரனின் புலிகளுக்கு இல்லாமற் போய்விட்டதே. அடுத்து புலிகளின் பிரதிநிதிகளான தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் கூட ஏதாவது உருப்படியான காரியங்களைச் செய்யமுடிகிறதா? அப்படிச் செய்வதற்குரிய சூழ்நிலை இப்போது இல்லை என்று கூட்டமைப்பின் பல எம்.பி மாரும் வெளிப்படையாகவே சொல்கிறார்கள். ஆனால் அவர்களால் தங்களுடைய எம்.பி பதவிகளைத் துறக்க முடியவில்லை. அரசியல் ஆதாயங்களையும் இருப்பையும் கைவிடத் தயாரில்லை இதெல்லாம் சனீஸ்வரன் என்ற குழந்தைக்கு விளங்குவதும் இல்லை, கண்ணில் உறுத்துவதுமில்லை. அவருடைய இனமானத்தில் பங்கத்தையோ பாதகத்தையோ ஏற்படுத்துவதுமில்லை.

இன்று இலங்கை அரசியல் என்பது மிகவும் நெருக்கடி நிலையிலேயே இருக்கின்றது, அதிலும் தமிழ்மக்களின் அரசியல் என்பது இன்னும் நெருக்கடிமிக்கது. ஆனால், மக்கள் முன்பிருந்த போர் அச்சச் சூழலில் இருந்து மீண்டுவிட்டனர். வன்னியிலிருந்த மக்களின் நிலைதான் இன்னமும் துயரத்திற்குரியதாக உள்ளது. அவர்களும் கூடிய விரைவில் ஏதோ வகையில் விடுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த வாரங்களில் இநத விடுகை துரிதமாக்கப்பட்டுள்ளது. மூடப்பட்டிருந்த வீதிகள் திறக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்துக்கும் வெளியிடங்களுக்குமான பயண நெருக்கடி பாதிக்குமேல் குறைந்துள்ளது. இதெல்லாம் என்ன பெரிய சங்கதிகள் என்று யாரும் கேட்கலாம். எதெல்லாம் இல்லாமல் இருந்தன? எவையெல்லாம் தடைப்பட்டிருந்தனவோ அவையெல்லாம் மீண்டும் கிடைப்பது மகிழ்ச்சிக்குரியது. இது முதற்கட்டம் முதலில் செய்யவேண்டியது எது? அடுத்துச் செய்யவேண்டியது என்ன? என்ற தெளிவு வேண்டும். மக்களின் உடனடித்தேவைகள் என்ன என்ற தெளிவு முதலில் வேண்டும். அது எமது தமிழ் அரசியல்வாதிகளுக்கு எப்போதுமிருப்பதில்லை. இதைச் செய்யும் தரப்பினரை கொச்சைப்படுத்தும் காரியத்தைத் தவிர அவர்கள் வேறு எதுவும் செய்வதில்லை. இதேவேளை, சனங்களின் நிலையைப் பற்றிக் கவலைப்படாமல் தாங்கள் மிகச் சுகபோகமாக வாழ்வார்கள். ஜீ.ஜீ பொன்னம்பலம், எஸ்.கே.வி செல்வநாயகம் தொடக்கம் பிரபாகரன் வரை இதில் அடங்கும். ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்பிமார் என்ன குறைந்தவர்களா? இவர்களின் அரசியல் செயல்பாட்டினால் இதுவரையில் மக்களுக்கு ஏதாவது நன்மைகள், பயன்கள் கிடைத்திருந்தால் தயவு செய்து சனீஸ்வரனோ அல்லது அவரைப் போல சிந்திப்பவர்களே சொல்லுங்கள்.

வெறுங்கற்பனைகளை விடுத்து, நடைமுறையில் எதையெல்லாம் சாதிக்க முடியுமோ, எவ்வளவைச் செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்ய விளைவதே மேல். வெறும் வார்த்தைகளை விடவும் சிறு செயல் பெறுமதியுடையது. அரசாங்கத்துடன் இணைந்து செய்ய வேண்டியதைச் செய்து கொண்டு அரசுக்கு அழுத்தமும் பொறிமுறைக்கு தம்மைத் தயார்ப்படுத்தும் அரசியலே இன்று அவசியம். இதுவே இன்றுள்ள பொருத்தமான தெரிவும் கூட, இதையே ஏறக்குறைய தேவானந்தாவும் செய்கிறார் போலும்.

இதை தமிழ்மக்களிற் பலரும் இன்று புரிந்துள்ளனர். என்பதையே அண்மைக்கால நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. மக்கள் இன்று தேவானந்தாவை நோக்கிச் செல்கின்றனர். தேவானந்தாவும் மக்களிடம் செல்கிறார். மக்கள் மயப்பட்ட அரசியல் வளர்ச்சியொன்று இப்போது உருவாகி வருகிறது. இதில் குறைபாடுகள் இருக்கலாம். அதைச் சுட்டிக்காட்டவும் விமர்ச்சிக்கவும் வேண்டிய பொறுப்பும் கடமையும் எல்லோருக்கும் உண்டுஇ ஆனால் வசைபாடுவது, வக்களிப்பது, துரோகி- தியாகி என பிரபாகரன் பாணியில் வசைபாடி மக்களை மேலும் நிர்க்கதியாக்கும் காரியத்தை யாரும் செய்யக்கூடாது. அதை எவரும் அனுமதிக்கவும் கூடாது அந்தப் பாணியிலான அரசியல் முடிந்துவிட்டது. அது தோற்றுவிட்டது. அதிலிருந்து நாம் பாடம் படிக்கவில்லையென்றால் வரலாறு எம்மை மன்னிக்காது.

மக்கள் மயப்பட்ட அரசிலுக்கு மக்களின் குறைநிறைகள் நிவர்த்திக்கப்படவேண்டும். அதன் மூலம் அவர்கள் இயல்பு வாழ்க்கையை முதலில் வாழ வேண்டும். அந்த வாழ்வை அமைத்துக் கொடுத்துக் கொண்டே அரசியல் உரிமைக்கான அரசியலுக்கு அந்த மக்களைத் தயார்படுத்த முடியும். தமிழர்கள் தோற்றுப்போனதாக யாரும் கருதத்தேவையில்லை. இரண்டாம் உலக மகாயுத்தத்தில் யப்பான் மேற்குலகினால் பாதித்தது. ஆனால் சில ஆண்டுகளிலேயே அது மேற்குலகத்துக்குச் சமனாக எதிர்ததுடன் அந்த உலகத்துடன் அது அரசியல் பொருளாதார உறவுகளையும் கொண்டிருக்கிறது. இதைவிடுத்து வெறுமனே அமெரிக்காவுக்கும் ஜரோப்பாவுக்கும் எதிராக வசைபாடிக் கொண்டிருந்தால் இன்று யப்பான்; சனீஸ்வரனிடம்தான் சரணடைந்திருக்க முடியும்.

எந்த ஒரு அரசியல் விமர்சனத்தையும் முன்வைப்பதற்கு ஒரு பண்புநிலையும் நாகரிகமும் தேவை. அதை நாம் வளர்த்தெடுக்கவேண்டும். அதுவே சிறந்த ஜனநாயகத்திற்கான உள்ளடக்கம். சிறந்த ஜனநாயகச் சூழல் என்பது அறிவுமயப்பட்டதொரு சமுதாயத்தை உருவாக்கும். அத்தகையதொரு ஜனநாயகச் சூழல் மெல்ல மெல்ல உருவாகி வருகிறது. இல்லையென்றால் தேவானந்தாவைப் பற்றி இவ்வாறு எழுதக்கூடிய ஒரு ஜனநாயகம் சனீஸ்வரனுக்குக் கிடைத்திருக்குமா?

மக்களுடன் கலந்து ஒன்றிணைந்திருக்கும் அரசியலே இன்றைய தேவை. அதில் மதவைத் திறந்தலென்ன? தெரிவைக் கூட்டினால் என்ன? எல்லாமே தொண்டு தான்.

தமிழ்ப்பிரியன்


வெளிச்சம்

Read more...

Monday, July 20, 2009

மனிதனை ஆட்டிப் படைக்கும் போலி கௌரவம்

பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை? நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.

கணவரும், மனைவியும், தாங்கள் வளர்த்து வந்த கழுதையுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

“யாராவது ஒருவர் கழுதை மீது அமர்ந்து செல்லலாமே” என்றார் அவ்வழியே சென்ற ஒருவர். அதனால் கணவர் கழுதை மீது ஏறி உட்கார்ந்தார்.

“கொடுமைக்கார புருஷனாக இருப்பார் போலும். தான் மட்டும் சுகமாக அமர்ந்துகொண்டு மனைவியை நடக்க விடுகிறார்” என்றார் இன்னொருவர். இப்போது மனைவியை அமரவைத்து கணவர் நடக்க ஆரம்பித்தார்.

“புருஷனை மதிக்காதவள், திமிராக கழுதை மீது அமர்ந்து செல்கிறாள்” என்ற மற்றொருவரின் கொமென்ட்டைத் தொடர்ந்து கணவரையும் தன்னுடன் ஏற்றிக் கொண்டாள் மனைவி.

“கொஞ்சமாவது ஈவு, இரக்கம் இருந்தால் பாவம் இந்த கழுதையை இப்படி கஷ்டப்படுத்துவார்களா?” என்றார் வேறொருவர்.

இறுதியில் கணவர் மனைவி இடையே சண்டை வந்துவிட்டது. “உங்களால்தான் இந்த அவமானம்” என்றார் மனைவி. “உன்னால் என் கெளரவமே போச்சு” என்றார், கணவர்.

நம் வாழ்வில் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அடுத்தவர்கள் சொல்வதை கேட்பதும், போலி கெளரவமே முக்கிய காரணம்.

போலி கெளரவம் மனிதனுக்கு குழந்தைப் பருவத்திலே தானாகவே ஏற்பட்டு விடுகிறது. ஓடிக் கொண்டிருக்கும் சிறுவன் கால்தடுக்கி விழுகிறான். யாராவது பார்த்து விட்டார்களா என இங்குமங்கும் பார்க்கிறான். யாரும் பார்க்க வில்லையென்றால் எழுந்து, துடைத்துக் கொண்டு தொடர்ந்து ஓடுகிறான். யாராவது பார்த்து விட்டால், அதுவும் சிரித்து விட்டால் போச்சு, அசிங்கம், அவமானம்! கண்ணீர் ஆறாய் ஓடுகிறது. தடுக்கி விழுவது கூட பெருங்குற்றம் என பிஞ்சு மனம் நம்புகிறது.

உலகில், போலி கெளரவத்தின் தலைமையகம் அமெரிக்காதான் என்றால் அது மிகையல்ல. அடுத்த பத்தாண்டுகளுக்கு கிடைக்கக் கூடிய எல்லா கடன் சலுகைகளையும் இப்போதே பெற்று நீயா, நானா என்று போட்டி போட்டு கெளரவம் பார்ப்பதில் அமெரிக்கர்கள் கில்லாடிகள். கிடைக்கிறது என்பதற்காக சக்தியை மீறி வாங்கிய வீட்டுக் கடன்களில் திவாலாகி, “அமெரிக்காவில் வீடு வேண்டுமா? ரொம்ப சீப்” என்று இங்கு டீக்கடை முன்பு நில புரோக்கர்கள் கிண்டலாக கேட்கும் அளவுக்கு கடந்த ஆண்டு அங்கு பெரும் நெருக்கடி.

“என்னை அடியுங்கள். உதையுங்கள், சாகடியுங்கள்; ஆனால் மற்றவர் முன் அவமானப்படுத்தாதீர்கள்” என்ற வேண்டுகோள் நம் சமூகத்தில் பிரபலம். விசாரணையின்றி, பொறுமையின்றி மிருகத்தனமாக நடந்துகொள்ள குடும்பத்தினருக்கு அனுமதி உண்டு. ஆனால் அதை மற்றவர்கள் பார்க்க மட்டும் கூடாது என்ற கெளரவ நிலைப்பாடு இங்கு வேரூன்றி விட்டது.

இந்தப் போலி கெளரவம் படித்தவர்களையும் வாட்டி எடுக்கும் சக்தி கொண்டது.

“சக மாணவர்கள் முன் ஆசிரியர் என்னை திட்டிவிட்டார்; அதனால் எனக்கு அவமானமாக இருந்தது” என்று அம்மாவிடம் பையன் புலம்பினால் அது போலி கெளரவத்தின் அறியாப்பருவம். “இன்னொரு டீச்சர் முன்பு என்னைக் குறை சொல்லாதீங்க சார் என் கெளரவம் என்னாவது?” என்று ஒரு டீச்சரே தலைமையாசிரியரிடம் குறைபட்டுக் கொள்வது போலி கெளரவத்தின் விபரீத வளர்ச்சி. தவறு தவறுதான். அதை யார் சொன்னால் என்ன? எங்கு சொன்னால் என்ன? அதற்கும் கெளரவத்திற்கும் என்ன சம்பந்தம்?

நாம் கெளரவமானவர்கள் என்று நமக்குத் தெரிகிறது. ஆனால் நாம் அணியும் செருப்புக்கு எப்படி தெரியும்? பலர் மத்தியில் செருப்பு ரிப்பேராகிறபோது அதை தூக்கிப் போட்டு விட்டு வெறுங்காலோடு நடந்தால் சுமார் கெளரவம்; விலை உயர்ந்தது. சரி செய்து விடலாம் என அச்செருப்பை கையில் ஏந்தியபடி, தலைநிமிர்ந்து நடந்தால் சூப்பர் கெளரவம். இதை விடுத்து, பிறருக்கு தெரியக்கூடாது என்பதற்காக காலை தரையில் தேய்த்தபடி நடந்து வந்து வண்டியில் ஏறினால், அது போலி கெளரவம்.

டூவீலர் என்ஜின் திடீரென எக்குத்தப்பாகி பெட்ரோலைக் குடித்து விடுகிறது. வண்டி பாதி வழியில் நின்று விடுகிறது. மனைவி ஒரு பக்கம், மற்றவர் ஒரு பக்கம், அவ்வளவுதான். போயே விட்டது நாம் கட்டிக்காத்த கெளரவம்! அருகில் உள்ள பெட்ரோல் ‘பங்க்’குக்கு வண்டியைத் தள்ளிச்சென்றால் உடலுக்கு கெளரவம்தான். ஆனால் உள்ளத்துக்கும், உடன் வரும் செல்லத்துக்கும் அது கெளரவக் குறைச்சல் ஆயிற்றே.

“என்ன ஆச்சு? என்று ஏதோ வண்டியில் குண்டு வெடித்த மாதிரி சிலர் கேட்பார்களே அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று நினைத்தால், அது போலி கெளரவம். வண்டி பிரச்சினைக்கும், வாழ்க்கை கெளரவத்திற்கும் என்ன தொடர்பு? - யோசித்துப் பாருங்கள்.

சாப்பிடாவிட்டால் கூட சிலரின் உடல் வஞ்சனை இன்றி வளர்ந்து விடுகிறது. இதற்காக உடலின் அளவைக் குறைக்க முயற்சி எடுக்க வேண்டுமேயன்றி, ‘எல்லோரும் கிண்டல் செய்கிறார்கள்’ என்று கெளரவம் பார்த்து வெளியில் வருவதைக் குறைக்கக் கூடாது, வீட்டுக்கு பொலிஸ் வருவது விண்ணப்பம் தொடர்பாகத்தானே. இதில் ‘மற்றவர்கள் வேறுமாதிரி நினைத்து விடப் போகிறார்கள்’ என பயப்படுவது ஏன்?

இப்படி எங்கும் எதிலும், எப்போதும் பெரியவர்கள் கூட கெளரவம் பார்ப்பதால் இளைய தலைமுறையும் இதையே பின்பற்றி, தன் திறமையை வெளிக் கொண்டு வர தயங்குகிறது. ‘உனக்கு தெரிந்ததைப் பேசு’ என்று ஒரு நிகழ்ச்சியில் சொன்னால் ‘சரியாகப் பேசவிவ்லையென்றால் எல்லோரும் தவறாக நினைப்பார்கள்’ என்று சிறுவர்கள் பயப்படுகின்றனர். ‘யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. முடிந்தவரை முயற்சி செய்’ என்று அவர்களை ஊக்கப்படுத்தினால்தான் நாளைய இன்டர்வியூக்களை அவர்கள் வெல்ல முடியும். ‘ஊக்குவிப்பார் யாரும் இல்லையெனினும், குறைசொல்வோருக்கு குறைவில்லை’ எனும் நிலை ஆபத்தானது.

பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை? நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.

தன்னுடைய முக்கியமான வாடிக்கையாளர்களுக்காக ‘பபே’ விருந்துக்கு ஏற்பாடு செய்தது ஒரு வங்கி. ஒரு கையில் தட்டு; மறுகையில் இரண்டு ஸ்பூன்கள், சப்பாத்தி, சிக்கன் என போர்க் ஸ்பூனுக்குள் சிக்காத அயிட்டங்கள். பலமாகக் கொத் தினால் போட்டிருக்கும் கோட்டுக்குள் குழம்பு சீறி சிதறும் ஆபத்து. அதில் ஒரே ஒருவர் மட்டும் ஆரம்பத்தில் இருந்தே அசத்தினார். ஆம், ஸ்பூன்களை வீசிவிட்டு கையால் எடுத்து, கடித்து, மென்று சாப்பிட்டு ‘எங்கேப்பா ஐஸ்கிரீம்’ என்று கேட்டபடி நகர்ந்தார்! மற்றவர்கள் முகம் சுளித்தனர். ஆனால், பிறர் மத்தியிலும் தனக்காக சாப்பிட்டவர் அவர் ஒருவர்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

குறை சொல்வது, பொறாமைப்படுவது, அவசரப்பட்டு பேசுவது, ஒரு விஷயத்தை கேள்விப்பட்ட உடன் அப்படியே நம்பி விடுவது போன்றவை மனிதனின் பலவீனங்கள் நம் பண்புகளையும், உழைப்பையும், வெற்றியையும் அவ்வளவு சீக்கிரம் சக மனிதர்கள் நம்பி ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சி அடைவதில்லை. ‘மற்றவர்’ என்றும் நாம் கருதும் அந்த மனிதர்களுக்கும் இது பொருந்தும். இந்நிலையில் பிறர் பார்வைக்கும், சொல்லுக்கும் நாம் மதிப்பளித்து அவர்கள் பார்க்கிறார்களே, அவர்கள் முன் திட்டு வாங்குகிறோமே என்றெல்லாம் சங்கடப்படத் தேவையில்லை.

உடைக்கப்படுகிறோமே என்று கெளரவம் பார்க்கும் கல் சிலையாவதில்லை; உருக்கப்படுகிறோமே என்று கெளரவம் பார்க்கும் தங்கம் நகையாவதில்லை, பிசையப்படுகின்றோமே என்று கெளரவம் பார்க்கும் மண் பாத்திரமாவதில்லை; அடித்து, துவைக்கப்படுகிறோமே என்று கெளரவம் பார்க்கும் துணி சுத்தமாவதில்லை; நம் குறைகள் நம்மிடமிருந்து நீங்க, நமக்கு வேண்டியவர்கள் நம்மை கையாளும் போதுதான் நம் அறிவு முழுமையாகிறது. இதை யார் பார்த்தால் என்ன? எங்கு பார்த்தால் என்ன? நம் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஒரு விஷயம் நிஜ கெளரவமா அல்லது போலி கெளரவமா என்பதுதான் கேள்வி.

போலிக் கெளரவம் பொல்லாதது. அதை அறவே விட்டொழிப்போம். பிறர் மத்தியில் சுட்டிக்காட்டப்படும் தவறுகள் அவமானமல்ல; திருத்திக் கொள்வதே பரிகாரம், உண்மையில்லாத பட்சத்தில், நம்மை நோக்கி வந்து விழுகிற பழிச்சொற்கள் அசிங்கமல்ல; அதை பிறர் பார்த்தால் ஏற்படுகிற அவமானமும் நமக்கல்ல.




கதிர்

Read more...

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top