பி.டி.உஷாவுக்கு போபாலில் அவமானம் செய்தியாளர் முன்னிலையில் கண்ணீர்
பய்யோலி எக்ஸ்பிரஸ் என அழைக்கப்பட்ட பி.டி.உஷா. தேசிய அளவில் தடகளத்தில் ஏற்படுத்திய சாதனைகள் இன்றுவரை முறியடிக்கப்படாமல் உள்ளன.
இந்நிலையில், போபாலில் நடைபெறும் தேசிய தடகளப் போட்டியில் பயிற்சியாளராக சென்றுள்ள இவருக்கு இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) விடுதியில் அவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அறை பராமரிப்பின்றி மோசமாக இருந்ததால் அதிர்ச்சி அடைந்த உஷா, புகார் செய்தார். எனினும், சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் இந்த விஷயத்தில் அக்கறை காட்டாமல் அலட்சியப்படுத்தினர்.
(வீடியோவை காண படத்தின் மீது கிளிக்செய்யவும்)
இது குறித்து, பி.டி.உஷா கூறியதாவது: எனக்கு ஒதுக்கப்பட்ட அறை மிக மோசமான நிலையில் இருந்தது. சாய் நிர்வாகிகளிடம் இது பற்றி தெரியப்படுத்தினேன். அதன் பிறகும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தினர். பிரபலமான எனக்கே இந்த நிலை என்றால், சாதாரண வீரர், வீராங்கனைகளை இவர்கள் எப்படி நடத்துவார்கள்? இதனால்தான் பெற்றோர் தங்கள் குழந்தைகளை தடகள விளையாட்டில் ஈடுபடுத்த தயங்குகிறார்கள். சர்வதேச போட்டிகளிலும் வெறும் கையுடன் திரும்புகிறோம். என்னை அவமானப்படுத்தி விட்டார்கள். இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.
ஏற்கனவே தேசிய குத்துச் சண்டைப் போட்டியில் சரியான வசதிகள், தங்குமிடம் செய்து தரப்படவில்லை என்று உலக குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் இப்போது பி.டி.உஷாவுக்கும் அப்படி ஒரு அவமானம் நேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




0 விமர்சனங்கள்:
Post a Comment