புலிகளால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்கிற அரசின் வாதத்தில் நியாயமிருப்பதாக வோல்டர் கெலின் தெரிவிப்பு!
புலி உறுப்பினர்களையும், பொதுமக்களையும் அரசாங்கம் எவ்வாறு வேறுபடுத்தி அறிந்து கொள்ளப் கொள்ளப்போகிறது என ஐக்கிய நாடுகள் சபை கேள்வியெழுப்பியுள்ளது. நலன்புரி நிலையங்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாக அரசாங்கம் வெளியிட்டுவரும் கருத்துக்களில் நியாயமிருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மற்றும் அகதிகளுக்கான விசேட பிரதிநிதி வோல்டர் கெலின் தெரிவித்துள்ளார்.
வவுனியா உள்ளிட்ட இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுடன் புலி உறுப்பினர்கள் ஊடுருவியிருப்பதாகவும் அவர்களை வேறுபடுத்தி அறிந்து கொள்ளும் வரையில் பொதுமக்களை மீள்குடியேற்ற முடியாதெனவும் அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. எனினும் புலிகளையும் பொதுமக்களையும் அரசாங்கம் எவ்வாறு வேறுபடுத்தி அறிந்து கொள்ளுமென அவர் கேள்வியெழுப்பியுள்ளார். புலிகளினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமென்ற அரசாங்கத்தின் வாதத்தில் நியாயமிருப்பதாக தாம் உணர்வதாக வோல்டர் கெலின் குறிப்பிட்டுள்ளார். எனினும் மக்களை மீள்குடியேற்றுவது குறித்து சரியான திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.




0 விமர்சனங்கள்:
Post a Comment