இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010

Tuesday, February 17, 2009

இராணுவத்துக்கு அவப்பெயர் என்கிறார் ஆனந்தசங்கரி


விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் அகப்பட்டு வாழும் அப்பாவி மக்கள் மத்தியில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த இரண்டு மூன்று வாரங்களுக்குள் திடீரென உயர்ந்துள்ளமையை மிக அக்கறையுடனும் மிகுந்த துன்பத்துடனும் தங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான வீ ஆனந்த சங்கரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்க அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துளளார்.

அவர் அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இராணுவம் வன்னிக்குள் புகுந்ததில் இருந்து, இன்று ஏற்பட்டுள்ள நிலை மிக அதிகப்படியாக உயர்ந்துள்ளது. நான் இரு சமூகங்களுக்கிடையில் எதுவித பேதமும் காணாதவன் என்பதை தாங்கள் அறிவீர்கள் ஒரு தமிழராக இருந்தாலும் ஓர் சிங்களவராக இருந்தாலும், ஒரு இஸ்லாமியராக இருந்தாலும் அவர்களின் உயிர் மிகப் பெறுமதியானவையாகும். இன்றுள்ள யுத்த நிலைமையில் இராணுவம் பதிலடி கொடாது தொடர்ந்து தாக்கத்தை சகிக்க வேண்டுமென நான் எதிர்பார்க்கவில்லை. இராணுவத்தினர் தம் தாய் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு மாறாக விடுதலைப் புலிகளோ ஏறக்குறைய யுத்தத்தில் தோற்றுப்போன நிலையிலும் ஆணவம் கொண்ட தமது தலைவனின் பணிப்பின் பேரில் போராடுகின்றனர். தாம் பலாத்;காரமாக தம் பாதுகாப்புக்காக பிடித்து வைத்துள்ள பொதுமக்களின் பாதுகாப்புப் பற்றி யோசிக்காது எதுவித கேள்வியும் கேட்காது போராடி மடிவதே அவர்களின் கடமையாகும்.

ஆனால் ஜனாதிபதி அவர்களே எப்படியும் தங்களின் அரசுக்கு அப்பாவி மக்களை பாதுகாக்க வேண்டிய புனிதமான கடப்பாடு உண்டு. விடுதலைப் புலிகள் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரதேசத்தினையும் மக்களின் பெரும் பகுதியினரையும் மீட்டெடுத்த பெருமை இராணுவத்தினருக்கு உண்டு.

இராணுவத்தில் இதுவரை காலமும் பல தோழர்களை பலிகொடுத்து சம்பாதித்த நற்பெயருக்கு பல அப்பாவி மக்களின் இழப்பால் களங்கம் ஏற்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை மாற்றம் பற்றி நான் நன்கறிவேன். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் பெருமளவில் குறுகியுள்ளமையால் ஏற்பட்ட இடநெருக்கம் பெருமளவாக பாதிப்புக்கள் ஏற்பட காரணமாக இருக்கலாம். யுத்தத்தை விரைவில் முடிக்க வேண்டுமென இராணுவத்தினரின் அளவுக்கு மீறிய உற்சாகம் நிச்சயமாக ஒரு காரணமாக இருக்காது.

அக்டோபர் 24ம் தேதிக்கும் நவம்பர் 09ம் தேதிக்கும் இடைப்பட்ட இருவார யுத்தத்தில் எட்டு பொது மக்கள் இறந்தும் ஒன்பது பேர் காயப்பட்டும் உள்ளனர். ஆனால் கடந்த வாரத்தில் மட்டும் 288 பேர் இறந்தும் 766 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர். கடந்த சனிக்கிழமை 55 பேர் இறந்தும் 109 பேர் காயப்பட்டும் உள்ளனர். இது ஓர் அதிர்ச்சி தரும் விடயம் மட்டுமல்ல.

தாக்கப்பட்டவர்களையும், காயப்பட்டவர்களையும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திலிருந்து தப்பிN;யாடி வருபவர்களையும் நன்றாக பராமரிக்கும் இராணுவத்தினருக்கு அவப்பெயர் ஏற்படுத்துவது பாரதூரமான விடயமாகும் பல ஆண்டுகளாக பல்வேறு துன்பத்தை அனுபவித்து குறிப்பாக கடந்த சில மாதங்களாக ஷெல் அடிக்கும், பீரங்கி தாக்குதலுக்கும் பயந்து வாழும் மக்களின் நம்பிக்கையை பெற இத்தகைய படுகொலைகளை நிறுத்த வேண்டும்.

இராணுவம் இனி விமானத் தாக்குதலைகளை உடனடியாக நிறுத்தி பீரங்கித் தாக்குதல் ஷெல் தாக்குதல்களையும் நிறுத்த வேண்டும். அகப்பட்டுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வரை எஞ்சியுள்ள பகுதிகளை பிடிப்பதைப் பொறுத்திருக்கலாம்.

ஆனால் இராணுவ நடவடிக்கை தொடரலாம்.
விடுதலைப் புலிகள் தமது பிரச்சாரத்துக்கு பெரிதாக பாவித்த குற்றச்சாட்டாகிய இன ஒழிப்பை மறுத்துரைத்தவன் நான் என்பதை தாங்கள் அறிவீர்கள்

Read more...

புலிகள் நிலத்திற்குகீழ் புதைத்து வைத்திருந்த தளபாடங்கள் வீடியோ



ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட புலிகளின் அச்சகம் (Printing Press) வீடியோ

Read more...

ராணுவத்தினர் கைப்பற்றிய விடுதலைப் புலிகளின் தளபாடங்கள் வீடியோ

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளிடமிருந்து புதிதாகக் கைப்பற்றியுள்ள பிரதேசங்களில் இராணுவத்தினர் நடத்திவரும் தேடுதல் நடவடிக்கைகளில் கைப்பற்றப்பட்டுள்ள ஆயுத தளபாடங்கள்.


Read more...

ராணுவத்தினர் கைப்பற்றிய புலிகளின் அச்சகம் (படங்கள்)






















ராணுவத்தினர் கைப்பற்றிய புலிகளின் அச்சகம் (வீடியோ)

Read more...

பிரான்ஸில் நடைபெற்ற இந்திய தூதரகத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது தமிழர் சிலர் கைது.

இன்று (பெப். 17) பிரான்ஸில் இந்திய தூதரகத்தின் முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழர்கள் சிலர் பிரான்ஸ் காவற்துறையால் கைது செய்யப்பட்டதாக
தெரிய வருகிறது. இந்திய தூதரகத்தின் முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது இந்திய தூதரகத்தின் இரண்டு மோட்டார் வண்டிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழர் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட புலி ஆதரவு முகவர் அமைப்பைச் சேர்ந்த பதினைந்துக்கு மேற்பட்டவர்கள் இதுவரை பிணை மறுக்கப்பட்டு தொடர்ந்து தடுப்புக்காவல் சிறையில் வைக்கப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Read more...

த. தே. கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காக செயற்படுமே அன்றி புலிகளுக்காக அல்ல : இரா.சம்பந்தன்

விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த பகிரங்கமாக விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் முல்லைத்தீவில் சிக்கியுள்ள மூன்றை லட்சம் மக்களை காப்பற்றுவதற்காக அரசாங்கமும் போர் நிறுத்தம் ஒன்றை அறிவிக்க வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (பெப். 17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மோதல்கள் தீவிரமடைந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இதுவரை வன்னியில் இரண்டாயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்து 500 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவில் குடிநீர், உணவு மற்றும் மருந்து பொருட்கள் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு சார்பாவே செயற்படுவதாகவும் விடுதலைப் புலிகளுக்காக அல்ல எனவும் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

Read more...

ஆளும் சுதந்திரக் கட்சியில் இணைய கருணா முடிவு

"நானும், கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் இருந்து விலகி சுதந்திர கட்சியில் சேரப் போகிறோம்" என கருணா தெரிவித்திருக்கின்றார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தளபதியாக இருந்த கருணா அந்த இயக்கத்தில் இருந்து விலகி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற கட்சியைத் தொடங்கினார். கருணா தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கின்றார்.

கிழக்கு மாகாணத்தில் இந்தக் கட்சியே ஆட்சியில் உள்ளது. பிள்ளையான் முதலமைச்சராக இருக்கிறார். இதற்கிடையே கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

கருணா சமீபத்தில் பிள்ளையானைக் கடுமையாக விமர்சித்தார். இதற்காக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து கருணாவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. விளக்கம் கோரி நேற்று வரை காலக்கெடு விதிக்கப்பட்டது. ஆனால் கருணா விளக்கக் கடிதம் எதுவும் அனுப்பவில்லை.

இந்நிலையில், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் தெரிவிக்கையில்,

நானும், கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் இருந்து விலகி இருக்கிறோம்.

நாங்கள் சுதந்திர கட்சியில் சேரப் போகிறோம். இதற்காக ஒரு வாரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேச இருக்கிறேன். அதன் பிறகு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அலுவலகம் அனைத்தையும் சுதந்திர கட்சி அலுவலகமாக மாற்றுவோம்.

கட்சியில் பெரும்பாலோர் எனக்கு ஆதரவாக உள்ளனர். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இனி பிள்ளையானும் அவரது ஆதரவாளர்களும் மட்டுமே இருப்பார்கள் "என்றார்.

இதற்கிடையே கருணா விளக்கம் தராததால் அவரைக் கட்சியில் இருந்து நீக்க முடிவு எடுக்கவுள்ளதாக தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

சுப்பிரமணிய சாமியை சட்டத்தரணிகள் கடும் தாக்குதல்

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி மீது உயர்நீதிமன்ற அறையில் சட்டத்தரணிகள் அழுகிய முட்டைகளையும் தக்காளிப் பழங்களையும் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்த வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலை, அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து பொது தீட்சதர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை மூன்றாவது நீதிமன்ற அறையில் நடைபெற்றது.

இந்த வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி மனுதாக்கல் செய்தார். இதற்காக அவர் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார்.

அப்போது திடீரென 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இலங்கை பிரச்சினை தொடர்பாக கோஷங்களை எழுப்பியவாறு நீதிமன்ற அறைக்குள் வருகை தந்தனர். தொடர்ந்து அவர்கள் கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்களில் சிலர் முட்டைகளை எடுத்து சுப்பிரமணியசாமி மீது வீசினர். முட்டைகள் உடைந்து சுப்பிரமணியசாமியின் கை மற்றும் உடல் முழுவதும் சிதறின.

நீதிபதிகள் கண்முன் நடைபெற்ற இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே போலீசார் விரைந்து வந்தனர். மேலும் போலீசாரை எதிர்த்து அவர்கள் கோஷமிட்டனர். இதற்குள் போலீசார் உள்ளே வந்து விட்டனர். பின்னர் கோஷமிட்ட வழக்கறிஞர்களை போலீசார் வெளியேற்றினர்.

சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Read more...

அவுஸ்திரேலிய காட்டுத் தீயில் இறந்தோருக்காக கதறிய இந்த உலகு; சிங்கள காட்டுமிராண்டியிடம் கொலைபடும் எமது மக்களுக்காக கவலை கூட படவில்லை: யோகி ஆதங்கம்


அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் 160 பேர் இறந்த போது, பிபிசி போன்ற செய்தி நிறுவனங்கள் அதனை முதன்மைச் செய்தியாக்கி அழுகின்றன. ஆனால், ஹிட்லரிலும் பார்க்க மிகக்கொடிய ஒரு அரக்கனை - காட்டுமிராண்டியைப் போல மக்களை கொலை செய்கின்ற ஒரு மனிதனை - அந்த மனிதனோடு சேர்ந்து ஒரு சிங்கள இனத்தை நாங்கள் எதிர்கொண்டு நிற்கின்றோம். ஆனால், இந்த உலகம் எந்த அக்கறையும் காட்டவில்லை. அவனுக்குப் பின்னால் அது மனசாட்சியற்று நிற்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலில் ஒலிப்பரப்பாகிய கருத்துப் பகிர்வு நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளதாவது:

நீண்ட நெடிய எங்களுடைய விடுதலைப் போராட்ட வரலாற்றில் நாங்கள் மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்திலே நிற்கின்றோம். நாங்கள் நம்பிக்கை இழந்து, உளவுரண் உடைந்து எதிரியிடம் சரணடைய வேண்டும் என்பது எதிரியின் விருப்பம் மட்டுமல்ல; இந்த உலகத்தின் விருப்பமும் கூட. நாங்கள் மில்லரை, திலீபனை, அன்னை பூபதியை எல்லாம் ஒரு குறியீடாகத்தான் பார்க்கின்றோம். அந்த குறியீடு என்பது நெருக்கடி வர வர நாங்கள் நிமிர்ந்து நின்று போராடுவோம்; எந்த நெருக்கடிக்குள்ளும் நாங்கள் போராடுவோம்; இறுதிவரை போராடுவோம் என்பதை சுட்டி நிற்கின்றது.

ஈற்றில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடுதான் நாங்கள் வாழ்ந்திருக்கின்றோம்; போராடியிருக்கின்றோம்; இன்றும் போராடி கொண்டிருக்கின்றோம். இந்த நம்பிக்கையை நாங்கள் இழந்துவிடக் கூடாது.

வடமராட்சியில் 'ஒப்ரேசன் லிபரேசன்' இராணுவ நடவடிக்கை நடைபெற்ற போதும், இந்தியப் படை வந்த போதும் விடுதலைப் போராட்டம் அழிந்து விட்டது என்றுதான் குறிப்பிட்டார்கள். 'ஜெயசிக்குறு' காலத்திலும் இதே கருத்தைதான் முன்வைத்தார்கள்.

ஆனால் போராட்டம் இந்த நெருக்கடிகளைச் சந்தித்த போதும் எழுந்தது; வளர்ந்தது; வீறுகொண்டு பெரிய எல்லைகளைத் தொட்டது. இதனை நாங்கள் மறந்து விடக்கூடாது.

இன்று - உலகம் முழுவதிலும் - ஒரு திட்டத்தின் அடிப்படையில், போராடுகின்ற அமைப்பை செயலிழக்கச் செய்து, பலமிழக்கச் செய்து பிறகு ஒரு தீர்வை வைக்க முற்பட்டால் அந்த தீர்வு நிலைக்கும் என்ற நம்பிக்கையோடு - அந்த கோட்பாட்டோடு எப்போதுமே இப்படியான கோட்பாடுகள் பிழையானவைதான் என்று தெரிந்தும் - செயற்பட்டு வருகின்றன. அவர்களுக்குச் சிங்கள அரசு சில நம்பிக்கைகளைக் கொடுக்கின்றது.

இவர்கள் எல்லாம் திட்டம் போட்டு செயற்படுகின்றனர். இன்னும் சில காலங்களில், ஒரு பத்து நாளிலோ அல்லது 15 நாளிலோ புலிகள் அழிந்து விடுவார்கள் என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். தான் சொன்னதையே சிங்கள அரசு நம்புகிறது. அதனையே வெளிநாட்டவர்களும் நம்புகின்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குகின்றது. தான் சொன்னதையே நம்பிக் கொள்வது சிங்கள தேசம்தான்.

அண்மைய காலமாக நாங்கள் எதிர்த்து ஒரு வலிந்த தாக்குதலை தொடங்கிய போது கூட ஆடிப் போய் நிற்கின்றது. பெரிய அளவில் ஒரு வலிந்த தாக்குதலை நடத்த வேண்டுமாக இருந்தால் எங்களோடு எல்லா மக்களும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்.

இந்த உலகத் திட்டம் என்பது எங்களைச் செயலிழக்கச் செய்து பலமிழக்கச் செய்த பின் ஒரு தீர்வை வைப்பது என்பதாகும். ஆனால், அப்படி ஒரு தீர்வு வைக்கப்படாது எங்களுக்குத் தெரியும்; அது நடைமுறைப்படுத்தப்படாது என்பதும் எங்களுக்குத் தெரியும்.

புலிகள் பலமாக இருக்கின்ற ஒரு நிலையில்தான் தமிழர்களுக்காக தீர்வு குறித்து சிங்கள தேசம் பேசும். உலகம் பேசும். இல்லையேல் யாருமே இதைப்பற்றி இனி பேச மாட்டார்கள். புலிகள் பலமாக இருக்க வேண்டும் என்று சொன்னால் மற்றவர்கள் உதவ வேண்டும் என்றில்லை. இன்றைக்கு இருக்கின்ற மக்களில் வலுவுள்ளவர்கள் எல்லாரும் ஒன்று திரண்டு நின்றால் போதும்.

நாங்கள் போராட முடியும்; அதிசயிக்கத்தக்க வகையில் வெற்றிகளைச் சாதிக்க முடியும்.

எங்களுக்குப் பின்னால் புலம்பெயர் வாழ் தமிழர்கள் எல்லோரும் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் இருக்கின்ற தமிழர்கள் எல்லாரும், ஒரு குறிப்பிட்டவர்களைத் தவிர எங்களோடுதான் நிற்கின்றனர். இவர்கள் எல்லோரும் உலகு எங்கும் வாழ்கின்ற மக்களின் மனசாட்சியோடு பேச வேண்டும். அரசோடு பேசி பிரயோசனமில்லை. அரசுகளை தீர்மானிப்பவர்கள் மக்கள்தான். அந்த மக்களின் மனசாட்சியோடு பேச வேண்டும்.

அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் 160 பேர் இறந்து போன போது, பிபிசி போன்ற செய்தி நிறுவனங்கள் அதனை முதன்மைச் செய்தியாகச் சொல்லி அழுகின்றன. உலகம் முழுவதும் அழுகின்றன.

இன்று தமிழீழத்தில் மருத்துவமனைகள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. மருத்துவமனைகள் மீது குண்டுகள் போடப்பட்டு, உணவுகள் தடுத்தப்பட்டு, மருந்துப் பொருட்கள் தடுக்கப்பட்டு நான்கு லட்சம் மக்களுக்கு மேல் ஒரு பாதுகாப்பு வலயம் என்று பொய்க்காக ஒன்றை உருவாக்கி, அந்த வலயத்திற்குள்ளே நாளாந்தம் குண்டுகளை வீசி, 50-இலிருந்து 60-க்கும் அதிகமான மக்கள் கொல்லப்படும் நிலையில், நாளாந்தம் 100-க்கும் அதிகமான மக்கள் காயப்படுகின்ற நிலை காணக்கூடியதாய் இருக்கின்றது.

கிட்டதட்ட ஒரு கிழமைக்குள்ளே 500-க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காயப்பட்டிருக்கிறார்கள். அதில் பல குழந்தைகளும் அடங்கும். அதனைப்பற்றியெல்லாம் இந்த உலகம் கருத்தில் கொள்ளாமல் கண்மூடி நிற்பதையும் நாங்கள் இங்கு சுட்டிக்காட்டத்தான் வேண்டும்.

இருந்தபோதும் நாங்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது. உலகத்தின் மனசாட்சி என்பது உலகத்தின் மக்கள்தான். அந்த மக்களோடு பேசுவோம். அந்த மக்களுக்குத் தொடர்ந்து எங்கள் கருத்துகளைச் சொல்லி வைப்போம். அதன் மூலம் அரசுகளையும் அதன் எண்ணங்களையும் மாற்ற வைப்போம்.

ஒன்றில் நாங்கள் உறுதியாக இருப்போம். இன்றைக்கு உலக நாடுகள் எல்லாமே இந்த தேசிய விடுதலைப் போராட்டத்தை அழித்து விட வேண்டும் என நினைக்கின்றன; குறிப்பாக தேசிய தலைவரை அழித்து விட வேண்டும் என நினைக்கின்றன. அவரை, அழித்து விட்டால் இந்த போராட்டத்தில் நாங்கள் நினைக்கின்ற எதனையுமே செய்துவிட முடியும் என்றும் எங்களை அழித்து எங்கள் போராட்டத்தை இல்லாமல் செய்த தாங்கள் விரும்பியதைச் செய்ய முடியும் என நினைக்கின்றன.

அது நடக்காது என்பதே வெளிச்சம். இந்த போராட்டத்தில் நாங்கள் இறுதிவரை போராடுவோம் என்று சொல்லி வைப்போம். தேசியத் தலைவரின் வழித்தடத்தில் நாங்கள் எல்லாரும் ஒன்றுபட்டு உறுதியாக நின்று போராடுவோம் என்று சொல்லி வைப்போம்.

இன்று காலம் குறித்து நிற்கிறது சிங்கள அரசு. அந்த காலம் சரிவராது என எடுத்துக் காட்டுவோம். அதற்கும் மேலாக எங்கள் போராட்டம் தொடரும் என எடுத்துக்காட்டுவோம். அவற்றுக்கு எல்லாம் மேலாக இந்த முற்றுகையினை உடைத்து எங்கள் மண்ணை மீட்கின்ற வகையில் ஒரு போராட்டத்தை எங்களால் தொடர முடியும் என்பதை நாங்கள் எடுத்துக் காட்டுவோம்.

ஹிட்லர் போன்றவர்கள் கூட படையெடுத்த போது இந்த உலகம் அழிந்து விடும்; உலகத்தில் உள்ள எல்லாமே ஹிட்லரிடம் வீழ்ந்துவிடும் என்றபோது கூட பலர் தொடர்ந்து போராடினர். அழிவுக்குள் நின்று போராடினர். அந்த அழிவுக்குள்ளும் நம்பிக்கையோடு போராடினர்.

ஹிட்லரினும் பார்க்க மிகக்கொடிய ஒரு அரக்கனை, காட்டுமிராண்டியை, மக்களை கொலை செய்கின்ற ஒரு மக்களைக் கொலை செய்கின்ற ஒரு மனிதனை அந்த மனிதனோடு சேர்ந்து ஒரு சிங்கள இனத்தை நாங்கள் எதிர்கொண்டு நிற்கின்றோம். அவனுக்குப் பின்னால் மனசாட்சியற்று நிற்கின்றவர்களை நாங்கள் ஏதோ ஒரு வகையில் மீண்டும் அந்த மனசாட்சியை அவர்களுக்குள் ஆழ புதைத்து எங்கள் குரலைக் கேட்கச் செய்ய வேண்டும்.

அதற்காக நாங்கள் எங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம். இந்த நெருக்கடியான கால கட்டத்தில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இந்த போராட்டம் ஒரு குறுகிய காலத்தில் அழிந்துவிடும், அழிக்கப்பட்டு விடும் என்று சிங்கள தேசம் சொல்வதை நம்பிக் கொண்டு ஒரு திட்டத்தை வகுத்து நிற்கின்ற உலகத்தின் திட்டத்தை மாற்றுவோம். எங்கள் வெற்றிகள், நாங்கள் செய்கின்ற சாதனைகள் மீண்டும் இந்த உலகத்தை எங்களை நோக்கி வரவழைக்கும்.

நாங்கள் நம்பிக்கையை இழந்து விடவில்லை. விடுதலைப் போர் என்பது ஒரு காலமும் மக்கள் போராடுகின்ற போது, மக்கள் உணர்வை இழக்காத தோற்றது கிடையாது. தேசியத் தலைவர் அவர்கள் எங்கள் மீது வளர்த்தது இந்த ஓர்மத்தைதான். நாங்கள் யாருக்கும் நியாயமற்ற முறையில் செய்யப்படுகின்ற அடக்குமுறைகளுக்கு அடிபணிந்து வாழப் போவதில்லை. நாங்கள் போராடுவோம். பணிய மாட்டோம். சரணடைய மாட்டோம் என்றார் யோகி.

புதினம்

Read more...

புலிகளுக்கு அமெரிக்கா அழுத்தம்: இலங்கை கோரிக்கை

பொதுமக்களை வெளியேறவிடாது விடுதலைப் புலிகள் தடுப்பதாக ஐக்கிய நாடுகள் சபை நேற்றுக் கூறியுள்ள நிலையில், பொதுமக்களை விடுவிக்குமாறு விடுதலைப் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென இலங்கை அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.



அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவினால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


“பயங்கரவாதிகளாக விடுதலைப் புலிகள் பாதுகாப்புத் தேடி வெளியேறும் மக்களை ஆபத்துக்குள் தள்ளுகின்றனர். தமது கட்டுப்பாட்டிலிருக்கும் பொதுமக்களை விடுவிக்குமாறும், பாதுகாப்பான பகுதிகளுக்கு வர அவர்களை அனுமதிக்குமாறும் புலிகளின் தலைமைப் பீடத்துக்கு சர்வதேசமும், அமெரிக்காவும் அழுத்தம் கொடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.


வன்னியிலிருந்து வெளியேறிய மக்களை மனிதநேயத்துடனையே நடத்துவதுடன், சர்வதேசத்தின் அனுதாபத்தை பெற்றுக்கொள்வதாகக் இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் கஷ்டப்படுவதை வெளிக்காட்ட விரும்பவில்லையென இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் கொழும்பில் கூறியிருந்தார்.

Read more...

திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் மக்களின் விபரம்

1. அறியப்படாதவர், மாற்றம் கண்டி, 2. கந்தையா செல்லையா (71) உடையார்கட்டு, 3. ரஜிகாந்தன் (25) உடையார்கட்டு, 4. தயாபரன் (28) புளியம்பொக்கனை, 5. மு. தயாபரம் (28) பொக்கணை, 6. கெ. கங்காதரன் (40) அம்பாள்புரம் முல்லைத்தீவு, 7. எஸ்.மோகனராஜா (48) வன்னிக்குளம், 8. சறோஜினிதேவி (50) ராமனாதபுரம் கிளிநொச்சி, 9. ஜெயந்தினி (59) யாழ்ப்பாணம், 10. ஆர்.ஜெயகாந்தன் (69) வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், 11. எஸ்.ஜெயகாந்தன் (27) ஸ்கந்தபுரம், 12. அருள்ரமேஷ் மேரி டயானா (27) முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு, 13. என். தியாகராஜா (63) வெலசிங்கங்குளம், ஓமந்தை, 14.அறியப்படாதவர் மாற்றம் கண்டி 15. மேரிமலர் (30) முள்ளியவளை, 16. மேரி சோபனா (1) முள்ளியவளை, 17.வி.வள்ளியம்மா (60) தேவிபுரம், முல்லைத்தீவு,18. கமலம் (61) உடையார்கட்டு, 19. மு.மகேஷ்வரி (42) புளியம்குளம், 20. என். தர்மலிங்கம் (61) புளியங்குளம், 21. சங்கீதா ஐ.சி.யு, 22. யோகம்மா (72) ராமநாதபுரம், கிளிநொச்சி, 23. ஸ்ரீதரன் (16) கனாவி, கிளிநொச்சி, 24. ஐ.சி.யு. கிளினிக், 25. நாகேஷ்வரன் (56) கனாவி, கிளிநொச்சி, 26 ஆர்.மனோன்மணி (57) உருத்திரபுரம், கிளிநொச்சி, 27. சுதந்திரன் சாரதா (28) ஒட்டகக்குளம், 28. சுகந்தன் (29) பூநகரி, 29.துரையப்பா (86) கொம்பாவில், புதுக்குடியிருப்பு, 30. செந்தில்குமரன் (25) இயக்கச்சி, கிளிநொச்சி. 31. சங்கவி (மூன்று மாதம்) பளை, 32. செந்தில்குமரன் லக்ஷ்மி (29) பளை, 33. எம்.மங்களேஸ்வரி (17) இயக்கச்சி, புளியங்குளம், 34. கலைச்செல்வி (27) தேவிபுரம், முல்லைத்தீவு, 35. ராஹினி (44) தேவிபுரம், முல்லைத்தீவு, 36. எஸ்.வனஜா (36) புளியங்குளம். 37. சுகிர்தா (14) சுகந்தபுரம், 38. சிவபாக்கியம் (46) பூநகரி. 39. பொன்னம்மா (85) முல்லைத்தீவு, 40. வை.சாந்தி (40) இரணமடு, 41. எம்.செல்லத்துரை (73) கிளிநொச்சி, 42. கிஷாந் (8) புதுக்குடியிருப்பு, 43. ஆர்.மகேந்திரராஜா (60) பளை, 44. லோஜினி (8) வட்டகாடு, முல்லைத்தீவு, 45. கெலிஷாலூர்து (44) வட்டக்காடு, முல்லைத்தீவு, 46. கேஷினி (4) முல்லைத்தீவு. 47. சந்திரகலா (46) முல்லைத்தீவு, 48. கே.ராசம்மா (60) கரடமடு. 49. அறியப்படாதவர், 50. அன்ரனி ஜெஸ்முஸ்பமிலா (29) குருநகர், யாழ்ப்பாணம், 51. தனுஜன் (5) குருநகர் யாழ்ப்பாணம், 52. தங்கரட்ணம் (62) யாழ்ப்பாணம், 53. தேவலக்ஷ்மி (53) புதுக்குடியிருப்பு, 54. வேலுப்பிள்ளை பரமலிங்கம் (55) புதுக்குடியிருப்பு, 55. மு.நரேஷன் (15) முல்லைத்தீவு, 56. சுகிர்தா (36) கிளிநொச்சி, 57. ஜே.குகவதனி (12), 58. எஸ்.சிவஞானசுந்தரம் (70) ஒட்டிசுட்டான், 59. மதுரா (5) புதுக்குடியிருப்பு, 60. கே.சாந்தநாயகி (55) கிளிநொச்சி, 61. குமரநாதன் (33) மன்னார், 62. வி.முருகுப்பிள்ளை (62) புதுக்குடியிருப்பு, 63. சூசைமுத்து (30) மட்டுவை, புதுக்குடியிருப்பு., 64. சசிகலா (37) கிளிநொச்சி, 65. மதுஷா (8) கனகராயன்குளம், 66. மகேஷ்வரி (55) உதயநகர், கிளிநொச்சி, 67. மிதுலன், 68. குணமணி (43) யாழ்ப்பாணம், 69. எழிலன் (2) யாழ்ப்பாணம், 70.ராஹினி (12) புதுக்குடியிருப்பு, 71. பூமலர் தேவி, 72. கே.வைரமுத்து (78) கச்சேரி குவாட்டஸ், 73. அகல்யா (29) கிளிநொச்சி, 74. நாகலக்ஷ்மி (48) முல்லைத்தீவு, 75. கௌசிகன் (7) முல்லைத்தீவு, 76. வி.இதயரூபன் (33) புளியம்பொக்கனை, 77. ரபுஷன் (3) புளியம்பொக்கனை, 78. உமாதேவி (33) தேவபுரம், முல்லைத்தீவு, 79. நாகேஷ்வரி (42) கனகராயன்குளம், 80. ஏ.வசந்தி கிளிநொச்சி, 81. தயாழினி (34) வட்டக்கச்சி, முல்லைத்தீவு, 82. கனிஷ்டன் (3) வட்டக்கச்சி, முல்லைத்தீவு, 83. ரட்ணம் (62) முள்ளியவளை, 84. வில்வநாதன் ரஞ்சனி, ஆனந்தபுளியங்குளம், 85. சவிஷன் (2.5) ஆனந்தபுளியங்குளம், 86. நாகராஷம் (28) தேவபுரம், முல்லைத்தீவு, 87. சின்னத்துரை சின்னமுத்து (63) முள்ளியவளை, 88. எஸ்.நாதன் (28) முள்ளியவளை, 89. சறோஜினிதேவி (60) கிளிநொச்சி, 90. வி. தேவஸ்வரன் மதளி, புதுக்குடியிருப்பு, 91. எஸ்.கமலா (50) அம்பலன்பொக்குணை, புதுக் குடியிருப்பு, 92. கே.வாசுகி (31) மாங்குளம், 93. கமலாதேவி (45) யூ.சி. கிளிநொச்சி, 94. ஏ.விதுஷன் (10) வண்ணாக்குளம், புதுக்குடியிருப்பு, 95. மெனுஷன் (8) மதளி, புதுக்குடியிருப்பு, 96. கே.அனஸ்ராஜ் (12) மதளி, புதுக்குடியிருப்பு. 97. கீர்த்தீகா (2) கிளிநொச்சி, 98. ஜெ.ஜெகதீபன் (35) கிளிநொச்சி, 99. ஆனந்தன் (24) புதுக்குடியிருப்பு, 100. பெனடிற் (1.5) புதுக்குடியிருப்பு, 101.கஸ்தூரி (32) யாழ்ப்பாணம், 102. சுதர்சிகா (6) யாழ்ப்பாணம், 103. கே. முதல்வன் (1) யாழ்ப்பாணம், 104. விதுசன் (13) கிளிநொச்சி, 105. கே.பிரதீப் (10) கிளிநொச்சி, 106. ஜே.பி.குணராசா, கிளிநொச்சி, 107.ஜே.பூரணவெல் (60) வட்டக்கச்சி, 108. தமிழ்கீதன் (2.5) வட்டக்கச்சி, 109. ஜெகதீஸ்வரன் (28) புதுக்குடியிருப்பு, 110. இந்திராகாந்தி (40) வட்டக்கச்சி, 111. ஆர். ஜெயக்கொடி (18) வட்டக்கச்சி, 112. ராஜேஸ்வ? (72) இரணப்பால, 113. எம். சுப்ரமணியம் (41) புதுக்குடியிருப்பு, 114. எஸ். விக்னேஸ்வரன் (16) மல்லாவி, முல்லைத்தீவு, 115. கலைச்செல்வி (22) புதுக்குடியிருப்பு, 116. சுடர்விழி (2) புதுக்குடியிருப்பு, 117. சிவராணி (23) வன்னிவிளாங்குளம், 118. சங்கரன் (7) வளலாய், 119. சங்கவி (3) மல்லாவி, 120. குசலா (29) மல்லாவி, 121. எம். சரஸ்வதி ( 45) சுதந்தரபுரம், 122. கமலாதேவி (62) கிளிநொச்சி, 123. சிவநாயகி (58) தர்மபுரம், 124.மலர்விழிதேவி (30) கிளிநொச்சி, 125. சுதாகரன் ( 23) சுந்தரபுரம், 126. ராஜரட்ணம் (49) கிளிநொச்சி, 127. தங்க?த்து (69) தேவிபுரம், கிளிநொச்சி, 128. வி.கஜன் (14) உடும்பன் குளம், 129. எம். ராஜினி (30) பளை, 130. கவிதன் (7) இரணைப்பாலர், புதுக்குடியிருப்பு, 131. என். செல்வராணி (43) இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, 132. பிறிந்தாவனி (9) தாளையடி, 133. பரமேஸ்வ? (36) தாளையடி, 134. மிதினியன் (10) புதுக்குடியிருப்பு, 135. மீனலோஜினி (62) புதுக்குடியிருப்பு, 136.யாழினி (5) புதுக்குடியிருப்பு, 137. லோகநாகேஸ்வரன் (44) கிளிநொச்சி, 138. பரமநாதபிள்ளை (70) கனகபுரம், 139. அபிராமி (30) கிளிநொச்சி, 140. பி.செல்வராணி (40) விஸ்வமோட்டை, 141. நிரோஜன் (6), 142. தேவகௌ? (36), 143. தேவநேசன் (8) விஸ்வமோட்டை, 144. எஸ் திருச்செல்வம் (27) கிளிநொச்சி, 145. லோகநாகேஸ்வரன் (9) கிளிநொச்சி, 146. சித்திரா தேவி (31) இரணபாலம் புதுக்குடியிருப்பு, 147. றஜிதா (8) இரணைபாலம் புதுக்குடியிருப்பு, 148. தேவமலர் (49) முல்லைத்தீவு, 149. ஜெனிற்றா (5) முல்லைத்தீவு, 150.சுசிலா (25) முல்லைத்தீவு, 151. மு.துஷ்யந்தன் (24), 152. எஸ். மலர்விழி (20) கண்டாவளை கிளிநொச்சி, 153. எஸ்.ரத்தீஸ் (04) கண்டாவளை கிளிநொச்சி, 154. யதுஷா (6மாதம்) கண்டாவளை கிளிநொச்சி, 155. மே? ஜ?னா (23) கற்கோவளம், பருத்தித்துறை, 156. இசையரசி (1.3) கற்கோவளம் பருத்தித்துறை, 157. ஜே.தேவிகாகுமாரி (34) பூகன்ன, 158. ஜெகாபன் (8) பூகன்ன, 159. புஸ்பமலர் (55) புதுக்குடியிருப்பு, 160. இந்துசன் (6) புதுக்குடியிருப்பு, 161.மதுராணி (3) புதுக்குடியிருப்பு, 162.ஜெபநேசன் (44) புதுக்குடியிருப்பு, 163.மு.தெய்வானைப்பிள்ளை (58) சக்கராயன் பிள்ளையார் கோவில், 164. ஐ.ரஜினி (14) பிள்ளையாரடி அக்கராயன், 165. அமலதாஸ் (34) மாத்தலி புதுக்குடியிருப்பு, 166. சுவாதினி (30) கிளிநொச்சி, 167. தாலிறினி (1.5) கிளிநொச்சி, 168. கலிஸ்ரா (34) மாத்தளன், முல்லைத்தீவு, 169. கே. தியாகராசா (54) ஒட்டுசுட்டான், 170. கே.மினால்கிளி (65) மயிலிட்டி யாழ்ப்பாணம், 171. எஸ். ஜெயசாந்தி (15) பளை, 172. ராசையா (62) அக்கராயன் குளம், 173. எஸ். பரமேஸ்வரி (39) பூநக?, 174. சி. சுகிர்தன் (27) புதுக்குடியிருப்பு, 175. எஸ். உஷாலினி (19) ஆனந்த புரம் புதுக்குடியிருப்பு, 176.சுகிதா (1.5), 177. எஸ். சந்திரகுமார் (38) பூநக?, 178. கே.மதனராஜா (31) யாழ்ப்பாணம், 179. தர்மினி (8) தெல்லிப்பழை, 180.மகேஸ்வ? (34) தெல்லிப்பழை, 181. குகிலினி (2) தெல்லிப்பழை, 182.ஜே.ஜெயகரன் (35) தெல்லிப்பழை, 183.பரமையா (7), 184.ஜெயகோபன், 185. கிருபாகரன் (38) மிருசுவில், 186. அறியப்படாதவர், 187. சாந்தி (24) குருநகர் யாழ்ப்பாணம், 188.ஷாலினி (3) யாழ்ப்பாணம், 189. எம். ரவிச்சந்திரன், யாழ்ப்பாணம், 190. அகிலா (14) முரசுமோட்டை, 191. நிதர்ஷன் (9) கிளிநொச்சி, 192. பி.ரனிதா (22) இரணப்பாளம் புதுக்குடியிருப்பு, 193. வி.கிருஜன் (2) இரணப்பாளம் புதுக்குடியிருப்பு, 194. மு. விதுஷன் (14) அக்கராயன் குளம், 195.மேரி ஷோபனா (1) முள்ளியவளை முல்லைத்தீவு, பிரதீபன் (29) புதுக்குடியிருப்பு. 196. நாகலோஜினி (39) அக்கராயன் குளம், 197.?.சுதர்ஷன் (16) அக்கராயன் குளம், 198.எஸ். ராதன் (18) கிளிநொச்சி, 199. பத்மலோஜினி (11) கிளிநொச்சி 200. எஸ். ராஜேஸ்வரி (66) கிளிநொச்சி, 201. சி.வசந்தகுமாரி (41) அளவெட்டி, 202. எஸ்.வதனி (43) கிளிநொச்சி, 203.பி .முருகேஷன் (58) சுந்தரபுரம், 204. விதுஷினி (2) வட்டக்கச்சி, முல்லைத்தீவு, 205. ஆறுமுகராசா (28) கனகபுரம் , 206. தவமணி (64) வட்டக்கச்சி, 207.மாலினி (28) கல்லாறு விஸ்வமடு, 208. தனுஷியா (2) கல்லாறு விஸ்வமடு, 209. துஷன் (3) கல்லாறு விஸ்வமடு, 210. தனுஷா (5) கல்லாறு விஸ்வமடு, 211.ஜெகச்சித்திரா (19) கிளிநொச்சி, 212. பார்த்தீபன் (1) கிளிநொச்சி, 213. வி.பார்த்தீபன் (25) ஸ்கந்தபுரம், 214. புஷ்பகாந்த் (14) கருணை நகர்,215. மு. சிவபாலசுந்தரம் (49) கருணைநகர் 216. சசிகலா (20) பொக்கணை முல்லைத்தீவு, 217. கே. சின்னையா (55) கோனõவில் கிளிநொச்சி, 218. பெருமாள் வரதம்மா (63) கோணாவில் கிளிநொச்சி, 219. நிமலதீபன் (35) முல்லைத்தீவு,220. லக்சுமி (30) கிளிநொச்சி, 221. எஸ். கணேசம்மா (54) முல்லைத்தீவு, 222. வி. மயில்வாகனம் (85) முல்லைத்தீவு, 223. நீலாம்பிகை (53) கிளிநொச்சி, 224. கே. சரவணபவன் (12) விஸ்வமோட்டை, 225. கே. கோபிராஜ் (11) விஸ்வமோட்டை. 226. கே.குலரத்தினம் (52) விஸ்வமோட்டை, 227. திருமதி. கிருஷ்ண ராசா தமயராசி (36) விஸ்வமோட்டை, 228. கிருஷ்ணராசா (46) விஸ்வமோட்டை, 229. கே. வித்ஹாகி (4) விஸ்வமோட்டை, 230. கே. துவாரகா (14) விஸ்வமோட்டை, 231. பி. சௌமியா (14) விஸ்வமோட்டை, 232. கே.நிலானி (16) விஸ்வமோட்டை, 233. கே. தவமலர் (46) விஸ்வமோட்டை, 234. எஸ் .ஜெயகாந்தன் (32) கோண்டாவில் மேற்கு யாழ்ப்பாணம், 235. வி. அன்டனிதாஸ் (23) கிளிநொச்சி, 236. ஏ. கோபால சிங்கம் (51) கிளிநொச்சி, 237. சிவனேஸ்வரி (38) வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம், 238. பரந்தாமன் (30) வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம், 239. எஸ். ரஜினி (28) ஆலாவட்டை, 240. ரவிகுமார் (17) பாரதி புரம் கிளிநொச்சி, 241. அஷ்லிகன் (1.5) கனகபுரம் கரப்பு, 242. மாலதி (30) கனகபுரம் கரப்பு, 243.தயாபரன் (35) புளியங்குளம், 244. ஜசோதராணி (37) தேவிபுரம் கிளிநொச்சி , 245.பி. தேவபாக்கிய லக்சுமி (60) நொச்சிக்குளம்,ஓமந்தை, 246. அருணாசலம் கிட்ணன் (70) 10, கட்டாற் விஸ்வமடு, 247. திலகவதி (56) சுந்தரபுரம், 248. றேனுகா (30) கிளிநொச்சி, 249. பெயர் இல்லை (6நாள்) கிளிநொச்சி, 250. பி. வரதலக்சுமி (38) கிளிநொச்சி, 251.எஸ். தனலக்சுமி (56) வட்டக்கச்சி , 252.ஏ. அந்தோனிமுத்து (60) கிளிநொச்சி, 253. ஏ. கௌரிவேல் (24) கிளிநொச்சி, 254. எம். தியாகராஜா (31) தர்மபுரம் 2ஆம் யுனிற், 255. எஸ் .பொன்னம்மா (63) 160ஃ2, முரசுமோட்டை, பரந்தன், 256. யதுர்ஷகா (1.2) 160-2, முரசு மோட்டை, பரந்தன் , 257.எம்.சுபாஷினி (31) முரசுமோட்டை, 258. கே.கனகராஜா (39) டிக்கோயா, கற்றன், 259. வி. ராசுதன் (27) பூநகரி, 260. சுப்ரமணியம் (46) உடையார் கட்டுகுறவெளி, முல்லைத்தீவு, 261. நற்குணவதி (54) பூநகரி,262. மு.வாகீசன் (23) தண்ணீரூற்று முல்லைத்தீவு, 263. ஜெ. பிரதீபன் (29) முள்ளியவளை, 264. சுசிலாதேவி (58) அம்பாம்கொட்டுவ, 265. சைலஜா (13) உதையபுரி மேற்கு, 266. மு.சித்திராதேவி (39) உதயநகர் கிளிநொச்சி, 267.?. கமலினினன் (8) உதயநகர் கிளிநொச்சி, 268. எஸ் .சாரலாஹன் (7) கிளிநொச்சி, 269. எஸ். மலர் விழி (26) கிளிநொச்சி, 270. தேவரூபன் (37) ஒட்டுசுட்டான், 271. எஸ். தம்பிராசா (71) மைலபுரம் கிளிநொச்சி, 272. கே. மங்கலேஸ்வரி (35) யாழ்ப்பாணம், 273. கே. சோபிதன் (4) யாழ்ப்பாணம், 274. கே. லினிதரன் (5) யாழ்ப்பாணம். 275. கே.அன்ரன் (7) யாழ்ப்பாணம், 276.கே.கனி (8) யாழ்ப்பாணம், 277. செல்வசாந்தி (75) யாழ்ப்பாணம், 278. ஆர். சதீஸ்குமார் (28) நெல்லியடி, யாழ்ப்பாணம், 279. மு. அன்சான் (16) வேலணை, யாழ்ப்பாணம், 280. தம்சிகா (2.5) யாழ்ப்பாணம், 281. நதீஸ்வரி (28) காவலி யாழ்ப்பாணம், 282. ஜே. விலுக்ஷன் (8) காவல்லி யாழ்ப்பாணம், 283. எஸ் .ஜெகதீஸ்வரன் (49) கிளிநொச்சி, 284. தெய்வேந்திரன் (58), 285. எஸ் .தர்னி (28) விஸ்வமடு, 286. பிறினிதா (3மாதம்) விஸ்வமடு, 287. ஜே.நலின் (13) முல்லைத்தீவு, 288. என்.கோபால பிள்ளை (53) முல்லைத்தீவு, 289. ஜே.பாக்கியம் (64) மல்லாகம், 290. குணபாலசிங்கம் (58) மல்லாவி, ?ல்லைத்தீவு, 291. செல்லம்மாள் (58) கைதடி, 292. மே?ஜக்குலின் (36) கிளிநொச்சி, 293. சி.அந்தோனி அமலா (5மாதம்) , 294. கே.பி. அன்னம்மாள் (26) கிளிநொச்சி, 295. ஆர் . செல்லம்மா (65) ஒட்டபுரம் துணுக்காய், 296. மு. சசிஹரன் (30) கிளிநொச்சி, 297. கிருஜா (33) முறிப்பு, 298. மரகதம்மா (64) விஸ்வமடு, 299. கே.தர்ஷன் (18) யாழ்ப்பாணம், 300.சிவஹரன் (23) அக்கராயன்குளம், 301. வி.திருச்செல்வம் (56) அக்கராயன்குளம், 302. மு.மதனசெல்வம் (27) யாழ்ப்பாணம், 303. சுகந்தினி (20) யாழ்ப்பாணம், 304. கிருஷ்ணபிள்ளை (70) கந்தபுரம், 305. மு.சதாநந்தன் (42) கிளிநொச்சி, 306. சுதாஹரன் (39) சுதந்திரபுரம், 307. எஸ்.செல்லம்மா (75) புதுக்குடியிருப்பு, 308. சின்னத்தம்பி (88) புதுக்குடியிருப்பு, 309. அமிர்தநாதன் (37) சுதந்திரபுரம், 310 . இசோநாதன் (11) மல்லாவி, 311. கே.கேதீஸ்வரன் (19) கந்தபுரம், 312. கியூராதன் (3) கிளிநொச்சி , 313. வீரையா (37) கிளிநொச்சி , 314. தில்லையம்பலம் (74) கிளிநொச்சி , 315. புவனேஸ்வரி (59) துணுக்காய், 316. பாலகிருஷ்ணன் (49) மல்லாவி, 317. செல்வரஞ்சினி (35) யாழ்ப்பாணம், 318. சிறிவனஜா (36) துணுக்காய், 319. யோகேந்திரன் (43) நெல்லியடி யாழ்ப்பாணம், 320. பி.பாலசிங்கம் (60) வட்டக்கச்சி, 321. சரமியா (14) சுதந்திரபுரம், 322. எஸ்.ஜோசப் (38) விஸ்வமடு, 323. ஜோசப் இந்திரா (33) விஸ்வமடு, 324. ஜசோதினி (15) 352. 4ஆவது கண்டம், 325. பி.கருணா (17) 2 துணுக்காய், 326. வேலாயுத பிள்ளை (77) சாவகச்சே?, 327. மார்க்கண்டு கந்தையா (69) வேளாங்குளம் மன்னார், 328. விதுஷன் (4) பரந்தன், 329. கண்ணம்மா (65) பரந்தன், 330. எஸ்.திருச்செல்வமணி (40) பூகன்ன, 331. வி.யோகேஸ்வ? பூகன்ன, 332. ரோகிதன் (4) விஸ்வமடு, 333. லோஜிதன் (4), 334. வி.ஜெயமோகன் (36) முள்ளியவளை, 335. ரொசான் (14) விஸ்வமடு, 336. நிலுக்ஷி (10) முள்ளியவளை, 337. டிலுக்ஷன் (07) ?ள்ளியவளை, 338. ஏ. ஜோகினி (27) முள்ளியவளை, 339. ஜெசிகன் (1) முள்ளியவளை, 340. ஆனந்தம் (78) புதுக்குடியிருப்பு, 341. ராஜ்குமார் (3) விஸ்வமடு, 342. அருமைநாதன் (38) விஸ்வமடு, 343. மதன் ராதிகா (29) வரணி, யாழ்ப்பாணம், 344. எஸ்.சுப்ரமணியம் (47) கந்தபுரம், 345. கே.ராஜேஸ்வ? (62) யாழ்ப்பாணம், 346. கே.விஜயபாலன் (47) கோணாவில் கிளிநொச்சி, 347.எஸ்.விஜயகுமார் (39) பளை, 348. கீர்த்தீகன் (4) குஞ்சுக்குளம் வவுனியா, 349. நிரஞ்சனாதேவி (32) குஞ்சுக்குளம் வவுனியா. 350. மிருனாளினி (05) குஞ்சுக்குளம், வவுனியா, 351. கே. சௌந்தராஜன் (39) புதுக்குடியிருப்பு, 352. விசாலாச்சி (62) மல்லாகம், 353. கே. சிவகுமார் (36), தேவிபுரம் கிளிநொச்சி, 354. சரஸ்வதி (30) பாரதிபுரம் கிளிநொச்சி, 355. இருபாலினி (30) பாரதிபுரம் கிளிநொச்சி, 356. குகேந்திரராஜா (17) தெல்லிப்பழை யாழ்ப்பாணம், 357. வேலம்மா (60) ஜெயபுரம், 358. சிவக்குமார் (33) யாழ்ப்பாணம், 359. வீரலிங்கம் (41) நல்லூர், 360. சர்மிலா லதா (30) ?ல்லைத்தீவு, 361. துவாதிகா (05) யாழ்ப்பாணம், 362. லிதுசியா (9) தேவிபுரம் 363. எஸ். சிந்துஜன் (20), குமுளமுனை, 364. சிவாஜினி (34), கிளிநொச்சி 365. காது (07), கிளிநொச்சி, 366. நிதர்சன் (10), கிளிநொச்சி, 367.ஐதுரினா (8) கிளிநொச்சி, 368. சண்முகராஜா (60) சிவன்கோவிலடி மட்டுவில், 369. எம்.கனகம்மா (53) கிளிநொச்சி, 370. வி.விஸ்வமனோகரம் (27) கொக்குதொடுவாய், 371. சுஜீந்தரன் (14) மாதய், 372. எம்.கணேஷ் (24) கொகுன்னை, 373. செல்வமணி (46) யாழ்ப்பாணம், 374. வி.கமலேஸ்வரி (45) மாசார்பளை, 375. எஸ் .இந்திராதேவி (55) வள்ளிபுனம், 376. ஜெ.ராஜேஸ்வரி (35) மல்லாவி , 377. பத்மநாதன் (65) மடுகோவில் மன்னார், 378. எஸ். வசந்தகுமாரி (35) வட்டக்கச்சி, 379.வி.யசோதாதேவி (49) வட்டக்கச்சி, 380. வி. யோகேஸ்வரன் (25) யாழ்ப்பாணம், 381. எஸ் மரியதாஸ் (75) பூநகரி, 382. தேவசகாயம் சேவியர் (58) குருநகர் யாழ்ப்பாணம், 383. டி. எட்மன்ட் (55) குருநகர் யாழ்ப்பாணம், 384. முருகையா (66) கிளிநொச்சி, 385 சுசிகா (16) துணுக்காய், 386. தயாநிதி (34) கிளிநொச்சி, 387. கே.அன்னம்மா (61) கிளிநொச்சி திருநகர் , 388. ராசநாயகம் (78) விஸ்வமடு, 389. எம்.ரதீஸ் (32) பூநகரி, 390. எம். சந்திரகுமார் (25) கண்டாவளை, 391. செல்வகுமார் (34) தவநாயகம் கரவெட்டி, 392. திருநாவுக்கரசு (56) சுண்டிக்குளம், 393. எஸ். கண்ணம்மா (70) வாழைச்சேனை, 394. எஸ்.நிஷாந்தி (34) துணுக்காய், 395.ஜே.வல்ற்றா (33) கல்மடு கிளிநொச்சி, 396. பரமநாதன் (63) உருத்திரபுரம் கிளிநொச்சி, 397. வி.நடராஜா (55) பூநக?, 398. ஏ.அற்புத நாயகி (34) நெடுந்தீவு, 399. வை.காளியம்மா (42) தர்மபுரம் விஸ்வமடு, 400. கே.பராசக்தி (62) விஸ்வமடு, 401. எம் .கனகசபை (67) சாவகச்சேரி, 402. ஆர். சுப்ரமணியம் (50) கிளிநொச்சி, 403. எம்.செவ்வந்தி (65) கிளிநொச்சி, 404. மு. அருள்சேகரம் (30) அல்லைப்பிட்டி.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தமது உறவுகள் வன்னியில் எந்த நிலையில் எங்கு இருக்கின்றார்கள் என்று தெரியாது இருந்தால் உடனே சுவிசர்லாந்தில் இருக்கும் GBT-BERN (004179827662) என்ற நிறுவனத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அவர்களை பற்றிய விபரங்களை செஞ்சிலு வைசங்கத்தின் உதவியுடனும் தேடுதலை மேற்கொள்ளமுடியும்.

Read more...

வன்னியில் இடம்பெற்ற மோதல்களில் சிக்குண்ட தமிழர்களின் விபரங்கள்

புதுமாத்தளனில் இருந்து திருகோணமலை வைத்தியசாலைக்கு முதல் தொகுதியாக கொண்டுவரப்பட்ட 368 பேரில் மூவர் மரண மடைந்துள்ளதாக வைத்திசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வட்டக்கச்சியை சேர்ந்த மு.அந்தோனிபிள்ளை (வயது 45), மல்லாவியை சேர்ந்த விதுர்சன் (வயது 11), புதுக்குடியிருப்பை சேர்ந்த எம்.விதுசன் (வயது 7 ) ஆகியோரே இவ்வாறு மரண மடைந்துள்ளனர்.

காயமடைந்த நிலையில் முல்லைதீவிலிருந்து கொண்டுவரப் பட்டவர்களில் முழுமையான விபரம் வருமாறு

1) சிவலிங்கம் (வயது75) கட்டக்காடு, பெரியகுளம், 2) டொமினிக் (வயது 24) யாழ்ப்பாணம், 3) பி.குலராணி (வயது 42) பெரியமடு,4) ஜெயரூபன் (12)வல்லிபுரம்,5) நல்லம்மா(71) பெரியமடு, 6) அருள்ராஜ் (11)பெரியமடு, தேவிபுரம், 7) கஜீபன் (8)பெரியமடு, தேவிபுரம், 8) ஜமிஸ் ரட்னராஜ் (43) வவுனிக்குளம், 9) எஸ்.மங்கையற்கரசி (47), 10) மேகராஜா(64) வவுனிக்குளம், 11)வரதரõசன் (23) இயக்கச்சி, 12) ஜெயந்தி (46) தருமபுரம், 13) புவனேஸ்வரராஜா (39)மன்னார், 14) எஸ். தங்கவேல்(73), 15)ராமாயி (66) உடையார்கட்டு, 16பிரியதர்ஷினி (30)வவுனியா, 17)ராசமலர் (5)வட்டக்கச்சி, 18) துஷ்யந்தினி (2) விஸ்வமடு, 19)சந்திரகுமார் (21)மன்னார், 20) துஷ்யந்தினி (21), மன்னார், 21) கே.மகேந்திரன் (42)வற்றாப்பளை,22) மு.கிரிஷ்ணா (19)இரணைப்பாலம், 23) எம்.ராசமலர் (48) வற்றாப்பளை, 24) எம்.மஞ்சுதன் (7)வற்றாப்பளை, 25) மேரி (80) முல்லைத்தீவு, 26) வை.லோகராஜா (34)புதுக்குடியிருப்பு, 27) எஸ். சுப்பிரமணியன் (59)நெடுங்கேணி, 28) எல். லோகிதா (11-2) தொண்டநகர், கிளிநொச்சி,29) எல். சிவாஜினி (24) தொண்டநகர், கிளிநொச்சி, 30).எல். நிலோஷா (6) தொண்டநகர், கிளிநொச்சி,31) எஸ். ஜேசுதாஸன் (63) யாழ். வசாவிளான்,32) பூமணி (61) புதுக்குடியிருப்பு, 33) கங்காராணி (25) முல்லைத்தீவு, 34) தனபாலன் (36) முல்லைத்தீவு, 35) கே.அஜந்தா (30) முள்ளியவளை, 36) தனுஷா (9 நாட்கள்), 37)எஸ். விஜித்தா (23) புதுக்குடியிருப்பு, 38) அருந்தவராணி (49)புதுக்குடியிருப்பு, 39) சுதர்ஷினி (20) வட்டக்கச்சி. 40) ஜெயரூபி ( 4 நாட்கள்) எழாவது மைல்கல், 41) , 42) பி.சரூஜன் (7) ஏழாவது மைல்கல், 43) தேவபாலன் (36) ?ல்லைத்தீவு, 44) என்.முனோஜா (5) கோணாவில், 45) முட்டா மேரி (30) கோணாவில், 46) கே.கனுஷா (9) புதுமுறிப்பு, 47) ஷர்ஷான் (4) குமுலமுனை, 48) சஜந்தி (6) குமுலமுனை , 49) பத்மாஞ்சனி (36) குமுலமுனை , 50) ஜெயந்தி (38) புதுமுறிப்பு, 51) எஸ். மேரி மாகிரட் (35) யாழ்ப்பாணம், 52) துவாரகா (3) யாழ்ப்பாணம், 53) தாரணி (5) யாழ்ப்பாணம், 54) நவரட்னம் (61) கொடிகாமம், 55) கே. மகேஸ்வரன் (51) ?ல்லைத்தீவு, 56) டபிள்யூ. விஜித்தா (52) புதுக்குடியிருப்பு, 57) வை.ரஞ்சனா (9)கந்தவளை மகா வித்தியாலயம், 58) மேரி மஞ்சுளா (26)விஸ்வமடு, 59) கிம்சிகாந்த் (9) வட்டகச்சி, 60) மரியராணி (60) முல்லைத்தீவு, 61) எஸ். நிமலன் (10) மல்லாவி, 62) ஜெயசுதன் (43)வட்டக்கச்சி, 63) புஷ்பராணி (50) வட்டக்கச்சி, 64) சி.சுகந்தி (37) யாழ்ப்பாணம், 65) நிரோஜன் (13)மல் லாவி, 66) நிலானி (11)மல்லாவி, 67) சிவந்தி (8)மல்லாவி, 68) மாப்பாணர் மாணிக்கம் (37) புதுக்குடியிருப்பு, 69) மு.இந்திராஞ்சனி (16) புதுக்குடியிருப்பு, 70) பூசையம்மா (64) தர்மபுரம், 71) ஜூலியட் (29), 72) தட்சாயிணி ஜெயந்தி (11)மல்லாவி, 73) கே.ஜெகதீஸ்வரன் (49)வவுனிக்குளம்,74) தார்மீகன் (11)வவுனிக்குளம், 75) வித்யாகரன் (14) வவுனிக்குளம், 76) நிவேதன் (12) வவுனிக்குளம், 77) திருமதி. எல். கஜேந்திரன் (68) கிளிநொச்சி, 78) இரூஷிகா (8), 79) மஞ்சுளா (43), 80) மு.அபிரஞ்சன் (6) கிளிநொச்சி, 81. மு. முத்துரஞ்சா (8) கிளிநொச்சி, 82) கமிலினி (10) கிளிநொச்சி, 83. வினோஜினி (16) உருத்திரபுரம், 84. எஸ். அருமைதாஸ் (25) மல்லாவி, 85. மனோகரன் (10) கிளிநொச்சி, 86) புளோரி (67) உருத்திரபுரம், 87) அமிர்தராஜா (55) புளியங்குளம், 88) மு. சுபத்திரதேவி (70) கிளிநொச்சி, 89) கலைநிலா (02), 90. கலைவிழி (07), 91) கமலேந்திரன் (33) யாழ்ப்பாணம், 92. தட்சாயினி (10) வட்டக்கச்சி, 93) பத்மராணி (35) பாரதிபுரம், 94) எஸ். அந்தோனிப்பிள்ளை (31) தலைமன்னார், 95) பூமலர் (60) மிருசுவில், 96) மு. அந்தோனிப்பிள்ளை (45) வட்டக்கச்சி, 97) திலகேஸ்வரி (32) அரசைக்குளம், 98) பனுஷா (09), 99) மு. புஸ்பாவதி (68) மல்லாவி, 100)ஆர். உமையாள் (9 நாட்கள்) கிளிநொச்சி, 101) ஆர். தடாதகைபிராட்டி (49) கிளிநொச்சி, 102) எட்வேட் சுகந்தனி (26) ஆனையிறவு, 103) மு. துளசி (04) கிளிநொச்சி, 104) மு. லதா (35) கிளிநொச்சி, 105) வி. சரஸ்வதி (37) புதுக்குடியிருப்பு, 106) எஸ். இராஜேஸ்வரி (40) புளியங்குளம், 107) செல்வகுருஷ்சாந்தன் (08) புளியங்குளம், 108) ஜோசப் பொர்னாண்டோ செபன் (60) முல்லைத்தீவு, 109) லைபன் (08) ஞானபாளையம், 110) சி. பரமேஸ்வரி (58) கிளிநொச்சி, 111) பிரான்சிஸ் (37) கிளிநொச்சி, 112) பிரகாஷ் (10), 113) பிரமிக்காஷ் (02), 114) பிரதீஷ் (09), 115) வி. ஞானகுமாரி (47) புதுக்குடியிருப்பு, 116) எஸ். சிந்துஜா (18) கிளிநொச்சி, 117) ஜி.யோகேஸ்வரன் (17) 118) மகாலக்ஷ்மி (58) கணேசபுரம், 119) சுபாஜினி (27) கந்தபுரம், 120) குழந்தை சுபாஜினி கிளிநொச்சி, 121) சசிதரவாணி (37) கிளிநொச்சி, 122)கார்த்திக் (09) ழூழூ, 123) தவமணி (62) முள்ளியவளை, 124) சிவப்பிரகாசம் (77) முள்ளியவளை, 125) பகீரதன் (09) கிளிநொச்சி, 126) ஏ.அம்பலம் (60) கிளிநொச்சி, 127) ஆர். சரோஜா (51) சுதந்திரபுரம், 128) எஸ்.சசீகரன ;(31) முரசுமோட்டை, 129)எஸ். சுpவமணி (27) முரசுமோட்டை, 130) எஸ். பானுஜா (02) முரசுமோட்டை, 131) எஸ். நாகேஷ்வரி (53) விஸ்வமடு, 132) ஜீ.சிந்துஜன் (12) பூநகரி, 133)மாரியம்மா (63) யாழ்ப்பாணம், 134) தேவராசா (56) திருநகர், 135) எஸ்.சந்திரஹாசன் (28) முள்ளியவளை, 136) ஜெயதர்ஷனி (22) முள்ளியவளை, 137) சந்திரா(01) முள்ளியவளை, 138) சிவகுருநாதன் (63) முல்லைத்தீவு, 139) எஸ்.ரஜித்தா (25) யாழ்ப்பாணம், 140)கலைவாணி (23) வட்டக்கச்சி,141)கனககேஷ்வரி (67)வட்டக்கச்சி, 142)எம். ராஜேஸ்வரி (48) பெரிபாளை, 143) எஸ். ரஜனி (32) பெரியகுளம், 144) மொழிச்செல்வி (02) உருத்திரபுரம், 145)மேரி அஞ்சலின் (71) உருத்திரபுரம், 146)எஸ்.நிலந்தன் (1 1-2) ழூழூ, 147) ரத்னபூபதி (59) தர்மபுரம், 148) மனோன்மணி (58) கிளிநொச்சி, 149)எம். மலரவன் (01) ஆலங்கேணி, 150) கே. நிஷாந்தன்(23) ஆலங்கேணி, 151) யாக்கோப் ராஜேஸ்(36) யாழ்ப்பாணம், 152) மரியாகுணேஷ்வரி (31) யாழ்ப்பாணம், 153) சுந்தரலிங்கம் (55) ழூழூ 154)இராமசாமி (68) முல்லைத்தீவு, 155) அன்னமுத்து (67) முல்லியவளை, 156) சத்தியசீலன்(04) முல்லைத்தீவு, 157) நாகேஷ்வரி (06) முல்லைத்தீவு, 158) விவேகன்(38) முல்லைத்தீவு, 159) சீ.தவராஜா (74) கிளிநொச்சி, 160) பீ.ஓ.கேகிலா(01) கிளிநொச்சி, 161) கிஷானா (25) கிளிநொச்சி, 162) கோகிலா (02) கிளிநொச்சி. 163) என். சிந்துஜா(14) கிளிநொச்சி, 164) என். வளர்மதி (38) கிளிநொச்சி, 165) சிந்துஜன்(12) பூநகரி, 166) ஆர். இரணி(03) தர்மபுரம், 167) ஆர். சுசிகலா (35) தர்மபுரம், 168) ஆரணி(1 1-2) புதுக்குடியிருப்பு, 169) முகுந்தினி (25) பூநகரி, 170) அனுலாவதி ழூழூ , 171)பீ.ஓ. தனலஷ்மி (5 நாட்கள்) கிளிநொச்சி, 172) மதுசாலினி (07) கிளிநொச்சி, 173)சரோஜா தேவி(43) பூநக?, 174) தமிழின்பன்(1 1ஃ2) கிளிநொச்சி, 175)கே. பவித்ரா(6) கிளிநொச்சி, 176)கே. அன்டனி(04) கிளிநொச்சி, 177) கே. தனலஷ்மி(34) கிளிநொச்சி, 178)கணேசபிள்ளை(37) முல்லைத்தீவு, 179)எஸ். அஞ்சலிகா(57) கிளிநொச்சி, 180)மகிலன்(04) கிளிநொச்சி, 181)அருமைநாதன்(46) விஸ்வமடு, 182)டீ.பாலசுப்ரமணியம்(55) கிளிநொச்சி, 183)என்.மோகனதாஸ்(38) கிளிநொச்சி, 184) நிஷாந்த்(27) கிளிநொச்சி, 185)மோகனராஜ்(23) இயக்கச்சி, 186)மோகனரஞ்சிதன்(38) இரணைமடு, 187)தேவிகரனி (48) இயக்கச்சி, 188)குழுந்தைவேல்(38) முல்லைத்தீவு, 189) சர்மினி (57) உதயநகர், 190)செல்வகுமார் (38) கிளிநொச்சி, 191)மு.தமிழின்பன் (61) முல்லைத்தீவு, 192)செல்வாகன்(05) முல்லைத்தீவு, 193)எஸ். பிரதீபா(27) அளவெட்டி, 194) ஏ.சுந்தரலிங்கம் (55) வெள்ளாங்குளம், 195)காசியம்மா (36) இளுப்பன்கட்டு, 196) சிவகுமார் (05) முல்லைத்தீவு, 197) சுரேஷ்காந்தன்(25) முல்லைத்தீவு, 198)எஸ். ரஞ்சித் (30) சுதந்திரபுரம், 199) ஆர்.ஜெகதீஸ்வரி (24) சுதந்திரபுரம், 200) ஆர். ஜீவதாஸ்(1 1-2) சுதந்திரபுரம், 201)லீலாவதி (34) உத்திப்புலம், 202)எஸ். சியாளினி(15) உத்திப்புலம், 203)ஏ.சியாளினி (30) தாண்டிக்குளம், 204) ஏ. கிருத்திகா ( 4) தாண்டிக்குளம் 205) வீ. தருமலிங்கம் ( 57) கிளிநொச்சி 206) பீ. சுதர்ஷன் (32) பொக்கனை 207) பாலசரஷ்வதி (35) புதுக்குடியிருப்பு 208) என். சரோஜாதேவி (50) உடையார்கட்டு 209) செல்லத்துரை கரைவண்ணன் ( 42) புதுக்குடியிருப்பு 210) கே. தர்மேஷ் ( 7) தண்ணீரூற்று 211) திருமதி மகாலிங்கம் (70) தண்ணீரூற்று 212) பவதாரணி (5) 213) மு.யோசைக்லோ (24) பரந்தன் 214 முயோ லெவிஷ் (67) பரந்தன் 215) கே. பார்த்தசாரதி (25) யாழ்ப்பாணம் 216) சிஸ்டர் லோர்ட்ஸ் (67) பரந்தன் 217) மேரி விக்டோ?யா (34) வலைப்பாடு 218) ஆன் ரெக்டா (36 ) வளப்பாடு 219) கே. மாகலிங்கம் (80) புதுக்குடியிருப்பு 220) செல்லம்மா (65) கண்ணகிபுரம் 221) கே. ஷர்மிளன் (24) கிளிநொச்சி 222) ச?தா(24) கிளிநொச்சி 223) ரதுஷன் (ஒன்றரை) கிளிநொச்சி 224) சித்ஸ்ளளள ( 34 ) கிளிநொச்சி 225) தயாராணி(34) வெற்றிலைக்கேணி 226) போதினி (9) வெற்றிலைக்கேணி 227) ஜெஷிந்தன் (ஒன்றரை) வெற்றிலைக்கேணி 228) ஜெஷிந்தன் (3) வெற்றிலைக்கேணி 229) ஜேசுதாஸ் (34) வெற்றிலைக்கேணி 230) எஸ்.தவக்குமார் (23) பூவரசன்குளம் 231) கே.குருசாமி (69) பரந்தன் 232) எஸ். பிரதாப் (5) பரந்தன் 233) எம். மகேந்திரன் (53) 234) எம். இந்திராதேவி (46) விஷ்வமடு 235) எஸ். ரத்னசிங்கம் (16) கிளிநொச்சி 236) புஷ்பா நீலமணி (58) நெடுங்கேணி 237) எஸ். கந்தையா (60) சுதந்திரபுரம் 238) எஸ்.தனுஷா யாழ்ப்பாணம் 239) வீ. சற்குணராசா (35) யாழ்ப்பாணம் 240) எஸ். வன்னியசிங்கம் (50) அக்கராயன்குளம். 241) என் . நடராஜா(16) புதுக்குடியிருப்பு 242) எஸ். கிருஷாந்த்(13) யாழ்ப்பாணம் 243)என். ஸ்ரீதர் (44) பலாலி 244) எஸ். செல்வரத்னம் (70) யாழ்ப்பாணம் 245) ஜனகராஜ் (16) ராமநாதபுரம் 246) எஸ். மாலதி (27) யாழ்ப்பாணம் 247) கன்னிகை (56) விஷ்வமடு 248) எஸ்.ஜெயபாலன் (45) கந்தவெளி 249) எஸ்.சுகிர்தகுமார் (48) வட்டுக்கோட்டை 250) அபிதா (8) வட்டுக்கோட்டை 251) எஸ். ரொசல்லா (12) வட்டுக்கோட்டை 252) எஸ். அலன் (10) வட்டுக்கோட்டை 253) ஏ. குணசீலன் (44) புதுக்குடியிருப்பு 254) என். சண்முகநாதன் ( 60) சுழிபுரம் 255) பீ. பெரிநாயகி (50) கிளிநொச்சி 256) எஸ்.நடராஜா (65) புதுக்குடியிருப்பு 257) ரத்னேஷ்வரி (50) முல்லைத்தீவு 258) கலையரசி (36) கிளிநொச்சி 259) மேகநாதன் (65) யாழ்ப்பாணம் 260) கே. மாணிக்கம் (85) குமுழமுனை 261) கே. கிருபாதேவி (49) உடையார்கட்டு 262) ஜே.தனலட்சுமி(28) உடையார்கட்டு 263) எம். ஜதுகுலன்(29) உடையார்கட்டு 264) கஜீபன் (3) உடையார்கட்டு 265) ஜ. சிவமே? (31) புதுக்குடியிருப்பு 266) மாணிக்கம் (52) புதுக்குடியிருப்பு 267) பி. சிவபாதசுந்தரம் (59) கிளிநொச்சி 268) ஏ. ராஜேந்திரன் (63) மன்னார் 269) என். யோகேஸ்வரி (20) யாழ்ப்பாணம் 270) பி. துவாரகா (7) முல்லைத்தீவு 271) பாலராஜா (49) முல்லைத்தீவு 272 என். சரஷ்வதி (56) யாழ்ப்பாணம் 273) கிஷோர் (1) யாழ்ப்பாணம் 274) சன்முகம் (64) தேவிபுரம் 275) எஸ். சண்?கம் (66) தருமபுரம் 276) சுவர்ணா முள்ளியவளை 277) சகுந்தலாதேவி (46) முள்ளியவளை 278) திலக்ஷியா (1) முள்ளியவளை 279) செபமாலைமே? (10) மன்னார் 280) திருஷிகா (14) புதுக்குடியிருப்பு 281) ராசகுமாரி ( 7) தேவிபுரம் 282) டி. ஜெயராணி (54) சுதந்திரமபுரம் 283) டி. ஜெயந்தன் (36) சுதந்திரபுரம். 284) கே. மகேந்திரன் (53) முல்லைத்தீவு 285)286) நித்தியகலா (22) தேனிபுரம் 287) ஏ. மதுரைநாயகம் () கிளிநொச்சி 288) மதுஷன் (35) கிளிநொச்சி 289) மயூரன் (11) கிளிநொச்சி 290) என். மலர்வாணி (1) கிளிநொச்சி 291) எம். புஷ்பா ஜெனோபா (31) கிளிநொச்சி 292) சிவஞானம் (47) கனகராயன்குளம் 293) தேவேந்திரராசா (31) தேவிபுரம் 294) கோபிகா தேவிபுரம் 295) பிரபாகரன் (28) 296) ஆசிசத் (05) தேவிபுரம் 297) ரோகிணி (13) பூநகரி 298) தனுஸ் (04) சுதந்திரபுரம் 299) பி.சிறிகலா (27) சுதந்திரபுரம் 300) கிருஷாலினி (02) சுதந்திரபுரம் 301) எம்.அபர்னா (05) யாழ்ப்பாணம் 302) அபிமன்யு (03) யாழ்ப்பாணம் 303) எம்.ய?னா (36) யாழ்ப்பாணம் 304) கந்தசாமி (54) சுழிபுரம் 305) பி.தட்சணாமூர்த்தி (63) கோணாவில் கிழக்கு 306) எஸ்.தினகரன் ( 54) ஆனந்தபுரம் 307) கே.தர்ஷன் (15) முழங்காவில் 308) பி.லிந்துஜா (09) மல்லாவி 309) பிரேமானந்தா (41) மல்லாவி 310) விதுர்ஷன் (11) மல்லாவி 311) பி.கிருஜா (35) மல்லாவி 312) திவ்யன் (04) மல்லாவி 313) லக்ஷனா (10) பூநகரி 314) பி.தனோஜன் (06) மல்லாவி 315) நாகேந்திரன் (39) ?ல்லைத்தீவு 316) எஸ் கோவிந்தபிள்ளை (57) புதுக்குடியிருப்பு 317) பி.ராமன் (51) கிளிநொச்சி 318) எஸ்.ஜதுர்ஷி )16( முள்ளியவளை 319) பூபாலகிருஷ்ணன் (35) காரைநகர் 320) சிவதாஸ் (24) 321) கே.புஷ்பமலர் (52) குமிழமுனை 322) ராஜேஸ்வரி (31) பூநகரி 323) ஆர்.எழிலரசி (36) முல்லைத்தீவு 324) எம்.சிவம்மா (40) புதுக்குடியிருப்பு 325) கே.முருகேஸ் (80) மன்னார் 326) என்.நாகேஸ்வரி (55) புதக்குடியிருப்பு 327) கே.சிவபாலன் (37) பூநகரி 328. கிருஸ்சாந்தன் (17) கிளிநொச்சி, 329. எம். யசோதினி (36) புதுக்குடியிருப்பு, 330. எம். பவிர்சன் (04) புதுக்குடியிருப்பு, 331. எம். விதுர்ஷன் (07) புதுக்குடியிருப்பு, 332. மகேஸ்வரி (46) கிளிநொச்சி, 333. எஸ். மனோகரன் (46) பூநகரி, 334. டிலாக்ஷா (02) சோலைமரவடி, 335. அஜந்தினி (22) சோலைமரவடி, 336. கணேசலிங்கம் (32) பூநகரி, 337) எஸ். ஹோமமாலினி (32) கிளிநொச்சி, 338) எஸ். திலகராணி (01) கிளிநொச்சி, 339) செல்வராஜா (50) முல்லைத்தீவு, 340) சண்முகநாதன் (70) விஸ்வமடு, 341. வி. ஜோசப் (75), 342. எஸ். ரவிராஜ் (17) மட்டக்களப்பு, 343). பி. இருதயசிலை வெள்ளாவெளி, 344) பிரபா மேரி ஜெனிட்டா (18) வெள்ளாவெளி, 345) எஸ்.தவமலர் (59) புத்தூர், 346) எஸ். ஸ்ரீஜா (31) வவுனியா, 347) சுதர்சன் (33) முரசு மோட்டை, 348) ரோசாலி (48) யாழ்ப்பாணம், 349) சித்தம்பரநாதன் (60) முரசுமோட்டை, 350) வி. ரஜனிதேவி (45) முள்ளியவளை, 351) அந்தோனி தேவதாஸ் (40), 352. மனோன்மணி (68) மல்லாவி, 353) மு. திலீபன் (34) மல்லாவி, 354) என். ராஜரத்தினம் (60) குமரபுரம், 355) பி. தியாகலிங்கம் (69) காரைநகர், 356) நல்லம்மா (71) அரியலூர், 357) வி. கோமதி (30) முல்லைத்தீவு, 358. சிவசம்பு (69) வவுனியா, 359) மு. சர்மிளா (08) பாரதிபுரம், 360) மு. மேனகா (28) பருத்தித்துறை, 361) எஸ். செல்வரஞ்ஜி (63) கிளிநொச்சி, 362. ஆர். சிறிகரன் (37) வவுனியா, 363) எஸ். தமிழரசி (37) புதுக்குடியிருப்பு, 364) திரிசிகன் (07) புதுக் குடியிருப்பு, 365) எஸ். சபாரத்தினம் (57) புதுக்குடியிருப்பு, 366) எஸ். கலாதீபன் (23) முல்லைத்தீவு, 367)ல குலசூரியன் (66) புதுக்குடியிருப்பு, 368) யு. கமலாவதி (43) வற்றாப்பளை. குறிப்பு ழூழூ விலாசம் இல்லை.

இதேசமயம் இந்த மக்களுக்கு ஆறுதலும் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் மேற்கொண்டு வருகின்றார் கிழக்கு மாகாணத்து முதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்குது.

Read more...

விடுதலைப்புலிகள் ஊடுருவியுள்ளனராம் கொழும்பிலும் புறநகர் பகுதியிலும் தேடுதல் நூற்றக்கணக்கானோர் கைதாகி தடுத்து வைப்பு

கொழும்பு மற்றம் அதனை அண்டிய பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நேற்று அதிகாலை முதல் மாலைவரையில் திடீர் தேடுதலொன்றை மேற்கொண்டனர். பத்துக்கும் அதிகமான விடுதலைப்புலிகள் பொதுமக்கள் மற்றம் முக்கிய பிரமுகர்களை இலக்கு வைத்து பாரிய தாக்குதல்களை நடத்தும் நோக்கில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிக்குள் ஊடுருவியுள்ளனர். என பாதுகாப்பு தரப்பினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்தே இந்த திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர் இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கைதாகி பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் 300க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Read more...

இலங்கை விவகாரம:; சோனியாவைச் சந்திக்க அன்பழகன் தலைமையிலான குழு புதுடில்லி விரைவு

இலங்கையில் இடம் பெறும் யுத்தத்தை நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தை இந்திய மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டுமென்ற மகஜரொன்றை காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியாவிடம் கையளிப்பதற்காக திராவிட முன்னேற்றக் கழக செயலாளரும் தமிழக நிதியமைச்சருமான இரா. அன்பழகன் தலைமையிலான குழுவொன்று இன்று புதுடில்லி புறப்பட்டுள்ளது.

புதுடில்லியில் இன்று மாலை சோனியா காந்தியை இந்தக் குழு சந்தித்து மகஜரைக் கையளிப்பதுடன் இலங்கை நிலைவரம் தொடர்பாகவும் இந்திய மத்திய அரசின் பங்களிப்புக் குறித்தும் கலந்துரையாடவுள்ளனர்.
வேளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் இக்குழுவினர் சந்தித்து இலங்கை விவகாரம் தொடர்பில் பேசுவர்.

அன்பழகன் தலைமையிலான இந்தக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினரான கனிமொழி உட்பட பலர் பங்கு கொள்கின்றனர்.

Read more...

புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சமடையக் கூடும்:கோதபாய

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சமடையக் கூடுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் ஆட்களைக் கடத்தும் வலையமைப்பின் மூலம் குறித்த சிரேஸ்ட உறுப்பினர்கள் தப்பிச் செல்லக் கூடுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே சூசை மற்றும் பொட்டு அம்மான் போன்றோர் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ளார்களோ தெரியவில்லை, தமது உடமைகளையும் வீட்டையும் இலங்கை அரசாங்கம் எரித்து விட்டதென கூறினால் போதும் அங்கு அரசியல் தஞ்சம் கிடைத்துவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னமும் இலங்கையில் தங்கியிருப்பதாகவும், வெளிநாடொன்றுக்கு தப்பியோடுவது குறித்து திட்டமிட்டு வருவதாகவும் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்து கொள்வதா அல்லது வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

வவுனியா அன்பகம் இல்லத்தில் 64 முதியவர்கள் தஞ்சம்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்திருப்பவர்களில் 64 வயோதிபர்கள் வவுனியா பம்மைமடுவிலுள்ள அன்பகம் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக கிளிநொச்சி வன்னேரிக்குளம் யோகர் சுவாமிகள் திருவடிநிலையத்தின் தலைவர் பொன்னம்பலம் நித்தியாநந்தம் தெரிவித்தார்.

கிளிநொச்சியிலிருந்த தமது முதியோர் இல்லம் போர் சூழ்நிலை காரணமாகப் பல்வேறு சிரமங்களின் மத்தியில் செயற்பட்டு வந்ததுடன்; மோதல்கள் காரணமாகப் பிள்ளைகளால் கைவிடப்பட்ட 7 பெற்றோர்கள் உட்பட 65 முதியவர்கள் இருந்ததாகவும் அண்மைய மோதல்களால் வன்னேரிக் குளத்திலிருந்து இடம்பெயர்ந்து முல்லைத்தீவு, புதுமுறிப்பு, கல்மடு மற்றும் சுதந்திரபுரம் ஆகிய பகுதிகளில் தங்கியிருந்ததாகவும் அவர் கூறினார்.

இறுதியாக இராணுவத்தினரின் உதவியுடன் முதியோர் இல்லத்திலிருந்த அனைவரும் வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்டு நலன்புரி நிலையத்தில் தங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுத்தபோதும்; முதியவர்களின் நிலையைக் கருத்தில்கொண்டு அவர்களை வவுனியாவிலுள்ள அன்பகம் இல்லத்தில் தங்கவைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் நித்தியானநந்தம் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு வவுனியாவுக்கு அழைத்து வரப்பட்டவர்களில் 9 பேர் வவுனியா பொது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாகவும், வவுனியாவுக்கு வந்த பின்னர் 65 முதியவரில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும், உயிரிழந்த முதியவர் அரசாங்கத்தின் செலவில் நல்லடக்கம் செய்யப்பட்டதாகவும் நித்தியாநந்தம் மேலும் குறிப்பிட்டார்.

Read more...

அமைச்சர் ப.சிதம்பரத்தின் கூற்றுக்கு தி.மு.க. வரவேற்பு : யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி மனிதச்சங்கிலி

இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவந்தாலேயன்றி, யுத்த நிறுத்தம் என்பது அர்த்தமற்ற ஒன்று என இந்திய மத்திய அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான தி.மு.க. தெரிவித்துள்ளது.

இலங்கையில் தமிழ் மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்த கருத்தை தமிழகத்தின் மாநில உள்விவகார அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

அதேவேளை இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில், இலங்கை அரசாங்கம் யுத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். அதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும். புலிகள் ஆயுதங்களைக் கீழே வைப்பதாக அறிவித்தால் போதும் இந்திய மத்திய அரசு யுத்தத்தை நிறுத்துமாறு இலங்கையை வலியுறுத்தும் என்று கூறியிருந்தார்.

மேலும், விடுதலைப் புலிகளையும் இலங்கை அரசையும் யுத்த நிறுத்த இணக்கப்பாட்டுக்கு வருமாறு வலியுறுத்தி தி.மு.கவின் இளைஞர் அணி எதிர்வரும் 21ஆம் திகதியன்று சென்னையிலும் ஏனைய மாவட்ட கட்சித் தலைமை அலுவலகத்தின் முன்பாகவும் மனித சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபடும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Read more...

வாழ்வா சாவா என்ற நிலையில் மக்கள் : ஐ.சி.ஆர்.சி

வன்னிப்பகுதியில் இருந்து, ஒரு வார காலப்பகுதியில் காயமடைந்தவர்கள், நோயாளர்கள், அவர்களது நெருங்கிய உறவினர்கள் அடங்கிய 440 பேர் கப்பல் மூலமாக திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் பல நோயாளர்கள் அங்கிருந்து வெளியேறக் காத்திருப்பதாகவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.

"இன்று நாங்கள் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளோம். ஆனால் அங்கு இன்னும் பலரைக் காப்பாற்ற வேண்டியிருக்கின்றது. அவர்கள் எம் உதவியை நாடி ஆர்வத்தோடு காத்திருக்கின்றார்கள். அங்கு வாழ்வா சாவா என்ற நிலையே தோன்றியிருக்கின்றது"என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் கொழும்புத் தலைமை அதிகாரி போல் கஸ்டல்லா தெரிவித்துள்ளார்.

"சிகிச்சையை எதிர்பார்த்து, களைத்து, சோர்ந்த நிலையில் புதுமாத்தளன் பகுதிக்கு குடும்பங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அங்கு உண்மையிலேயே மருந்துகளும் நிவாரணப்பொருட்களும் தீர்ந்துவிட்டன" என்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

"இராணுவ அதிகாரிகளும், சிவில் அதிகாரிகளும், உள்ளூர் பொதுமக்களும் நோயாளர்களை அங்கிருந்து திருகோணமலைக்கு அழைத்து வர தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்கள். ஆனால் புதுமாத்தளனிலும், வன்னியிலும் எஞ்சியிருக்கின்ற மக்கள் மிகுந்த நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்றார்கள்" என்று திருகோணமலைக்கு நோயாளர்களை அழைத்து வரும் பணியில் ஈடுபட்டிருந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் மோர்வன் மூர்ச்சிசன் லொக்றி தெரிவித்துள்ளார்.

இரு தரப்பினரது உடன்பாட்டுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் வன்னியில் தங்கியிருந்து இடம்பெயர்ந்த மக்களின் மனிதாபிமான தேவைகளில் அங்குள்ள வைத்திய அதிகாரிகளுடன் இணைந்து, தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அத்துடன், திருகோணமலைக்கு வந்து சேர்ந்துள்ள ஏராளமான நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் அங்குள்ள அரச வைத்திய அதிகாரிகளுக்கு உதவுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க வைத்திய குழு ஒன்றும் அங்கு தங்கியிருந்து செயற்பட்டு வருகின்றது. இந்தக் குழுவில் அறுவைச் சிகிச்சை நிபுணர் ஒருவர், மயக்க மருந்து கொடுக்கும் நிபுணர் ஒருவர் ஆகியோருடன் தாதி ஒருவரும் பணியாற்றுகின்றார்.

Read more...

வைரவபுளியங்குளம் தொலைக்காட்சி நிலையத்தைச் சேர்ந்த 4 பேர் படையினரால் கைது

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் நடத்தப்பட்டு வந்த 'சன் ரீவி' மீள் ஒளிபரப்புத் தொலைக்காட்சி நிலையத்தைச் சேர்ந்த 4 பேர் திங்களன்று இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, பொலிஸாரிடம் மேல் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

உரிய அனுமதிப்பத்திரமின்றி தொலைக்காட்சி நிலையம் நடத்தி வந்தமைக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு சென்ற இராணுவத்தினர் அந்த நிலையத்திற்குப் பொறுப்பாக இருந்தவர் உட்பட நான்கு பேரைக் கைது செய்ததுடன், தொலைக்காட்சி ஒளிபரப்புக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த உபகரணங்களையும் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தோனிப்பிள்ளை மரியசீலன் (40), ஜெய்கிஷ் (45), அன்ரனி (40), புரூஸ் (38) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கைதானவர்களை வவுனியா பொலிஸார் விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.

Read more...

இலங்கை போரில் ராஜீவ் காந்தி குடும்பத்தினர் பழிவாங்கும் நோக்கத்துடன் செயற்படவில்லை

இலங்கைப் போர் தொடர்பில் ராஜீவ்காந்தி குடும்பத்தினர் பழிவாங்கும் நோக்கத்துடன் செயற்படவில்லை என ராஜீவ் கொலை தொடர்பில் கைதாகி வேலூர் சிறையில் உள்ள கைதி முருகன் தெ?வித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக வந்தபோது, தற்கொலைக்குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவரது மனைவியான நளினி, வேலூர் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு வேலூர் சிறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மகளான பிரியங்கா, நளினியைச் சந்தித்து பேசியுள்ளார். இச்சந்திப்பு தொடர்பில் முருகனுடனான ஊடகவியலாளர்களின் சந்திப்பின்போதே முருகன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வேலூர் ஆண்கள் சிறையில் நேற்று முன்தினம் இசைப்பட்டிமன்றம் நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியை, முருகனும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மற்றொரு கைதியான சாந்தனும் ஒரு ஓரமாக அமர்ந்தபடி கேட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது முருகனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி: பெண்கள் சிறையில் இருக்கும் நளினியை கடந்த மார்ச் மாதம் பி?யங்கா சந்தித்தாரே? அப்போது என்ன பேசினார்?

பதில்: ஆமாம் சந்தித்தார். தன் தந்தையின் மரணம் பற்றி பேசியுள்ளார். தனிப்பட்ட விஷயங்களையும் பேசியுள்ளார்.

மேலும் நளினியிடம் நலம் விசாரித்துள் ளார். என்னைப்பற்றியும், என் மகள் அர்ரித்ரா பற்றியும் கேட்டுள்ளார்.

கேள்வி: நளினி தன்னை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி பிரியங்காவிடம் கேட்டாரா?

பதில்: நான் நளினியிடம் அதுபற்றி கேட்டேன். ஆனால், "தன் தந்தையை இழந்துவிட்டு என்னை சந்திக்க வந்தவரிடம் எப்படி நான் கேட்க முடியும்?' என்று நளினி கூறிவிட்டார். எல்லாருக்குமே அவர்களது தந்தை முக்கியமானவர்கள்தான். ஒரு மகளாக அவர் தன்னுடைய தந்தையை இழந்தது அவருக்கும் மிகப்பெரிய பாதிப்புதான். அதனால் அவரிடம் எங்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கேட்பது விருந்தாளியிடம் கடன் கேட்பது போன்றது அல்லவா?

கேள்வி: பிரியங்கா உங்களை சந்தித்தாரா?

பதில்: என்னையும் சந்திப்பதாகத்தான் இருந்தது. அதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சிறையில் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அவர் என்னை சந்திக்கவில்லை.

கேள்வி: உங்கள் மகள் எப்படி இருக்கிறார்? அவர் எங்கு இருக்கிறார்?

பதில்: என் மகள் தற்போது லண்டனில் படித்துக்கொண்டிருக்கிறார். அடுத்த வருடம் மருத்துவக்கல்லூரியில் சேர்க்கலாம் என்று நினைத்துள்ளோம். ஆனால், அதற்கு செலவுகள் அதிகமாகும். அவள் இங்கிருந்து லண்டன் செல்வதற்கே ரூ.20 இலட்சம் செலவாகியுள்ளது. நாங்கள்தான் இந்த நிலைக்கு ஆளாகி விட்டோம். எங்கள் மகளாவது நன்றாக இருக்க வேண்டும்.

எங்களுக்கு கண்டிப்பாக விடுதலை கிடைக்கப்போவதில்லை. நாங்கள் தற்போது எங்களுடைய குடும்பத்திற்கு சுமைகளாகத்தான் இருக்கிறோம். என்னால் என்னுடைய குடும்பத்திற்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது.

அதனால் என்னால் என்னுடைய குடும்பத்திற்கு செய்ய முடியாததை என் மகள் மூலமாக செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. தற்போது என் தம்பிதான் எங்களுடைய குடும்பத்தை தாங்கிக்கொண்டிருக்கிறார்.

கேள்வி: இலங்கையில் நடந்துவரும் போர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: தற்போது இலங்கை போரை பொறுத்தவரை ராஜீவ்காந்தி குடும்பத்தினர் பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படுவதாக கூறப்படுகிறது. ராஜீவ்காந்தி குடும்பத்தினர் அப்படிப்பட்டவர்கள் அல்லர்.

அவர்கள் மனிதாபிமானம் உள்ளவர்கள்.

அந்த குடும்பத்தில் யாரும் அப்படிச் செயல்பட மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

இந்த போருக்கு ஏதோ ஒரு அரசியல் பின்னணிதான் காரணமாக இருக்கவேண்டும் என்று கருதுகிறேன்.

வியட்நாம் விடுதலைப்போரில் 3 கோடி பே?ல் 25 இலட்சம் பேர் செத்தார்கள்.

அதற்கு பிறகுதான் அவர்களுக்கு விடுதலை கிடைத்தது. அதுபோல் இலங்கையில் உள்ள 50 இலட்சம் தமிழர்களில் 10 இலட்சம் பேராவது சாகவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ? என்று நினைக்க தோன்றுகிறது.

Read more...

15 வயது தாயின் குழந்தைக்கு தந்தையென உரிமை கோரும் மூன்று சிறுவர்கள்

15 வயதான காதலியுடனான காதல் தொடர்பின் மூலம் தான் குழந்தையொன்றுக்கு தந்தையாகியுள்ளதாக 13 வயது சிறுவன் அல்பி பட்டன் உரிமை கோரி பரப ரப்பை ஏற்படுத்திய நிலையில், அச்சிறுவனின் காதலியான சண்டெல்லா ஸ்ரெட்மானுடன் தமக்கும் காதல் தொடர்பு இருந்ததாக மேலும் இரு சிறுவர்கள் உரிமை கோரியுள்ளனர்.
றிச்சர்ட் குட்ஸெல் (16 வயது), ரைலர் பார்க்கர் (14 வயது) ஆகிய சிறுவர்களே மேற்படி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

சமையல் கலைப்பயிற்சியாளராக கடமையாற்றும் றிச்சர்ட் குட்ஸெல் விபரிக்கையில், ஈஸ்ட் சஸெக்ஸிலுள்ள சண்டெல்லாவின் வீட்டில் வைத்து அவருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாகவும், அதனையடுத்தே சண்டெல்லா கர்ப்பமடைந்ததாகவும் கூறினார்.

""நானே சண்டெல்லாவின் குழந்தைக்கு தந்தையாக இருக்கலாம் என நம்புகிறேன்.

அனைவரும் நானே அக்குழந்தையின் தந்தை ""நாங்கள் நல்ல பெற்றோர்களாக இருப்போம். பாடசாலைக் கல்வி தொடர்பில் நான் மேலதிகமாக கஷ்டப்பட வேண்டியிருக்கும்'' என அல்பி தெரிவித்தான்.

அல்பி தான் தந்தையான அனுபவம் குறித்து விபரிக்கையில், ""நான் நினைத்ததைவிட அது இலகுவாக இருந்தது'' என்று கூறினார்.

இந்த இளம் காதல் ஜோடியின் விவகாரத்தால் பிரித்தானிய அரசாங்கமே ஆடிப் போயுள்ளது.

பிரதமர் கோர்டன் பிறவுண் விபரிக்கையில், ""இள வயதினர் கர்ப்பமடைவதை தடுக்க நாம் அனைவரும் விரும்ப வேண்டும் என நான் நினைக்கிறேன்'' என்று கூறினார்.

இந்நிலையில் அல்பியினதும் சண்டெல்லாவினதும் பெற்றோர்கள் கடும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர்.

அல்பிக்கும், சண்டெல்லாவுக்கும் நட்புறவு இருந்தது தமக்குத் தெரியும் எனத் தெரிவித்த இருவரதும் பெற்றோர்கள், ஆனால் அது பாலியல் தொடர்பாக இருக்கும் என்பதை தாம் அறியவில்லை என்று கூறினர்.

அல்பி தனது தாயாரான நிகோலாவுடன் (43 வயது) ஹெய்ல்ஷாம் எனும் இடத்திற்கு அருகிலுள்ள வீட்டில் வாழ்ந்து வருகின்றான்.

நிகோலா, அல்பியின் தந்தையான டெனிஸிடமிருந்து (45 வயது) பிரிந்து வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

டெனிஸ் தனது மகனின் காதல் தொடர்பு குறித்து விபரிக்கையில், ""நாம் அவர்களை சிறு குழந்தைகளாகவே நினைத்தோம்.

இந்தச் செய்தி ஏனையவர்களை விட எமக்கே அதிர்ச்சி தருவதாக உள்ளது'' என்று கூறினார்.

இந்நிலையில் சண்டெல்லாவுடன் ஏனைய 3 சிறுவர்கள் இரவு நேரத்தைக் கழித்ததாக அயலவர்கள் தெரிவித்ததாக சில பத்தி?கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், இச்செய்திகள் தொடர்பில் சண்டெல்லாவின் தாயார் மறுப்பு தெரிவித்துள்ளார்.






Read more...

உலகின் உயரமான மனிதரின் காலணியுடன் மகா குள்ளர்



ஜப்பானிய டோக்கியோ நகரில் கின்னஸ் உலக சாதனை பதிவுகள் அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற கண்காட்சியில் உலகின் மிகக் குள்ளமான நபரான சீனாவைச் சேர்ந்த ஹி பிங் பிங் (He Pingping) உலகின் மிகவும் உயரமான நபரின் பாதணியை கையில் ஏந்தியிருப்பதை படத்தில் காணலாம்.
20 வயதான ஹி பிங் பிங்கின் உயரம் 74.1 சென்ரிமீற்றராகும். நிறை 7 கிலோகிராம் ஆகும். மேற்படி கண்காட்சியானது 2009 ஆம் ஆண்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தக வெளியீட்டை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்டது.

Read more...

உலகின் மிக நீளமான நகங்களை விபத்தில் பறிகொடுத்த பெண்மணி





உலகின் மிகவும் நீண்ட நகங்களையுடையவர் என கடந்த ஆண்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த லீ ரேமண்ட் (Lee Redmond), கார் விபத்தொன்றில் தனது நகங்களை இழந்துள்ளார்.
அமெரிக்க சால்ட் லேக் நகரில் இடம்பெற்ற விபத்தில் நகங்களை இழந்த லீ ரேமண்ட் உயிராபத்து நிலையை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

1979 ஆம் ஆண்டு முதல் நகங்களை வெட்டாது லீ ரேமண்ட் வளர்த்து வந்துள்ளார்.

கடந்த ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற சமயம் அவரது நகங்களின் மொத்த நீளம் 28 அடியாகும். அத்துடன் அவரது நகங்களில் மிக நீளமான நகமான வலது பெருவிரல் நகத்தின் நீளம் 2 அடி 11அங்குலமாகும்.

Read more...

1738 அடி நீளமான உலகின் மிகப் பெரிய ஸோசேஜ் (sausage) உணவு

1738 அடி (530 மீற்றர்) நீளமான உலகின் மிகப் பெரிய "ஸோசேஜ்' உணவைத் தயாரித்து குரோஷிய நாட்டு மக்கள் சனிக்கிழமை புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.
குரோஷிய நகரான வின்கோவ்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கூடி 400 கிலோகிராம் பன்றி இறைச்சி, 10 கிலோகிராம் உப்பு, 2.5 கிலோகிராம் மசாலா மற்றும் 3.5 கிலோ கிராம் வெள்ளைப்பூடு என்பவற்றைப் பயன்ப டுத்தி இந்த உணவை தயாரித்துள்ளனர்.

இந்த உணவை 3000 பேரிடையே பங்கிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் வருடம் 1000 மீற்றர் நீளமான நீண்ட ஸோசேஜ் உணவைத் தயாரிக்க வின்கோவ்சி நகர மக்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கு முன்னைய உலக சாதனையாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் கடந்த டிசம்பர் மாதம் ரோமானியாவில் தயா?க்கப்பட்ட 392 மீற்றர் நீளமான ஸோசேஜ் உணவு இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Read more...

புலிகளின் 130மி.மீ.ரக 2 பீரங்கிகள் நேற்று மீட்பு

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மேற்கு பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டி ருந்த புலிகளின் 130 மி. மீ. ரக பீரங்கி இரண்டை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச் சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பை நோக்கி முன்னேறி வரும் இராணுவத்தினர் அந்தப் பிரதேசத் தில் நேற்றுக்காலை மேற்கொண்ட தேடு தல் நடவடிக்கையின் போதே பீரங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொலித்தீன்களால் சுற்றி மிகவும் பாது காப்பான முறையில் புதைத்து வைக்கப் பட்டிருந்த நிலையில் இந்த பீரங்கிகளை கண்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, விசுவமடு பிரதேசத்திலு ள்ள தென்னந்தொப்பு ஒன்றிலிருந்தும், புதுக் குடியிருப்பு பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த புலிகளின் பாரிய முகாம் ஒன்றிலிருந்தும் பெருந்தொகையான ஆயுத ங்கள் உட்பட வெடி பொருள்களை மீட்டெத்துள்ள தாகவும் பிரிகேடியர் தெரிவித்தார்.

210 லீட்டர் கொள்ளளவுடைய 144 கிரீஸ் பரல்கள், 120 மி. மீ. ரக மோட்டார்களை தயாரிக்கும் உபகரணங்கள் நிரப்பப்பட்டிருந்த 18 பரல்கள் மற்றும் பெருந் தொகை யான உபகரணங்களையும் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

கைக்குண்டுகள், தொப்பிகள்- 41, புலிகளின் ஆடைகள்- 52, தற்கொலை அங்கிகள்- 05, எப். என். சி. ரக துப்பாக்கி ரவைகள்- 250, ரி. 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் துப்பாக்கி ரவைகள்- 2539 மற்றும் உபரணங்களையும் முகாமிலிருந்து மீட்டெடுத்துள்ளனர்.

இதுதவிர 81 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள் -08, ஆடைகள்-30, 60 மி. மீ ரக மோட்டார் குண்டுகள் -180, கைக்குண்டுகள் 23, 122 ரக ஷெல்கள் - 85 130 மி. மீ. ரக ஷெல்கள்-40 ரி. 56 ரக துப்பாக்கி-02, 50 கிலோ எடையுள்ள யுரியா பொதிகள்- 03, சயனைட் குப்பிகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களையும், யுத்த உபகரணங்களையும் பாதுகாப்புப் படையினர் கண்டெ டுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவத்தார்.

(ஸாதிக் ஷிஹான்)

Read more...

இலங்கை மக்களை சர்வதேசம் காட்சிப் பொருளாக்குவதற்கு இடமளியேன்

இலங்கை மக்களை சர்வதேசம் காட்சிப் பொருளாக்கு வதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

வடக்கோ, தெற்கோ, தமிழரோ ஏனைய இனத்தவரோ அனைவரும் ஒருதாய் மக்கள், அவர்களை சகோதரர் களாக மதித்து அம்மக்களுக்கான சகல தேவைகளையும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து பாதுகாப்புப் பிரதேசங்களுக்குள் பிரவேசிக்கும் மக்கள் மன அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுவதாக சில சக்திகள் சர்வ தேச நாடுகளில் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. இதனை நாம் முற்றாக மறுக்கிறோம். நாட்டின் உண்மையான நிலையை நேரில் கண்டறிய இலங்கைக்கு வருமாறு தாம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஹோமாகம பமுனு ஆரச்சி பவுண்டேசன் நிறுவனத் தினரால் 100 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ள ஹோமாகம பொது வைத்தியசாலை யின் புதிய கட்டிடத் தொகுதியை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைத்து உரையாற்றுகையி லேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, பி. தயாரத்ன, கீதாஞ்சன குணவர்தன, மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்த தாவது,

பயங்கரவாதிகளிடமிருந்து மீண்டு வரும் தமிழ் மக்களு க்கு மானசீக துன்புறுத்தலைப் படையினர் மேற்கொண்டு வருவதாகப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. புலிகளே இவ்வாறு செய்தா லும் படையினர் ஒரு போதும் இவ்வாறு செய்ய மாட் டார்கள் எனப்பது உறுதி.

இவ்வாறு பாதுகாப்புப் பிரதேசங்களுக்கு வரும் மக்களு க்கான சகல வசதிகளையும் குறைவின்றிப் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்திவரு கிறது. அத்துடன் இவ்வாறு வரும் மக்களுக்குத் தேவை யான சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் எமது டாக்டர்களும் தாதியர்களும் அங்கு அர்ப்பணி ப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சில சர்வதேச அமைப்புக்கள் மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்கென இங்கு வந்து, பல்வேறு பிரதேசங்களுக்கும் விஜயம் செய்து அம்மக்களுக்கு எந்த வித உதவியையும் செய்யாமலேயே மீண்டும் நாடு திரும்பிவிடுகின்றனர். அங்கு சென்று இலங்கை மக்களை அந்நாடுகளில் கண்காட்சிப் பொரு ட்களாக்கப் பார்க்கின்றனர்.

சுனாமி அனர்த்தத்தின் போது பல சர்வதேச நாடுகள் எமக்கு உதவியளித்தன என்பதை நாம் ஒரு போதும் மறுக்க முடியாது. எனினும் பெரும்பாலான சர்வதேச அமைப்புக்கள் உதவி என்ற பெயரில் எமது மக்களுக்கு உபயோகிக்க முடியாத பழைய உடைகளையும், காலா வதியான உணவுகளையும் வழங்கியிருந்தன.

அவற்றை நாம் தீமூட்டியதையும் இங்கு நினைவு கூரவேண்டி யுள்ளது. மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் வெற்றியானது சர்வதேச அழுத்தங்களுக்கு பதி லாக அமைந்துள்ளது. தாய் நாட்டை நேசிக்கும் மக்கள் இருக்கும் வரை எவரும் தாய் நாட்டைக் காட்டிக் கொடு க்க முடியாது.

மேற்படி வெற்றியானது அரசாங்கத்தின் எதிர்கால பயணத்தை மேலும் வலுப்படுத்துவது உறுதி எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

Read more...

சாலை கடற்கரையில் இலங்கை படையினரின் புதிய ஏவுகணை தளங்கள் -லக்பிம வார ஏடு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சாலை பகுதியில் விடுதலைப்புலிகள் கடல் மூலம் தரையிறங்கி தாக்குதலை மேற்கொள்ளலாம் என கடந்த வாரம் இலங்கை படையினரின் புலனாய்வுத்துறை எச்சரித்ததை தொடர்ந்து படையினர் கடற்கரை பகுதிகளில் புதிய ஏவுகணை தளங்களை நிறுவியுள்ளதாக லக்பிம வார ஏடு தெரிவித்துள்ளது இதுதொடர்பாக லக்பிம ஆங்கில வாரஏட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு.. சாலை கடற்கரை பகுதியில் நிலை கொண்டுள்ள 55வது படையணியினர் மீது விடுதலைப்புலிகள் கடல்மூலம் தரையிறங்கி தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என கடந்தவாரம் படையினரின் புலனாய்வுத்துறை எச்சரிக்கையினை விடுத்திருந்தது இதனைத் தொடர்ந்து படையினர் கடற்கரை பகுதிகளில் புதிய ஏவுகணை தளங்களை நிறுவியுள்ளனர்.

இதேவேளை விடுதலைப்புலிகளின் பரப்பளவு குறைந்த வருமானத்தால் 57வது படையணியாக பேணுவதற்கு படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது. இந்த படையணி விஷ்வமடு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளது புதுக்குடியிருப்புக்கு தென்பகுதியில் 59 மற்றம் 53வது டிவிசன்களும் நடவடிக்கை படையணி04 மற்றும் நடவடிக்கை படையணி08 என்பன நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

ஏ36 நெடுஞ்சாலையின் வடபகுதியில் 55மற்றும் 58வது படையணிகள் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. புதுக்குடியிருப்புக்கு தென்புறம் உள்ள பாதுகாப்பு படையினரின் நிலைகளை ஊடறுத்து காடுகளுக்குள் உட்புகுவதே விடுதலைப் புலிகளின் நோக்கம் அது நிறைவேறினால் இராணுவம் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Read more...

சிவிலியன்களுடன் பிரபாகரனும் சகாக்களும் தற்கொலைக்குத் திட்டமாம்


முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள சிறியதொரு நிலப்பரப்பைக் கைப்பற்றும் முயற்சியில் தற்போது பல முனைகளிலும் முன்னேறிச் செல்லும் இராணுவத்தினா,; அந்தப் பிரதேசத்துக்குள் நுழைந்தால் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் ஏனைய அவரது முக்கிய சகாக்களும் அங்குள்ள ஆயிரக்கணக்கான சிவிலியன்களுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகத் தெரிய வருகிறது.

குறிப்பிட்ட சில நாடுகளும் சில அமைப்புகளும் இலங்கைத் தமிழ் மக்களைக் கைவிட்டதுடன் போராட்டத்தையும் நசுக்கிவிட்டதாக இவர்கள் ஓர் அறிக்கையை சர்வதேசத்துக்கு வெளியிட்டதன் பின்னரே தற்கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பஸில் ராஜபக்ஷ கடந்த வாரம் வெளியான வாராந்த ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே இதனைத் தெரிவித்திருந்தார். பாதுகாப்புப் படையினரின் உளவுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே தாம் இதனைத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்

இதேவேளை, பிரபாகரனும் அவரது சகாக்களும் அப்பாவி தமிழ் மக்களைத் தமது இறுதி ஆயுதமாகப் பாவித்து வருவதாகப் பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோதபாய ராஜபக்ஷவும் கடந்த வாரம் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, படையினரிடம் சரணடைந்ததாகக் கூறப்படும் தற்கொலைப் பிரிவைச் சேர்ந்த புலி உறுப்பினர்கள் இருவா கடந்த ஞாயிறன்று (15) வெளியான சண்டே ஒப்சேவர் பத்திரிகைக்கு அளித்திருந்த பேடடியில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தற்போது வன்னியில் இருப்பதாகவும் அவரது மகனான சார்ள்ஸ் அன்டனி தலைமையிலான பிரிவே இராணுவத்தினருடன் மோதி வருவதாகவும் இவருடன் இணைந்து பானு,லட்சுமனண் ஆகிய இருவரும் சண்டையிட்டு வருதாகவும் தெரிவித்திருந்தனர்.

லங்கா ஈ நியூஸ்

Prabakaran planning mass suicide show with 10,000 civilians

LTTE Leader Velupillai Prabakaran was planning along with ten thousands civilians and his close cadres a mass suicide show involving him self relevant report revealed.

Relevant information stated that LTTE had begun directing civilians to ward this Mulathivu beach head where the event would be videoed and distributed to the Tamil Diaspora.

Reports says, before that suicide event begun Prabakaran was planning to blame international society, organizations and foreign countries that they all get to gather and betrayed him and his organization.

Mr. Basil Rajapaksha senior adviser to the President also told this to 'Sunday Times' yesterday and stating that information regarding the mass suicide by the LTTE leader who had claimed that more civilians had also pledged to join in the mass suicide and he also told that this event they plan as a public show.

Defence Secretary Mr. Gotabaya Rajapakshe told Sunday papers that Prabakaran and his team has come to an end of their drama.

Mr. Keheliya Rabukwella Government Defence Spokesmen said in resent press conference that Red Cross is trying to purchase a 35,000 body bags.

'Lanka-e-News' questions Military spokesmen Brig. Udaya Nanayakkara and ask that there is any connection with this bags story and the suicide show. He told that he don't think that this two incidents. Has any inter connections. Any how he told 'Lanka-e-News' he believes Prabakaran has to suicide him self because our army forces cornering him in Mulathivu from eight sides. So Prabakaran has to suicide him self because he doesn't have any other option.

Read more...

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top